உள்ளடக்கத்துக்குச் செல்

கோப்பாய் தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோப்பாய் தேர்தல் தொகுதி (Kopay Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் நகரை உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் கோப்பாய் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1947 தேர்தல்கள்

[தொகு]

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 சி. வன்னியசிங்கம்அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்கை9,61958.90%
 எஸ். ராசரத்தினம்ஐக்கிய தேசியக் கட்சியானை5,26632.24%
சி. இரகுநாதன்சுயேட்சைவண்டிச் சில்லு1,4478.86%
தகுதியான வாக்குகள்16,332100.00%
நிராகரிக்கப்பட்டவை276
மொத்த வாக்குகள்16,608
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்32,999
வீதம்50.33%

1952 தேர்தல்கள்

[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 சி. வன்னியசிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]சாவி9,41044.89%
 சி. அருளம்பலம்அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்யானை9,20043.88%
ஆர். ஆர். தர்மரத்தினம்நட்சத்திரம்2,35411.23%
தகுதியான வாக்குகள்20,964100.00%
நிராகரிக்கப்பட்டவை283
மொத்த வாக்குகள்21,247
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்32,903
வீதம்64.57%

1956 தேர்தல்கள்

[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 சி. வன்னியசிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு12,80453.83%
சி. அருளம்பலம்குடை10,98346.17%
தகுதியான வாக்குகள்23,787100.00%
நிராகரிக்கப்பட்டவை304
மொத்த வாக்குகள்24,091
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்34,465
வீதம்69.90%

சி. வன்னியசிங்கம் 1959 செப்டம்பர் 17 இல் காலமானார்.

1960 (மார்ச்) தேர்தல்கள்

[தொகு]

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 மு. பாலசுந்தரம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு10,27948.63%
 டி. குணரத்தினம்அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்சைக்கிள்4,93623.35%
எஸ். கே. நல்லதம்பிசூரியன்3,49416.53%
 கே. வி. எஸ். சண்முகநாதன்லங்கா சமசமாஜக் கட்சிதிறப்பு1,7778.41%
 எஸ். பி. நடராஜாஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சிசூரியன்4582.17%
எஸ். சிவசுப்பிரமணியம்சேவல்1920.91%
தகுதியான வாக்குகள்21,136100.00%
நிராகரிக்கப்பட்டவை351
மொத்த வாக்குகள்21,487
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்27,858
வீதம்77.13%

1960 (சூலை) தேர்தல்கள்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 மு. பாலசுந்தரம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு12,08867.64%
 ரி. குணரத்தினம்அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்சைக்கிள்5,78232.36%
தகுதியான வாக்குகள்17,870100.00%
நிராகரிக்கப்பட்டவை188
மொத்த வாக்குகள்18,058
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்27,858
வீதம்64.82%

1965 தேர்தல்கள்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 சி. கதிரவேலுப்பிள்ளைஇலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு12,33951.93%
 ரி. குணரத்தினம்அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்சைக்கிள்8,23034.64%
 எம். துரைராஜாலங்கா சமசமாஜக் கட்சிதிறப்பு2,62511.05%
மு. பாலசுந்தரம்குடை5682.39%
தகுதியான வாக்குகள்23,762100.00%
நிராகரிக்கப்பட்டவை361
மொத்த வாக்குகள்24,123
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்33,091
வீதம்72.90%

1970 தேர்தல்கள்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 சி. கதிரவேலுப்பிள்ளைஇலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு16,42855.85%
 ரி. குணரத்தினம்அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்சைக்கிள்11,28838.38%
எம். எஸ். கனகசுந்தரம்தராசு9833.34%
 எம். துரைராஜாஇலங்கை சுதந்திரக் கட்சிகை7132.42%
தகுதியான வாக்குகள்29,412100.00%
நிராகரிக்கப்பட்டவை189
மொத்த வாக்குகள்29,601
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்37,464
வீதம்79.01%

1977 தேர்தல்கள்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 சி. கதிரவேலுப்பிள்ளைதமிழர் விடுதலைக் கூட்டணிசூரியன்25,84077.20%
 வி. நடராஜாலங்கா சமசமாஜக் கட்சிதிறப்பு3,48710.42%
 எஸ். ஜெகநாதனஐக்கிய தேசியக் கட்சியானை2,6998.06%
வி. ரி. ஜெயதேவன்சுயேட்சைகப்பல்1,4444.31%
தகுதியான வாக்குகள்33,470100.00%
நிராகரிக்கப்பட்டவை149
மொத்த வாக்குகள்33,619
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்41,824
வீதம்80.38%

சி. கதிரவேலுப்பிள்ளை 1981 மார்ச் 31 இல் இறக்கவே, அவருக்குப் பதிலாக எம். ஆலாலசுந்தரம் 1981 சூலை 23 இல் நியமிக்கப்பட்டார்[11].

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் எம். ஆலாலசுந்தரம் நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்[12].

எம். ஆலாலசுந்தரம் 1985 செப்டம்பர் 2 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்[13].

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2011-12-29.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2011-12-29.
  4. 1 2 3 4 5 6 சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது.
  5. "Result of Parliamentary General Election 1956" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2011-12-29.
  6. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-12. Retrieved 2011-12-29.
  7. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2011-12-29.
  8. "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. Retrieved 2011-12-29.
  9. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2011-12-29.
  10. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-07-17. Retrieved 2011-12-29.
  11. KT Rajasingham (16 February 2002). "Chapter 27 - Horsewhip Amirthalingham". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 22 ஜூன் 2002. Retrieved 23 March 2010. {{cite cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Wickramasinghe, Wimal (18 January 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.
  13. KT Rajasingham. "Chapter 33: India shows its hand". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 19 மே 2010. Retrieved 23 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பாய்_தேர்தல்_தொகுதி&oldid=3552121" இலிருந்து மீள்விக்கப்பட்டது