ராதிகா சரத்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராதிகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராதிகா
Radhika at CCL T20 2011.jpg
பிறப்பு செப்டம்பர் 21, 1963 (1963-09-21) (அகவை 49)
கொழும்பு, இலங்கை
துணைவர் சரத்குமார்
பிள்ளைகள் இராகுல் சரத்குமார்
ரய்னே ஹார்டி
பெற்றோர் எம். ஆர். இராதா
கீதா இராதா

இராதிகா, (பிறப்பு - செப்டம்பர் 21, 1963, இலங்கை.), தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.

பொருளடக்கம்

குடும்பம் [தொகு]

இவருடைய குடும்பம் பாராம்பரிய திரைப்படப் பின்னணியை சேர்ந்தது. இவருடைய தந்தை பிரபல தமிழ் நடிகர் எம். ஆர். ராதா ஆவார். இவரின் அண்ணன் ராதாரவி மற்றும் தங்கை நிரோஷா ஆகியோர் பிரபல நடிகர்- நடிகைகள் ஆவார்கள். இவரின் முதல் திருமணம் மலையாள நடிகர், இயக்குனர் ஆன பிரதாப் போத்தன் என்பவருடன் நடந்தது, அது விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவது திருமணம் பிரித்தானிய நாட்டவரான ரிச்சர்ட் ஹார்டி என்பவருடன் நடந்து அவர்களுக்கு ரய்னே ஹார்டி என்ற பெண் குழந்தை பிறந்தது. இவருடைய 3வது கணவர் சரத்குமார், இவர்களுக்கு இராகுல் சரத்குமார் என்ற மகன் உள்ளார்.

இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள் [தொகு]

இராதிகா நடித்துள்ள சில தொலைக்காட்சி தொடர்கள் [தொகு]

  • சித்தி
  • அண்ணாமலை
  • செல்வி
  • அரசி
  • செல்லமே

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_சரத்குமார்&oldid=1407502" இருந்து மீள்விக்கப்பட்டது