பயனர்:Ilanthamizhan.s

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"மாட்டுஓணி"


மாட்டு ஓணி என்ற அழகிய ஊர் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.


"மாட்டுஓணி- எனப்பெயர் வரக்காரணம் "


மாடு + ஓணி= மாட்டுஓணி


"மாடு " என்றால் செல்வம், பசு எனப்பொருள் .


"ஓணி" என்றால் இருபுறமும் மரங்களும் அம்மரநிழல் வழியே செல்லும் பாதை எனப்பொருள். எனவே


மாட்டு ஓணி என்றால் "மாடுகள் செல்லும் பாதை" அல்லது "செல்வப்பாதை" என்பது தெளிவாகிறது.


"மக்கள்நிலை"


இவ்வூரில் மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் குடியேறினர். அதற்கு முன்பு இவ்வூர் பசுமைச்சமவெளியாக இருந்தது. இவ்வூரில் வாழும் மக்கள் சுமார் 500 பேர்.


"மொழிஅறிவு"


இங்கு வாழும் மக்கள் அனைவரும் தமிழர்களே ஆவார்கள். ஆனாலும் கன்னடம்,தெலுங்கு, உருது ஆகிய மொழிகளையும் அறிந்து வைத்துள்ளனர்


"மாட்டுஓணி வரலாறு"


மாட்டு ஓணி என்ற ஊரில் ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சியது, எங்கு பார்த்தாலும் பசுமை எங்குபார்த்தாலும் புல்வெளி ஆண்டு முழுவதும் காட்டாறும், நீரோடைகளும் ஊர் முழுவதும் ஓடியது . இதனால் அருகில் உள்ள பறவைகாடு செழிப்பாக வளர்ந்தது. மாட்டுஓணி ஊரை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் தங்கள் கால் நடைகளை இவ்வூரின் வழியாக மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வார்கள் . இவ்வாறு செல்லும் கால்நடைகளில் எண்ணிக்கை ஏராளம்.


மக்களின் தொழில்


இவ்வூரில் வாழும் மக்களின் முக்கியத் தொழில் கால்நடை பராமரிப்பு மற்றும் உழவுத்தொழில் ஆகும்.



" கால்நடைகளும்-காடும்"



மாதந்தோறும் மழை பெய்ததால் பறவைக்காடு மிகவும் செழிப்பாக வளர்ந்து கால்நடைகளுக்கு புற்களையும்,பசுந்தழைகளையும் வழங்கியது. இதனை உண்ட கால்நடைகள் நன்றி மறவாது தனது கழிவுகளை காட்டிற்குள் இட்டது . இக்கழிவுகள் மழை நீரில் கரைந்து காடெங்கும் பரவி உரமாக மாறியது. இயற்கை உரத்தினை ஏற்றுக்கொண்டு காடு மீண்டும் வளர்ந்து பசுமையான புல்வெளிகளை கால்நடைகளுக்கு பரிசாக வழங்கியது. இந்த சுழற்சி ஆண்டு முழுவதும் நடைப்பெற்றதால் கால்நடைகளை பராமரிப்பவர்கள் கவலையின்றி வாழ்ந்தார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ilanthamizhan.s&oldid=2636043" இலிருந்து மீள்விக்கப்பட்டது