ஜாதகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாதகம்
சுவரிதழ்
இயக்கம்ஆர். நாகேந்திர ராவ்
தயாரிப்புஆர். நாகேந்திர ராவ்
ஆர். என்.ஆர் பிக்சர்ஸ்
கதைகதை டி. எம். வி. பதி
இசைஆர். கோவர்தனம்
நடிப்புடி. கே. பாலச்சந்திரன்
ஆர். நாகேந்திர ராவ்
கே. சாரங்கபாணி
நாகைய்யா
சூர்ய கலா
கே. என். கமலம்
அங்கமுத்து
கே. ஆர். செல்லம்
விநியோகம்ஏவிஎம்[1]
வெளியீடுதிசம்பர் 25, 1953[2]
நீளம்12782 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜாதகம் என்பது 1953-ஆம் ஆண்டு ஆர். நாகேந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் டி. கே. பாலச்சந்திரன், சூரியகலா, ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது ஒரே நேரத்தில் கன்னடத்தில் ஜாதகா பலா என்ற பெயரிலும், தெலுங்கில் ஜாதகபலம் என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது.

கதைச் சுருக்கம்[தொகு]

திருமணமான மூன்றே மாதங்களுக்குள் மணப்பெண் இறந்து விடவாள் என்று சிலர் கதைகட்டி விடுகின்றனர். இந்த வதந்தியால் ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் விளையாடுகிறார்கள். இதனால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து அப்பெண் எப்படி வெளிவருகிறாள் என்பதே கதை.

நடிப்பு[தொகு]

படத்தின் பாட்டுப் புத்தகத்தில் காணப்பட்ட தகவல்களைக் கொண்டு உருவாக்கபட்ட பட்டியல்[3]

நடிகர்கள்
உதவிப் பாத்திர நடிகர்கள்

எஸ். ஜி. சுப்பையா, கல்யாணம், சி. வி. ராமச்சந்திரன்

நடிகைகள்
  • கண்ணம்மாளாக கே. ஆர். செல்லம்
  • வெட்டும்மாளாக கே. என். கமலம்
  • பொன்னம்மாளாக கமலா பாய்
  • லட்சுமியாக கே. சூர்யகலா
  • சரஸ்வதியாக குமாரி லட்சுமி
  • மீனாவாக கே. எஸ். அங்கமுத்து
நடனம்

தயாரிப்பு[தொகு]

இப்படம் ஒரே நேரத்தில் கன்னடத்தில் ஜாதகா பலா என்றும் தெலுங்கில் ஜதகபலம் என்றும் உருவாக்கப்பட்டது.[4] படத்தை ஆர். நாகேந்திர ராவ். தயாரித்து இயக்கினார். திரைக்கதை, உரையாடலை டி. எம். வி. பதி எழுதினார். யூசுப் முல்ஜி ஒளிப்பதிவு செய்ய, எஸ். சூர்யா படத்தொகுப்பு செய்தார். கலை இயக்கத்தை ஏ. பாலு மேற்கொண்டார். வழுவூர் பி. இராமையா பிள்ளை மற்றும் ஜெய்சங்கர் நடனத்தை அமைத்தனர். படச்சுருள்கள் மேம்பாடு ஏவிஎம் ஆய்வகத்தில் செய்யயபட்டது.[2]

பாடல்[தொகு]

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கான வரிகளை டி. கே. சுந்தர வாத்தியார் எழுதினார், ஆர். கோவர்த்தனம் இசையமைத்துள்ளார். சிந்தனை என் செல்வமே பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகராக பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமானார்.[5][4]

வ.எண் பாடல் பாடகர்/கள் காலம் (நி:நொ)
1 "எளியோர் செய்யும் இழிவான தொழிலை" எம். எஸ். ராஜேஸ்வரி, பி. சுசீலா
2 "மாடுகள் மேய்த்திடும் பையன்" எம். எஸ். ராஜேஸ்வரி 03:05
3 "மனதில் புதுவித இன்பம் காணுதே" 02:52
4 "குலவும் யாழிசையே கண்ணன் குழலிசை ஆவாயோ" 03:05
5 "சிந்தனை என் செல்வமே" பி. பி. ஸ்ரீனிவாஸ் 03:21
6 மூட நம்பிக்கையாலே பல கேடு விளையும் மனிதா" 02:53
7 "வேலன் வருவரோடி" எம். எல். வசந்தகுமாரி 04:58
8 "ஆண்டவன் நமக்கு அழிக்கிற" ஜி. கே. வெங்கடேஷ், ஏ. ஜி. ரத்னமாலா 02:56

மேற்கோள்கள்[தொகு]

  1. "Movies from AVM Productions". ஏவிஎம். Archived from the original on 20 April 2019. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017.
  2. 2.0 2.1 "1953 – ஜாதகம் – ஆர்.என்.ஆர். பிக்சர்ஸ் (த-தெ-க)" [1953 – Jatakam – R. N. R. Pictures (ta-te-ka)]. Lakshman Sruthi. Archived from the original on 23 September 2017. பார்க்கப்பட்ட நாள் 22 June 2017.
  3. (in ta) ஜாதகம் (பாட்டுப் புத்தகம்). R. N. R. Pictures. 1953. https://archive.org/download/sok.Jathagam_R.NagendraRao_1953/130.%20Jathagam_R.NagendraRao_1953.pdf. பார்த்த நாள்: 2022-07-18. 
  4. 4.0 4.1 Narasimham, M. L. (3 October 1997). "Golden voice of a glorious era". தி இந்து: pp. 27 இம் மூலத்தில் இருந்து 1 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220601110728/https://kommu.tripod.com/articles/pbs.html. 
  5. Neelamegam, G (2014) (in ta). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 64. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாதகம்_(திரைப்படம்)&oldid=3853840" இலிருந்து மீள்விக்கப்பட்டது