புதுச்சேரி மாநில சாலைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுச்சேரி மாநில சாலைகள் பட்டியல் (List of state highways in Puducherry) என்பது இந்தியாவின் ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் அல்லது ஆர். சி. சாலைகள் ஆகும்.[1] புதுச்சேரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அடுத்ததாக எண்ணிடப்பட்ட முக்கிய சாலைகள் இது ஆகும். புதுச்சேரி ஒன்றிய பொதுப்பணித் துறை[2] இச்சாலைகளின் திட்டமிடல், வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு முதன்மைப் பொறுப்பு அமைப்பாகும்.

பி. எஸ். பாளையம் (ஆர்சி-21) அருகே எல்லைப்புற சாலையில் பசுமையான பாதை
மங்கலத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுக்கரையைக் காட்டும் ஆர்சி-19 இல் 2வது கிலோமீட்டர் கல்
அரியாங்குப்பம் கொம்யூன் மேற்கு நுழைவாயில் (ஆர்சி-20)
ஆர்சி-17- சாலைப்பணி குறித்த அறிவிப்பு பலகை

கோட்டங்கள்[தொகு]

இந்த மாநிலச் சாலைகளைப் பராமரிப்பதற்காக பொதுப்பணித் துறை 3 கோட்டங்கள் மூலம் செயல்படுகிறது.

  • கட்டிடம் & சாலைகள் (வடக்கு) சுருக்கமாக பிஆர்என்
  • கட்டிடம் & சாலைகள் (மையம்) சுருக்கமாக பிஆர்சி
  • கட்டிடம் & சாலைகள் (தெற்கு) சுருக்கமாக பிஆர்எசு

சாலைகள்[தொகு]

வ. எண். ஆர். சி. எண் பாதை நீளம் (கி.மீ.)
1 ஆர்சி-1 பவுல்வர்டு சாலைகள் 5.29
2 ஆர்சி-2 புதுச்சேரி - கடலூர் சாலை (பகுதி)(கோலாசு நகர் மற்றும் உப்பளம் வழியாக சுப்பையா சாலை சந்திப்பு முதல் மரபாலம் சந்திப்பு வரை) 2.655
3 ஆர்சி-3 புதுச்சேரி - விழுப்புரம் சாலை (பகுதி) (கௌபர்ட் அவென்யூ முதல் இந்திரா காந்தி வட்டம் லால் பகதூர் சாஸ்திரி தெரு மற்றும் மறைமலை அடிகள் சாலை வழியாக) 3.3
4 ஆர்சி-4 புதுச்சேரி - வழுதாவூர் சாலை (ஆர்சி-4) கவுபர்ட் அவென்யூ முதல் கூனிச்செம்பேட்டை மாநில எல்லையான நேரு தெரு மற்றும் காமராஜர் சாலை வழியாக 25.916 (7.577 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய)
5 ஆர்சி-5 பாண்டிச்சேரி - மரக்காணம் சாலை (ஆர்சி-5)(பகுதி) சுப்பையா சாலை சந்திப்பு முதல் முத்தியால்பேட்டை மாநில எல்லை வரை) மகாத்மா காந்தி சாலை வழியாக 3.5
6 ஆர்சி-6 புதுச்சேரி - திண்டிவனம் சாலை (தே.நெ. 66 ஆக மேம்படுத்தப்பட்டது) 3.55 கி.மீ.
7 ஆர்சி-7 சுத்துகேனி வீதி 7.700 (1.753 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய)
8 ஆர்சி-8 புளியன்சாலை வீதி 0.966
9 ஆர்சி-9 கொசபாளையம் ரோடு 0.768
10 ஆர்சி-10 எல்லாப்பிள்ளைச்சாவடி சாலை தே.நெ. 66 இன் பகுதியைத் தவிர்த்து 0.45
11 ஆர்சி-11 முத்திரபாளையம் ரோடு 1.386
12 ஆர்சி-12 சன்யாசிக்குப்பம் சாலை 18.198 (7.370 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய)
13 ஆர்சி-13 வடனூர் சாலை 10.515 (2.350 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய)
14 ஆர்சி-14 மில் சாலை 1.259
15 ஆர்சி-15 பாரதி ஆலை சாலை 0.49
16 ஆர்சி-16 காராமணிக்குப்பம் ரோடு 1.74
17 ஆர்சி-17 கூடப்பாக்கம் சாலை 4.488
18 ஆர்சி-18 வில்லியனூர் மாட வீதி 1.086
19 ஆர்சி-19 முருங்கப்பாக்கம்-வில்லியனூர் சாலை 6.416
20 ஆர்சி-20 வில்லியனூர்-பாகூர் சாலை 11.415 (0.994 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய)
21 ஆர்சி-21 மங்கலம்–ஏம்பலம்–மதுக்கரை சாலை 18.565 (5.748கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய)
22 ஆர்சி-22 தவளக்குப்பம்-ஏம்பலம் சாலை 9.123 (1.637 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய)
23 ஆர்சி-23 எல்லைப்புற சாலை 30.663 (3.306 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய)
24 ஆர்சி-24 பத்துக்கண்ணு-சேடராப்பேட்டை சாலை 4.307
25 ஆர்சி-25 வைத்திக்குப்பம் ரோடு 0.922
26 ஆர்சி-26 முத்தியால்பேட்டை-லாசுபேட்டை சாலை 4.112
27 ஆர்சி-27 அரியாங்குப்பம் - நோனாங்குப்பம் சாலை 0.484
28 ஆர்சி-28 அரியாங்குப்பம்வீராம்பட்டினம் சாலை 2.005
29 ஆர்சி-29 கிருமாம்பாக்கம்-பாகூர் சாலை 4.6
30 ஆர்சி-30 கன்னியாகோயில்-பாகூர் சாலை 3.661
31 ஆர்சி-31 வில்லியனூர்-விழுப்புரம் சாலை (பகுதி) வில்லியனூர் மேரி முதல் புதிய புறவழிச்சாலை சந்திப்பு வரை 0.835
32 ஆர்சி-32 செம்பியபாளையம்-கீழூர் சாலை 7.094
33 ஆர்சி-33 பாகூர்-கரைமேடு சாலை 0.774
34 ஆர்சி-34 மண்ணடிப்பேட்டை-திருக்கனூர் சாலை 2.46
35 ஆர்சி-35 பாக்கம்-கடலூர் சாலை 1.15

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Planning and Research Department. "Roads & Bridges" (PDF). Draft Annual Plan 2006–07. Government of Pudicherry. pp. 259–294. Archived from the original (PDF) on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
  2. Public Works Department, Puducherry. Official Website.

வெளி இணைப்புகள்[தொகு]