உப்பாறு, தாராபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உப்பாறு என்பது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பாயும் அமராவதி நதியின் துணை நதியாகும்.

உப்பாறு இந்தியாவில் தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் (ஜக்கார்பாளையம்), அரசூர் பகுதியில் பரம்பிக்குளம் ஆழியார் பாசனக் கால்வாய் உபரிநீரும், மழைநீரும் கொசவன்பாளையம் ஆமந்தகடவு, சிக்கனூத்து பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக தாராபுரம் உப்பாறு அணையில் சேரும். அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் கோழிகுட்டைஜல்லிபட்டி மற்றும் கோமங்களத்தின் வடக்கே பொழியும் மழைநீர் ஆனது பெதப்பம்பட்டி, கொண்டாம்பட்டி, வழியோடி, பெரியபட்டி அருகில் P.A.P உபரி வாய்க்காலில் சேர்ந்து உப்பாற்றை அடையும். அதே சமயம் கோவை மாவட்டம் அப்பநாயக்கன்பாளையம், பூரண்டாம்பாளையம், செஞ்சேரிமலை, கிருஷ்ணாபுரம், சுல்தான்பேட்டை பகுதி நீரும் ஜல்லிபட்டி பகுதி நீரும் உப்பாற்றையே அடையும் இவ்வாறு மலையில் உருவாகும் ஓடைகள் நதி ஆவதை போல் அல்லாமல் உப்பாறானது ஆங்காங்கே பொழியும் மழைநீரை மட்டுமே கொண்டு நிரம்பும் சிறப்புமிக்க ஆறு. இது P.A.P திட்டத்தின் முக்கியமான ஒரு அங்கமும் ஆகும்,

உப்பாறு அணையானது பனமரத்துப்பாளையம் கிராமம், கெத்தல்ரேவ் பகுதியில், 1,100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 500 கிலோ முதல் 800 கிலோ வரை தினமும் மீன் பிடிக்கப்படுகிறது.

உப்பாறு அணை[தொகு]

தாராபுரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் - கெத்தல்ரேவ் - பனமரத்துப்பாளையம் கிராமத்தில் உள்ளதுதான் உப்பாறு அணை. திருமூர்த்தி அணையின் உபரி நீரைச் சேமிக்க இந்த அணை முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் உப்பாற்றின் குறுக்கே 1100 ஏக்கரில் கட்டப்பட்டது.[1] 1965 -ல் தொடங்கி 1968 -ல் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 30 அடி. நீளம் 2,300 மீ . நீர்பிடிப்பு பகுதி 350 ச.மைல்கல் ஆகும். அணையின் மூலம் நேரடியாக 6100 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இரண்டு கால்வாய்கள் உண்டு.

இந்த அணை நிறைந்து வெளியேறும் நீர் - அமராவதி ஆற்றுடன் இணைந்து, காவிரி ஆற்றுடன் வங்கக்கடலில் கலக்கும். P.A.P பாசன திட்டத்தில் முதலில் போடப்பட்ட திட்டத்தின்படி அரசூர் பகுதியில் முடிவடைந்து உப்பாற்றில்ஓடி இந்த அணையில் சேர்வதாக இருந்தது பின்திட்டம் நீட்டிக்கப்பட்டதால் P.A.P கால்வாய் பொங்கலூர் வரை நீட்டிக்கப்பட்டது மேலும் இந்த பாசனப்பகுதிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. எனவே உப்பாறு அணைக்கு வரும் உபரி நீர் நின்று போனது.

தற்பொழுது மழைநீர் மட்டுமே நம்பி உள்ளது. ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் அணையின் நீர்வரத்து பெறும்

இன்னும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இந்த அணையில் விளையும் மீன் தனி சுவை கொண்டது. அணையில் நீர் இருந்தால் தினமும் 500 கி.மீன் பிடிக்கப்படும்.[2][3][4]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "20 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய உப்பாறு அணை: பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்". தமிழ் இந்து திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/741959-uppar-river-1.html. பார்த்த நாள்: 9 November 2023. 
  2. வறண்டு போன உப்பாறு அணை... நீராதாரம் இன்றி நிர்க்கதியாய் நிற்கும் விவசாயிகள் | Uppar Dam, பார்க்கப்பட்ட நாள் 2022-08-06
  3. "20 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய உப்பாறு அணை: பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-08-06.
  4. மலர், மாலை (2021-09-24). "தாராபுரம் உப்பாறு அணைப்பகுதிக்கு அரிய வகை கடல் பறவை வருகை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-06.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பாறு,_தாராபுரம்&oldid=3867473" இலிருந்து மீள்விக்கப்பட்டது