விக்கிப்பீடியா பேச்சு:ஆசிய மாதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்கத்தை மேம்படுத்தி வரும் அனைவருக்கும் மிக்க நன்றி. இன்னும் பலரும் ஒருங்கிணைப்பாளராக இணைந்து உதவ வேண்டுகிறேன். ஒவ்வொரு விக்கிப்பீடியா சமூகமும் தமது சூழலுக்கு ஏற்ப விதிகளில் சில மாற்றங்கள் செய்யலாம். இதில் மிகப் பெரிய பரிசுத் தொகை இல்லை; இது ஒரு அடையாளச் செயற்பாடு என்பதால் எளிமையான விதிகள் போதும்.

கட்டுரை,

  • குறைந்தது 3500 பைட்டுகள் இருக்க வேண்டும்.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • இந்தியா, இலங்கை தொடர்பான கட்டுரைகளைத் தவிர்க்க வேண்டும்.

என்ற விதிகள் போதுமானவை என்று கருதுகிறேன். மற்ற தரக் கட்டுப்பாடுகள் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைக்கு உட்பட்டவையே.--இரவி (பேச்சு) 06:57, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

அப்படியே மொழி பெயர்த்ததால் விதிகளில் மாற்றம் செய்யவில்லை. தேவையான மாற்றங்களை இற்றைப்படுத்தலாம். --AntanO 07:05, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கி விதிகளில் 4000 பைட்டுக்களைக் கொண்ட கட்டுரைகளை 5 மடங்கு வரை தொகுக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. இதனை சேர்க்கலாமா ?? சிவகார்த்திகேயன் (பேச்சு) 22:22, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

கட்டுரைகள் குறைந்தது 3,500 பைட்டுக்களைக் கொண்டிருக்க வேண்டும். இந்த அளவு சரியானதா? ஆ.வியில் அல்லது இலத்தீன் வகை எழுத்துக்களுக்கு 3,500 பைட்டுக்கள் என்பது நடுத்தரமான கட்டுரையாக இருக்கும். இதில் தகவல் பெட்டி, உசாததுனை, வெளி இணைப்பு உள்வாங்கப்படுகிறதா? --AntanO 17:51, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

// தகவல் பெட்டி, உசாததுனை, வெளி இணைப்பு // இதைப் பற்றி அனைத்துலக விதிகளில் தெளிவில்லை. இது ஒரு அடையாளச் செயற்பாடு என்பதால் பைட்டு அளவை மட்டும் பார்த்தால் போதுமானது என்று எண்ணுகிறேன். இது உலகளாவிய போட்டி என்பதால் எல்லா விக்கிப்பீடியாக்களிலும் பைட்டு அளவை ஒரே போல் வைத்தாலன்றி தமிழில் மட்டும் அளவைக் கூட்டுவது சரியாக இருக்காது. எனவே, போடிக்கு இந்தக் கணக்கு இருக்கட்டும். ஆனால், வழமை போல் கட்டுரைகளை விரிவாக எழுதுமாறு கேட்டுக் கொள்வோம். --இரவி (பேச்சு) 13:10, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
  1. விக்கிமீடியா ஆங்கில மூலத்தில் 300 சொற்கள் என்ற அளவையும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் போன்ற ஒரு எழுத்துருவிற்கே இரண்டு மூன்று பைட்கள் எடுக்கும் மொழிகளுக்கு சொற்கள் பொருத்தமான அளவையாக இருக்கும். எனவே 300 சொற்கள் என்பதை முன்னிலைப்படுத்தலாம்.
  2. விக்கிமீடியா ஆங்கில மூலத்தில் பிலிப்பீன்சு, ஆங்காங், சிங்கப்பூர் குறித்த கட்டுரைகள் விலக்கப்பட்டுள்ளன; இது ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு மட்டும் தானா ? தமிழில் இவை குறித்த கட்டுரைகள் எழுதியபிறகு அஞ்சலட்டை கிடைக்காமல் போய்விடப் போகிறது :-)
  3. இதேபோன்ற போட்டியொன்றை இந்திய விக்கிகளிடையே விக்கிமீடியா, இந்தியா நடத்தினால் மற்ற இந்திய மொழிகளில் தமிழ்நாடு குறித்தும் தமிழில் பிற மாநிலங்கள் குறித்தும் கட்டுரைகள் வளருமே ?
--மணியன் (பேச்சு) 06:33, 26 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:09, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
ஆம், மற்ற மொழி ஒருங்கிணைப்பாளர்களும் சொற்கள் எண்ணிக்கையைத் தகுதியாகக் கொள்ளலாம் என்றே பரிந்துரைத்துள்ளனர். http://wordcounttools.com/ என்னும் தளத்தில் தமிழ்ச் சொற்களை எண்ண முடிகிறது. இதில் நாகலிங்கம் (மரம்) கட்டுரையின் உரைப்பகுதியைச் சோதித்த போது 139 சொற்கள் உள்ளதாகக் காட்டுகிறது. இக்கட்டுரை 4553 பைட்டுகள் கொண்டுள்ளது. எனவே, 300 சொற்கள் என்னும் போது, தோராயமாக 10 கிலோ பைட்டு அளவைத் தொடும். எனவே, 300 சொற்கள் விதியை வலியுறுத்துவது அளவிலும் தரத்திலும் நல்ல கட்டுரைகளைப் பெற உதவும். ஒருங்கிணைப்பாளர்கள் தகுதி பெறும் கட்டுரைகளை இத்தளம் கொண்டு சோதித்து உறுதிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு சமூகத்தினரும் தங்கள் சமூகத்தைத் தவிர மற்ற நாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அந்த வகையில் நாம் இலங்கை, இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளைப் பற்றி எழுதினால் தகும். எந்த நாட்டைத் தவிர்ப்பது என்பது அந்தந்த விக்கிகள் முடிவு. நாம் தரும் பங்களிப்பாளர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் அஞ்சல் அட்டையும் ஆசியத் தூதர் பட்டமும் கிடைக்கும். இது முழுக்க முழுக்க நமது முடிவே. அஞ்சல் அட்டை அனுப்பி வைப்பது மட்டும் தான் பன்னாட்டுக் குழுவின் வேலை. எனவே, கவலை வேண்டாம்.
இந்திய விக்கிச் சமூகங்கள் ஒவ்வொரு மாதமும் மற்ற ஒரு மொழியைப் பற்றி கவனம் குவித்துச் செயற்படலாம் என்ற பரிந்துரை ஏற்கனவே கருத்தளவில் உள்ளது. செயல் வடிவம் கொடுப்போம் :) --இரவி (பேச்சு) 08:03, 26 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
இலங்கையர் இந்தியா பற்றியும், இந்தியர் இலங்கை பற்றியும் எழுத அனுமதிக்கலாம். புலம்பெயர் தமிழர் அல்லது புலம்பெயர் இலங்கையர்/இந்தியர் இவ்வகையில் உள்வாங்காது இருப்பது நல்லது. --AntanO 16:47, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
பல்வேறு நாட்டவர் பங்களிக்கும் விக்கிமீடியா திட்டங்களில், இவ்வாறு பயனர்களின் சொந்த நாடுகள் அடிப்படையில் விவரங்கள் கோருவது அல்லது போட்டி விதிகளை வைப்பது என்பது விக்கிப்பீடியாவின் வழமையான அகவுரிமைக்கு (privacy policy) மாறானது என்று ஏற்பாட்டுக் குழுவில் சிலர் சுட்டிக் காட்டினார்கள். எப்படியும் இந்தியா, இலங்கை தமிழர் பகுதிகளில் வரும் என்பதால் நமக்கு அறிமுகமான பகுதிகளை விடுத்துப் பிற ஆசிய நாடுகளைப் பற்றி முன்னுரிமை தந்து எழுதுவதற்கான வாய்ப்பாக இதனைக் காண்போமே?--இரவி (பேச்சு) 20:48, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
ஏறகனவே கட்டுரைகள் வர ஆரம்பித்து விட்டன. இரவி. போட்டிக்கு என எழுதும் கட்டுரைகளை ஏனைய பயனர்கள் திருத்த முடியுமா? அவற்றை மேம்படுத்த முடியுமா?--Kanags \உரையாடுக 05:04, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
முகநூலில் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்களின் குழு அரட்டை ஒன்று ஓடுகிறது. அதில் தான் இவ்வாறான ஐயங்களைக் கேட்டுத் தெளிகிறோம். எவருக்கேனும் இதில் இணைய விருப்பம் என்றால் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:08, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

விதி[தொகு]

கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்கள் அல்லது தோராயமாக 10,000 பைட்டுக்களைக் கொண்டிருக்க வேண்டும். http://wordcounttools.com/ கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும். என்பதில் 10,000 பைட்டுக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்தா என்பதை விளக்க வேண்டும். கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்கள் கொண்டிருக்க வேண்டும். http://wordcounttools.com/ கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும். என்று மாற்றலாம். வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் என்பவற்றுடன் 10,000 பைட்டுக்களைக் கொண்டிருக்கச் செய்வது இலகுவானதே. --AntanO 11:39, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

-Antan, வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து உள்ள உரைப்பகுதி 10,000 பைட்டுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று தான் இப்போதுள்ள விதியும் குறிப்பிடுகிறது. ஒரு வேளை, இது புரிதற் பிழை, அல்லது அளவிடல் பிழைக்கு வித்திடுகிறது என்றால் பைட்டுகள் அடிப்படையில் போட்டித் தகுதியை உறுதி செய்வதை விட்டு விடலாம். 300 சொற்கள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். உரிய மாற்றங்களைச் செய்து விடுங்கள்.--இரவி (பேச்சு) 13:58, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
ஆம், புரிதற் பிழை இருக்கலாம் எனக் கருதுகிறேன். மாற்றிவிடுகிறேன். --AntanO 14:01, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மதிப்பீடு[தொகு]

இன்றுவரை ஏறக்குறைய எல்லாக் கட்டுரைகளும் மதிப்பிடப்பட்டுள்ளன. எனது கட்டுரைகளை யாராவது ஒருங்கிணைப்பாளர் மதிப்பீடு செய்யவும். ஆராத், இசுரேல் கட்டுரை 1-11-2015 அன்று தொடங்கப்பட்டதாயினும் கருவியினுள் உள்வாங்கப்படாததால்(?) இணைத்துள்ளேன். மேற்கொண்டு மதிப்பீட்டாளர் தேவையான நடவடிக்கை எடுக்கவும். @Ravidreams: --AntanO 19:59, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

அங்குள்ள கருவி தமிழ் சொற்களுக்கான சரியான எண்ணிக்கையை வழங்கவில்லை. wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கையைச் சரி பார்க்கவும். --AntanO 20:01, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தன்னார்வலர் விலகல்[தொகு]

நான் இவ்விக்கித்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் அல்ல. ஆனாலும், இத்திட்டத்தை ஒருங்கிணைப்பதில் இருந்த தாமதத்தினாலும், சக விக்கிப்பீடியர் கேட்டுக் கொண்டதாலும் தன்னார்வலத்துடன் ஈடுபட்டேன். ஆனாலும், அண்மைய சில சம்பவங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகம் பேர் பேசிக் கொண்டிருப்பார்கள், தாங்களும் செய்யமாட்டார்கள், செய்பவர்களையும் விடமாட்டார்கள் எனும் நிலைப்பாட்டிற்கும், மௌமாக இருக்கும் விக்கிச் சமூகத்தின் நிலைப்பாட்டிற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இன்று முதல் ஒருங்கிணைக்கும் வேலையை விட்டுவிலகுகிறேன். மேல்விக்கியிலும் என் பெயரை நீக்கும்படி கேட்டிருக்கிறேன். இத்திட்ட வேலை, பிற வேலை என பல மணித்தியாலங்களை செலவு செய்து கொண்டிருக்கும்போது, விவாதம்தான் செய்வேன் என்பது போன்று உரையாடிக் கொண்டிருப்பது ஒருவித மன உழைச்சலை உருவாக்கும். "தானம் கொடுக்கும் மாட்டின் பல்லைப் பிடித்துப்பார்த்தல்" என்ற பழமொழியின் அர்த்தம் விளங்கும். முடிந்தால், கட்டுரைகளை இப்போட்டிக்காக உருவாக்குவேன். திட்டம் சிறப்பாக நிறைவடைய வாழ்த்துக்கள்! --AntanO 04:03, 20 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

@AntanO: அருள்கூர்ந்து விலகாதீர்கள். மன உளைச்சல் தரும் அளவுக்கும் உரையாடல் சென்றது வருத்தமே. ஆனால், அப்படியான சூழல்களில் அந்த உரையாடலில் இருந்து சிறிதுகாலம் விலகிவிட்டு, மற்ற ஆக்கப்பணியில் ஈடுபடுவதால், ஊக்கம் துளிர்க்கும். அருள்கூர்ந்து கருதிப்பார்க்க வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 16:19, 20 நவம்பர் 2015 (UTC) 👍 விருப்பம் --மணியன் (பேச்சு) 18:16, 20 நவம்பர் 2015 (UTC), 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:08, 20 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
@AntanO:, இத்திட்ட ஒருங்கிணைப்பில் உதவுமாறு தங்களைக் கேட்டுக்கொண்டவர்களுள் ஒருவன் என்ற முறையில், தங்களின் இம்முடிவை மீளப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இத்திட்டம் மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு வருவதற்குத் தங்கள் பங்களிப்புகளே முதன்மைக் காரணியாகும். மற்ற உரையாடல்களில் எழும் கருத்து மாறுபாடுகளுக்கு அந்தந்த இடங்களிலேயே தீர்வு காண முடியும் என்றே நம்புகிறேன். அதற்கு என்னால் இயன்ற பங்களிப்புகளைத் தருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:48, 20 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
மிகச் சிறப்பான முறையிலே இந்த ஒருங்கிணைப்பைச் செய்துவரும் தாங்கள் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். --மணியன் (பேச்சு) 18:16, 20 நவம்பர் 2015 (UTC), 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:08, 20 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

என் ஆளுமை மீண்டும் ஒருங்கிணைப்புச் செய்ய மறுதலிக்கிறது. ஆயினும், உங்களின் கருத்தினைத் தட்டிவிட முடியாததால் மீண்டும் அப்பொறுப்பினை ஏற்கிறேன். மேல் விக்கியில் என் பெயர் இதுவரைக்கும் நீக்கப்படாததால், நீக்க வேண்டாம் எனக் கேட்டுள்ளேன். உண்மையில் சில தொடர் சம்பவங்களுக்கு எதிர்ப்புக் காட்டவே இச்செயலைச் செய்ய வேண்டியதாயிற்று. நீங்கள் உட்பட மற்றவர்கள் வந்து என்னிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் இல்லை. நீங்கள் இவ்வாறு கருத்திடுவீர்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை. இச்செயல் தொந்தரவாக இருந்திருந்தால் என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிற்க, நான் பரவலாக துப்புரவுப் பணி செய்வதால், நானாக சில வேண்டாத தாக்குதல்களுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. சிலவற்றை நீங்கள் கண்டிருக்கலாம். சில விக்கிக்கு புறம்பாகவும் அமைந்ததுண்டு. சிலவற்றை இங்கு தெரிவித்துள்ளேன். மேசமாக தாக்குதல்களுக்கு நானும் மேசமாக பதில் கொடுத்துள்ளேன். இவ்வாறு அழுத்தங்கள் மத்தியில் ஒர் இலக்கு நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, நான் செய்யும் செயல்களுக்கு பிழை பிடிப்பேன் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது போன்று உள்ளது சில செயற்பாடுகள். சிலருடன் இங்கு கருத்து வேறுபட்டிருக்கிறேன். ஆனால், வேறு ஒரு இடத்தில் ஒன்றாக செயல்பட்டுமிருக்கிறேன். அண்மைய சம்பவத்தில்கூட, நான் இப்போட்டி ஒருங்கிணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்க, சில சம்பவங்கள், வேறு எவ்வித முயற்சியுமின்றி, தொடர்ச்சியாக விவாதம் செய்யவே என்னை அழைத்தன. நான் ஒரு வழிகாட்டலை பிற திட்டங்களிலிருந்து இங்குகொண்டு வந்தால் அல்லது இங்குள்ளதை இன்றைப்படுத்த முயன்றால், அதற்கு எதிர்ப்புவரும் என்பதை சில சம்பவங்களின் தொடர்ச்சியாக என்னால் கூற முடியும். ஆ.வி, பொதுவகம் உட்பட்ட திட்டங்களில் நான் பங்குகொண்டு பெற்ற அனுபவங்களையே நான் இங்கு செயற்படுத்த முனைகிறேன். ஆனால் இங்கு புத்தாக்க முயற்சி என்பது விரும்பப்படாமல், காரணங்கள் கூறி தட்டிவிடும் நிலை அல்லது அறிவார்ந்த விளக்கம் கொடுக்கும் நிலை சில இடங்களில் காணப்படுகிறது. புரட்சிகர சிந்தனை, புத்தாக்கம், மீளாய்வு என்பன இல்லாமல், த.வி வளர முடியாது. வலைப்பக்கங்களிற்கும் இதற்கும் வித்தியாசமற்று இணைய குப்பைகளை கொட்டுமிடமாக மாறிவிடும். 10 வருடத்திற்கு முன்பிருந்த விக்கிதான் வேண்டும். எனவே, சான்று கேட்காதே, வடிவமைக்காதே, திருத்தாதே, வார்ப்புருவை இற்றைப்படுத்தாதே, ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதலாம், கொள்கை முக்கியமல்ல, வழிகாட்டல் எதற்கு என்ற மனநிலைகள் மாற வேண்டும் என்ற கருத்தினையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நன்றி. --AntanO 05:17, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

+1 --மதனாகரன் (பேச்சு) 06:44, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று மீண்டும் பொறுப்பேற்பதற்கு நன்றி. இரு விசயங்கள் புலப்படுகின்றன: அ) கட்டுரைகள் குறைந்தது மூன்று வரிகள் இருக்க வேண்டும் என்பது போல் இன்னும் நிறைய இடங்களில் புறவயமாக துப்புரவு விதிகளை வரையறுக்க வேண்டியுள்ளது. படிமக் காட்சியகம் தொடர்பாக கவனம் ஈர்த்தது போல் இன்னும் எந்தெந்த இடங்களில் இவ்வாறான தேவைகள் உள்ளன என்பதைப் பட்டியலிட்டல் உரையாடி வழிகாட்டல்களை இறுதி செய்வோம். ஆ) துப்புரவுப் பணிச் சுமையும் அதனால் வரும் நெருக்கடிகளும் ஓரிருவர் மேல் குவிவதைத் தவிர்க்க இன்னும் பலர் துணிவுடன் துப்புரவுப் பணியாற்ற முன்வர வேண்டும். நானும் இயன்ற அளவு இது தொடர்பாகப் பங்களிக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:24, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் 2015[தொகு]

நாள் கட்டுரைகள் கட்டுரை உருவாக்க வீதம் பதிவு செய்தோர் பங்களிப்பாளர்
நவம்பர் 10 82 30.94% 38 11
நவம்பர் 20 133 19.25% 43 16
நவம்பர் 30 265 49.81% 45 23

கட்டுரைகள்[தொகு]

இல. நாடு/பிரதேசம் கட்டுரைகள்
1 அசர்பைஜான் 01
2 ஆங்காங் 02
3 ஆசியா 02
4 ஆப்கானித்தான் 06
5 ஆர்மீனியா 11
6 இசுரேல் 08
7 இந்தியா 01
8 இந்தோனேசியா 10
9 ஈராக் 01
10 ஈரான் 09
11 உருசியா 32
12 ஓமான் 01
13 கசக்ஸ்தான் 01
14 கத்தார் 01
15 கம்போடியா 15
16 கிழக்கு திமோர் 01
17 குவைத் 01
18 கொரியா 14
19 சப்பான் 17
20 சிங்கப்பூர் 08
21 சியார்சியா 04
22 சிரியா 03
23 சீனா 32
24 தாய்லாந்து 07
25 துருக்கி 02
26 துருக்மெனிஸ்தான் 01
27 தென் கொரியா 01
28 தென்கிழக்காசியா 02
29 தைவான் 02
30 நடு ஆசியா 02
31 நேபாளம் 16
32 பகுரைன் 04
33 பர்மா 02
34 பாக்கித்தான் 10
35 பிலிப்பீன்சு 01
36 புரூணை 01
37 பூட்டான் 05
38 மக்காவு 02
39 மங்கோலியா 04
40 மலேசியா 04
41 மாலைத்தீவுகள் 04
42 மியான்மர் 01
43 லெபனான் 02
44 வங்காளதேசம் 06
45 வட கொரியா 02
46 வியட்நாம் 03
மொத்தம் 265

பங்களிப்பாளர்கள்[தொகு]

இல. பயனர் போட்டிக்கான கட்டுரைகள் தகுதியான கட்டுரைகள்
1 Anbumunusamy (பேச்சு · பங்களிப்புக்கள்) 7 7
2 AntanO (பேச்சு · பங்களிப்புக்கள்) 32 32
3 Chandravathanaa (பேச்சு · பங்களிப்புக்கள்) 6 5
4 Hariharanbalu (பேச்சு · பங்களிப்புக்கள்) 6 5
5 Kurinjinet (பேச்சு · பங்களிப்புக்கள்) 5 5
6 Mayooranathan (பேச்சு · பங்களிப்புக்கள்) 7 7
7 Nan (பேச்சு · பங்களிப்புக்கள்) 2 2
8 Parvathisri (பேச்சு · பங்களிப்புக்கள்) 5 5
9 Preethi Rajeshwari (பேச்சு · பங்களிப்புக்கள்) 1 1
10 Rsmn (பேச்சு · பங்களிப்புக்கள்) 27 26
11 Rusni1989 (பேச்சு · பங்களிப்புக்கள்) 3 3
12 Sivakosaran (பேச்சு · பங்களிப்புக்கள்) 5 5
13 Thiyagu Ganesh (பேச்சு · பங்களிப்புக்கள்) 5 5
14 Wwarunn (பேச்சு · பங்களிப்புக்கள்) 5 5
15 aathavan jaffna (பேச்சு · பங்களிப்புக்கள்) 2 2
16 arulghsr (பேச்சு · பங்களிப்புக்கள்) 20 19
17 maathavan (பேச்சு · பங்களிப்புக்கள்) 7 7
18 paramatamil (பேச்சு · பங்களிப்புக்கள்) 5 3
19 info-farmer (பேச்சு · பங்களிப்புக்கள்) 1 0
20 உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு · பங்களிப்புக்கள்) 25 15
21 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு · பங்களிப்புக்கள்) 26 20
22 கி.மூர்த்தி (பேச்சு · பங்களிப்புக்கள்) 46 46
23 தமிழ்க்குரிசில் (பேச்சு · பங்களிப்புக்கள்) 17 11
மொத்தம் 265 236

குறிப்பு: 89 வீதமான கட்டுரைகள் தகுதிபெற்ற கட்டுரைகளாகும்.

5 தகுதியான கட்டுரைகளை உருவாக்கியோர்[தொகு]
  1. உலோ.செந்தமிழ்க்கோதை (talk; comments; மதிப்பிடுக):
  2. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (talk; comments; மதிப்பிடுக):
  3. கி.மூர்த்தி (talk; comments; மதிப்பிடுக)
  4. தமிழ்க்குரிசில் (talk; comments; மதிப்பிடுக):
  5. Anbumunusamy (talk; comments; மதிப்பிடுக):
  6. AntanO (talk; comments; மதிப்பிடுக):
  7. Chandravathanaa (talk; comments; மதிப்பிடுக):
  8. Hariharanbalu (talk; comments; மதிப்பிடுக):
  9. Kurinjinet (talk; comments; மதிப்பிடுக):
  10. Mayooranathan (talk; comments; மதிப்பிடுக):
  11. Parvathisri (talk; comments; மதிப்பிடுக):
  12. Rsmn (talk; comments; மதிப்பிடுக):
  13. Sivakosaran (talk; comments; மதிப்பிடுக):
  14. Thiyagu Ganesh (talk; comments; மதிப்பிடுக):
  15. Wwarunn (talk; comments; மதிப்பிடுக):
  16. arulghsr (talk; comments; மதிப்பிடுக):
  17. maathavan (talk; comments; மதிப்பிடுக):

குறிப்பு: 5 தகுதியான கட்டுரைகளை அல்லது அதற்குமேல் உருவாக்கியவர்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களும், அஞ்சலட்டைகளை பெறவதற்கு தகுதி பெற்றவர்களும் ஆவர்.

தகுதியான கட்டுரைகளை உருவாக்கியோர்[தொகு]

தகுதியான கட்டுரைகளை உருவாக்கியோருக்கு பின்வரும் நன்றிப் பதக்கம் வழங்கப்பட்டது. 300 சொற்களுக்கு மேற்பட்ட கட்டுரைகள் (குறுங்கட்டுரை அல்லாது நடுத்தர கட்டுரைகள்) விக்கிப்பீடியாவிற்கு வளமாகும்.

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்!

--AntanO 06:19, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

இந்திய, இலங்கை மொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒப்பீடு[தொகு]

இது வரை (13-01-2016) சகல விக்கிப்பீடியாக்களின் முடிவு தெரியவில்லை. ஆனால், இந்திய, இலங்கை மொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்களிப்பு முன்னிலை வகிக்கிறது.

  • அதிக எண்ணிக்கை தடித்த எண் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்கிப்பீடியா பங்களிப்பாளர் மொத்தக் கட்டுரை தகுதியான கட்டுரை புதிய பயனர் பைட்டு
(Bytes)
உ.தெ வெற்றி பெற்றவர் தூதுவர்
[கட்டுரைகள்]
அசாம் 8 55 24 2 595,096 - 2 -
வங்காளி 68 223 152 13 2,849,863 - 9 1 [71]
குசராத்தி 6 12 12 1 172,710 - 2 1 [7]
கன்னடம் 4 6 - 1 26,964 - - -
மலையாளம் 35 226 155 5 1,871,951 - 17 2 [36, 31]
பஞ்சாபி 19 190 149 1 939,031 - 10 2 [42; 37]
சமசுகிருதம் 3 5 5 1 N/A - 1 1 [5]
சிங்களம் 22 38 31 2 517064 - 5 1 [8]
தமிழ் 45 265 236 5 3,668,509 3 17 2 [46, 32]
தெலுங்கு 11 47 29 1 1,029,799 - 11 1 [12]
உருது 12 47 40 3 323,303 - 4 1 [13]
உசாத்துணை: Result, Qualified Editors, Ambassadors

நகர்த்தல்[தொகு]

ஒரு பக்கத்தினை நகர்த்தும்போது அதன் வரலாறும், பேச்சுப் பக்கமும் கவனிக்கப்படல் வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டிற்கும் இப்பக்கத்தை நகர்த்தாமல், புதிய பக்கம் உருவாக்கப்படல் வேண்டும். இக்குழப்பத்தினால் இப்பக்கம் விக்கித்தரவில் இணைப்பில் இருந்து விடுபட்டுள்ளது. --AntanO (பேச்சு) 03:57, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

ஆ.வி பக்கத்தினையும் விக்கித்தரவினையும் கவனித்து, பக்க உருவாக்கம் செய்யுங்கள். --AntanO (பேச்சு) 04:04, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் 2018 படைப்புகள்[தொகு]

அன்புடையீர்,

தற்போது தான் விக்கிப்பீடியா பயனர் ஆனேன். ஆசிய மாதம் 2018க்கான கட்டுரையில் " சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள் (புத்தகம்)" பற்றிய கட்டுரை ஒன்றை உருவாக்கி உள்ளேன். விக்கிப்பீடியாவில் இது எனது முதல் முயற்சி ஆகும், தங்களில் யாரேனும் இந்தப் படைப்பு ஆசிய மாதம் 2018க்கான கட்டுரைகளில் இணைக்க தகுதியானதா? என்பது குறித்து சொல்ல இயலுமா? https://ta.wikipedia.org/s/7fm3 மேலும் இந்தக் கட்டுரையை பின்வரும் முகவரியில் நான் சமர்ப்பிக்க முயலும் போது.. https://tools.wmflabs.org/fountain/editathons/asian-month-2018-ta கட்டுரைக்கான பக்கத்தைக் காணவில்லை என்ற தகவலைத் தருகிறது? யாரேனும் உதவிட இயலுமா? நன்றி.

--கருவெளி ராச.மகேந்திரன் (பேச்சு) 15:34, 16 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:ஆசிய மாதம் என்ற பக்கத்தில் உள்ள //விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க// என்ற அறிவிப்பைச் சொடுக்கவும். பிறகு, கருவியைப் பயன்படுத்த அனுமதி தாருங்கள். நீங்கள் உருவாக்கியக் கட்டுரையை உள்ளிட்டால், அங்குள்ள பிற நண்பர்களைப் போன்று, உங்கள் பெயரோடு கட்டுரையின் பெயரும் தோன்றும். தலைப்புகளுக்கு, அதே பக்கத்தில் தனித் தத்தல் உள்ளதைக் கவனிக்கவும்.--உழவன் (உரை) 01:44, 21 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் 2018 படைப்புகளில் வார்ப்புரு இணைப்பு[தொகு]

{{WAM talk 2018}} என்ற வார்ப்புருவானது ஒரு கட்டுரையைப் போட்டிகருவியில்(Fountain) இணைக்கும் போதே, அக்கட்டுரையின் பேச்சுப்பகுதியில் கருவி இணைக்க வேண்டும். தற்போது அவ்விணைப்புத் தோன்றவில்லை. அவ்விதம் இணைய தேவையான மாற்றங்களை உருவாக்க ஒருங்கிணைப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.--உழவன் (உரை) 02:01, 21 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தகவல் உழவன். கருவியில் பிழை உள்ளது என நினைக்கிறேன். சில கட்டுரைகளுக்கு வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளது, சில கட்டுரைக்கு இணைக்கப்படவில்லை. இப்பிழையை சரி செய்ய என்னாலான முயற்சிகளை நிச்சயம் மேற்கோள்கிறேன். நன்றி.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:13, 22 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

Wikipedia Asian Month 2019[தொகு]

Please help translate to your language

Greetings!

Thank you for organizing Wikipedia Asian Month 2019 for your local Wikipedia language. For rules and guidelines, refer to this page on Meta. To reach out for support for the contest or ask any query, reach out to us on our Contact Us page. Our International Team will be assisting you through out the contest duration. Thank you for your efforts in making this project successful.

Best wishes,

WAM 2019 International Team

Stay Updated  

--MediaWiki message delivery (பேச்சு) 11:46, 2 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

கட்டுரைத் தலைப்புகள்[தொகு]

ஆசிய மாதம் போட்டியில் பங்கேற்க கட்டுரைத் தலைப்புகள் உள்ளதா? வேங்கைப் போட்டியில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளை இங்கும் சமர்ப்பிக்கலாமா? பிரயாணி (பேச்சு) 07:42, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

Extension of Wikipedia Asian Month contest[தொகு]

In consideration of a week-long internet block in Iran, Wikipedia Asian Month 2019 contest has been extended for a week past November. The articles submitted till 7th December 2019, 23:59 UTC will be accepted by the fountain tools of the participating wikis.

Please help us translate and spread this message in your local language.

Wikipedia Asian Month international team.

--MediaWiki message delivery (பேச்சு) 14:12, 27 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]