வார்ப்புரு பேச்சு:நூல் தகவல் சட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{நூல் தகவல் சட்டம்| 
  தலைப்பு            =  '''தமிழ் இலக்கணம் (நூல்)''' |
  படிமம்              =  Navalar Tamil Grammer.JPG|
படிம தலைப்பு         =ஆறுமுக நாவலர் தமிழ் இலக்கணம் |
  நூல் பெயர்          =  தமிழ் இலக்கணம் |
  நூல் ஆசிரியர்       =  ஆறுமுக நாவலர் |
  வகை               =  [[மொழியியல்]] |
  பொருள்             =  தமிழ் இலக்கணம் |
  காலம்              =  [[1886]] |
  இடம்               =  [[சென்னை]]|
  மொழி              =  தமிழ் |
  பதிப்பகம்           =  முல்லை நிலையம் |
  பதிப்பு              = 2001 |
  பக்கங்கள்           =  216 |
  ஆக்க அனுமதி      =  நூல் பொதுவில் உள்ளது |   
  பிற குறிப்புகள்      =  மாணவருக்கு பயன் தரவல்லது |
}}

பயனுள்ள வார்ப்புரு. பாராட்டுக்கள். -- Sundar \பேச்சு 08:40, 31 மே 2006 (UTC)[பதிலளி]

கோபி கவனிக்க[தொகு]

படிமம் என்று போடுவது வார்ப்புருவில் சரியாக தோன்றவில்லை, அதனால் தான் நீக்கினேன். --Natkeeran 17:23, 22 பெப்ரவரி 2007 (UTC)

ஆக்க அனுமதி[தொகு]

ஆக்க அனுமதி என்பது பதிப்புரிமை என்றால் அவ்வாறே குறிப்பிடலாமா?--இரவி 15:32, 17 பெப்ரவரி 2012 (UTC)

நூல்கள் வார்ப்புரு இணைத்தல் குறித்து[தொகு]

வார்ப்புரு:நூல் தகவல் சட்டம் வார்ப்புரு:Infobox Book என ஒரே நோக்கம் கொண்ட வார்ப்புருகள் இரண்டு உள்ளன. இவற்றில் Infobox Book வார்ப்புரு ஆங்கிலத்தில் உள்ளமையால் இதனை நீக்கிவிடலாம் என்றிருக்கிறேன். அதற்காக 500க்கும் குறைவான கட்டுரைகளில் திருத்தங்களை மேற்கொண்டால் போதுமாது. (காலம் தாழ்த்தினால் கட்டுரைகள் எண்ணைக்கை அதிகமாகிவிடும்.) நூல் தகவல் சட்டம் வார்ப்புருவில் அசல்_தலைப்பு, மொழிபெயர்ப்பாளர், ஓவியர், அட்டைப்பட ஓவியர், தொடர், பதிப்புத் திகதி, ஆங்கில வெளியீடு, அளவும் பருமனும், சர்வதேசத் தர புத்தக எண் ஐஸ்பிஎன் சுட்டெண், OCLC, முன் பாகங்கள், பின் பாகங்கள் போன்ற Infobox Book வார்ப்புருவில் இருப்பதையும் இணைக்க வேண்டும்.

  1. இவை தவிற வேறு முக்கிய குறிப்புகள் உள்ளனவா?
  2. OCLC என்பது என்ன? இதனை தமிழில் எவ்வாறு குறிப்பது ?

தங்களுடைய வழிகாட்டல் தேவைப்படுகிறது. உதவும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:08, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

OCLC = இணையக் கணினி நூலக மையம் --மணியன் (பேச்சு) 19:35, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
Infobox book என்ற வார்ப்புரு ஐநூறுக்கும் அதிகமான கட்டுரைகளில் இணைப்பு உள்ளது. அவற்றை எவ்வாறு திருத்தப் போகிறீர்கள்? இவ்வாறான வார்ப்புருக்கள் இருப்பதில் என்ன தவறு என்று தெரியவில்லை. பொதுவாக நாம் ஆங்கில விக்கியில் இருந்தே வார்ப்புருக்களைத் திருடுகிறோம். நாமாக உருவாக்குவது மிகக் குறைவு. கட்டாயம் தமிழில் தான் இருக்க வேண்டும் எனக் கருதினால், இரண்டு வார்ப்புருக்களையும் வேறு வகைகளில் இணைக்க முடியும் என நினைக்கிறேன். இந்தியத் தகவல் சட்டமும் முன்னர் இவ்வாறு இணைக்கப்பட்டது. பயனர் மாகிர் இதற்கு உதவலாம்.--Kanags \உரையாடுக 21:24, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஒரு வார்ப்புருவில் குறைவான தகவல்கள் இருக்கிறது. மற்றொரு வார்ப்புருவில் அதிக தகவல்கள் உள்ளன. தமிழ் வார்ப்புருவினை கையாளுவதில் உள்ள எளிமைத்தன்மை காரணமாக இவ்வாறு மாற்ற யோசனை வந்தது. தமிழ் வார்ப்புரு சரியாக உருவானபின்னர், 500க்கும் குறைவான கட்டுரைகளில் உள்ள Infobox வார்ப்புருவுக்கு பதிலாக தமிழ் வார்ப்புருவை மாற்றிவிடலாம். சிரமம் குறைவான செயலே. மற்றபடி வார்ப்புருவில் எந்தத் தவறும் இல்லை கனகரத்தினம் நண்பரே. வேறு ஏதேனும் முக்கிய குறிப்புகளை இடவேண்டுமா என்று ஆலோசித்துக் கூறுங்கள். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:42, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வழிகாட்டலுக்கு நன்றி மணியன் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:43, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வார்ப்புருக்களை இணைக்க எளிய வழி உள்ளது. என்னவெனில், இரண்டாம் வார்ப்புருவை எங்கு பயன்படுத்தினாலும் இயங்கும், அதில் முதல் வார்ப்புருவின் fields இடம் பெற்றாலும் ஏற்றுக் கொள்ளும். இதை wrapper என்கிறார்கள். [1] & [2] இரு பக்கங்களையும் உற்று நோக்கினால் எப்படி இணைப்பது என அறியலாம். முடிந்தால் நானே செய்திடுவேன். இதுவரை செய்து பழக்கமில்லை. :( -தமிழ்க்குரிசில் (பேச்சு).

நூல் தகவல் சட்டம் இற்றைப்படுத்தப்படுவது தொடர்பாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை[தொகு]

  • இரண்டு தகவல் சட்டங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். அதில் கருத்து வேறுபாடு இல்லை.
  • இந்த வார்ப்புரு ஆங்கில விக்கியில் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்ப்புருவை அடிப்படையாக் கொண்டது. ஆனால் அதற்குப் பின்பு அவர்கள் அந்த வார்ப்புருவை விரிவாக்கி/மாற்றி உள்ளார்கள்.
  • நாம் டப்பிளின் கருவம் பரிந்துரைக்கும் அனைத்து மீதரவுகளுகும் ஆதரவு தருவது முக்கியம் என்று கருதுகிறேன். இது தொலைநோக்கில் தமிழ் நூற் தகவல்களை பல தகவல் மூலங்களில் இருந்து பெற்று ஒன்றிணைக்க உதவும். டப்பிளின் கருவகம் எளிமையானது. பெரும்பாலான மீதரவுகள் ஏற்கனவே இதில் உண்டு.
  • இரு அல்லது பன்மொழி ஆதரவு தேவை.
  • ஆங்கில விக்கியில் இருந்து வெட்டி ஒட்டினால் அது அப்படியே வேலை செய்யக் கூடியதாக இருப்பது விரும்பத்தக்கது.

--Natkeeran (பேச்சு) 14:20, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தொடக்கத்தில் ஒரே நோக்கம் கொண்ட இரு வார்ப்புருக்கள் எதற்காக என்று எண்ணியே தங்களிடம் கருத்தினைக் கேட்டேன். மணியன் மற்றும் கனகரத்தினம் இருவரும் ஆங்கில விக்கியில் இருந்து மொழி பெயர்க்கும் பொழுது உள்ள எளிமைத்தன்மையை விவரித்தமையால், தமிழ் வார்ப்புருவினை மாற்றம் செய்து அந்த வார்ப்புரு இணைக்கப்பட்ட கட்டுரைகளை மட்டும் திருத்தியுள்ளேன். தாங்கள் பரிந்துரைத்துள்ள இக்கருத்துகளையும் கவனத்தில் கொள்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:41, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இரு வார்ப்புருக்கள் இருப்பது பராமரிப்புச் சிக்கலாகவே அமையும். இரண்டையும், நாம் விரும்பும் வசதிகளுடன் இணைக்க முடிந்தால் சிறப்பே. இது ஒரு நுட்பச் சிக்கல். --Natkeeran (பேச்சு) 14:46, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆம் நண்பரே, பராமரிப்பு சிக்கல் இருக்கும். ஒரு தகவல் சட்டத்தில் அதிக தகவல்களை இணைக்கும் வசதியும், மற்றொன்றில் குறைவாகவும் முன்பு இருந்தது போல மீண்டும் வரலாம். இதனை தவிர்க்க இரண்டையும் இணைத்தல் சாத்தியமே. ஆனால் Infobox book என்பதை மட்டும் மாற்றி நூல் தகவல் சட்டம் என்று இட வேண்டி இருக்கும் என நினைக்கிறேன். (மற்ற ஆங்கில சொற்களை மாற்ற வேண்டியிராது). வேறு வழிமுறைகள் ஏதேனும் மற்ற பயனர்கள் அறிந்திருக்கின்றார்களா என பார்க்க வேண்டும்.நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:53, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புரு குறித்தான கருத்துகள்[தொகு]

(எனது மணல்தொட்டியில் வார்ப்புவை மாற்றம் செய்து கருத்து பெற்றதை இங்கு பதிக்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:23, 5 அக்டோபர் 2013 (UTC)) அண்ணலே,[பதிலளி]

       அளவும்_பருமனும் : அளவு பருமன் 
பதிப்பகம் : முல்லை நிலையம்

இவ்வாறு வருவதை

அளவும்_பருமனும் : அளவு பருமன் 
பதிப்பகம்  : முல்லை நிலையம்

இவ்வாறு ஆக்கினால் ...... --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:32, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Infobox Book இல் உள்ளது போன்று ஆங்கிலத்திலும் உள்ளீடு செய்வது போல் இருந்தால் நல்லது. அல்லது infobox Book வார்ப்புருவை நீக்கவோ அல்லது வழிமாற்றவோ வேண்டாம்.--Kanags \உரையாடுக 11:40, 4 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 14:58, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


':' இக்குறி ஒரே நேரில் இருந்தால் சிறப்பு --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:27, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் வார்ப்புரு என்றளவில் சிறப்பாக உள்ளது. என்னைப் போன்றவர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் கட்டுரைகளைப் பெயர்த்தழுதுகையில் வார்ப்புரு:Infobox Book ஆங்கில வார்ப்புருவை இட்டால் பண்புசொற்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதன் வெளிப்பாடு தமிழில் இயல்பிருப்பாக வரும். எனவே தகவல்பெட்டியின் வலப்புறம் மட்டும் தமிழ்ப்படுத்தினால் போதுமானது. முழுமையும் தமிழாக்கினால் கூடுதலாக ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ப் பண்புப் பெயர்களை நினைவுறுத்தி நிரப்பவேண்டியிருக்கும். எனவேதான் ஆங்கிலத்திலும் உள்ளீடு செய்வதுபோல் இருந்தால் தமிழிலேயே முதன்மையாக உருவாக்குபவர்களுக்கும் தமிழ்ப்படுத்துபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஏற்கெனவே ஆங்கில வார்ப்புரு இட்டுள்ள கட்டுரைகளில் திருத்த வேண்டாம். நீங்கள் ஏதாவது ஒரு ஆங்கில இசைக்கலைஞர் பக்கத்தை வார்ப்புரு: இசைக்குழு மூலம் தமிழாக்கிப் பார்த்தால் எந்தவித இடர்பாடுகள் எழுகின்றன என்பது புரியும். மேலும் ஆங்கிலத்தில் சிற்சில மாற்றங்களுடன் ஒரே விடயத்திற்கு மேலெழுத்து/கீழெழுத்து வேறுபாட்டுடன் வார்ப்புருகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந் வார்ப்புருவில் ஒரு மேம்பாடாக ஐஸ்பிஎன் சுட்டெண்ணிற்குத் தரப்பட்டுள்ளதுபோல இணையக் கணினி நூலக மையம் என்பதை ஓசிஎல்சி சுட்டெண் எனக் குறித்தால் நலம் என எண்ணுகிறேன்.--மணியன் (பேச்சு) 14:58, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அனைவரின் பரிந்துரைகளையும் ஏற்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:16, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இந்த உரையாடல் வார்ப்புருவின் பேச்சுப் பக்கத்தில் இருப்பதே சிறந்தது. மாற்றி விடுங்கள்.--Kanags \உரையாடுக 12:07, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

டப்பிளின் கருவகம் - பரிந்துரைகள்[தொகு]

அனைத்து அல்லது பெரும்பான்மை வார்ப்புரு:டப்பிளின் கருவம் 15 மீதரவுகள் தரவுகளை இந்த தகவல் சட்டத்தில் ஏதுவாக்குவது பயன்மிக்கது. குறிப்பாக இந்த தகவல் சட்டத்தில் உள்ள தகவல்களை தரவேற்றிப் பகிர்வதற்கு. அந்த வகையில் சில மாற்றங்களைப் பரிந்துரைக்கிறேன்.

  • விபரிப்பு (description) என்ற உறுப்பைச் சேர்த்தல்.
  • பொருள் என்ற உறுப்பை துறை (subject) என்று மாற்றல்.
  • வகை (type) - இது தொடர்பாக தெளிவு வேண்டும். செய்திக் கட்டுரை, பொதுக் கட்டுரை, ஆய்வுக் கட்டுரை, கவிதை/செய்யுள், புதினம், சிறுகதை, காப்பியம்? என்றா
  • மூலம் (source) என்ற உறுப்பைச் சேர்த்தல். இது தமிழுவல் நூல்கள்களின் மூலங்கள், மொழிபெயர்ப்பு நூல்களின் மூலங்கள் போன்றவற்றைச் சுட்ட உதவும்.
  • உறவு (relation) என்ற உறுப்பைச் சேர்த்தல் - இது தொடர்புடைய நூற்களை அல்லது படைப்புக்களைச் சுட்ட உதவும். எ.கா திருக்குறள் உரை நூல் ஒன்றில் பிற உரைநூல்களை இவ்வாறு சுட்டலாம்.
  • துழாவுகை (coverage) என்ற உறுப்பைச் சேர்த்தல்- இது இடம் அல்லது காலம் பற்றிய மேலதிக குறிப்புக்களைச் சேர்க்க உதவும்.
  • எண்ணிம நிலை என்ற உறுப்பைச் சேர்த்தாலும் பயன்மிக்கது.

--Natkeeran (பேச்சு) 17:23, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]