பாலின இருமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலின இருமை (Gender binary) [1][2][3] என்பது பாலினத்தை ஆண்மை, பெண்மை என சமூக அமைப்பாலோ அல்லது பண்பாட்டு நம்பிக்கையாலோ இரண்டு எதிர்நிலைகளாகப் பிரிக்கும் வகைபாடு ஆகும்.

இந்த இருமை எதிர்வு படிமத்தில்l, பால், பாலினம், பாலுணர்வு ஆகியனவும் அப்படியே தானாக ஒருவரின் மரபுப்பேற்றுவழி தன் பிறப்பால் பெறும் மரபியலை அல்லது பாலினக்கலம் தீர்மானிக்கும் பாலினவகையை அடைவதாகக் கருதப்படுகிறது. எடுத்துகாட்டாக, ஒருவர் ஆணாகப் பிறந்தால் பாலின இருமை அவர் தோற்றம், பண்புக்கூறுகள், நடத்தை, பெண்களால் ஈர்ப்புறும் பாலுணர்வு ஆகியன ஆண்மையாக அமையும் எனக் கொள்கிறது.[4] இவற்றில் உடை, நடத்தை, பாலுணர்வுக் கவர்ச்சி, பெயர், சுட்டுப் பெயர், ஓய்வறைத் தேர்வு போன்ற பிற கூறுபாடுகளும் அமையும். மேலும், இவற்றில் பிறப்புவழி மாற்றுப் பாலின அல்லது பெயர்பாலின அடையாளம் சார்ந்தவர்பால் நடைமுறையில் உள்ள எதிர்நிலை மனப்பாங்கு, ஒருசார்புநிலை, பாகுபாடு ஆகியனவும் உள்ளடங்கும்.[5]

பொதுக் கூறுபாடுகள்[தொகு]

பாலின இருமை என்பது சமூகம் பிறப்புறுப்பு வகைகளைச் சார்ந்து தனது உறுப்பினருக்கு ஒதுக்கும் இருவகைப் பாலினப் பாத்திரங்களையும் பாலின அடையாளங்களையும் இயற்பண்புகளையும் குறிக்கும் அமைப்பாகும்.[6] இடைநிலைவகை மக்கள் தாங்களே ஆணாகவோ பெண்ணாகவோ இனங்காண்கின்றனர். என்றாலும், அவர்களது இயல்பான பாலின அடையாளம் வேறுபட்டிருக்கலாம் எனவே, பாலின இருமை என்பது முதன்மையாக, அவர்களது உடற்கூற்றியல் கூறுபாடுகளைக் கருதாமல், அவர்கள் இனங்காணும் அடையாளத்தையே குறிக்கிறது.[7]பாலினப் பாத்திரங்களே பாலின இருமையின் முதன்மைக் கூறுபாடாகும். பாலினப் பாத்திரங்களே மக்களது வாழ்க்கைப் பட்டறிவுகளையும், உடை முதல் தேர்ந்தெடுக்கும் பணி வரையிலான நடத்தைக் கூறுபாடுகளையும் கட்டுபடுத்துகிறது.[8][9] பெரும்பாலான மக்கள் ஆண்மை அல்லது பெண்மைசார் உளவியற் பான்மைகளைப் பெற்றுள்ளனர். [10][11] மரபான பாலினப் பாதிரங்கள் ஊடகம், சமயம், முதன்மை நீரோட்டக் கல்வி, அரசியல் அமைப்புகள், பண்பாட்டு அமைப்புகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றால் தாக்கமுறுகின்றன.[12] முதன்மைச் சமயங்களாகிய இசுலாமும் கிறித்தவமும் இந்துத்துவமும் பாலினப் பாத்திரங்களை ஆளும் அதிகார முகமைகளாகச் செயல்படுகின்றன. எடுத்துகாட்டாக, இசுலாம் தாய்மார்கள் குழந்தைகளை வளர்ப்பதில் தனிக்கவனம் செலுத்தவேண்டும் எனக் கற்பிக்கிறது; கிறித்தவம், குறிப்பாக கத்தோலிக்கக் கிறித்தவம், பாலின இருமையைக் கடைபிடிப்பதை ஏற்கிறது; ஆண்கள் மட்டுமே பாதிரியார்களாகலாம் என விதிக்கிறது. விவிலியத்தின் தோற்ற நூலின் 27 ஆம் வரி " தேவன் ஆனவர் ஆண்களைத் தன் (கடவுளின்) படிமத்தில் படைத்து, பிறகு ஆண்களையும் பெண்களையும் படைத்தார்" என எடுத்துரைக்கிறது. [13]

யூதம், பெண்களின் தன்னியல்பான நடத்தையையும் இறைப்பணி செய்வதையும் மறுக்கிறது.[14]

தமிழில், சில பெயர்களும் ( எ.கா., சிறுவன், சிறுமி), மதிப்புப் பெயர்கள் (எ.கா., திரு, திருமணி, செல்வி), தொழில்சார் பெயர்கள் (எ.கா., நடிகன், நடிகை), சுட்டுப் பெயர்கள் (எ.கா., அவன், அவள்) ஆகியன பாலின இருமை முறையிலேயே அமைதலைக் காணலாம். தமிழ்பேசும் மக்களும் அதேபோல பிறமொழி பேசும் மக்களும் பாலின இருமையைப் பெரும்பாலும் ஏற்கின்றனர். ஆங்கிலம் பேசும் மக்களும் பாலின இருமைமையை மேற்கண்ட இலக்கண வகைகளில் ஏற்பதையும் சுட்டலாம்.[15] ஐக்கிய அமெரிக்காவில் ஆங்கிலம் பயிலும் மாணவர் தெளிவாகப் பாலின இருமையை (எ.கா., "boys", "girls" ) கழிவறைகளிலும் விளையாட்டுக் குழுக்களிலும் பயன்படுத்துகின்றனர். இம்முறை பாலினச் சார்புநிலையை வளர்க்கிறது.[15]

மேலும் காண்க[தொகு]

பாலினம்

பாலினப் பயில்வுகள்

பாலின அடையாளம்

பாலினப் பாத்திரம்

பாலின வரலாறு

மேற்கோள்கள்[தொகு]

  1. Marjorie Garber (25 November 1997). Vested Interests: Cross-dressing and Cultural Anxiety. Psychology Press. பக். 2, 10, 14–16, 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-91951-7. https://books.google.com/books?id=rCzYJisHWHAC. பார்த்த நாள்: 18 September 2012. 
  2. Claudia Card (1994). Adventures in Lesbian Philosophy. Indiana University Press. பக். 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-253-20899-6. https://books.google.com/books?id=_pIRGizLcMkC&pg=PA127. பார்த்த நாள்: 18 September 2012. 
  3. Rosenblum, Darren (2000). "'Trapped' in Sing-Sing: Transgendered Prisoners Caught in the Gender Binarism". Michigan Journal of Gender & Law 6. 
  4. Keating, Anne. "glbtq >> literature >> Gender". www.glbtq.com. glbtq: An Encyclopedia of Gay, Lesbian, Bisexual, Transgender, and Queer Culture. Archived from the original on 3 April 2015. பார்க்கப்பட்ட நாள் 2 April 2015.
  5. Hill, Darryl B.; Willoughby, Brian L. B. (October 2015). "The Development and Validation of the Genderism and Transphobia Scale". Sex Roles 53 (7–8): 531–544. doi:10.1007/s11199-005-7140-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0360-0025. 
  6. Judith., Lorber (2007). Gendered bodies : feminist perspectives. Moore, Lisa Jean, 1967-. Los Angeles, Calif.: Roxbury Pub. Co. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1933220413. இணையக் கணினி நூலக மையம்:64453299. https://archive.org/details/genderedbodiesfe0000lorb_d5y5. 
  7. "Understanding Non-Binary People: How to Be Respectful and Supportive". National Center for Transgender Equality. 2016-07-09. பார்க்கப்பட்ட நாள் 2019-08-01.
  8. D'Innocenzio, Anne. "Breaking down the gender stereotypes in kids clothing". chicagotribune.com. http://www.chicagotribune.com/lifestyles/style/sc-cons-0728-less-gendered-clothing-20160727-story.html. 
  9. Bank., World (2011-01-01). World development report 2012 : Gender equality and development. World Bank. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780821388129. இணையக் கணினி நூலக மையம்:799022013. https://archive.org/details/genderequalityde0000unse. 
  10. Koestner, Richard; Aube, Jennifer (September 1995). "A Multifactorial Approach to the Study of Gender Characteristics". Journal of Personality 63 (3): 681–710. doi:10.1111/j.1467-6494.1995.tb00510.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3506. பப்மெட்:7562367. https://archive.org/details/sim_journal-of-personality_1995-09_63_3/page/681. 
  11. Spence, Janet T. (1993). ""Gender-related traits and gender ideology: Evidence for a multifactorial theory": Correction.". Journal of Personality and Social Psychology 64 (6): 905. doi:10.1037/0022-3514.64.6.905. பன்னாட்டுத் தர தொடர் எண்:1939-1315. https://archive.org/details/sim_journal-of-personality-and-social-psychology_1993-06_64_6/page/905. 
  12. Johnson, Joy; Repta, Robin (2002). "Sex and Gender: Beyond the Binaries". Designing and Conducting Gender, Sex, & Health Research: 17–39. http://www.sagepub.com/upm-data/40428_Chapter2.pdf. பார்த்த நாள்: 2 April 2015. 
  13. Schwarzwalder, Rob. "Sexual Madness and the Image of God". Ethics & Religious Liberty Commission website. பார்க்கப்பட்ட நாள் December 17, 2019.
  14. Student, Gil (February 10, 2018). "Orthodox Union to enforce ban on women rabbis". Jerusalem Post. https://www.jpost.com/Opinion/Orthodox-Union-to-enforce-ban-on-women-rabbis-542248. பார்த்த நாள்: December 17, 2019. 
  15. 15.0 15.1 Hyde, Janet Shibley; Bigler, Rebecca S.; Joel, Daphna; Tate, Charlotte Chucky; van Anders, Sari M. (February 2019). "The future of sex and gender in psychology: Five challenges to the gender binary.". American Psychologist 74 (2): 171–193. doi:10.1037/amp0000307. பன்னாட்டுத் தர தொடர் எண்:1935-990X. பப்மெட்:30024214. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலின_இருமை&oldid=3582274" இலிருந்து மீள்விக்கப்பட்டது