அந்த நாள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அந்த நாள் | |
|---|---|
| இயக்குனர் | சுந்தரம் பாலச்சந்தர் |
| தயாரிப்பாளர் | ஏ வி எம் |
| கதை | ஜாவர் சீதாராமன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் பண்டரிபாய் |
| இசையமைப்பு | ஏ வி எம் இசைக்குழு |
| ஒளிப்பதிவு | மாருதி ராவ் |
| படத்தொகுப்பு | எஸ். சூரியா |
| வெளியீடு | 1954 |
| கால நீளம் | 130 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். இத்திரைப்படம் அகிர குரோசவாவின் "ரசோமன்" என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது. ஜாவர் சீதாராமன் திரைக்கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.