ஹளேபீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹளபீடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெளி இணைப்புகள்[தொகு]

Nandi sculpture in Kedareshwara temple at Halebidu Ganesha sculpture in Kedareshwara temple at Halebidu Vishnu relief sculpture Kedareshwara temple at Halebidu Arjuna relief sculpture Kedareshwara temple at Halebidu நிழற்படங்கள்

ஹளபீடுவில் உள்ள ஒய்சாளேசுவரர் கோயில்

ஹளபீடு இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் போசளர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கியது. இது கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் துவார சமுத்திரம் என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹளபீடு உள்ள ஹோய்சாலேஸ்வரர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இது ஹோய்சாலர் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.

இது ஒரு இரட்டைக்கோவிலாகும். இவை இரண்டும் சிவன் கோவில்கள் ஆகையால் இவற்றின் முன்புறம் ஒரே கல்லால் ஆன நந்திகள் உள்ளன. இவை ஏறத்தாழ 8 அடி உயரம் கொண்டவை. இக்கோவில்களின் பீடமானது நட்சத்திர வடிவில் உள்ளது. இக்கோவில்கள் இரண்டும் பண்டைக்காலத்தில் வேறு மன்னரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்வே இவையிரண்டும் முற்றுப்பெறாத நிலையில் உள்ளன.

கோவிலுக்கு அருகில் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் ஒன்றும் அமைந்துள்ளது.


மேலும் பார்க்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹளேபீடு&oldid=1849604" இருந்து மீள்விக்கப்பட்டது