பயனர் பேச்சு:S.BATHRUNISA

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், S.BATHRUNISA, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Chandravathanaa (பேச்சு) 08:56, 1 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

--Kanags \உரையாடுக 09:54, 17 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

வணக்கம். புதிய கட்டுரை துவங்கும் முன் பெயரிடல் மரபு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கே. என். இலட்சுமணன் என்று பெயர் இடைவெளியுடன் கட்டுரை அமைய வேண்டும். நன்றி. --சா. அருணாசலம் (பேச்சு) 16:57, 17 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

கே. என். இலக்குமணன்[தொகு]

நீங்கள் துவக்கிய கட்டுரை கே. என். இலக்குமணன் ஏற்கனவே உள்ளதால் நீக்க பரிந்துரைத்துள்ளேன்.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:02, 17 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

சரி S.BATHRUNISA (பேச்சு) 17:04, 17 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

December 2022[தொகு]

தகவற் படவுரு வணக்கம், புத்தக வரலாறு என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. Kanags \உரையாடுக 22:18, 26 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

சரி S.BATHRUNISA (பேச்சு) 14:55, 27 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
சரி S.BATHRUNISA (பேச்சு) 14:18, 31 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

கட்டுரைத் தலைப்பு[தொகு]

புல்பட்டா அல்லது புல்பெட்டா, பிறையிரி அல்லது பிறையாரி போன்ற தலைப்புகள் விக்கிப்பீடியாவில் இடுவதில்லை. இரண்டாவது பெயருக்கு வேண்டுமானால் வழிமாற்றை அவசியமானால் ஏற்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 21:51, 21 சனவரி 2023 (UTC)[பதிலளி]

ஒகே அய்யா S.BATHRUNISA (பேச்சு) 12:59, 22 சனவரி 2023 (UTC)[பதிலளி]

அண்மையக் கட்டுரை[தொகு]

லோரி (மலையாளத் திரைப்படம்) எனும் தலைப்பில் கட்டுரையை ஆரம்பித்து, உரிய உள்ளடக்கங்களை இடுங்கள். அப்போதுதான் அக்கட்டுரை உங்கள் கணக்கில் சேரும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:58, 29 சனவரி 2023 (UTC)[பதிலளி]

மலையாள மொழியில் லோரி என்பதாக தலைப்பு இருப்பதால், லோரி (மலையாளத் திரைப்படம்) என்பதாக தலைப்பு இருப்பதே சரியாக இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:00, 29 சனவரி 2023 (UTC)[பதிலளி]

நீங்கள் புதிய கட்டுரையை publish செய்த பிறகு, சரக்குந்து (1980 மலையாளப் படம்) எனும் கட்டுரையை நான் பழைய நிலைக்கு மாற்றி உதவுகிறேன். நன்றி! —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:04, 29 சனவரி 2023 (UTC)[பதிலளி]

சரி அய்யா S.BATHRUNISA (பேச்சு) 13:10, 29 சனவரி 2023 (UTC)[பதிலளி]

இப்போது மணற்தொட்டியில் இருக்கும் உள்ளடக்கங்களை, லோரி (மலையாளத் திரைப்படம்) எனும் தலைப்பில் கட்டுரை ஆரம்பித்து, அதில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:33, 1 பெப்ரவரி 2023 (UTC)

மிக்க நன்றி அய்யா. நீங்கள் கூறியது போல் புதிய கட்டுரை பதிவிட்டுள்ளேன். உதவிக்கு நன்றி. S.BATHRUNISA (பேச்சு) 08:08, 1 பெப்ரவரி 2023 (UTC)

தமிழாக்கம் செய்யும்போது, கவனமாக இருங்கள். Plot எனபதை 'சதி' என தமிழாக்கம் செய்திருந்தீர்கள். இதனை 'கதை' என அருளரசன் திருத்தியிருக்கிறார். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் பிறர் செய்யும் முன்னேற்றங்களை கவனித்து வந்தால், இன்னமும் தரமான கட்டுரைகளை உங்களால் எழுத இயலும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:46, 4 பெப்ரவரி 2023 (UTC)

மிக்க நன்றி அய்யா. இனிமேல் கவனித்து கொள்கிறேன். S.BATHRUNISA (பேச்சு) 15:51, 4 பெப்ரவரி 2023 (UTC)

வணக்கம், S.BATHRUNISA!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 03:32, 5 பெப்ரவரி 2023 (UTC)

தங்கள் கருத்துக்கு நன்றி. தங்கள் தொடர்பு எண் கிடைத்தால் உதவியாக இருக்கும். தருவீர்களா. S.BATHRUNISA (பேச்சு) 16:41, 7 பெப்ரவரி 2023 (UTC)

வழிகாட்டல்[தொகு]

வணக்கம். மலையாளத் திரைப்படம் என ஒற்று சேர்த்து எழுதுவதே சரி. அத்தோடு, கட்டுரைகளில் நீக்கப்படும் பகுப்புகளை கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:02, 10 பெப்ரவரி 2023 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

வணக்கம். கலைக்களஞ்சியக் கட்டுரையின் 'உயிர்' என்பது மேற்கோள்களைக் கொண்டிருத்தல் ஆகும். உங்களின் கட்டுரையான மகாராசுடிரா மாநிலத்தின் இசையில் ஒரு ஆதாரம்கூட இல்லை. இந்தக் கட்டுரையில் குறைந்தபட்சம் ஒரு ஆதாரமாவது சேருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:07, 7 மார்ச் 2023 (UTC)

சரி சார். S.BATHRUNISA (பேச்சு) 15:45, 9 மார்ச் 2023 (UTC)
இணைத்து விட்டேன் அய்யா. S.BATHRUNISA (பேச்சு) 16:41, 9 மார்ச் 2023 (UTC)

ப்ளோர்பால் இன் இந்தியா[தொகு]

வணக்கம் தாங்கள் உருவாக்கிய ப்ளோர்பால் இன் இந்தியா என்ற கட்டுரை நீக்கப்படவில்லை அக்கட்டுரை இந்தியாவில் தரைப்பந்து என்ற பெயருக்கு நகர்த்தப்ட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.--கு. அருளரசன் (பேச்சு) 15:47, 20 மார்ச் 2023 (UTC)

சரி அய்யா. நன்றிகள். S.BATHRUNISA (பேச்சு) 15:48, 20 மார்ச் 2023 (UTC)

லீலா கோகோய்[தொகு]

வணக்கம் தாங்கள் உருவாக்கியுள்ள லீலா கோகோய் என்ற கட்டுரை முழுக்க தானியங்கி தமிழாக்கமாக உள்ளது. அதை உரைதிருத்தி மேம்படுத்துங்கள்.--கு. அருளரசன் (பேச்சு) 13:10, 21 மார்ச் 2023 (UTC)

வேண்டுகோள்[தொகு]

வணக்கம். பெண்ணியமும் நாட்டார் மரபும் 2023 போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகள் எழுதிவருவதற்கு பாராட்டுகள்.

கீழ்க்காணும் கருத்துகளை கவனத்திற் கொண்டு, விக்கிப்பீடியாவின் தரத்தை நிலைப்படுத்த உதவுங்கள்; நன்றி!

  1. மொழிபெயர்ப்புக் கருவி உதவியைக் கொண்டு வழக்கமான தருணங்களில் உருவாக்கப்படும் கட்டுரைகளில் ஆசிரியரே கூடுதல் கவனம் செலுத்தி, உடனடியாக மேம்படுத்துகிறார். போட்டியில் கலந்துகொள்ளும் போது, அடுத்தக் கட்டுரைக்கு கவனம் சென்றுவிடுகிறது. இதனைப் பரவலாக 80% கட்டுரைகளில் காண முடிகிறது. இக்கட்டுரைகள் தவறான சொற்றொடர் அமைப்புகளைக் கொண்டிருப்பதால், படித்துப் புரிந்துகொள்ளும் கட்டுரை அமைப்பில் இல்லை.
  2. ஆங்கிலக் கட்டுரையில் 'மேலும் பார்க்கவும்' துணைத் தலைப்பின் கீழ், விக்கி உள்ளிணைப்புடன் பட்டியலிட்டுள்ளார்கள். அதனையும் மொழிபெயர்த்து, இங்கு பட்டியலிடுவது வாசகர்களுக்கு உதவப் போவதில்லை. (தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் பட்டியலிட்டு உள்ளிணைப்பு தரலாம்).
  3. சிவப்பு உள்ளிணைப்புகளை நீக்க வேண்டும் என்பதில் முனைப்பு வேண்டும்.
  4. கட்டுரைத் தலைப்புகளில் கூடுதல் கவனம் தேவை.
  5. உரிய பகுப்புகளை இடுதல் முக்கியம். (எடுத்துக்காட்டாக பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு,வாழும் நபர்கள் என்பவை மட்டும் போதாது, குறிப்பிட்ட துறைக்குரிய பகுப்புகளை இட வேண்டும்)

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:23, 22 மார்ச் 2023 (UTC)

கட்டுரையாக்க அடிப்படைகள்[தொகு]

வணக்கம், S.BATHRUNISA!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 12:03, 7 மே 2023 (UTC)[பதிலளி]

சரி S.BATHRUNISA (பேச்சு) 12:19, 7 மே 2023 (UTC)[பதிலளி]
உருவாக்கிய கட்டுரைகளில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளுங்கள். AntanO (பேச்சு) 13:14, 7 மே 2023 (UTC)[பதிலளி]

May 2023[தொகு]

Information icon தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. AntanO (பேச்சு) 13:15, 7 மே 2023 (UTC)[பதிலளி]

--AntanO (பேச்சு) 13:21, 7 மே 2023 (UTC)[பதிலளி]

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். AntanO (பேச்சு) 17:40, 8 மே 2023 (UTC)[பதிலளி]

தெரியாமல் நீக்கி விட்டேன். மன்னித்து விடவும். எனக்கு தங்கள் தொலைபேசி என் கிடைத்தால் தவறில்லாமல் எழுத உதவியாக இருக்கும். S.BATHRUNISA (பேச்சு) 17:52, 8 மே 2023 (UTC)[பதிலளி]

நீங்கள் மொழிபெயர்க்கும்போது இயல்பாக இருக்க வேண்டும். முழுவதும் தானியங்கி பயன்படுத்தினால் நீக்க வேண்டி வரலாம். உங்களுக்கு விளங்கமற்ற விடயம் பற்றிக் குறிப்பிட முடியுமா? மன்னிப்பு கேட்கத்தேவையில்லை. இங்கு எல்லோரும் தன்னார்வலர்களோ. --AntanO (பேச்சு) 17:58, 8 மே 2023 (UTC)[பதிலளி]

Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 16:30, 14 மே 2023 (UTC)[பதிலளி]

உள்ளடக்கம் நீக்கம்[தொகு]

எதற்காக இந்த உள்ளடக்கத்தை நீக்கினீர்கள்?--Kanags \உரையாடுக 11:15, 8 மே 2023 (UTC)[பதிலளி]

தெரியாமல் நீக்கி விட்டேன். மன்னித்து விடவும். எனக்கு தங்கள் தொலைபேசி என் கிடைத்தால் தவறில்லாமல் எழுத உதவியாக இருக்கும். S.BATHRUNISA (பேச்சு) 17:52, 8 மே 2023 (UTC)[பதிலளி]

மின்னஞ்சல்[தொகு]

உங்கள் மின்னஞ்சலை செயற்பாட்டில் வைக்க முடியுமா? காண்க: விக்கிப்பீடியா:பயனருக்கு மின்னஞ்சல் செய்ய AntanO (பேச்சு) 18:04, 8 மே 2023 (UTC)[பதிலளி]

கட்டுரையாக்க அடிப்படைகள்[தொகு]

வணக்கம், S.BATHRUNISA!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 16:31, 14 மே 2023 (UTC)[பதிலளி]

குறிப்பு[தொகு]

  • பட்டியல் உருவாக்கும்போது, பட்டியலிலுள்ள கட்டுரைகள் ஏற்கொனவே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கட்டுரைகள் இல்லாதவிடத்து பட்டியல் உருவாக்க வேண்டாம்
  • தானியங்கி கொண்டு அப்படியே கட்டுரை உருவாக்க வேண்டாம். முறையாக உரைதிருத்தம் தேவை.
  • தமிங்கிலத்தில் சொற்கள் அமைக்க வேண்டாம். எ.கா: chips என்பது தமிழில் சீவல்.

AntanO (பேச்சு) 17:25, 15 மே 2023 (UTC)[பதிலளி]

பகுப்பாக்கம்[தொகு]

~AntanO4task (பேச்சு) 15:28, 16 மே 2023 (UTC)[பதிலளி]

எட்வர்ட் சி. கோம்சு[தொகு]

வணக்கம், எட்வர்ட் சி. கோம்சு கட்டுரையில் தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ளது. மொழி பெயர்ப்புக் கருவியினை பயன்படுத்துவதற்கான சில ஆலோசனைகள் 1. நேரம் கிடைக்கையில் ஒவ்வொரு பத்தியாக தமிழாக்கம் செய்யுங்கள்.

2. தங்களுக்கு தெரியாத சொற்களுக்கு விக்சனரி பயன்படுத்துங்கள்.

3. 5 வரிகளுக்கும் குறைவாக கட்டுரைகள் உருவாக்காமல் இருப்பது நல்லது.

4.ஆங்கிலத்தில் உள்ள அனைத்தையும் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

5. உங்களுக்கு ஆர்வமான துறைகளில் உள்ள கட்டுரைகளை தமிழாக்கம் செய்வது ஆரம்பத்தில் விக்கிப்பீடியா பற்றிய புரிதலை எளிதாக்கும்.

6. உங்களுக்கு ஆர்வமான துறை தொடர்பான கட்டுரைகளைத் தெரிவு செய்வதில் சிக்கல் இருந்தால் தயங்காது கூறவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 00:52, 3 சூன் 2023 (UTC)[பதிலளி]

சரி. S.BATHRUNISA 07:54, 5 சூன் 2023 (UTC)[பதிலளி]

வாணி கபூர்[தொகு]

  • வாணி கபூர் கட்டுரை என எழுத்துப்பிழையுடன் வாணி கபூர் (கோல்ப் விளையாட்டு வீர்ர்) என நகர்த்தப்பட்டுள்ளது. வீரரா வீராங்கனையா?
  • உள்ளடக்கம் முழுக்க முழுக்க இயந்திர மொழிபெயர்ப்பு
  • இவ்வித மொழிபெயர்ப்பு பதிப்புரிமை மீறலும் கூட

நிற்க, பொதுவகத்தில் பதிப்புரிமை மீறலுள்ள படிமங்களை பதிவேற்றுகிறீர்கள். இதனால் உங்கள் கணக்கு நிரந்தரமாக தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. ~AntanO4task (பேச்சு) 02:47, 6 சூன் 2023 (UTC)[பதிலளி]

வாணி கபூர் வீராங்கனை. இனிமேல் பொதுவகத்தில் சரியாக பதிவேற்றம் செய்கிறேன். இது தொடர்பாக ஏதாவது விளக்கங்கள் அனுப்ப தங்கள் உதவி வேண்டும். S.BATHRUNISA 06:32, 6 சூன் 2023 (UTC)[பதிலளி]

தொகுப்புகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை தாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:01, 11 சூன் 2023 (UTC)[பதிலளி]

முயற்சிக்கிறேன் அய்யா. S.BATHRUNISA 12:07, 11 சூன் 2023 (UTC)[பதிலளி]
S.BATHRUNISA, அறிவியல் கட்டுரைகளை கூகுள் துணைகொண்டு மொழிபெயர்க்கும்போது, அம்மொழிபெயர்ப்பு உங்களுக்கு விளங்குகிறதா என்பதைப் பார்த்துத் தொடருங்கள். இல்லையேல் கட்டுரை எழுதுவதில் பயனில்லை. உ+ம்: செறிவூட்டல் நீராவி வளைவு.--Kanags \உரையாடுக 12:08, 11 சூன் 2023 (UTC)[பதிலளி]
சரி S.BATHRUNISA 12:12, 11 சூன் 2023 (UTC)[பதிலளி]
செம்மைப்படுத்துகிறேன். நன்றி. S.BATHRUNISA 12:14, 11 சூன் 2023 (UTC)[பதிலளி]
தாங்கள் ஏதேனும் ஆக்கப்பூர்வமான தலைப்புகளை தாருங்களேன். கேள்விக்கு நன்றி. S.BATHRUNISA 12:12, 11 சூன் 2023 (UTC)[பதிலளி]

//சுக்யூட்சென்சு-பிளீர் கோட்பாடு (Scheutjens–Fleer theory) என்பது லட்டு அடிப்படையிலான சுய-நிலையான புலக் கோட்பாடு ஆகும்.// என எழுதிய நீங்கள், மற்ற பயனர்களிடத்து //ஆக்கப்பூர்வமான தலைப்புகளை// கேட்கிறீர்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:26, 11 சூன் 2023 (UTC)[பதிலளி]

சரி.கேட்கவில்லை. S.BATHRUNISA 12:42, 11 சூன் 2023 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

--Kanags \உரையாடுக 23:40, 11 சூன் 2023 (UTC)[பதிலளி]

தொடர்பு முகவரி வேண்டல்[தொகு]

அண்மையில் நடந்த பெண்ணியமும் நாட்டார் மரபும் போட்டியில் புதுப்பயனர் ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். உங்களது சிறப்பு:Preferences பகுதியில் மின்னஞ்சல் தொடர்பு இல்லாததால் நேரடியாகத் தகவலை அனுப்ப இயலவில்லை. இது தொடர்பான மேற்கொண்ட தகவலுக்கு உங்களது மின்னஞ்சல் முகவரியினைப் பகிர இயலுமா? பொதுவில் பகிர்வதைத் தவிர்க்க விரும்பினால் எனது மின்னஞ்சல் அல்லது இதர வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 03:03, 23 சூன் 2023 (UTC)[பதிலளி]

My E-Mail ID is nisha.mphil2008̊@gmail.com. My contact number is 8825508955. Thanks sir. S.BATHRUNISA 05:04, 23 சூன் 2023 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் S.BATHRUNISA, செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர்

ஸ்ரீதர். ஞா (✉) 15:38, 2 சூலை 2023 (UTC)[பதிலளி]

நன்றி அய்யா. S.BATHRUNISA 15:44, 2 சூலை 2023 (UTC)[பதிலளி]

செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது![தொகு]

வணக்கம்.

அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!

திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.

  • சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.

-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்


3 வரிக்கட்டுரைகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் நீக்கப்படும். நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் இருந்தால் அவற்றை விரிவாக்கிவிடுங்கள். AntanO (பேச்சு) 19:12, 23 சூலை 2023 (UTC)[பதிலளி]

சரி S.BATHRUNISA 09:40, 25 சூலை 2023 (UTC)[பதிலளி]
3 வரிக்கட்டுரைகளை தொடர்ந்தும் உருவாக்கி வருகிறீர்கள். புதிதாக கட்டுரைகளை உருவாக்கும் வேகம், உருவாக்கியவற்றைத் திருத்துவதிலும் தேவை. தமிங்கிலம், தானியங்கி கொண்ட திருத்தப்படாத கட்டுரைகள உருவாக்கி வருகிறீர்கள். பகுப்பாக்த்திலும் கவனம் தேவையாகவுள்ளது. நான் உட்பட பலரும் குறிப்பிட்டு விட்டோம். அடுத்த முறை இவ்வாறு பேச்சுப்பக்கத்தில் கருத்திடாது சிறிதுகாலம் தடைசெய்ய வேண்டியுள்ளதென்பதை அறியத்தருகிறேன். நன்றி. AntanO (பேச்சு) 17:14, 25 சூலை 2023 (UTC)[பதிலளி]

மொழிமுதல் எழுத்துக்கள்[தொகு]

மொழிமுதல் எழுத்துக்கள் - மெய்யெழுத்தும் ஆயுத எழுத்தும் மொழிக்கு முதல் வர முடியாது. தயவுசெய்து அவ்வாறு எழுத வேண்டாம். எழுதியவற்றை மாற்றுங்கள். எ.கா: சமான் அக்தர் > ''க்ளௌசெசுடர்சைர்'' AntanO (பேச்சு) 15:53, 27 சூலை 2023 (UTC)[பதிலளி]

மாற்றி விட்டேன். நன்றி. S.BATHRUNISA 15:59, 27 சூலை 2023 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் AntanO (பேச்சு) 16:09, 27 சூலை 2023 (UTC)[பதிலளி]

துடுப்பாட்ட நபர் கட்டுரைகள்[தொகு]

வணக்கம், நீங்கள் உருவாக்கிய அஞ்சலி சர்வாணி கட்டுரை நன்றாக இருந்தது. சில மேம்பாடுகள் மட்டும் செய்துள்ளேன். அவை உங்களது வருங்காலப் பங்களிப்பிற்கு உதவலாம். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 16:05, 27 சூலை 2023 (UTC)[பதிலளி]

நன்றி அய்யா S.BATHRUNISA 16:18, 27 சூலை 2023 (UTC)[பதிலளி]

அய்கானிக் தங்க விருதுகள் - என்பதில் தாய்ப்பகுப்பும் உள்ளது துணைப்பகுப்பும் உள்ளது. இவ்வாறான இடங்களில் தாய்ப்பகுப்பு தேவையற்றது. AntanO (பேச்சு) 05:04, 17 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

புதிய கட்டுரைகள்[தொகு]

வணக்கம், தாங்கள் கேட்டவாறு எழுத்தாளர்கள்‎ , அரசியல்வாதிகள்‎ ஆகிய பக்கங்களில் தமிழில் இல்லாத நபர்கள் பற்றிய கட்டுரைகள் உள்ளது. அதனை தமிழில் உருவாக்கலாம். வேறு துறைத் தலைப்புகள் வேண்டுமானாலும் கேளுங்கள் . -- நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 13:30, 27 செப்டம்பர் 2023 (UTC)

நன்றி அய்யா S.BATHRUNISA 14:58, 27 செப்டம்பர் 2023 (UTC)

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வணக்கம், திறன்பேசி வழியாகவே 200 கட்டுரைகளுக்கும் மேலாக உருவாக்கியுள்ளீர்கள். வியப்பாக உள்ளது. தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள்.

-- ஸ்ரீதர். ஞா (✉) 13:36, 27 செப்டம்பர் 2023 (UTC)

நன்றி அய்யா S.BATHRUNISA 15:00, 27 செப்டம்பர் 2023 (UTC)

கவனிக்க[தொகு]

ஐசக் பி. கிளெய்மன் கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றங்களைக் கவனியுங்கள். குறிப்பாக தேவையற்ற உள்ளிணைப்புகளைத் தவிருங்கள். உ+ம்: ஆண்டு. அறிமுகப் பகுதியைச் சுருக்கமாக எழுதுங்கள். பிறப்பு, இறப்பு "11 சனவரி 1921 – 13 பெப்ரவரி 2012" என்றவாறு மட்டுமே தரப்படல் வேண்டும். மொழிபெயர்ப்பு இன்னும் மேம்படல் வேண்டும். பகுப்புகள் தகுந்ததாக இருக்க வேண்டும். வெறுமனே வாழும் நபர்கள், பிறப்பு, இறப்பு பகுப்புகள் மட்டும் போதாது.--Kanags \உரையாடுக 09:20, 1 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

சரி அய்யா. S.BATHRUNISA 08:52, 3 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு - நான்காம் காலாண்டு 2023[தொகு]

மோர் புரதம் கட்டுரை 10-10-2023 அன்று செம்மைப்படுத்தப்பட்டு விட்டது. எண்ணிக்கையில் சேர்க்கவும். S.BATHRUNISA 14:36, 17 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

ஒரு முறை சரிபார்த்து, பின்னர் சேர்க்கிறேன். பின்குறிப்பு: உங்களுடைய பேச்சுப் பக்கத்தில் செய்தி இடுவதற்குப் பதிலாக, அந்தத் திட்டத்தின் பேச்சுப் பக்கத்தில் செய்தி இடுவது பொருத்தமாக இருக்கும். இப்போது பரவாயில்லை. எதிர்காலத்திற்கான வழிகாட்டலாக இதனைத் தெரிவிக்கிறேன் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:31, 17 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

பகுப்பு[தொகு]

கட்டுரைக்கு தேவையற்ற பகுப்பாக்கம் செய்ய வேண்டாம். விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் AntanO (பேச்சு) 03:32, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

சரி S.BATHRUNISA 02:10, 12 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
சரி அய்யா. S.BATHRUNISA 10:29, 17 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

கவனிக்க[தொகு]

நீங்கள் தொடங்கும் கட்டுரைகளைத் தகுந்த (துறைப்) பகுப்புகளுக்குள் சேருங்கள். வாழும் நபர்கள், பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு, ஒரு நாட்டின் நபர்கள் போன்ற பகுப்புகள் பொதுவானவை, இவை மட்டும் பகுப்புகள் ஆகாது, இவை தவிர்ந்த துறைப் பகுப்புகளையும் தேடிச் சேர்க்க வேண்டும். இங்குள்ளவற்றில் உங்கள் கட்டுரைகள் இருந்தால் பகுப்புகளைச் சேருங்கள்.--Kanags \உரையாடுக 22:05, 16 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

சேர்த்து விட்டேன். நன்றி அய்யா. S.BATHRUNISA 10:30, 17 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கியில் மேற்கோள் சேர்க்கப்படாமல் இருப்பதால், இங்கு அவ்வாறு இருக்க முடியாது. காண்க: சர் சரி சர் பக்சி. தற்போது ஆங்கில விக்கியிலும் மேற்கோள் கேட்டுள்ளேன். --AntanO (பேச்சு) 15:37, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]
நன்றி. @AntanO நானும் உள்வாங்கிக் கொண்டேன். கட்டுரையாளருக்கும் ஞாபகப் படுத்துவேன். உழவன் (உரை) 15:45, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]
சரி அய்யா. தாங்கள் ஆங்கில துறை சார்ந்த பகுப்புகளை தமிழில் உருவாக்கித் தர இயலுமா என கூறுங்கள். S.BATHRUNISA 16:23, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]
ஐயா என அழைப்பது அதிகாரப் படிநிலை போல் உள்ளது. ஐயா தவிர்த்து உரையாடலாமே. உங்களுக்குத் தேவையான உதவிகளை ஒத்தாசைப் பக்கம் கேளுங்கள். இங்கு கேட்பதால் கவனிப்பில் இருந்து தவறவிடப்படலாம். நீங்கள் அண்மையில் உருவாக்கிய கட்டுரைகளில் திருத்தங்களையும், குறிப்புக்களையும் கவனியுங்கள். உருவாக்கும் கட்டுரைகளை மீண்டும் கவனித்து திருத்துவது முக்கியம். தமிங்கிலம் கூடாது. மெய்யெழுத்தில் சொற்கள் உருவாக்குதல் கூடாது. தானிக்கி மொழிபெயர்ப்பை இயல்பான நடைக்கு மாற்றுதல் வேண்டும். அவசரமாக கட்டுரைகள் உருவாக்குவதைவிடுத்து, அவற்றை தரமுள்ளவையாக மாற்ற முற்படுங்கள். --AntanO (பேச்சு) 05:55, 9 சனவரி 2024 (UTC)[பதிலளி]
சரி S.BATHRUNISA 16:05, 9 சனவரி 2024 (UTC)[பதிலளி]
ஒத்தாசைப் பக்கம் கேட்கிறேன். நன்றி. S.BATHRUNISA 16:06, 9 சனவரி 2024 (UTC)[பதிலளி]

சீன் மெக்டொனால்டு தொல்லியல், தொல்லியலாளர்கள் ஆகிய பகுப்புக்களைச் சேர்த்துள்ளீர்கள். எதற்காக இவ்விரு பகுப்புகளும் சேர்க்கப்பட்டன. குறித்த கட்டுரையில் இசுக்காட்லாந்துத் தொல்லியலாளர்கள் என்ற பகுப்பும் உள்ளன. இதன் தாய் பகுப்புக்களான தொல்லியல், தொல்லியலாளர்கள் ஆகிய பகுப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. --AntanO (பேச்சு) 12:13, 16 சனவரி 2024 (UTC)[பதிலளி]

பகுப்புகளை நீக்கி விட்டேன். நன்றி. S.BATHRUNISA 06:47, 17 சனவரி 2024 (UTC)[பதிலளி]

ஏசு ரெளசல் என்ற கட்டுரையில் தொல்லியல் என்ற பகுப்புபைச் சேர்த்துள்ளீர்கள். தொல்லியல் என்ற தாய்ப் பகுப்புபில்தான் தொல்லியலாளர்கள் துணைப் பகுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான பகுப்பாக்கத்திற்கான காரணம் என்ன? --AntanO (பேச்சு) 09:09, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

நீக்கி விட்டேன். S.BATHRUNISA 14:41, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]
நன்றி S.BATHRUNISA 14:41, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

பகுப்பு[தொகு]

இந்த மாற்றங்களைக் கண்டேன். பொதுவாக ஆங்கில விக்கிப்பீடியாவின் கட்டுரைகளை வைத்தே நாம் கட்டுரைகளை உருவாக்குகிறோம். அங்கு ஒரு குறிபிட்ட பகுப்பில் பல கட்டுரைகள் ஏற்கனவே இருக்கும். அதனால் பல துணைப்பகுப்புகளை உருவாக்கியிருப்பர். அதே அப்படியே தமிழில் உருவாக்க வேண்டியதில்லை. இங்கு பகுப்பிட, ஏற்கனவே இங்கு அதனைச் சார்ந்து பகுப்புள்ளதா? என ஆய்தல் வேண்டும். உங்களால் அதனை கணிக்க இயலவில்லையெனில் பகுப்பிடாமல் விட்டு விடுங்கள். விரைந்து பகுப்பிட நான் என்ன பண்ணுவேன் என்றால், தெரிந்த பகுப்பில் தொடர்ந்து பல கட்டுரைகளை உருவாக்குவேன். இதனால் நாம் பகுப்பிட வெகு குறைந்த நேரமே ஆகும். அலைப்பேசியில் உங்கள் பங்களிப்புகளை நீங்கள் செய்வதால் கண்களுக்கு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஓய்வு கொடுக்க மறவாதீர்கள். மேலும், உங்கள் பங்களிப்புகளில் சிறக்க வாழ்த்துக்கள். உழவன் (உரை) 01:34, 17 சனவரி 2024 (UTC)[பதிலளி]

நன்றி அய்யா.ஞ S.BATHRUNISA 06:43, 17 சனவரி 2024 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

AntanO (பேச்சு) 17:43, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

உங்களுக்கு உருமானிய மொழி தெரியுமா? பாம்பில் போலோனிக் என்ற கட்டுரையை இங்கிருந்து (உருமானிய மொழியில் இருந்து) தானியங்கி கொண்டு மொழிபெயர்த்துள்ளீர்கள். தொடர்ந்து உங்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கியாயிற்று. இப்போக்கு தொடர்ந்தால் உங்களை கணக்கு தடைக்கு உள்ளாகலாம். நன்றி. --AntanO (பேச்சு) 17:50, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

கலைக்களஞ்சியத்தில் எழுதுவதற்கு எளிய கட்டுரைகள் ஏராளமாக உள்ளன. தரவுகளைத் திரட்டி, மனித ஆற்றலின் வாயிலாக சுருக்கமான கட்டுரைகள் எழுதுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவையெல்லாம் அறிவுரையன்று; வழிகாட்டல்கள். இந்தக் கட்டுரைகளை மட்டுமே எழுதவேண்டும் என நான் பாடம் எதுவும் நடத்தப் போவதில்லை. ஆனால், பயனற்றவற்றை இங்கு கொட்டாதீர்கள் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:50, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]
சரி S.BATHRUNISA 14:11, 20 சனவரி 2024 (UTC)[பதிலளி]
சரி. நீக்கி விடுங்கள். நான் வேறு கட்டுரைகளை எழுதி கொள்கிறேன். S.BATHRUNISA 14:13, 20 சனவரி 2024 (UTC)[பதிலளி]
வணக்கம். @S.BATHRUNISA எனது தங்கை தொழில்முறை கட்டிட எழில் கலைஞர் (B.Arch) நாங்கள் சில மாதங்களுக்கு முன் இவரைக் குறித்து பேசினோம். உங்களது முயற்சி குறித்து மகிழ்ந்தேன். இக்கட்டுரையை உருவாக்க கீழ்கண்ட குறிப்புகள் உதவும். முதலில் ஆங்கில விக்கிக் கட்டுரையை உருவாக்கவும். பிறகு, கீழ்கண்ட தரவுகளால் விரிவு படுத்தவும். பொதுவகத்தில் சில படங்களை நான் பிறகு உருவாக்கி இங்கேயும், பிற மொழியிலும் இணைத்து விடுகிறேன். அவரின் படம், குறிப்பு 1, ஆய்வு 2. கணினியியல் படித்தவர் நீங்கள் என்பதால் வழுவை (fixing the issue) நீக்குதல் என்பதாக எனது உயவுக்குறிப்புகளை கையாளுங்கள். மேலும் சிறக்க வாழ்த்துக்கள். உழவன் (உரை) 01:30, 21 சனவரி 2024 (UTC)[பதிலளி]
நன்றி. S.BATHRUNISA 04:53, 21 சனவரி 2024 (UTC)[பதிலளி]
கலைக்களஞ்சியம் குறித்து பல முறை எடுத்துரைத்தாலும், அதனை நீங்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அடையாள அரசியல் எனும் கட்டுரையை தானியங்கித் தமிழாக்கத்தின் உதவிகொண்டு பதிப்பிட்டுள்ளீர்கள். இக்கட்டுரையை உங்களால் படித்து புரிந்துகொள்ள இயல்கிறதா என்பதனைப் பாருங்கள். இங்கு குப்பைகளைக் கொட்டுவதன் காரணம் என்ன?
பொறுப்பற்ற செயல்களுக்காக உங்களை 1 வார காலத்திற்கு தடைசெய்ய நினைத்தாலும், 100விக்கி நாட்கள் எனும் திட்டத்திற்கு நீங்கள் பெயரை பதிவுசெய்துள்ளதால் பொறுமை காக்கிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:07, 27 சனவரி 2024 (UTC)[பதிலளி]
சரி S.BATHRUNISA 13:12, 28 சனவரி 2024 (UTC)[பதிலளி]
அடையாள அரசியல் எனும் கட்டுரை 31-சனவரி-2024 அன்றைய நாளின் இறுதிக்குள் செம்மைப்படுத்தப்படாவிட்டால், நீக்கப்படும். இது போன்று இன்னொரு கட்டுரை எழுதப்பட்டால், உங்களின் கணக்கு தடைக்கு உள்ளாகும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:06, 28 சனவரி 2024 (UTC)[பதிலளி]
சரி. கட்டுரையை நீக்கி விடுங்கள். S.BATHRUNISA 14:50, 29 சனவரி 2024 (UTC)[பதிலளி]

கோசா பெண்[தொகு]

வணக்கம், கோசா பெண் கட்டுரை முழுக்க மொழிபெயர்ப்புக் கருவியின் மூலம் துவங்கியுள்ளீர்கள். அதனை புரிந்து கொள்ளும் அளவில் நீங்கள் மாற்றிய பின்னர் உருவாக்கியிருக்கலாம்.ஏற்கனவே பலமுறை நிர்வாகிகள் தங்களது பிழைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். மீண்டும் இது போல் செய்யாதீர்கள். இந்தக் கட்டுரையினை துப்புரவு செய்ய மே மாதம் வரை காலக்கெடு உள்ளது. அதற்குள் துப்புரவு செய்யவில்லை எனில் கட்டுரை நீக்கப்படும். ஸ்ரீதர். ஞா (✉) 15:26, 18 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

சரி 2409:40F4:1036:24D0:8000:0:0:0 15:29, 18 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:S.BATHRUNISA&oldid=3892685" இலிருந்து மீள்விக்கப்பட்டது