உப்பாறு, சிறுபத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உப்பாறு என்பது திருச்சி மாவட்டத்தில் ஓடும் ஒரு சிற்றாறாகும். துறையூர் பச்சமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பெய்யும் மழை நீர், பெரமங்கலம் ஏரி மற்றும் ஓமாந்தூர் ஏரி ஆகியவற்றிலிருந்து வரும் உபரி நீர் வாய்க்கால்கள் மூலம் இந்த ஆறாக ஓடுகிறது.[1] உப்பாறாக உருவாகி மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள எதுமலை, தேவிமங்கலம், இருங்களூர், லால்குடி பூவாளூர் வழியாக இந்த உப்பாறு நத்தம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.[2]

உப்பாறு அணை[தொகு]

மணச்சநல்லூர் வட்டம் சிறுபத்தூர் கிராமத்தில் இந்த உப்பாற்றில், 1986 ஆம் ஆண்டு அணை கட்டப்பட்டது.[3] தமிழ்நாடு நீர்வளத் துறையில் திருச்சி மண்டலக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையின் நீர்பிடிப்புப் பகுதி 92 சதுர கிலோமீட்டரும் அணையின் முழு நீர்மட்டம் 10.83 அடியும் முழுக் கொள்ளளவு 80 மில்லியன் கன அடியுமாகும். இந்த அணையின் மூலம் திருச்சி மாவட்டத்தில் சிறுபத்தூர், தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, ஆய்குடி, சமயபுரம் மற்றும் வலையூர் கிராமங்களில் சுமார் 1,785 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் நத்தமாங்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நிறைவடையும் நிலையில் சிறுபத்தூர் உப்பாறு அணை புனரமைப்புப் பணி". தமிழ் இந்து திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/211405-.html. பார்த்த நாள்: 9 November 2023. 
  2. "மழைநீர் வெள்ளம் வீணாவதை தடுக்க சூப்பர் திட்டம்!". சம்யம். https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/trichy-manachanallur-mla-kathiravan-started-the-work-of-digging-the-canal-in-uppar-river/articleshow/91228011.cms#google_vignette. பார்த்த நாள்: 9 November 2023. 
  3. "தமிழக நீர்த்தேக்கங்கள்" (PDF). நீர்வளத் துறை. பார்க்கப்பட்ட நாள் 9 November 2023.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பாறு,_சிறுபத்தூர்&oldid=3824306" இலிருந்து மீள்விக்கப்பட்டது