கே. என். இலக்குமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கே. என். இலக்குமணன் (K. N. Lakshmanan, 20, அக்டோபர் 1930 – 2 சூன், 2020), தமிழக அரசியல்வாதியும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கே. என். இலக்குமணன் பாரதிய ஜனதா கட்சியின், தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருமுறை இருந்தவர்.[1] சேலம் நகரத்தைச் சேர்ந்த கே. என். இலக்குமணன், 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தமிழகத் தலைவர்களில் ஒருவரான கே. என். இலக்குமணன், சேலம் நகரத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் உடல்நலக் குறைவின் காரணமாக 2020 சூன் இரண்டாம் நாள் சேலத்தில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "முன்னாள் தலைவர்கள்". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
  2. 25 – மயிலாப்பூர்
  3. தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மரணம், மாலைமலர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._என்._இலக்குமணன்&oldid=3551238" இலிருந்து மீள்விக்கப்பட்டது