உள்ளடக்கத்துக்குச் செல்

கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி (Colombo East electorate) என்பது சூலை 1977 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் மே மாகாணத்தில் கொழும்பு நகரை அண்டிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். இத்தொகுதி 1977 ஆம் ஆண்டில் கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதி, கொழும்பு கிழக்கு என்றும் கொழும்பு மேற்கு என்றும் இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டதால் உருவாகியது.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல்உறுப்பினர்கட்சிகாலம்
1977 எட்மண்ட் சமரவிக்கிரம ஐக்கிய தேசியக் கட்சி 1977-1989

தேர்தல்கள்

[தொகு]

1977 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

1977 சூலை 21 இல் இடம்பெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்:[2]

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
எட்மண்ட் சமரவிக்கிரமயானை19,72158.75%
விவியன் எஸ். கொடிக்காரகை7,67822.87%
பெர்னார்ட் சொய்சாசாவி5,95117.73%
குணசேன சுபசிங்ககுடை1030.31%
எம். எச். ஜயரத்தின பீரிஸ்மணிக்கூடு570.17%
எம். பி. ஆரியதாசபூ560.17%
செல்லுபடியான வாக்குகள்33,566100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்136
மொத்த வாக்குகள்33,702
பதிவு செய்த வாக்காளர்கள்43,574
வாக்குவீதம்77.34%

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. Retrieved 2014-12-27.