செம்மணி மனிதப் புதைகுழி
இக்கட்டுரை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றியதாகும்.
இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் திடீரெனவும், தொடர் மாற்றங்களுக்கும் உள்ளாகலாம். |
| செம்மணி மனிதப் புதைகுழி Chemmani mass graves | |
|---|---|
| இடம் | செம்மணி மனிதப் புதைகுழி, அரியாலை, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
| நாள் | 1995-1996 |
| தாக்குதல் வகை | கொலை |
| ஆயுதம் | துப்பாக்கிகள், கத்தி, வாள், மண்வெட்டி |
| இறப்பு(கள்) | 400-500 தமிழ் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் |
| தாக்கியோர் | இலங்கைத் தரைப்படை |
செம்மணி மனிதப் புதைகுழிகள் (Chemmani mass graves) என்பது வடக்கு இலங்கையின் செம்மணி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைகுழிகளின் அகழ்வாய்வைக் குறிக்கிறது. தமிழ்ப் பள்ளி மாணவி கிருசாந்தி குமாரசாமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக விசாரணையில் இருந்த இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச என்பவர் 1998 ஆம் ஆண்டு இந்த புதைகுழிகள் இருப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து அவை முதலில் கவனத்தைப் பெற்றன. 1995, 1996 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளிடமிருந்து அரசாங்கப் படைகளால் யாழ்ப்பாணக் குடாநாடு கைப்பற்றப்பட்டதன் பின்னர், அங்கிருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகிலுள்ள புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்ட இடம் தனக்குத் தெரியும் என்றும் அவர் மேலும் கூறினார்.[1][2]
1999 ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் கவனிக்கப்பட்ட செம்மணி அகழ்வாய்வில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் இரண்டு 1996 இல் காணாமல் போன ஆண்கள் என அடையாளம் காணப்பட்டன.[3] இந்தக் கண்டுபிடிப்புகளை அடுத்து ஏழு இராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டன. தோண்டியெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை முதலில் கூறப்பட்ட எண்ணிக்கையை விட மிகக் குறைவு என்றும், மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புலனாய்வாளர்களால் முதலில் கூறப்பட்ட புதைகுழிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் புதைகுழிகள் சேதப்படுத்தப்பட்டதற்கான சான்று இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறியது.[4] ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும், செம்மணியில் மேலும் எந்த உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.[5]
சூன் 2025 இல், யாழ்ப்பாணம், நல்லூர் பிரிவில் உள்ள செம்மணிக்கு அருகிலுள்ள சித்துப்பாத்தி (அரியாலை) புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுப் பணிகளின் போது ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையின் எச்சங்கள் மீட்கப்பட்டன, இது தீவில் உள்ள புதைகுழிகளைத் தோண்டுவதற்கு பன்னாட்டு மேற்பார்வைக்கான கோரிக்கைகளைத் தூண்டியது.[6] நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு முயற்சிகள் 3 குழந்தைகளின் எலும்புக்கூடுகளை உள்ளடக்கிய 19 மனித எலும்புக்கூடுகள் புதைகுழிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.[1][7][8] அதைத் தொடர்ந்து செம்மணி சித்துப்பாத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த முதற்கட்ட அகழ்வாய்வுகளில் 2025 சூலை முற்பகுதியில் மொத்தம் 65 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.[9] செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிப் பகுதியை ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்க்கர் தூர்க் 2025 சூன் 25 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.[10]
இரண்டாம் கட்ட அகழ்வாய்வு செம்மணி சித்துப்பாத்தியில் 2025 சூலை 21 இல் தொடங்கியது. சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் அறிக்கைகளை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இந்த அகழ்வுக்கான அனுமதியை வழங்கியது. இந்த அறிக்கையில் செம்மணி-சித்துப்பாத்தியில் குற்றச்செயல் இடம் பெற்றுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.[11] அதைத் தொடர்ந்த அகழ்வாய்வுகள் 2026 சூலை 21 இற்குள் மொத்தம் 454 எலும்புக்கூடுகளைக் கண்டறிய வழிவகுத்தன, இது நாட்டின் மிகப்பெரிய கூட்டுப் புதைகுழியாக அமைந்தது.[12][13][14][15] எலும்புக்கூடுகள் ஒழுங்கற்ற முறையில் ஒன்றாகக் குவிக்கப்பட்டுக் காணப்பட்டன, மேலும் அவற்றில் பெரும்பாலானவற்றில் ஆடைகள் இல்லை.[16] 4-5 வயதுக்குட்பட்ட சிறுமியின் எலும்புக்கூடு,[17] மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு,[18] ஒரு பள்ளிப் பை, பொம்மை ஆகியவை மீட்கப்பட்டவற்றில் அடங்கியிருந்தன.[17]
ஐரோப்பிய ஒன்றியத்தின் 8 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் 2026 சூலை 22 அன்று செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.[12]
குற்றச்சாட்டுகள்
[தொகு]சூலை 1998 இல், இலங்கை இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, மாணவி கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்திரை கற்பழித்து படுகொலை செய்ததற்காக மரண தண்டனையை எதிர்கொண்டார், குடாநாட்டில் இருந்து காணாமல் போனவர்களின் உடல்கள் அடங்கிய புதைகுழிகள் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.[19] ராஜபக்சவும் அவரது இணைப் பிரதிவாதிகளும் இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பானதாகக் கூறப்படும் 20 பாதுகாப்புப் படை வீரர்களின் பெயர்களைக் கொடுத்தனர்.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு விசாரணையை ஆரம்பித்தது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகளின் உதவியைக் கோரியது. சூன் 1999 இல், ராஜபக்ச 1996 இல் காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். இராஜபக்சவின் இணைப் பிரதிவாதிகளால் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேலும் 13 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழ்வாய்வுகளை பன்னாட்டு மன்னிப்பு அவை உட்படப் பன்னாட்டுப் பார்வையாளர்கள் கண்காணித்தனர்.
விசாரணை
[தொகு]1999 திசம்பரில், அரசாங்க புலனாய்வாளர்கள் குழு ஒன்று, 10 எச்சங்களை அடையாளம் கண்டு, தாக்குதல் மற்றும் கொலைக்கான ஆதாரங்களைக் காட்டியது. மீதமுள்ள உடல்களுக்கு இறப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை.[20]
மேலும் பல உடல்கள் இருப்பதாக சோமரத்தின ராஜபக்சவும் மற்றவர்களும் குற்றம் சாட்டினர். "கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி சோமரத்ன ராஜபக்ச மற்றும் ஏனையோரால் முதலில் கூறப்பட்ட புதைகுழிகள் எதுவும் இல்லை என்று "உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள்" ஒருமனதாக முடிவு எடுத்ததாக இலங்கை அரசாங்கம் கூறியது.[4]
உடல்களை அடையாளம் காணுதல் 2000 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.[21] 2000 மார்ச் மாதத்தில், ஏழு இராணுவ வீரர்களை கைது செய்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.[22] ஆனாலும், சந்தேக நபர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 2004 வரை, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த வழக்கை "நிலுவையில் உள்ளதாக" விவரித்தது.[3] 2006 சனவரியில், மத்திய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணையை முடிக்க சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தனர். கொழும்பு நீதிமன்றம் ஒன்று தாமதம் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறியது.[5]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Ravindran, Jeevan (16 Jun 2025). "New Sri Lanka mass grave discovery reopens old wounds for Tamils". Al Jazeera. https://www.aljazeera.com/features/2025/6/16/new-sri-lanka-mass-grave-discovery-reopens-old-wounds-for-tamils.
- ↑ "'300 to 400 bodies have been buried'". TamilNet. 6 July 1998.
- 1 2 U.S. Department of State(25 February 2004). "Country Reports on Human Rights Practices: Sri Lanka (2003)". செய்திக் குறிப்பு.
- 1 2 Official Web Site of the Government of Sri Lanka(21 December 1999). "No mass graves in Chemmani". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-10. Retrieved 2022-09-08.
- 1 2 "'No instructions on Chemmani' CID". BBC Sinhala. 4 January 2006. http://www.bbc.co.uk/sinhala/news/story/2006/01/060104_chemmani_ag.shtml.
- ↑ Srinivasan, Meera (19 சூலை 2025). "Jaffna mass grave, a test for the Dissanayake government". The Hindu இம் மூலத்தில் இருந்து 26 சூலை 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250726135613/https://www.thehindu.com/news/international/jaffna-mass-grave-a-test-for-the-dissanayake-government/article69831203.ece.
- ↑ "Infant remains found at Jaffna mass grave". Tamil Guardian. 5 June 2025. https://www.tamilguardian.com/content/infant-remains-found-mass-grave-jaffnas-chemmani-sindubathi.
- ↑ "செம்மணி புதைகுழியில் கைக்குழந்தைகள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 18 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு". Virakesari.lk (in Tamil). 6 June 2025.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Srinivasan, Meera (19 July 2025). "Jaffna mass grave, a test for the Dissanayake government". The Hindu. https://www.thehindu.com/news/international/jaffna-mass-grave-a-test-for-the-dissanayake-government/article69831203.ece.
- ↑ OHCHR / SRI LANKA JAFFNA MASS GRAVE SITE, 25 June 2025
- ↑ "செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி : இதுவரை 76 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு". வீரகேசரி. 24 சூலை 2025 இம் மூலத்தில் இருந்து 26 சூலை 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250726133552/https://www.virakesari.lk/article/220867.
- 1 2 "Recognise the genocide, families of the disappeared tell EU at Chemmani". Tamil Guardian. 22 சூலை 2026 இம் மூலத்தில் இருந்து 22 சூலை 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260722163701/https://www.tamilguardian.com/content/tamil-genocide-must-be-recognised-families-disappeared-urge-eu-delegation-during-chemmani.
- ↑ "454 skeletal remains recovered from Chemmani Mass Grave". News Wire. 21 July 2026 இம் மூலத்தில் இருந்து 22 July 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260722015634/https://www.newswire.lk/2026/07/21/454-skeletal-remains-recovered-from-chemmani-mass-grave/.
- ↑ "Possible conjoined twins and seated burial among latest Chemmani discoveries as toll reaches 446". Tamil Guardian. 20 July 2026. https://www.tamilguardian.com/content/possible-conjoined-twins-and-seated-burial-among-latest-chemmani-discoveries-toll-reaches.
- ↑ Ranges, M. (2026-06-30). "Justice Minister visits mass grave of Tamil civilians in northern Sri Lanka". World Socialist Web Site.
- ↑ Regan, Helen; Montgomery, Hanako (29 November 2025). "A blue schoolbag in a mass grave. Sri Lanka's bloody past is re-emerging from the soil". CNN. https://www.cnn.com/2025/11/29/asia/sri-lanka-chemmani-mass-grave-intl-hnk.
- 1 2 "Remains of Tamil girl found with blue school bag and toy at Chemmani mass grave". Tamil Guardian. 15 July 2025.
- ↑ "செம்மணி புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!". வீரகேசரி. 24 சூலை 2026 இம் மூலத்தில் இருந்து 24 சூலை 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260724033801/https://www.virakesari.lk/article/254196.
- ↑ Price, Susannah (29 April 1999). "South Asia Outrage over Sri Lankan 'mass grave'". BBC. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/331824.stm.
- ↑ U.S. Department of State(23 February 2000). "Country Reports on Human Rights Practices: Sri Lanka (1999)". செய்திக் குறிப்பு.
- ↑ Official Web Site of the Government of Sri Lanka(17 February 2000). "DNA tests for Chemmani graves' victims". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2007-06-10 at the வந்தவழி இயந்திரம் "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-10. Retrieved 2022-09-08.
- ↑ Official Web Site of the Government of Sri Lanka(6 March 2000). "Chemmani mass graves: CID to arrest 07 military persons". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-06-11. Retrieved 2022-09-08.