உள்ளடக்கத்துக்குச் செல்

திருகோணமலை தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருகோணமலை தேர்தல் தொகுதி (Trincomalee Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பிரதேசத்தை உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் திருகோணமலை தேர்தல் தொகுதி திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் உறுப்பினர் கட்சி காலம்
1947 சுப்பிரமணியம் சிவபாலன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1947-1952
1952 என். ஆர். இராசவரோதயம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1952-1963
1956
1960 (மார்ச்)
1960 (சூலை)
1963 இடைத்தேர்தல் சு. ம. மாணிக்கராஜா 1963-1970
1965
1970 பா. நேமிநாதன் 1970-1977
1977 இரா. சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989

1947 தேர்தல்கள்

[தொகு]

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எஸ். சிவபாலன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வீடு 5,252 56.15%
ஏ. சி. கனகசிங்கம் குடை 3225 34.48%
ஈ. ஏ. பி. நன்டயஸ் சில்வா யானை 877 9.38%
தகுதியான வாக்குகள் 9,354 100.00%
நிராகரிக்கப்பட்டவை 980
மொத்த வாக்குகள் 10,334
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 18,421
வாக்கு வீதம் 56.10%

1952 தேர்தல்கள்

[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
என். ஆர். இராசவரோதயம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 4,450 45.80%
எஸ். சிவபாலன் யானை 3,864 39.77%
கே. சிவபாலன் விண்மீன் 1,403 14.44%
தகுதியான வாக்குகள் 9,717 100.00%
நிராகரிக்கப்பட்டவை 103
மொத்த வாக்குகள் 9,820
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 14,272
வாக்கு வீதம் 68.81%

1956 தேர்தல்கள்

[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
என். ஆர். இராசவரோதயம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 7,048 56.88%
ஜே. ஏ. முத்துதந்திரிகே குடை 2,965 23.93%
ஏ. ஐ. ராஜசிங்கம் ஈருருளி 2,378 19.19%
தகுதியான வாக்குகள் 12,391 100.00%
நிராகரிக்கப்பட்டவை 58
மொத்த வாக்குகள் 12,449
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 16,093
வாக்கு வீதம் 77.36%

1960 (மார்ச்) தேர்தல்கள்

[தொகு]

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
என். ஆர். இராசவரோதயம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 8,872 71.43%
ஆர். எம். ஜி. துஸ்தாக்கீர் சுயேட்சை கண்ணாடி 1,311 10.55%
ஏ. பியதாச கை 1,265 10.18%
சிறீ லால் குணரத்தின குடை 973 7.83%
தகுதியான வாக்குகள் 12,421 100.00%
நிராகரிக்கப்பட்டவை 127
மொத்த வாக்குகள் 12,548
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 19,024
வாக்கு வீதம் 65.96%

1960 (சூலை) தேர்தல்கள்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
என். ஆர். இராசவரோதயம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 8,649 64.88%
ஈ. ஆர். எஸ். ஆர். குமாரசுவாமி இலங்கை சுதந்திரக் கட்சி கை 4,614 34.61%
கே. பி. ஆரியதாசா சில்லு 67 0.50%
தகுதியான வாக்குகள் 13,330 100.00%
நிராகரிக்கப்பட்டவை 116
மொத்த வாக்குகள் 13,446
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 19,024
வாக்கு வீதம் 70.68%

என். ஆர். இராசவரோதயம் 1963 ஆகத்து 27 இல் இறந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் இடம்பெற்றது.

1963 இடைத்தேர்தல்

[தொகு]

23 நவம்பர் 1963 இல் திருகோணமலை தொகுதிக்கு இடம்பெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எஸ். எம். மாணிக்கராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 11,532 60.28%
ஏ. எச். அல்விஸ் விண்மீன் 5,721 29.91%
ஏ. விஜயானந்தன் சில்லு 1,876 9.81%
தகுதியான வாக்குகள் 19,129 100%
நிராகரிக்கப்பட்டவை 134
மொத்த வாக்குகள் 19,263
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 26,427
வாக்கு வீதம் 72.89%

1965 தேர்தல்கள்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
எஸ். எம். மாணிக்கராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 9,651 48.48%
வி. ஆர். நவரத்தினராஜா யானை 5,702 28.64%
எஸ். எச். சோமபாலா இலங்கை சுதந்திரக் கட்சி கை 4,555 22.88%
தகுதியான வாக்குகள் 19,908 100.00%
நிராகரிக்கப்பட்டவை 271
மொத்த வாக்குகள் 20,179
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 27,643
வாக்கு வீதம் 73.00%

1970 தேர்தல்கள்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
பா. நேமிநாதன் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 12,395 45.83%
எஸ். எம். ஏ. சி. ஜமால்தீன் ஐக்கிய முன்னணி கை 8,346 30.86%
வி. ஆர். நவரத்தினராஜா யானை 5,703 21.09%
ஆர். ஜி. சேனநாயக்க மணி 601 2.22%
தகுதியான வாக்குகள் 27,045 100.00%
நிராகரிக்கப்பட்டவை 108
மொத்த வாக்குகள் 27,153
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,445
வாக்கு வீதம் 76.61%

1977 தேர்தல்கள்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
இரா. சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 15,144 51.76%
வி. ஆர். நவரத்தினராஜா யானை 11,823 40.41%
எஸ். தேவராசா இலங்கை சுதந்திரக் கட்சி கை 1,674 5.72%
குணதாச வர்ணசூரிய வண்ணத்துப்பூச்சி 565 1.93%
ஈ. ஜே. ஏ. பி. பேபிசிங்கோ மணி 54 0.18%
தகுதியான வாக்குகள் 29,260 100.00%
நிராகரிக்கப்பட்டவை 119
மொத்த வாக்குகள் 29,379
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,778
வாக்கு வீதம் 82.11%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இரா. சம்பந்தன் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[11].

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  4. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  5. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  6. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  7. "Result of Parliamentary ByElections" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  8. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  9. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  10. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.
  11. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.