ஜாவர் சீதாராமன்
ஜாவர் சீதாராமன் (இறப்பு: 1971) தமிழ்ப் புதின எழுத்தாளரும், திரைப்படக் கதை, வசன எழுத்தாளரும், நடிகரும் ஆவார்.
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட சீதாராமனின் தந்தை நடேச ஐயர் பிரபல வழக்குரைஞராக இருந்தவர். சீதாராமனும் சட்டம் படித்து எம்.ஏ., பி.எல்., பட்டமும் பெற்றார். ஆனாலும் அவர் அத்துறைக்குச் செல்லாமல் திரைப்படவுலகில் நுழைந்தார்.
திரைப்படத் துறையில் [தொகு]
1947 ஆம் ஆண்டு வெளிவந்த மிஸ் மாலினி என்னும் படத்தில் அறிமுகமானார். கே. ராம்நாத் இயக்கிய ஏழை படும் பாடு திரைப்படத்தில் "ஜாவர்" என்ற முரட்டுக் காவல்துறை அதிகாரி வேடத்தில் சீதாராமன் நடித்தார். அன்றில் இருந்து அவர் "ஜாவர்' சீதாராமன் எனப் பிரபலமானார்.
ஏவிஎம் தயாரித்த அந்த நாள் படத்தின் திரைக்கதை-வசனத்தை எழுதியதோடு, துப்பறியும் காவல்துறை அதிகாரியாக ஜாவர் சீதாராமன் நடித்தார். தொடர்ந்து ஏவிஎம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா, குழந்தையும் தெய்வமும், ராமு முதலிய படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். இவை பெரும் வெற்றியும் பெற்றன.
வீனஸ் பிக்சர்சுக்காக "பிராஸ் பாட்டில்" என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற கற்பனைக் கதையை உருவாக்கினார். படம் வசூலில் வரலாறு படைத்தது.
எழுத்தாளராக [தொகு]
பிரபல வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதினார். குமுதத்தில் அவர் எழுதிய "மின்னல் மழை மோகினி', "உடல் பொருள் ஆனந்தி', "பணம் பெண் பாசம்', "நானே நான்" ஆகிய தொடர்கதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
உசாத்துணை [தொகு]
- ஜனரஞ்சக எழுத்தாளர்' ஜாவர் சீதாராமன், ஆர். கனகராஜ், தினமணி, சனவரி 22, 2012