உள்ளடக்கத்துக்குச் செல்

கல்குடா தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்குடா தேர்தல் தொகுதி (Kalkudah Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா நகரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. இதற்கமைய, 1989 தேர்தலில் கல்குடா தேர்தல் தொகுதி மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1947 தேர்தல்கள்

[தொகு]

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
வி. நல்லையா சுயேட்சை கை 5,559 46.01%
கே. டபிள்யூ. தேவநாயகம் பறவை 3,176 26.29%
மீராலெப்பை வீடு 2,411 19.96%
எம். ஏ. சி. எம். சாலி சாவி 935 7.74%
தகுதியான வாக்குகள் 12,081 100.00%
நிராகரிக்கப்பட்டவை 220
மொத்த வாக்குகள் 12,301
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 22,030
வாக்கு வீதம் 55.84%

1952 தேர்தல்கள்

[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. நல்லையா ஐக்கிய தேசியக் கட்சி குடை 7,559 52.92%
சிவஞானம் சுப்பிரமணியம் யானை 6,724 47.08%
தகுதியான வாக்குகள் 14,283 100.00%
நிராகரிக்கப்பட்டவை 147
மொத்த வாக்குகள் 14,430
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 22,285
வாக்கு வீதம் 64.75%

1956 தேர்தல்கள்

[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
அகமது உசைன் மாக்கான் மாக்கார் சுயேட்சை குடை 6,719 41.77%
வி. நல்லையா தராசு 4,625 28.75%
  பொ. மாணிக்கவாசகர் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 4,555 28.31%
எஸ். சிவஞானம் ஈருருளி 188 1.17%
தகுதியான வாக்குகள் 16,087 100.00%
நிராகரிக்கப்பட்டவை 165
மொத்த வாக்குகள் 16,252
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 26,732
வாக்கு வீதம் 60.80%

1960 (மார்ச்) தேர்தல்கள்

[தொகு]

1960 இலிருந்து மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் இருந்து இரு அங்கத்தவர்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாக்காளர் ஒவ்வொருவரும் இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது.

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  பொ. மாணிக்கவாசகர் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 7,318 48.51%
  ஏ. ஐ. மாக்கான் மாக்கார் ஐக்கிய தேசியக் கட்சி யானை 5,587 37.03%
வி. நல்லையா கோப்பை 2,182 14.46%
தகுதியான வாக்குகள் 15,087 100.00%
நிராகரிக்கப்பட்டவை 212
மொத்த வாக்குகள் 15,299
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 18,330
வாக்கு வீதம் 83.46%

1960 (சூலை) தேர்தல்கள்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  பொ. மாணிக்கவாசகர் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 7,605 58.95%
எஸ். சிவஞானம் சுயேட்சை சேவல் 5,295 41.05%
தகுதியான வாக்குகள் 12,900 100.00%
நிராகரிக்கப்பட்டவை 125
மொத்த வாக்குகள் 13,025
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 18,330
வாக்கு வீதம் 71.06%

1965 தேர்தல்கள்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  கே. டபிள்யூ. தேவநாயகம் ஐக்கிய தேசியக் கட்சி யானை 6,566 37.93%
  பொ. மாணிக்கவாசகர் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 6,096 35.22%
  வி. நல்லையா அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 3,354 19.38%
  மெ. ஏ. சி. ஏ. ரகுமான் இலங்கை சுதந்திரக் கட்சி கை 981 5.67%
யூ. ஹாஜி பைலா குடை 312 1.80%
தகுதியான வாக்குகள் 17,309 100.00%
நிராகரிக்கப்பட்டவை 144
மொத்த வாக்குகள் 17,453
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 24,008
வாக்கு வீதம் 72.70%

1970 தேர்தல்கள்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  கே. டபிள்யூ. தேவநாயகம் ஐக்கிய தேசியக் கட்சி யானை 11,205 50.53%
  பொ. மாணிக்கவாசகர் இலங்கைத் தமிழரசுக் கட்சி[5] வீடு 8,420 37.97%
எஸ். சிவஞானம் தராசு 1,660 7.49%
எஸ். எஸ். கேப்ரியல் குடை 557 2.51%
  ஏ. எம். அப்துல் கபூர் இலங்கை சுதந்திரக் கட்சி கை 331 1.49%
தகுதியான வாக்குகள் 22,173 100.00%
நிராகரிக்கப்பட்டவை 120
மொத்த வாக்குகள் 22,293
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 26,670
வாக்கு வீதம் 83.59%

1977 தேர்தல்கள்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  கே. டபிள்யூ. தேவநாயகம் ஐக்கிய தேசியக் கட்சி யானை 13,140 44.94%
  எஸ். சம்பந்தமூர்த்தி தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 12,595 43.07%
ஏ. எச். மாக்கான் மாக்கார் Hand 3,507 11.99%
தகுதியான வாக்குகள் 29,242 100.00%
நிராகரிக்கப்பட்டவை 217
மொத்த வாக்குகள் 29,459
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 33,995
வாக்கு வீதம் 86.66%

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
  4. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Also known as the Federal Party
  6. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
  7. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
  8. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
  9. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  10. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்குடா_தேர்தல்_தொகுதி&oldid=3548244" இலிருந்து மீள்விக்கப்பட்டது