தா. இராமலிங்கம் (அரசியல்வாதி)
ரி. இராமலிங்கம் | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் பருத்தித்துறை | |
பதவியில் 1947–1956 | |
பின்னவர் | பொன். கந்தையா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அண். 1905 |
அரசியல் கட்சி | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் |
முன்னாள் கல்லூரி | உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் (Thamodarampillai Ramalingam, அண். 1905 - ) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]இராமலிங்கம் 1905 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வடக்கே உடுப்பிட்டி என்ற ஊரில், வழக்கறிஞர் ஆர். தாமோதரம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் கல்வி கற்ற இவர்,[2] இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரில் சேர்ந்து அறிவியலில் பட்டம் பெற்றார்.[1]
இவர் கரணவாய் வடக்கைச் சேர்ந்த மீனாட்சிபிள்ளை என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து ஆண்களும், மூன்று பெண்களுமாக எட்டுப் பிள்ளைகள் உள்ளனர்.
பணி
[தொகு]பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின்னர் சட்டம் பயின்று, வட இலங்கையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் நீதித்துறை நடுவராகப் பணியாற்றினார்.[1]
அரசியலில்
[தொகு]அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இராமலிங்கம், அக்கட்சியின் சார்பில் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] 1952 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 158.
- ↑ நீலகண்டன், கந்தையா (13 அக்டோபர் 2002). "150 years of Uduppidy A.M. College". தி ஐலண்ட்] இம் மூலத்தில் இருந்து 2014-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140204042859/http://www.island.lk/2002/10/13/featur12.html.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-09-01.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-09-01.