பாலினப் பாத்திரம்
பாலினப் பாத்திரம் (gender role) அல்லது பாலியல் பாத்திரம் (sex role),[1] என்பது உயிரியல் அல்லது இயல்புப் பாலினம் சார்ந்த மக்களின் ஏற்புடையதும் தகுந்ததும் விரும்பப்படுவதுமான நடத்தைகளையும் உளப்பாங்குகளையும் உள்ளடக்கிய சமூகப் பாத்திரம் ஆகும்.[2][3] பாலினப் பாத்திரங்கள் வழக்கமாக ஆண்மை, பெண்மை சார்ந்த கருத்தினங்களை மையப்படுத்தியே அமைகின்றன;[2] என்றாலும் மூன்றாம் பாலினமும் பிற விதிர்பாலின வேறுபாடுகளும் கருதப்படுவதில்லை. இந்தப் பாலின் எதிர்பார்ப்புகளின் தனித்தன்மைகள், பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டாலும், பிற பொது நடத்தைகள் அனைத்துப் பண்பாடுகளிலும் பொதுவாகவே உள்ளன. இவ்வகை பாலினப் பாத்திரங்களும் அவற்றின் வேறுபாடுகளும் மாந்தரில் எவ்வளவுக்கு உயிரியலாகவும் எவ்வளவுக்குச் சமூகப் புனைவுகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன என்பது தொடர்விவாத்திலேயே உள்ளது.
பல்வேறு பெண்ணிய இயக்கங்கள் நிலவும் பாலினப் பாத்திரங்கள் ஒடுக்குதலை நோக்கமாகக் கொண்டவை எனவும் துல்லியமற்றவை எனவும் கருதுகின்றன.
பாலினப் பாத்திரம் எனும் சொல்லை முதன்முதலில் 1954 இல் ஜான் மோனியும் அவரது குழுவினரும் பயன்படுத்தினர். உயிரியலான வேறுபாடு நிலவாத சூழலில் தனியர்களின் பாலுறவை தீர்மானிப்பத்தில் ஆண்பாத்திரம் ஏற்கிறார்களா அல்லது பெண்பாத்திரம் ஏற்கிறார்களா என்பதை அவர்களது பாங்குகளைவைத்து கண்டறியும் ஆய்வில் பாலினப் பாத்திரம் எனும் சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தினர்.[4]
பின்னணி
[தொகு]உலக நலவாழ்வு நிறுவனம் "பாலினப் பாத்திரங்களை ஆண்கள் அல்லது பெண்களுக்கு தகுந்ததெனச் சமூகத்தால் புனையப்பட்ட பாத்திரங்களாகவும் நடத்தைகளாகவும் செயல்பாடுகளாகவும் உளப்பாங்குகளாகவும் வரையறுக்கிறது".[5] இவ்வகை பாலினப் பாத்திரங்களும் அவற்றின் வேறுபாடுகளும் மாந்தரில் எவ்வளவுக்கு உயிரியலாகவும் எவ்வளவுக்குச் சமூகப் புனைவுகளாலும் (உயிரியல் சாராமலும்) தீர்மானிக்கப்படுகின்றன என்பது தொடர்விவாத்திலேயே உள்ளது. சமூகப் புனைவு என்பது தற்போக்கானதும் கட்டமைக்கவியன்றதும் ஆகும்.[6][7][8][9][10] எனவே, பாலின் அல்லது பாலினப் பாத்திரத்தை தெளிவான சான்றோடு வரையறுக்கவியலாமற் போகிறது.
பாலினச் சமூகவியலில், சமூகத்தில் ஒரு தனியர் தன் பாலினப் பாத்திரத்தைக் கற்றுத் தன்மயமாக்கும் நிகழ்வைப் பாலினச் சமூகமயமாக்கம் என்பர். [11][12][13]
பாலினப் பாத்திரங்கள் பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபடுபவை என்றாலும் பெருபாலான பண்பாடுகள் சிறுவன், சிறுமி அல்லது ஆண், பெண் எனும் இரு பாலினங்களை மட்டுமே ஏற்கின்றனர்.ரெடுத்துகாட்டாக, ஆணொருபாகியை (Androgyny) மூன்றாம் பாலினமாகவே முன்வைக்கின்றனர்.[14] ஆணொருபாகிகள் ஆண்சார் பண்புகளையும் பெண்சார் பண்புகளையும் கொண்டுள்ளனர். சில சமூகங்கள் ஐந்துவகைப் பாலினங்கள் அமைவதாக கூறுகின்றனர்;[15][16] மேற்கத்தியச் சமூகங்கள் அல்லாத சில சமூகங்கள் மூன்று பாலினங்களை அத்தாவது ஆண், பெண், மூன்றாம் பாலினம் ஆகியவற்றை ஏற்கின்றனர்.[17] சில தனியர்கள் தமக்குப் பாலின இல்லை என அடையாளப் படுத்துகின்றனர்.[18]
பல பெயர்பாலினர்கள் தம்மை மூன்றாம் பாலினமாக ஏற்காமல் ஆண் அல்லது பெண்ணாகவே அடையாளப்படுத்துகின்றனர்.[19]என்றாலும், சில குறிப்பிடதக்க சூழல்களில், குறிப்பாக விளையாட்டுக் கள நிலைமைகளில், பெயர்பெண்கள், இயற்பாலினப் பெண்கள் இடையில் அமையும் உயிரியலான வேறுபாடுகளே வாய்ப்பு வேற்பாடுகளைப் பெற்றுள்ளதால் வரலாற்றியலாக அவை பொருத்தமானவையாகவே கொள்ளப்படுகின்றன.[20]
பாலின வகைபாட்டின்படி பண்பாட்டு எதிர்பார்ப்புகளைச் சுட்டும் பாலினப் பாத்திரம், ஒருவர் தன்னைப் பற்றி உணர்தலைச் சுட்டும் பாலின அடையாளம் அன்று. பாலின அடையளம் சமூக வரன்முறைகளோடு ஒத்த்தோ மாறாகவோ அமையலாம். இந்த தன்னுணர்வுப் பாலின அடையாளங்கள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பாகப் புறநிலையில் வெளிப்படும் புள்ளியில் அல்லது நிலையில் பாலினப் பாத்திரங்கள் உருவாகின்றன.[21][22]
பாலினம்சார் சமூகப் புனைவுக் கோட்பாடுகள்
[தொகு]: 1712 இல் பதினைந்தாம் உலூயிசு அணிந்த வழக்கமான ஆண்பிள்ளை உடைகள், 21 ஆம் நூற்றாண்டில் மாற்றுப் பாலின உடையாகக் கருதப்படும்.]]
சமூகப் புனைவுக் கோட்பாட்டாளர்கள் பாலின நடத்தை பெரும்பாலும் மரபுகள் சார்ந்தனவே எனக் கருதுகின்றனர். ஆனால், இக்கருத்தைப் படிமலர்ச்சி உளவியல் கோட்பாட்டளர்கள் மறுக்கின்றனர்.
மேலும் காண்க
[தொகு]- பாலின விளம்பரம்
- பாலினமும் உணர்வு வெளிப்பாடும்
- பாலினப் பொதுமையாக்கம்
- பாலின முனைவாக்கம்
- பாலினக் காவல்செய்தல்
- பாலினப் பயில்வுகள்
- பாலின இருமை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Levesque R.J.R. (2011) Sex Roles and Gender Roles. In: Levesque R.J.R. (eds) Encyclopedia of Adolescence. Springer, New York, NY. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-1695-2. Retrieved January 22, 2018.
- ↑ 2.0 2.1 Alters, Sandra; Schiff, Wendy (2009). Essential Concepts for Healthy Living. Jones & Bartlett Publishers. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0763756413. பார்க்கப்பட்ட நாள் January 3, 2018.
- ↑ David S. Gochman (2013). Handbook of Health Behavior Research II: Provider Determinants. Springer Science & Business Media. p. 424. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1489917607. பார்க்கப்பட்ட நாள் January 3, 2018.
- ↑ Janssen, D.F. (2018). "Know Thy Gender: Etymological Primer". Archives of Sexual Behavior 47 (8): 2149–2154. doi:10.1007/s10508-018-1300-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-0002. பப்மெட்:30182204.
- ↑ "What do we mean by "sex" and "gender"?". WHO.int. World Health Organization. 2015. Archived from the original on 18 August 2015. பார்க்கப்பட்ட நாள் 18 August 2015.
- ↑ The social construction of race. The Atlantic. https://www.theatlantic.com/national/archive/2013/05/the-social-construction-of-race/275974/
- ↑ Henry, S. (2009) Social construction of crime. In J. Miller (Ed.), 21st Century criminology: A reference handbook. (pp. 296-306). Thousand Oaks: SAGE Publications, Inc. எஆசு:10.4135/9781412971997.n34
- ↑ Hacking, I (1999) The social construction of what?. Harvard University Press.
- ↑ http://www.aifs.gov.au/conferences/aifs7/francis.html
- ↑ Francis, B. (2000) Is gender a social construct or a biological imperative? Family Futures : Issues in Research and Policy 7th Australian Institute of Family Studies Conference http://www.aifs.gov.au/conferences/aifs7/francis.html
- ↑ Adler, Patricia A.; Kless, Steven J.; Adler, Peter (July 1992). "Socialization to Gender Roles: Popularity among Elementary School Boys and Girls". Sociology of Education 65 (3): 169–187. doi:10.2307/2112807. https://archive.org/details/sim_sociology-of-education_1992-07_65_3/page/169.
- ↑ Dill, Karen E.; Thill, Kathryn P. (December 2007). "Video Game Characters and the Socialization of Gender Roles: Young People's Perceptions Mirror Sexist Media Depictions". Sex Roles 57 (11–12): 851–864. doi:10.1007/s11199-007-9278-1.
- ↑ Dietz, Tracy L. (March 1998). "An Examination of Violence and Gender Role Portrayals in Video Games: Implications for Gender Socialization and Aggressive Behavior". Sex Roles 38 (5–6): 425–442. doi:10.1023/A:1018709905920.
- ↑ Eleanor Emmons, Maccoby (1966). "Sex differences in intellectual functioning". The Development of Sex Differences. Stanford, Calif.: Stanford University Press. pp. 25–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-0308-6.
- ↑ Richards, Christina; Bouman, Walter Pierre; Barker, Meg-John (2017). Genderqueer and non-binary genders. United Kingdom: Macmillan. p. 306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1137510532.
- ↑ Graham, Sharyn (2001), Sulawesi's fifth gender, Inside Indonesia, April–June 2001.
- ↑ Roscoe, Will (2000). Changing Ones: Third and Fourth Genders in Native North America. Palgrave Macmillan (17 June 2000) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-22479-6
See also: Trumbach, Randolph (1994). London’s Sapphists: From Three Sexes to Four Genders in the Making of Modern Culture. In Third Sex, Third Gender: Beyond Sexual Dimorphism in Culture and History, edited by Gilbert Herdt, 111-36. New York: Zone (MIT). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-942299-82-3 - ↑ "LGBTQ Needs Assessment" (PDF). Encompass Network. April 2013. pp. 52–53. Retrieved 6 March 2015. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 24 October 2014. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Lopez, German (18 April 2016). "9 questions about gender identity and being transgender you were too embarrassed to ask". Vox. பார்க்கப்பட்ட நாள் 31 July 2016.
Transitioning can be made much more difficult by persistent misconceptions, including the myth that transgender people belong to a third gender.
- ↑ Sykes, Heather (2006). "Transsexual and Transgender Policies in Sport". Women in Sport & Physical Activity Journal 15 (1): 3–13. doi:10.1123/wspaj.15.1.3. http://search.proquest.com/openview/d8691a6dcaf6f5e469538ddc3fa4a5fb/1?pq-origsite=gscholar. பார்த்த நாள்: 31 July 2016.
- ↑ Adler, P.; Kless, S.; Adler, P (1992). "Socialization to gender roles: Popularity among elementary school boys and girls". Sociology of Education 65 (3): 169–087. doi:10.2307/2112807. https://archive.org/details/sim_sociology-of-education_1992-07_65_3/page/169.
- ↑ Acker, J (1992). "From sex roles to gendered institutions". Contemporary Sociology: A Journal of Reviews 21 (5): 565–569. doi:10.2307/2075528.
வெளி இணைப்புகள்
[தொகு]- International Foundation (For) Gender Education
- Gender PAC
- Career advancement for professional women returners to the workplace
- Men and Masculinity Research Center (MMRC), seeks to give people (especially men) across the world a chance to contribute their perspective on topics relevant to men (e.g., masculinity, combat sports, fathering, health, and sexuality) by participating in Internet-based psychological research.
- The Society for the Psychological Study of Men and Masculinity (Division 51 of the American Psychological Association): SPSMM advances knowledge in the psychology of men through research, education, training, public policy, and improved clinical practice.
- Gender Stereotypes - Changes in People's Thoughts, A report based on a survey on roles of men and women.
- Gender Communication Barriers and Techniques, Strategic Communications, Stanford Graduate School of Business. Serves to help develop communication skills.