வே. குமாரசுவாமி
வி. குமாரசுவாமி V. Kumaraswamy | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் சாவகச்சேரி | |
பதவியில் 1947–1956 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | வ. ந. நவரத்தினம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 சூலை 1919 |
இறப்பு | மார்ச்சு 10, 1978 கொழும்பு | (அகவை 58)
பிள்ளைகள் | வாகீசுவரன், துஷ்யந்தி[1] |
முன்னாள் கல்லூரி | இலங்கை சட்டக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
வேலுப்பிள்ளை குமாரசுவாமி (Velupillai Kumaraswamy, 31 சூலை 1919 - 10 மார்ச் 1978) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[2]
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]குமாரசுவாமி யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரியில் வழக்கறிஞர் வேலுப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய குமாரசாமி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் துணை அதிபரானார்.[3] பின்னர் துணை உணவுக் கட்டுப்பாட்டதிகாரியாகப் பணியாற்றிய பின்னர்,[3] இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று[3] கொழும்பில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
அரசியலில்
[தொகு]குமாரசுவாமி சட்டக்கல்லூரியில் படிக்கும் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 1948 ஆம் ஆண்டில் தமிழ் காங்கிரசு கட்சி டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவின் அரசில் இணைந்ததை அடுத்து குமாரசுவாமி நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1][5] துணை நிதி அமைச்சராகவும், துணை உணவு, விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார்.[3]
1952 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] 1953 ஆம் ஆண்டில் தமிழ்க் காங்கிரசு கட்சி அரசில் இருந்து விலகினாலும், குமாரசுவாமி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தார்.[7] ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து குமாரசுவாமி 1956 இல் அக்கட்சியை விட்டு வெளியேறினார்.[7]
குமாரசுவாமி 1956 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தமிழரசுக் கட்சி வேட்பாலர் வி. என். நவரத்தினத்திடம் தோற்றார்.[1][8] பின்னர் மார்ச் 1960,[9] 1970[10] தேர்தல்களில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நவரத்தினத்திடம் தோற்றார்.[11]
சமூகப் பணி
[தொகு]குமாரசாமியின் முயற்சியினால் சாவகச்சேரியில் நீதிமன்றம் ஒன்று உருவானது.[3] சாவகச்சேரி இந்துக் கல்லூரியை "ஏ" தரமாக உயர்த்தினார்.[3] சாவகச்சேரியில் மகளிர் பாடசாலை ஒன்றை உருவாக்கினார்.[3] கைதடி வயோதிபர் இல்லம் இவரது முயற்சியினால் உருவாக்கப்பட்டது.[3]
மறைவு
[தொகு]குமாரசாமி குருநாகலில் உள்ள தனது பண்ணைக்குச் சென்ற வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 1978 மார்ச் 10 ஆம் நாள் தனது 58-ஆவது அகவையில் காலமானார்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 90.
- ↑ "Directory of Past Members: Kumaraswamy, Velupillai". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "அமரர் குமாரசாமிக்கு நீதிமன்றத்தில் அஞ்சலி". ஈழநாடு (யாழ்ப்பாணம்). 16 மார்ச் 1978.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
- ↑ Rajasingham, K. T. "Chapter 14: Post-colonial realignment of political forces". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2013-06-14. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
- ↑ 7.0 7.1 Rajasingham, K. T. "Chapter 15: Turbulence in any language". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2015-02-28.
- ↑ "குமாரசாமி காலமானார்". ஈழநாடு (யாழ்ப்பாணம்). 11 மார்ச் 1978. http://noolaham.net/project/352/35105/35105.pdf. பார்த்த நாள்: 29 மே 2020.
- 1919 பிறப்புகள்
- 1978 இறப்புகள்
- இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் வட மாகாண நபர்கள்