கிளிநொச்சி தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளிநொச்சி தேர்தல் தொகுதி (Kilinochchi Electorate) என்பது மார்ச் 1960 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகரை உள்ளடக்கியதாகும். இத்தொகுதி மார்ச் 1960 தேர்தலின் போது சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் தெற்குப் பகுதியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனித் தேர்தல் தொகுதி ஆகியது.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் கிளிநொச்சி தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் உறுப்பினர் கட்சி காலம்
1960 (மார்ச்) அ. சிவசுந்தரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1960-1965
1960 (சூலை)
1965 கா. பொ. இரத்தினம் 1965-1970
1970 வீரசிங்கம் ஆனந்தசங்கரி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1970-1977
1977 தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989

1960 (மார்ச்) தேர்தல்கள்[தொகு]

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  அ. சிவசுந்தரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 3,741 41.76%
அன்ரன் சி. பொன்னம்பலம் சுயேட்சை தையல் இயந்திரம் 2,582 28.82%
பி. ஆறுமுகம் சேவல் 1,386 15.47%
  வீரசிங்கம் ஆனந்தசங்கரி லங்கா சமசமாஜக் கட்சி சாவி 1,114 12.43%
சி. சரவணமுத்து சூரியன் 136 1.52%
தகுதியான வாக்குகள் 8,959 100.00%
நிராகரிக்கப்பட்டவை 120
மொத்த வாக்குகள் 9,079
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 13,991
வாக்கு வீதம் 64.89%

1960 (சூலை) தேர்தல்கள்[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  அ. சிவசுந்தரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 5,338 72.64%
  வீரசிங்கம் ஆனந்தசங்கரி லங்கா சமசமாஜக் கட்சி சாவி 2,011 27.36%
தகுதியான வாக்குகள் 7,349 100.00%
நிராகரிக்கப்பட்டவை 88
மொத்த வாக்குகள் 7,437
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 13,991
வாக்கு வீதம் 53.16%

1965 தேர்தல்கள்[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  கா. பொ. இரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 5,922 44.69%
  வே. குமாரசுவாமி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 4,076 30.76%
  வீரசிங்கம் ஆனந்தசங்கரி லங்கா சமசமாஜக் கட்சி சாவி 1,804 13.62%
சி. சரவணமுத்து மரம் 831 6.27%
கே. செல்வநாயகம் தராசு 390 2.94%
என். எஸ். சேதுகாவலர் பேருந்து 130 0.98%
ஆர். வேதநாயகம் குடை 97 0.73%
தகுதியான வாக்குகள் 13,250 100.00%
நிராகரிக்கப்பட்டவை 116
மொத்த வாக்குகள் 13,366
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 18,738
வாக்கு வீதம் 71.33%

1970 தேர்தல்கள்[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வீரசிங்கம் ஆனந்தசங்கரி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 9,049 50.19%
  எம். ஆலாலசுந்தரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி[3] வீடு 8,392 46.55%
கே. ஏ. ஜெரோமி சுயேட்சை தராசு 253 1.40%
அ. சிவசுந்தரம் கண் 196 1.09%
  கே. கனகரத்தினம் லங்கா சமசமாஜக் கட்சி சாவி 139 0.77%
தகுதியான வாக்குகள் 18,029 100.00%
நிராகரிக்கப்பட்டவை 60
மொத்த வாக்குகள் 18,089
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 23,793
வாக்கு வீதம் 76.03%

1977 தேர்தல்கள்[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வீரசிங்கம் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 15,607 73.42%
  சி. குமாரசூரியர் இலங்கை சுதந்திரக் கட்சி கை 4,006 18.84%
என். கனகசூரியர் யானை 1,497 7.04%
ஐ. ஞானசங்கரி தராசு 76 0.36%
சின்னத்தம்பி கணேசு கண் 72 0.34%
தகுதியான வாக்குகள் 21,258 100.00%
நிராகரிக்கப்பட்டவை 56
மொத்த வாக்குகள் 21,314
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 26,670
வாக்கு வீதம் 79.92%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் வீரசிங்கம் ஆனந்தசங்கரி நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்[8].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20.
  3. 3.0 3.1 3.2 3.3 தமிழரசுக் கட்சி சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது.
  4. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20.
  5. "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2012-10-21.
  6. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-10-21.
  7. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2012-10-21.
  8. Wickramasinghe, Wimal (18 January 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.