பயனர் பேச்சு:Arafath.riyath

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search



பயனர்:Arafath.riyath
   
பயனர்:Arafath.riyath/என்னைப் பற்றி
   
பயனர் பேச்சு:Arafath.riyath
   
பயனர்:Arafath.riyath/பங்களிப்பு
   
பயனர்:Arafath.riyath/பயனர் பெட்டி
   
சிறப்பு:EmailUser/Arafath.riyath
   
பயனர்:Arafath.riyath/மணல்தொட்டி
 
முகப்பு
   
நான்
   
பேச்சு
   
பங்களிப்பு
   
பயனர் பெட்டி
   
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண மகிழ்ச்சி!

வணக்கம், Arafath.riyath!

வருக! வருக!

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண்பதில் மகிழ்கிறேன்.

நீங்கள் என்னைப் போன்றவர் என்றால், பங்களிக்க இயலாத காலத்திலும் அண்மைய மாற்றங்களைக் கவனித்தவாறே இருந்திருப்பீர்கள். எனினும், இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளை அறிய நமது ஆண்டு அறிக்கைகளைப் பாருங்கள். குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரையும் உள்ளடக்கி வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தைக் காணுங்கள்.

பலரும் இணைந்து பங்களிக்கும் போது, அவ்வப்போதாவது வந்து செல்லும் போது, ஏற்கனவே இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கும். உங்களைப் போன்றோரிடம் இருந்து புதுப்பயனர்களும் நிறைய கற்றுக் கொள்ள இயலும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இதற்கு மேல் உங்களுக்குத் தெரியாதா என்ன :) ? உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அன்புடன்...

--இரவி (பேச்சு) 17:47, 25 மார்ச் 2013 (UTC)
வரவேற்புக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி இரவி. முடிந்த அளவில் ஆழமான கட்டுரையாக்கம் மற்றும் துப்பரவுபணிகளில் ஈடுபட திட்டம். பார்க்கலாம் :) --அராபத்* عرفات (பேச்சு) 12:59, 27 மார்ச் 2013 (UTC)

பொருளடக்கம்

தங்களின் உதவி தேவை...[தொகு]

வணக்கம் அராபத்!
கருநாடக இசையின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக வலைவாசல் ஒன்றினை உருவாக்கி வருகிறேன்; தங்களின் 'தமிழீழம்' வலைவாசலை முன்மாதிரியாக வைத்தே உருவாக்கி வருகிறேன். எனினும் வலைவாசல் முகப்பு இன்னமும் எனக்கு சரியாக வரவில்லை. துணைப் பக்கங்கள் அனைத்தையும் உருவாக்கியபின் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதன் பின்னர், முகப்புப் பக்கத்தில் தோன்றும் பிழைகளை சரிசெய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:17, 22 ஏப்ரல் 2013 (UTC)

கண்டிப்பாக உதவுகிறேன். சேர்ந்தே சரி செய்யலாம்.--அராபத் (பேச்சு) 05:25, 22 ஏப்ரல் 2013 (UTC)
வலைவாசல்:கிறித்தவம் ஐயும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:56, 22 ஏப்ரல் 2013 (UTC)

Kanags, பார்த்துவிட்டேன் Smiley 180.jpg இங்கு உங்களுக்கான செய்தி உள்ளது. கருத்துக்களை அறியத்தாருங்கள் --அராபத் (பேச்சு) 13:01, 25 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பரே, நண்பர் செல்வசிவகுருநாதனைப் போலவே தங்களுடைய தமிழீழம் வலைவாசலை முன்மாதிரியாக கொண்டு இந்து சமயம் வலைவாசலை அமைத்துள்ளேன். மிக்க நன்றி. அதில் விக்கிமீடிய திட்டங்கள் பக்கத்தில் அனைத்து இணைப்புகளும் ஆங்கிலத்திற்கே செல்கின்றன. அவற்றை தமிழ் திட்டங்களுக்கு மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும். தங்களுடைய தமிழீழம் வலைவாசலிலும் அவ்வாறு இருக்கிறது. உதவுங்கள் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:42, 30 ஏப்ரல் 2013 (UTC)

மாற்றிவிட்டேன். சரியாக உள்ளதா எனப் பாருங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:51, 30 ஏப்ரல் 2013 (UTC)
இத்துனை நாள் நானே கவணிக்கவில்லை. சுட்டிக்காட்டியதற்கும், திருத்தியமைக்கும் நன்றி அன்பர்களே.--அராபத் (பேச்சு) 13:28, 1 மே 2013 (UTC)

வணக்கம் அராபத்!

  1. தங்களின் முந்தைய வலைவாசல் பக்கத்தின் ('தமிழீழம்') வடிவமைப்பு நுணுக்கங்களை பின்பற்றி நடந்ததால்... எவ்விதப் பிரச்சினைகளுமின்றி வலைவாசல்:கருநாடக இசை பக்கத்தினை என்னால் அமைக்க இயன்றது. கற்றுக்கொள்ளும் ஆர்வத்தினால், நானே சோதித்துப் பார்த்து சிறுசிறு பிழைகளை திருத்தினேன்; உங்களை தொந்தரவு செய்யவில்லை. உதவி தேவைப்படும்போது உங்களிடம் மீண்டும் வருவேன்!
  2. வலைவாசலின் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்தினைப் படித்தேன். மே மூன்றாம் வாரத்தில் அதனை செயல்படுத்துகிறேன்.
  3. வார்ப்புரு:Purge - இதில்,'தேக்கத்தை' என இருக்க வேண்டும். சரி செய்யவும். (இப்பக்கம் தொகுப்பதிலிருந்து காக்கப்பட்டுள்ளதால் என்னால் சரிசெய்ய இயலவில்லை)

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:05, 1 மே 2013 (UTC)

மாற்றி விட்டேன் செல்வசிவகுருநாதன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. --அராபத் (பேச்சு) 13:28, 1 மே 2013 (UTC)

பதக்கம்[தொகு]

SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
அண்மையில் உருவான புதிய வலைவாசல் பக்கங்களுக்கு தங்களின் முந்தைய உழைப்பு உறுதுணையாக இருந்ததை தெரிவிக்கும் வகையிலும், அதற்கு நன்றி பாராட்டும் வகையிலும், வலைவாசல்:கிறித்தவம் பக்கத்தினை புதுப் பொலிவுடன் பதிப்பிடுதல் செய்ததைப் பாராட்டியும் தங்களுக்கு இப்பதக்கம் வழங்கப்படுகிறது! - நேசமுடன் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:35, 1 மே 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம், அபார வேகமும் கூட :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:42, 1 மே 2013 (UTC)
👍 விருப்பம் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:33, 1 மே 2013 (UTC)

ஊக்கத்திற்கு நன்றி தோழர்களே. --அராபத் (பேச்சு) 13:29, 1 மே 2013 (UTC)

வலைவாசல்கள் வடிவமைப்பு மட்டுமன்று, பல பயனர் பக்கங்களின் வடிவமைப்புக்கும் உங்கள் பயனர் பக்க வடிவமைப்பே முன்னோடி. அதற்காக ஒரு பதக்கம் கொடுக்க எண்ணியிருந்தேன். மற்றவர்கள் முந்திக் கொண்டு விட்டார்கள். வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 16:38, 1 மே 2013 (UTC)
  • Atheist - என்னும் சொல்லோடு கூடிய வட்டம் அழகு. பொருள் அதைவிட அழகு. வாழ்த்துக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 20:00, 1 மே 2013 (UTC)
வாழ்த்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி. --அராபத் (பேச்சு) 11:16, 2 மே 2013 (UTC)

உதவி[தொகு]

வணக்கம் அராபத். வலைவாசல் இலக்கியம் பக்கத்தை மேம்படுத்த தங்கள் உதவி தேவை. தாங்கள் ஓய்வாக இருக்கும்போது அதனை மேம்படுத்துங்கள் நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:13, 5 மே 2013 (UTC)

கட்டாயம் செய்கிறேன். வலைவாசலின் தாய்ப் பகுப்புகளை மேம்படுத்த ஆரம்பித்துள்ளேன். அது முடிந்ததும் இதில் பங்களிக்கிறேன். பொருத்தருள்க.. --அராபத் (பேச்சு) 05:25, 6 மே 2013 (UTC)

Regarding the Photograph of Jaya Sri Maha Bodhi Anuradhapura Sri Lanka[தொகு]

Hey Sorry that I cant use your language,The Earlier Photograph which said to be the Holy Jaya Sri Maha Bodhi of Anuradhapura Sri Lanka is NOT the real Jaya Sri Maha Bodhi its Just an ordinary Bo tree beside the main Bodhi tree (Jaya Sri Maha Bodhi),trust me I am a Buddhist from Sri Lanka,What I posted is the REAL one (Its a well gurded tree,only selected number of people can visit near the tree),Still UNSURE then GOOGLE :) Thanks.MediaJet (பேச்சு) 17:37, 10 மே 2013 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Arafath.riyath!

250 Raketna Brigada.png

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:10, 2 சூன் 2013 (UTC)

நன்றி இரவி. இன்னும் விளையாடலாம் :) --அராபத் (பேச்சு) 04:09, 3 சூன் 2013 (UTC)

பதக்கம்[தொகு]

Real Life Barnstar.jpg மெய்வாழ்வுப் பதக்கம்
போட்டிக்குட்பட்ட கட்டுரைகளில் வெற்றிக் கோடான 15360 பைட்டுகளைத் தாண்டியும் கட்டுரைகளைச் சீராக்க முனைவதைக் கண்டு மகிழ்கிறேன். இந்த மெய்யான விக்கிப் பண்பு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயற்பாடு ஆகும் இரவி (பேச்சு) 13:19, 11 சூன் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி இரவி. பல நாட்களாக (உண்மையில் ஆண்டுகளாக :) ) செய்ய நினைத்து, சோம்பேறித்தனத்தால் செய்யாமல் விட்ட பணிகளையே இப்போது செய்கிறேன். போட்டியெல்லாம் ஒரு சாக்கு தானே :)--அராபத் (பேச்சு) 04:08, 12 சூன் 2013 (UTC)

வழமையான போட்டிகள் புதுப்பயனர்களை ஈர்க்கும் நோக்கிலேயே. இந்தப் போட்டியின் முதன்மை நோக்கமே ஏற்கனவே உள்ள பயனர்களை முனைப்புடன் ஈடுபட வைக்க வேண்டும் என்பதே. அது நிறைவேறுவது கண்டு மகிழ்ச்சி :)--இரவி (பேச்சு) 12:58, 21 சூன் 2013 (UTC)

வார்ப்புரு பிரச்சினை[தொகு]

அன்புள்ள அராபத், தமிழ் மற்றும் மலையாளம் விக்கிபீடியாக்களில் அவ்வப்போது கட்டுரைகளை ஏற்றுவதுண்டு.. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை ... சமீபகாலத்தில் மலையாளம் விக்கிபீடியாவில் எழுத்துக்கள் தென்படும் முறையில் சற்று வித்தியாசம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. யு.எல்.எஸ். என்ற சுருக்கெழுத்துக்கு என்ன அர்த்தம் என்றும் எனக்கு தெரியாது :) Irumozhi (பேச்சு) 11:07, 19 சூன் 2013 (UTC)

விக்கப்பீடியர்களை சமய அடிப்படையில் பிரிப்பது தொடர்பாக[தொகு]

வணக்கம் நண்பரே, வார்ப்புரு:பயனர் இசுலாமியர் என்பதை தாங்கள் வடிவமைத்து தந்திருப்பதைக் கண்டேன். பகுப்பு பேச்சு:இசுலாமிய விக்கிப்பீடியர்கள் -ஐ காணவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:33, 28 சூன் 2013 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு[தொகு]







விக்கப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட சட்டை வடிவமைப்பு[தொகு]

வணக்கம் நண்பரே, தாங்கள் விக்கப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டத்திற்காக முன்மொழிந்த டிசர்ட் வடிவமைக்கும் வேலையை தற்போது தொடங்க இருக்கிறோம். நண்பர் ஆன்டன் அவர்கள் இப்பணியை மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளார். தங்களுடைய எண்ண வழிகாட்டல்களை வடிவமைப்பிற்கு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:08, 25 ஆகத்து 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:59, 18 செப்டம்பர் 2013 (UTC)

வரலியா :( --இரவி (பேச்சு) 21:19, 26 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:56, 27 செப்டம்பர் 2013 (UTC)

தமிழீழம் வலைவாசலின் அளவீடுகளை கவனிக்கவும்[தொகு]

வணக்கம் நண்பரே, தாங்கள் வடிவமைப்பினை தொடங்கிய வலைவாசல்:தமிழீழம் 15''கணினி திரையில் காணுகையில் கணினி திரையைவிடவும் அகலமாக உள்ளது. எல்லா திரையிலும் காண வழிவகை செய்யுங்கள். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:05, 3 அக்டோபர் 2013 (UTC)

உயிரியல் வலைவாசலை மேம்படுத்தி தர கோரிக்கை[தொகு]

வணக்கம் நண்பரே, தாங்கள் வலைவாசல்:உயிரியல் என்ற வலைவாசலை தொடங்கி மேம்படுத்தியிருக்கின்றீா்கள் என்பதைக் கண்டேன். சிறந்த வடிவமைப்புடன் இருக்கும் இந்த வலைவாசலில் சிறப்புக் கட்டுரைகள், மற்றும் சிறப்புப் படங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் நமது விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் காட்சிபடுத்த இயலும். இத்தகு பணியில் விக்கித்திட்டம் உயிரியலில் பங்குபெற்றிருக்கும் பிற பயனர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:26, 11 அக்டோபர் 2013 (UTC)

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு[தொகு]


கருத்துவேண்டல்[தொகு]

பேச்சு:சுன்னி இசுலாம் என்பதில் உங்கள் கருத்தினை பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 12:52, 18 நவம்பர் 2013 (UTC)

உடன் கருத்திட்டமைக்கு நன்றி!--≈ உழவன் ( கூறுக ) 13:13, 18 நவம்பர் 2013 (UTC)
நன்றி--அராபத் (பேச்சு) 13:15, 18 நவம்பர் 2013 (UTC)

முதற்பக்கத்தில் தமிழீழ வலைவாசல்[தொகு]

வணக்கம் நண்பரே, தாங்கள் தொடங்கி மேம்படுத்திய தமிழீழ வலைவாசலை முதற்பக்கத்தில் காட்சிபடுத்தியுள்ளோம். இந்த வலைவாசல் ஒரு மாதகாலத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும். தொடர்ந்து வலைவாசல்களில் ஈடுபாடு கொண்டு மேம்படுத்தி தரவும் வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:42, 1 திசம்பர் 2013 (UTC)

முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு[தொகு]


பிறந்தநாள் வாழ்த்துக்கள்[தொகு]

Anniv.svg வணக்கம் Arafath.riyath அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~
Face-smile.svg

--..«♦♥' விக்கிப்பீடியாவின் பள்ளி மாணவர்கள் '♥♦»..]]02:14, 22 பெப்ரவரி 2014 (UTC)

Wikimedians Speak[தொகு]

      
CIS-A2K Wikimedians Speak logo.png

An initiative to bring the voices of Indian Wikimedians to the world
Hi Arafath.riyath,

I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.

Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:40, 9 ஏப்ரல் 2014 (UTC)

முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு[தொகு]


விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக

வணக்கம் Arafath.riyath!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:24, 30 திசம்பர் 2014 (UTC)

உதவித்தொகை பெற ஆதரவு கோரிக்கை[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:43, 4 சூலை 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015[தொகு]

விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மதனாகரன் (பேச்சு) 07:10, 9 சூலை 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

Ta-Wiki-Marathon-2016.png

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு[தொகு]

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:42, 10 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:29, 10 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

Your administrator status on ta.wikipedia[தொகு]

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.

If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.

If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 02:39, 13 சூன் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]

அன்புள்ள அராப்பத்,

நலமா?

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 16:06, 24 மார்ச் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arafath.riyath&oldid=2501822" இருந்து மீள்விக்கப்பட்டது