உடுவில் தேர்தல் தொகுதி
உடுவில் அல்லது மானிப்பாய் தேர்தல் தொகுதி (Uduvil / Manipay Electorate) என்பது மார்ச் 1960 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதி வி. தர்மலிங்கம் 1960 முதல் 1977 வரையான அனைத்துத் தேர்தல்களிலும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1985, செப்டம்பர் 2 இல் படுகொலை செய்யப்பட்டார்[1]
1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[2]. 1989 தேர்தலில் உடுவில் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.
1960 (மார்ச்) தேர்தல்கள்[தொகு]
19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
வி. தர்மலிங்கம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி[4] | வீடு | 9,033 | 44.07% | |
பொன்னம்பலம் நாகலிங்கம் | லங்கா சமசமாஜக் கட்சி | திறப்பு | 3,811 | 18.59% | |
வி. பொன்னம்பலம் | இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி | நட்சத்திரம் | 3,541 | 17.27% | |
ஜே. டி. ஆசீர்வாதம் | சுயேட்சை | புத்தகம் | 1,552 | 7.57% | |
எஸ். ஹண்டி பேரின்பநாயகம் | சுயேட்சை | கண்ணாடி | 1,241 | 6.05% | |
என். சிவநேசன் | சுயேட்சை | சூரியன் | 1,008 | 4.92% | |
வி. வீரசிங்கம் | சுயேட்சை | சேவல் | 312 | 1.52% | |
தகுதியான வாக்குகள் | 20,498 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 212 | ||||
மொத்த வாக்குகள் | 20,710 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 27,278 | ||||
வீதம் | 75.92% |
1960 (சூலை) தேர்தல்கள்[தொகு]
20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
வி. தர்மலிங்கம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி[4] | House | 11,475 | 63.12% | |
பொன்னம்பலம் நாகலிங்கம் | லங்கா சமசமாஜக் கட்சி | திறப்பு | 6,704 | 36.88% | |
தகுதியான வாக்குகள் | 18,179 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 195 | ||||
மொத்த வாக்குகள் | 18,374 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 27,278 | ||||
வீதம் | 67.36% |
1965 தேர்தல்கள்[தொகு]
22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
வி. தர்மலிங்கம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி[4] | House | 11,638 | 48.61% | |
பொன்னம்பலம் நாகலிங்கம் | லங்கா சமசமாஜக் கட்சி | திறப்பு | 6,726 | 28.09% | |
என். சிவநேசன் | அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் | சைக்கிள் | 5,577 | 23.29% | |
தகுதியான வாக்குகள் | 23,941 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 287 | ||||
மொத்த வாக்குகள் | 24,228 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 33,280 | ||||
வீதம் | 72.80% |
1970 தேர்தல்கள்[தொகு]
27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
வி. தர்மலிங்கம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி[4] | House | 14,120 | 49.27% | |
என். சிவநேசன் | அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் | சைக்கிள் | 11,656 | 40.68% | |
குமாரசாமி வினோதன் | சுயேட்சை | தராசு | 1,362 | 4.75% | |
வி. காராளசிங்கம் | லங்கா சமசமாஜக் கட்சி | திறப்பு | 1,264 | 4.41% | |
பி. வி. எம். கே. எம். சின்னத்துரை | சுயேட்சை | குடை | 254 | 0.89% | |
தகுதியான வாக்குகள் | 28,656 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 119 | ||||
மொத்த வாக்குகள் | 28,775 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 36,690 | ||||
வீதம் | 78.43% |
1977 தேர்தல்கள்[தொகு]
21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
வி. தர்மலிங்கம் | தமிழர் விடுதலைக் கூட்டணி | சூரியன் | 27,550 | 83.99% | |
ஆர். எஸ். அலோசியசு | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 3,300 | 10.06% | |
சி. பி. வி. எம். கே. முதலியார் | சுயேட்சை | குடை | 1,065 | 3.25% | |
கே. என். இரத்தினவேல் | சுயேட்சை | ஏணி | 887 | 2.70% | |
தகுதியான வாக்குகள் | 32,802 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 199 | ||||
மொத்த வாக்குகள் | 33,001 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 41,373 | ||||
வீதம் | 79.76% |
இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் வி. தர்மலிங்கம் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்[9].
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ KT Rajasingham. "Chapter 33: India shows its hand". SRI LANKA: THE UNTOLD STORY. ஏசியா டைம்ஸ். 2010-05-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 மார்ச் 2010 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. 2015-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 4.2 4.3 சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. 2015-09-24 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. 2015-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. 2009-12-09 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-07 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. 2011-07-17 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Wickramasinghe, Wimal (18 January 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". The Island, Sri Lanka. Archived from the original on 17 ஜூன் 2011. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.