பாலின வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலின வரலாறு (Gender history) என்பது வரலாறு, பாலினப் பயில்வுகள் ஆகிய துறைகளின் துணைப்புலமாகும். இது பாலினக் கண்ணோட்டத்தில் கடந்த கால வரலாற்றை பயில்கிறது. பலவகைகளில் இது பெண்களின் வரலாற்றின் இணைவளர்ச்சியே. இப்புலம் வரலாற்று நிகழ்ச்சிகளும் கால வகைபாடுகளும் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களில் எப்படிப்பட்ட தாக்கம் விளைவிக்கின்றன என்பதைப் பயில முனைகிறது. எடுத்துகாட்டாக, யோவான் கெல்லி மறுமலர்ச்சியின்போது பெண்களுக்கு மறுமலர்ச்சி கிடைத்ததா எனத் தன் 1977 ஆம் ஆண்டைய கட்டுரையில் வினா தொடுக்கிறார். அம்மறுமலர்ச்சி உண்மையில் பெண்களுக்குப் பொருந்துகிறதா?.[1]

வழக்கமாக, பாலினம் சமூகவியலான கட்டுமானமாகக் கொண்டு, பாலின வரலாற்று வரைவாளர்கள் எப்படி பாலின வேறுபாடுகள் பல்வேறு காலங்களிலும் இடங்களிலும் உள்வாங்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன என்பதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகின்றனர். காலந்தோறும் சமூகம் புனையும் இந்தப் பாலினம், ஆண் அல்லது பெண் என அடையாளப் படுத்துபவரிடம் இருந்து எதிர்பார்க்கும் நடத்தைகளுக்கான வரன்முறைகளில் காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களை வைத்தே உருவகிக்கப்படுகிறது. பாலின வரலாற்று வரைவாளர்கள், வரன்முறைகளில் காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொள்கின்றனர்; மேலும், இந்த வரன்முறைகளில் காலந்தோறும் ஏற்படும் மாற்றங்கள் சமூக, பண்பாட்டு, அரசியல் சூழலைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதையும் எப்படி உருமாற்றுகின்றன என்பதையும் பயில்கின்றனர்.

பெண்களின் வரலாறும், பாலின வரலாறும்[தொகு]

“பாலினம்” “பால்” ஆகிய இருசொற்களையும் பெண்களின் வரலாற்றசிரியர்களும் அறிஞர்களும் வேறுபடுத்துகின்றனர். பால் என்பது தனியரின் உயிரியல் ஆக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது; ஆனால், பாலினம் தனியர் தேர்வுசெய்யும் தனது அடையாளத்தால் தீர்மானிக்கப்படுகிறது.[2]நட்சுகி ஆறுகா பெண்களின் வரலாற்று ஆய்வாளர்களின் பணி பாலினத்துக்கும் பாலுக்கும் இடையில் அமையும் பாகுப்பாட்டுத் தெளிவை முழுமைப்படுத்திட உதவியது என வாதிடுகிறார்.[3] பாலினப் பயில்வுகளின் அடிப்படையாக பெண்களின் பயில்வுகளும் பெண்ணியமும் அமைகின்றன. பாலின வரலாறு பாலினப் பயில்வுகள் புலத்தின் உட்புலமாக அமைகிறது.கத்லீன் பிரவுன் பெண் குறித்த தெளிவான அனைவரும் ஏற்கும் தனி வரையறை இல்லாததால், பெண்களின் பயில்வுகளையும் பாலினப் பயில்வுகளையும் பாகுபடுத்தித் தீர்மானிப்பது ஓரளவுக்கு அரிதாகவே உள்ளது எனக் கூறுகிறார். எனவே, இதேபோல பெண்களின் வரலாற்றையும் பாலின வரலாற்றையும் தனிதனியாகப் பிரித்துபார்ப்பதும் அரிதாகிறது.[4]

சில வரலாற்று அறிஞர்கள் பெண்களின் வரலாற்று அறிஞர் எனும் தலைப்பையே ஏற்கமறுக்க, சிலர் அதை விருப்பமுடன் ஏற்கின்றனர். இந்தத் தலைப்பை ஏற்பவர் பெண்ணிய வரலாற்றைச் சார்ந்த நலவாழ்வு அரசைப் பெரிதும் வற்புறுத்துகின்றனர்; இவர்கள் அரசின் ஆட்சிக் காரணியாக பாலினப் பாத்திரத்தை கருதுகின்றனர். பெண்னிய வரலாற்று அறிஞர்கள், மக்களாட்சிக் கட்சிக் கொள்கையினை நடைமுறைப்படுத்தல், சம்பளச் சமமை ஆகியவற்றையும் சமூக, அரசியல் வரலாற்றின் பகுதியாகக் பார்க்கின்றனர்.[5]

ஆண்மை வரலாறு[தொகு]

ஆண்களின் குழுவாழ்க்கையைப் பற்றியும் எப்படி ஆண்மசார் கருத்தினங்கள் அவர்களது விழுமியங்களையும் நடத்தையையும் உருவமைக்கின்றன என்பது பற்றியும் நடத்திய பல்வேறு பயில்வுகள் தந்த சான்றுகள் 1990 களில் ஆண்மை வரலாற்றை உருவாக்கின. கைல் பெதெர்மன் ஆண்மை வரலாற்ருக்கான இரு அணுகுமுறைகளை வரையறுத்தார். அவற்றில் ஒன்று பெண்களின் வரலாற்றுவழி உருவாகிய அணுகுமுறையாகும்; மற்றொன்று அவ்வரலாற்றைப் புறக்கணிக்கும் அணுகுமுறையாகும்:

இன்று இந்த இருவகை ஆண்களின் வரலாற்று அணுகுமுறைகளும் நடப்பில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று இருபதாண்டு பெண்களின் வரலாற்ருப் புலமையைப் பயன்படுத்தி, ஆண்மையைப் பரந்துபட்ட பாலின, பண்பாட்டு நிகழ்வுகளின் பின்னணியில் பயில்கிறது. மற்றொன்று . . . கடந்த காலத்துக்குச் சென்று, தொடக்க காலத் தலைமுறைகளில் ஆண்கள் தங்களை எவ்வாறு புரிந்துகொண்டனர் (அல்லது தவறாகப் புரிந்துகொண்டனர்) என்பதைப் பயில்கிறது. இரண்டாம் வகை நூல்கள் பெரிதும் பெண்களின் வரலாற்றுக் கண்டுபிடிப்புகளையும் முறையியலையும் புறக்கணிக்கிறது.[6]

சமயத்தில் பாலினம்[தொகு]

உலகெங்கிலும் சமயம் இயற்கையிகந்த தெய்வ உருவம் சார்ந்தே உருவாகியுள்ள்ளது. இந்த இயற்கையிகந்த தெய்வ உருவம் சமயத்துக்குச் சமயம் வேறுபடுகிறது; ஒவ்வொரு உருவமும் வேறுபட்ட கருத்துப் படிமங்களின் அடிப்படையில் ஆணாகவோ பெண்ணாகவோ உருவகிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு பண்பாட்டிலும் சமயம் அப்பண்பாட்டின் குடும்பக் கட்டமைப்பு/அரசு கட்டமைப்பு போலவே பாலினக் கட்டமைப்பையும் சார்ந்துள்ளது. எனவே சமயக் கட்டமைப்பும் பாலினக் கட்டமைப்பும் சேர்ந்தே பண்பாட்டை வரையறுத்து உருவாக்குகின்றன. சமமையும் சீர்மையும் இவ்வாறே வரையறுக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன. [7]

மேலும் காண்க[தொகு]

 • பெண்ணிய வரலாறு
 • இடைக்காலத்தில் மகளிர்
 • பெண்களின் வரலாறு
  • இந்திய மகளிர் வரலாறு
  • ஐக்கிய இராச்சிய மகளிர் வரலாறு
  • ஐக்கிய அமெரிக்க மகளிர் வரலாறு
  • முதல் உலகப்போரில் மகளிர்
  • இரண்டாம் உலகப்போரில் மகளிர்

மேலும் படிக்க[தொகு]

 • Bennett, Judith M. and Ruth Mazo Karras, eds. The Oxford Handbook of Women & Gender in Medieval Europe (2013) 626pp.
 • Blom, Ida, et al. "The Past and Present of European Women's and Gender History: A Transatlantic Conversation." Journal of Women's History 25.4 (2013): 288-308.
 • Carstairs, Catherine, and Nancy Janovicek. "The Dangers of Complacency: women’s history/gender history in Canada in the twenty-first century." Women's History Review 27.1 (2018): 29-40.
 • De Groot, Joanna and Sue Morgan, eds. Sex, Gender and the Sacred: Reconfiguring Religion in Gender History (2014).
 • Hagemann, Karen, and Donna Harsch. "Gendering Central European History: Changing Representations of Women and Gender in Comparison, 1968–2017." Central European History 51.1 (2018): 114-127.
 • Jameson, Elizabeth. "Halfway across That Line: Gender at the Threshold of History in the North American West." Western Historical Quarterly 47.1 (2016): 1-26.
 • Lerner, Gerda. The Creation of Patriarchy (1986).
 • Petö, Andrea, and Judith Szapor, "The State of Women's and Gender History in Eastern Europe: The Case of Hungary," Journal of Women's History, (20070, Vol. 19 Issue, pp 160–166
 • Riley, Denise. “Am I That Name?” Feminism and the Category of 'Women' in History. Minneapolis: University of Minnesota Press, 1988.
 • Rose, Shelley E. "German and American Transnational Spaces in Women's and Gender History." Journal of Women's History 30.1 (2018): 163-169.
 • Rose, Sonya O. What is Gender History?. Malden, Mass.: Polity Press, 2010.
 • Scott, Joan Wallach. Gender and the Politics of History (1999), influential theoretical essays excerpt and text search
 • Sheldon, Kathleen. 'Women's History: Africa" in Kelly Boyd, ed. (1999). Encyclopedia of Historians and Historical Writing, vol 2. Taylor & Francis. பக். 1308–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781884964336. https://books.google.com/books?id=0121vD9STIMC&pg=PA1309. 
 • Spongberg, Mary. Writing Women's History Since the Renaissance. (2003) 308 pages; on Europe
 • Stryker, Susan. Transgender History (2nd ed. 2017) a history of the movement in the United States.
 • Thébaud, Françoise. "Writing Women's and Gender History in France: A National Narrative?" Journal of Women's History, (2007) 19#1 pp 167–172.
 • Umoren, Imaobong D. "From the margins to the center: African American women's and gender history since the 1970s." History Compass 13.12 (2015): 646-658.
 • Vertinsky, Patricia. "Gender Matters in Sport History." in Robert Edelman and Wayne Wilson, eds., The Oxford Handbook of Sports History (2017): 445-60.
 • Zemon Davis, Natalie. “ ‘Women’s History’ in Transition: The European Case.” Feminist Studies 3, no. 3–4 (1976):

ஆண்மை வரலாறு[தொகு]

 • Bederman, Gail. Manliness & Civilization: A Cultural History of Gender and Race in the United States, 1880-1917. Chicago: Chicago University Press, 1995.
 • Connell, R.W. Masculinities. Berkeley: University of California Press, 1995.
 • Dierks, Konstantin. "Men’s History, Gender History, or Cultural History?" Gender & History 14 (2002): 147–51
 • Ditz, Toby L. "The New Men’s History and the Peculiar Absence of Gendered Power: Some Remedies from Early American Gender History," Gender & History 16 (2004): 1-35
 • Dorsey, Bruce. "A Man's World: Revisiting Histories of Men and Gender." Reviews in American History 40#3 (2012): 452-458. online
 • Gorn, Elliott J. The Manly Art–Bare-Knuckle Prize Fighting in America (1986)
 • Griswold, Robert L. Fatherhood in America: A history (1993)
 • Rotundo, E. Anthony. American manhood: Transformations in masculinity from the Revolution to the modern era (1993). excerpt
 • Tosh, John. Manliness and masculinities in nineteenth-century Britain: Essays on gender, family and empire (Routledge, 2017).
 • Traister, Bryce. "Academic Viagra: The Rise of American Masculinity Studies," American Quarterly 52 (2000): 274–304 in JSTOR

மேற்கோள்கள்[தொகு]

 1. "Did Women have a Renaissance?" Becoming Visible: Women in European History. Houghton Mifflin, 1977.
 2. Brown, Kathleen M. (1993). "Brave New Worlds: Women's and Gender History". The William and Mary Quarterly 50 (2): 311–328. doi:10.2307/2947077. பன்னாட்டுத் தர தொடர் எண்:0043-5597. https://archive.org/details/sim_william-and-mary-quarterly_1993-04_50_2/page/311. 
 3. Aruga, Natsuki (2012). "Can We Have a Total American History? A Comment on the Achievements of Women's and Gender History". The Journal of American History 99 (3): 818–821. doi:10.1093/jahist/jas465. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8723. https://archive.org/details/sim_journal-of-american-history_2012-12_99_3/page/818. 
 4. Brown, Kathleen M. (1993). "Brave New Worlds: Women's and Gender History". The William and Mary Quarterly 50 (2): 311–328. doi:10.2307/2947077. பன்னாட்டுத் தர தொடர் எண்:0043-5597. https://archive.org/details/sim_william-and-mary-quarterly_1993-04_50_2/page/311. 
 5. De Hart, Jane Sherron (1993). "Women's History, Gender History, and Political History". The Public Historian 15 (4): 77–78. doi:10.2307/3378639. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-3433. https://archive.org/details/sim_public-historian_fall-1993_15_4/page/77. 
 6. Gail Bederman, Journal of American History 84 (1997) p. 680
 7. Wiesner-Hanks, Merry E (2011). Gender in History: Global Perspectives. Malden, MA: Blackwell Publishing. பக். 109,110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4051-8995-8. https://archive.org/details/genderinhistoryg0000wies. 

வெளி இணைப்புகள்[தொகு]

[பகுப்பு:சமூக இயக்க வரலாறு]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலின_வரலாறு&oldid=3849686" இலிருந்து மீள்விக்கப்பட்டது