நெஞ்சில் ஓர் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
இயக்குனர் ஸ்ரீதர்
தயாரிப்பாளர் ஸ்ரீதர்
கதை ஸ்ரீதர்
'சித்ராலயா' கோபு[1]
நடிப்பு முத்துராமன்
கல்யாண்குமார்
தேவிகா
குட்டி பத்மினி
இசையமைப்பு விஸ்வநாதன், ராமமூர்த்தி
ஒளிப்பதிவு வின்செண்ட்
கலையகம் சித்ராலயா பிக்சர்ஸ்
வெளியீடு 1962
கால நீளம் 152 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்

நெஞ்சில் ஓர் ஆலயம் 1962-ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெற்றித்திரைப்படமாகும். இதில் முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமான குட்டி பத்மினிக்கு மிகுந்த புகழை ஈட்டித்தந்த படமுமாகும் இது.

கதைக்கரு[தொகு]

காதலர்களான் கல்யாண் குமாரும் தேவிகாவும் விதிவசத்தால் பிரிந்து, தேவிகா தான் மணந்து கொண்ட முத்துராமனின் புற்று நோயைக் குணப்படுத்த மருத்துவரிடம் செல்கையில், அவர் முன்னாள் காதலர் கல்யாண் குமாராகவே இருக்கக்கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் கொள்வதில் துவங்கும் இத்திரைபடம், பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய பல பெரும் நற்குணங்களைச் சிறப்புற எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

அந்நாட்களில் மிகவும் பேசப்பட்ட பரிசோதனை முயற்சியாக, திரைப்படம் முழுவதுமே ஒரு மருத்துவ மனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இது பாடல்கள், காட்சியமைப்புகள், கோணங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த அளவில் பாராட்டுப் பெற்றது.கல்யாணப் பரிசு திரைப்படத்தை அடுத்து முக்கோணக் காதல் கதை இயக்குனர் என்ற பெயரை ஸ்ரீதருக்கு இது நிலை நாட்டியது.

இத்திரைப்படத்திற்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

நடிப்பு[தொகு]

பாடல்கள்[தொகு]

நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடல்கள் நெஞ்சில் ஓர் ஆலயம் :விஸ்வநாதன், ராமமூர்த்தி
இசைப் பாணி திரைப்பட பாடல்கள்
மொழி தமிழ்
இசைத் தயாரிப்பாளர் விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார், விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.

பாடல்கள்[4]
எண் தலைப்பு பாடியவர்(கள்) நீளம்
1. "எங்கிருந்தாலும் வாழ்க"   ஏ. எல். ராகவன் 03:16
2. "என்ன நினைத்து என்னை"   பி. சுசீலா 03:30
3. "முத்தான முத்தல்லவோ"   பி. சுசீலா 03:35
4. "நினைப்பதெல்லாம்"   பி. பி. ஸ்ரீநிவாஸ் 03:28
5. "ஒருவர் வாழும் ஆலயம்"   எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் 03:43
6. "சொன்னது நீதானா"   பி. சுசீலா 03:35

மறுவாக்கம்[தொகு]

ராஜேந்திர குமார், ராஜ்குமார், மீனாகுமாரி ஆகியோரின் நடிப்பில் தில் ஏக் மந்திர் (1963) என்னும் பெயரில் இயக்குனர் ஸ்ரீதர் இந்தியில் இயக்கினார்.[5] குட்டி பத்மினி ஹிந்தி மறுவாக்கத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படம் மானசி மந்திரம் (1966) என்னும் பெயரில் தெலுங்கிலும் வெளிவந்தது. கன்னடத்தில் குங்கும ரக்சி என்னும் பெயரில் வெளியானது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Malathi Rangarajan (20 February 2009). "Saga of success". The Hindu. http://hindu.com/thehindu/fr/2009/02/20/stories/2009022050710400.htm. பார்த்த நாள்: 11 April 2014. 
  2. Malathi Rangarajan (8 October 2010). "A virtuoso recalls". The Hindu. http://www.hindu.com/fr/2010/10/08/stories/2010100850460100.htm. பார்த்த நாள்: 10 April 2014. 
  3. M.L. Narasimham (20 October 2000). "Unforgettable screen mother". The Hindu. http://www.hindu.com/2000/10/20/stories/09200226.htm. பார்த்த நாள்: 10 April 2014. 
  4. "Nenjil Oru Aalayam — Tracklist". raaga.com.
  5. Deepak Mahaan (29 January 2010). "Blast from the Past: Dil Ek Mandir (1963)". The Hindu. http://www.hindu.com/fr/2010/01/29/stories/2010012950180400.htm. பார்த்த நாள்: 10 April 2014. 

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சில்_ஓர்_ஆலயம்&oldid=1709096" இருந்து மீள்விக்கப்பட்டது