உள்ளடக்கத்துக்குச் செல்

பருத்தித்துறை தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருத்தித்துறை தேர்தல் தொகுதி (Point Pedro Electorate) என்பது 1931 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை நகரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும். மார்ச் 1960 தேர்தலில் பருத்தித்துறைத் தேர்தல் தொகுதியில் இருந்து உடுப்பிட்டி நகரைச் சேர்ந்த பகுதிகள் உடுப்பிட்டி தேர்தல் தொகுதி என்ற தனித் தொகுதியாகப் பிரிக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் பருத்தித்துறை தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல்உறுப்பினர்படிமம்கட்சிகாலம்
1934 ஜி. ஜி. பொன்னம்பலம்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1934-1936
1936 1936-1947
1947 ரி. இராமலிங்கம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1947-1952
1952 1952-1956
1956 பொன். கந்தையா
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1956-1960
1960 க. துரைரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1960-1960
1960 1960-1965
1965 1965-1970
1970 1970-1977
1977 தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989

அரசாங்க சபைத் தேர்தல்கள்

[தொகு]

1931 தேர்தல்

[தொகு]

பிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது.[2] தொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது.[3] இதனால், இலங்கையின் வட மாகாணத்தின் அனைத்து நான்கு தொகுதிகளிலும் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.[3]

1934 இடைத்தேர்தல்

[தொகு]

வட மாகாணத் தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன[4] பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் ஜி. ஜி. பொன்னம்பலம் தெரிவு செய்யப்பட்டார்.[4]

1936 தேர்தல்

[தொகு]

பிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்றது. முடிவுகள் வருமாறு:[5]

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 ஜி. ஜி. பொன்னம்பலம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தராசு14,02943.51%
க. பாலசிங்கம்சுயேட்சை-7,02216.31%
மொத்த வாக்குகள்21,051
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்44,769
வாக்குவீதம்47.03%

நாடாளுமன்றத் தேர்தல்கள்

[தொகு]

1947 தேர்தல்

[தொகு]

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[6]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 ரி. இராமலிங்கம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தராசு10,39643.51%
 எஸ். "ஜெயம்" தர்மகுலசிங்கம்லங்கா சமசமாஜக் கட்சிகண்6,10825.56%
வி. சுப்பையாசுயேட்சைகரண்டி3,89716.31%
 பொன். கந்தையாஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகை3,49214.62%
தகுதியான வாக்குகள்23,893100.00%
நிராகரிக்கப்பட்டவை446
மொத்த வாக்குகள்24,339
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்41,682
வாக்குவீதம்58.39%

1952 தேர்தல்

[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 ரி. இராமலிங்கம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்கண்11,60941.54%
 பொன். கந்தையாஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சிஈருருளி8,61730.83%
கே. சி. நடராஜாசுயேட்சைகை5,51219.72%
 குமாரசுவாமி பாலசிங்கம்லங்கா சமசமாஜக் கட்சிசில்லு2,2087.90%
தகுதியான வாக்குகள்27,946100.00%
நிராகரிக்கப்பட்டவை494
மொத்த வாக்குகள்28,440
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்43,219
வாக்குவீதம்65.80%

1956 தேர்தல்

[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 பொன். கந்தையாஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சிவிண்மீன்14,38150.81%
மு. சிவசிதம்பரம்சுயேட்சைகுடை8,06428.49%
 கே. துரைரத்தினம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[9]வீடு5,85920.70%
தகுதியான வாக்குகள்28,304100.00%
நிராகரிக்கப்பட்டவை317
மொத்த வாக்குகள்28,621
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்44,603
வாக்குவீதம்64.17%

1960 (மார்ச்) தேர்தல்

[தொகு]

1960 ஆம் ஆண்டில் பருத்தித்துறைத் தேர்தல் தொகுதியில் இருந்து உடுப்பிட்டி நகரைச் சேர்ந்த பகுதிகள் உடுப்பிட்டி தேர்தல் தொகுதி என்ற தனித் தொகுதியாகப் பிரிக்கப்பட்டது.

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 கே. துரைரத்தினம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[9]வீடு5,67940.34%
 என். நடராசாஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈருருளி2,52117.91%
 ரி. ஜெயதேவன்லங்கா சமசமாஜக் கட்சிசாவி2,10114.92%
 கே. சேனாதிராஜாஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சிவிண்மீன்1,55211.02%
எஸ். சுந்தரலிங்கம்சுயேட்சைகப்பல்1,2268.71%
எஸ். கந்தையாசூரியன்1,0007.10%
தகுதியான வாக்குகள்14,079100.00%
நிராகரிக்கப்பட்டவை152
மொத்த வாக்குகள்14,231
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்19,408
வாக்குவீதம்73.33%

1960 (சூலை) தேர்தல்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[11]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 கே. துரைரத்தினம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[9]வீடு8,22667.46%
 என். நடராசாஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈருருளி3,96832.54%
தகுதியான வாக்குகள்12,194100.00%
நிராகரிக்கப்பட்டவை129
மொத்த வாக்குகள்12,323
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்19,408
வாக்குவீதம்63.49%

1965 தேர்தல்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[12]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 கே. துரைரத்தினம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[9]வீடு7,56446.24%
 என். நடராசாஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈருருளி6,61440.43%
 கே. மோதிலால் நேர்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிவிண்மீன்2,18013.33%
தகுதியான வாக்குகள்16,358100.00%
நிராகரிக்கப்பட்டவை94
மொத்த வாக்குகள்16,452
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்22,972
வாக்குவீதம்71.62%

1970 தேர்தல்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[13]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 கே. துரைரத்தினம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[9]வீடு9,21748.50%
 என். நடராசாஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈருருளி8,90246.85%
பி. கனகராசாதராசு5793.05%
ஏ. விசாகரத்தினம்சேவல்3051.61%
தகுதியான வாக்குகள்19,003100.00%
நிராகரிக்கப்பட்டவை86
மொத்த வாக்குகள்19,089
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்24,006
வாக்குவீதம்79.52%

1977 தேர்தல்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[14]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 கே. துரைரத்தினம்தமிழர் விடுதலைக் கூட்டணிசூரியன்12,98955.77%
என். நடராசாசுயேட்சைகுடை6,41927.56%
எம். பி. வீரவாகுசுயேட்சைதராசு3,06513.16%
கே. டி. ராஜசிங்கம்கண்6142.64%
கே. எஸ். முத்துக்குமாரசாமிகப்பல்2040.88%
தகுதியான வாக்குகள்23,291100.00%
நிராகரிக்கப்பட்டவை75
மொத்த வாக்குகள்23,366
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்28,447
வாக்குவீதம்82.14%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் கே. துரைரத்தினம் பருத்தித்துறை தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார்[15].

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Dates of Elections". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம்.
  3. 1 2 K T Rajasingham (22 September 2001). "Chapter 7: State Councils - elections and boycotts". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 24 ஜூன் 2009. Retrieved 6 பிப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  4. 1 2 T.D.S.A.Dissanayake. "Chapter 1: Was early universal franchise a disaster?". War or Peace... Sangam. Retrieved 6 பிப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள்". ஈழகேசரி: pp. 6. 1 மார்ச் 1936.
  6. "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-10-25.
  7. "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-10-25.
  8. "Result of Parliamentary General Election 1956" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-10-25.
  9. 1 2 3 4 5 இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது.
  10. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2012-10-25.
  11. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-10-25.
  12. "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. Retrieved 2012-10-25.
  13. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2012-10-25.
  14. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-07-17. Retrieved 2012-10-25.
  15. Wickramasinghe, Wimal (18 January 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.