ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏபெக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு
2005 ஏபெக் உச்சி மாநாடு, புசான், தென் கொரியா
2006 ஏபெக் உச்சி மாநாடு, ஹனோய், வியட்நாம்
2007 ஏபெக் உச்சி மாநாடு, சிட்னி, ஆஸ்திரேலியா

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.[1]. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது.

ஏபெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சீன தாய்பெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சீன தாய்பெய் அமைச்சர் மட்டத்தில் இம்மாநாட்டில் பங்கு பற்றுகிறது. உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு இடம்பெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும். 2007ம் ஆண்டிற்கான ஏபெக் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் செப்டம்பர் 2-9 இல் நடைபெற்றது.

வரலாறு[தொகு]

ஜனவரி 1989 இல் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த பொப் ஹோக் பசிபிக் நாடுகளின் கூடிய பொருளாதாரக் கூட்டுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் நவம்பரில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் காரெத் எவான்ஸ் தலைமையில் 12 நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெற்றது.

முதலாவது உச்சி மாநாடு 1993 இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலைமையில் வாஷிங்டனில் உள்ள பிளேக் தீவில் இடம்பெற்றது. ஏபெக் தலைமையகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது.

அங்கத்துவ நாடுகள்[தொகு]

தற்போது மொத்தம் 21 நாடுகள் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

நாடு சேர்ந்த ஆண்டு
 ஆஸ்திரேலியா 1989
 புரூணை 1989
 கனடா 1989
 இந்தோனேசியா 1989
 ஜப்பான் 1989
 மலேசியா 1989
 பிலிப்பைன்ஸ் 1989
 நியூசிலாந்து 1989
 சிங்கப்பூர் 1989
 தென் கொரியா 1989
 தாய்லாந்து 1989
 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 1989
 சீனக் குடியரசு[2] 1991
 ஹாங்காங்[3] 1991
 சீனா 1991
 மெக்சிகோ 1993
 பப்புவா நியூ கினி 1993
 சிலி 1994
 பெரு 1998
 ரஷ்யா 1998
 வியட்நாம் 1998

 இந்தியா இக்கூட்டமைப்பில் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனவாயினும், 2010 இற்குப் பின்னரேயே இக்கோரிக்கை பரிசீலனைக்கெடுக்கப்படும்.[4][5][6][7]

அதனை விட, மொங்கோலியா, லாவோஸ், கொலம்பியா[8],  ஈக்குடோர்[9] போன்றவையும் விண்ணப்பித்துள்ளன.

சந்திப்பு இடம்பெற்ற இடங்கள்[தொகு]

வருடம் # திகதிகள் நாடு நகரம் இணையத்தளம்
1989 1st நவம்பர் 6–7 ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா கான்பரா
1990 2nd ஜூலை 29–31 சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் சிங்கப்பூர்
1991 3rd நவம்பர் 12–14 தென் கொரியாவின் கொடி தென்கொரியா Seoul
1992 4th செப்டெம்பர் 10–11 தாய்லாந்து கொடி தாய்லாந்து Bangkok
1993 5th நவம்பர் 19–20 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஐக்கிய அமெரிக்கா Seattle
1994 6th நவம்பர் 15 இந்தோனேசியா கொடி இந்தோனேசியா Bogor
1995 7th நவம்பர் 19 சப்பான் கொடி ஜப்பான் ஒசாகா
1996 8th நவம்பர் 25 பிலிப்பைன்ஸ் கொடி பிலிப்பீன்சு Manila and Subic
1997 9th நவம்பர் 24–25 கனடா கொடி கனடா வான்கூவர்
1998 10th நவம்பர் 17–18 மலேசியா கொடி மலேசியா Kuala Lumpur
1999 11th செப்டெம்பர் 12–13 நியூசிலாந்து கொடி நியூசிலாந்து Auckland
2000 12th நவம்பர் 15–16 புரூணை கொடி புருணை Bandar Seri Begawan [4]
2001 13th அக்டோபர் 20–21 சீன மக்கள் குடியரசின் கொடி சீனா சங்காய்
2002 14th அக்டோபர் 26–27 மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ Los Cabos
2003 15th அக்டோபர் 20–21 தாய்லாந்து கொடி தாய்லாந்து Bangkok
2004 16th நவம்பர் 20–21 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி சாந்தியாகோ [5]
2005 17th நவம்பர் 18–19 தென் கொரியாவின் கொடி தென்கொரியா Busan
2006 18th நவம்பர் 18–19 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி வியட்நாம் ஹனோய் [6]
2007 19th செப்டெம்பர் 8–9 ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா சிட்னி [7]
2008 20th நவம்பர் 22–23 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு Lima [8]
2009 21st நவம்பர் 14–15 சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் சிங்கப்பூர் [9]
2010 22nd நவம்பர் 13–14 சப்பான் கொடி ஜப்பான் Yokohama [10]
2011 23rd நவம்பர் 12–13 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஐக்கிய அமெரிக்கா Honolulu [11]
2012 24th செப்டெம்பர் 9–10 உருசியாவின் கொடி ரஷ்யா Vladivostok [12]
2013 25th அக்டோபர் 5–7 இந்தோனேசியா கொடி இந்தோனேசியா பாலி [13]
2014 26th நவம்பர் 2014 சீன மக்கள் குடியரசின் கொடி சீனா பீஜிங்
2015 27th நவம்பர் 2015 பிலிப்பைன்ஸ் கொடி பிலிப்பீன்சு Davao City
2016 28th நவம்பர் 2016 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு Lima
2017 29th 2017 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி வியட்நாம் ஹனோய்

மேற்கோள்கள்[தொகு]

  1. (உலக வங்கி)
  2. சீனக் குடியரசு (ROC) தனது பெயரை இக்கூட்டமைப்பில் "சீனக் குடியரசு" என்றோ அல்லது "தாய்வான்" என்றோ அழைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. பதிலாக "சீன தாய்பெய்" என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் அரசுத் தலைவர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை, அமைச்சர்கள் மட்டத்திலேயே தனது தூதுக் குழுவை அனுப்புகிறது.
  3. ஹாங்காங் பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்தபோது 1991இல் ஏபெக்கில் இணைந்தது. 1997 இல் சீன மக்கள் குடியரசுடன் இணைக்கப்பட்டதில் இருந்து இது "ஹாங்காங், சீனா" என்று வழங்கப்பட்டு வருகிறது.
  4. APEC 'too busy' for free trade deal, says Canberra
  5. இந்திய அங்கத்துவம் பற்றிய பிரச்சினை
  6. Extend a hand to an absent friend
  7. [1]
  8. [2]
  9. [3]

வெளி இணைப்புகள்[தொகு]