முதலைப் பேரினம்
முதலைப் பேரினம் புதைப்படிவ காலம்:Late Oligocene - recent, | |
---|---|
குரோகோடைலசு பலஸ்ட்ரிசு சதுப்புநில முதலை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முதலை
|
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | {{{1}}}
Laurenti, 1768
|
சிற்றினங்கள் | |
உரையினை காண்க | |
குரோகோடைலசு பேரினத்தின் உலகம் முழுவதுமான பரம்பல் |
முதலைப் பேரினம் (Crocodylus) என்பது முதலைக் குடும்பத்தில் உண்மையான முதலைகளை உள்ளடக்கிய பேரினம் ஆகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]இந்தப் பேரினத்தின் அறிவியல் பெயர் ஜோசப்சு நிக்கோலசு லாரெண்டியால் 1768-ல் முன்மொழியப்பட்டது.[1] இப்பேரினத்தில் 14 வாழக்கூடிய சிற்றினங்களும் 5 அழிந்து போன சிற்றினங்களும் உள்ளன. சில மறுவரையறை செய்யப்படாத அழிந்து போன சிற்றினங்களும் இப்பேரினத்தில் கீழ் உள்ளன.[2]
வாழும் சிற்றினங்கள்
[தொகு]படம் | அறிவியல் பெயர் | பொது பெயர் | பரவல் |
---|---|---|---|
குரோகோடைலசு அகுடசு | அமெரிக்க முதலை | தெற்கு புளோரிடா மற்றும் வடக்கு மெக்ஸிகோவின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடற்கரைகள் முதல் வட அமெரிக்கா வரை தெற்கே பெரு மற்றும் வெனிசுலா, கியூபா, ஜமைக்கா, ஹிஸ்பானியோலா மற்றும் கிராண்ட் கேமன். | |
கூரோகோடைலசு ஹாலி [3] | ஹால் முதலை | தெற்கு நியூ கினியா | |
குரோகோடைலசு இன்டர்மீடியசு | ஓரினோக்கோ முதலை | கொலம்பியா மற்றும் வெனிசுலா | |
குரோகோடைலசு ஜான்ஸ்டோனி | நன்னீர் முதலை | ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகள் | |
குரோகோடைலசு மைண்டோரென்சிசு | பிலிப்பீன் முதலை | லுசோன் மழைக்காடுகளுக்குள் வடக்கு சியரா மாட்ரே இயற்கை பூங்கா, சான் மரியானோ, இசபெலா, பாபுயன் தீவுகளில் டலுபிரி தீவு, லூசோனில் உள்ள அப்ரா (மாகாணம்) மற்றும் லிகவாசன் சதுப்பு நிலம், தெற்கு கோட்டாபாடோவில் உள்ள செபு ஏரி, புக்கிட்னானில் புலாங்கி நதி, மற்றும் ஒருவேளை அகுசன் மார்ஷில் மிண்டானோவில் உள்ள வனவிலங்கு சரணாலயம் | |
குரோகோடைலசு மோர்லெட்டி | மோர்லெட்டின் முதலை அல்லது மெக்சிகன் முதலை | மெக்ஸிகோ, பெலிஸ் மற்றும் குவாத்தமாலா | |
குரோகோடைலசு நீலோடிகசு | நைல் முதலை அல்லது ஆப்பிரிக்க முதலை, (மடகாசுகரில் காணப்படும் கிளையினங்கள், கு. நீ. மடகாசுகேரியன்சிசு, சில நேரங்களில் கருப்பு முதலை என்று அழைக்கப்படுகிறது) | இஸ்ரேல் மற்றும் சிரியா (வரலாற்று ரீதியாக), சோமாலியா, எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, எகிப்து, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈக்குவடோரியல் கினியா, தான்சானியா, ருவாண்டா, புருண்டி, ஜாம்பியா, ஜிம்பாப்வே, காபோன், அங்கோலா, தென்னாப்பிரிக்கா, மலாவி, மொசாம்பிக், சூடான், தெற்கு சூடான், போட்ஸ்வானா மற்றும் கேமரூன் | |
குரோகோடைலசு நோவாகுனியே | நியூகினி முதலை | வடக்கு நியூ கினியா | |
குரோகோடைலசு பலஸ்ட்ரிசு | சதுப்புநில முதலை, மக்கர் முதலை அல்லது இந்திய முதலை | தெற்கு ஈரான், தெற்கு பாக்கித்தான், தெற்கு நேபாளம், இந்தியா, இலங்கை | |
குரோகோடைலசு போரோசசு | உவர்நீர் முதலை | கிழக்கு இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆத்திரேலியா | |
குரோகோடைலசு ரோம்பிபர் | கியூபா முதலை | கியூபா | |
குரோகோடைலசு சியாமென்சிசு | சியாமி முதலை | இந்தோனேசியா (போர்னியோ மற்றும் சாவகம்), புருனே, கிழக்கு மலேசியா, லாவோஸ், கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம். | |
குரோகோடைலசு சூச்சசு | மேற்கு ஆப்பிரிக்க முதலை அல்லது பாலைவன முதலை | மவுரித்தேனியா, பெனின், லைபீரியா, நைஜீரியா, நைஜர், கேமரூன், சாட், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, எக்குவடோரியல் கினி, செனகல், மாலி, கினியா, காம்பியா, புர்கினா பாசோ, கானா, காபோன், டோகோ, ஐவரி கோஸ்ட் மற்றும் காங்கோ குடியரசு | |
குரோகோடைலசு ரானினசு (குரோகோடைலசு போரோசசின் ஒத்ததாகக் கருதப்படுகிறது; இதன் நிலை தெளிவாக இல்லை. [4] ) | போர்னியோ முதலை | போர்னியோ |
புதைபடிவங்கள்
[தொகு]குரோகோடைலசு பேரினம் ஐந்து அழிந்துபோன சிற்றினங்களையும் உள்ளடக்கியது:[2]
- † குரோகோடைலசு ஆந்த்ரோபோபாகசு என்பது தன்சானியாவின் பிலியோ-பிலிசிடோசீன்லிருந்து அழிந்துபோன முதலை
- † குரோகோடைலசு சேசியா என்பது கென்யாவின் மியோசீனின் பிற்பகுதியில் அழிந்துபோன முதலை.
- † குரோகோடைலசு பால்கோனென்சிசு என்பது வெனிசுவேலாவின் ஆரம்பகால பிலியோசீனிலிருந்து அழிந்துபோன முதலை ஆகும்.
- † குரோகோடைலசு பேலீண்டிகசு என்பது மயோசீன் முதல் தெற்கு ஆசியாவின் பிலிசிடோசீன் வரை அழிந்துபோன ஒரு முதலை ஆகும்.
- † குரோகோடைலசு தோர்ப்ஜர்னார்சோனி கென்யாவின் பிளியோ -பிலிசிடோசீனில் அழிந்துபோன முதலை.
பரிணாமம்
[தொகு]முதலை ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்கலாம் என்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவை நோக்கி வெளியில் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.[5] இருப்பினும் ஆத்திரேலியா/ஆசியா அதன் பூர்வீகமாகவும் கருதப்படுகிறது.[6] 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஒலிகோசீன்/மியோசீன் காலத்தில் மடகாசுகரின் அழிந்துபோன வோயேயிலிருந்து குரோகோடைலசு பேரினம் பிரிந்து செல்வதைச் சான்றுகள் ஆதரிக்கின்றன.[5]
இன வளர்ச்சி வரலாறு
[தொகு]2018 ஆண்டில் லீ மற்றும் யேட்ஸ் ஒரே நேரத்தில் உருவ, மூலக்கூறு (டி.என்.ஏ வரன்முறையிடல்), மற்றும் பாறைப்படிவியல் (தொல்லுயிர் எச்சம் வயது) தரவுக்குள் குரோகோடிலிடே குடும்பத்திற்குள்ளான உறவுகளை நிறுவுகிறது.[7] 2021-ல், ஹெக்கலா மற்றும் பலர். அழிந்துபோன வோயில்லிருந்து டி.என்.ஏ.வைப் பிரித்தெடுக்கும் பேலியோஜெனோமிக்சு முறையினைப் பயன்படுத்தி , குரோகோடிலிடேயின் துணைக் குடும்பங்களான க்ரோகோடைலினே மற்றும் ஆசுடியோலேமினே உட்படப் பிற உறவுகளைச் சிறப்பாக நிறுவ முடிந்தது.[5]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Laurenti, J. N. (1768). "XV. Crocodylus". Specimen Medicum, Exhibens Synopsin Reptilium Emendatam cum Experimentis circa Venena [Medical Treatise, Exhibiting an Emended Synopsis of Reptiles, with Experiments Concerning Venoms and Antidotes for Austrian Reptiles]. Viennae: Joan. Thomae. pp. 53–55.
- ↑ 2.0 2.1 Brochu, C. A.; Storrs, G. W. (2012). "A giant crocodile from the Plio-Pleistocene of Kenya, the phylogenetic relationships of Neogene African crocodylines, and the antiquity of Crocodylus in Africa". Journal of Vertebrate Paleontology 32 (3): 587. doi:10.1080/02724634.2012.652324.
- ↑ Murray, Christopher M.; Russo, Peter; Zorrilla, Alexander; McMahan, Caleb D. (2019). "Divergent Morphology among Populations of the New Guinea Crocodile, Crocodylus novaeguineae (Schmidt, 1928) Diagnosis of An Independent Lineage and Description of A New Species.". Copeia 107 (3): 517–523. doi:10.1643/CG-19-240.
- ↑ "Species | the Reptile Database".
- ↑ 5.0 5.1 5.2 Hekkala, E.; Gatesy, J.; Narechania, A.; Meredith, R.; Russello, M.; Aardema, M. L.; Jensen, E.; Montanari, S. et al. (2021-04-27). "Paleogenomics illuminates the evolutionary history of the extinct Holocene "horned" crocodile of Madagascar, Voay robustus" (in en). Communications Biology 4 (1): 505. doi:10.1038/s42003-021-02017-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:2399-3642. பப்மெட்:33907305.
- ↑ Oaks, J.R. (2011). "A time-calibrated species tree of Crocodylia reveals a recent radiation of the true crocodiles". Evolution 65 (11): 3285–3297. doi:10.1111/j.1558-5646.2011.01373.x. பப்மெட்:22023592. https://archive.org/details/sim_evolution_2011-11_65_11/page/3285.
- ↑ Michael S. Y. Lee; Adam M. Yates (27 June 2018). "Tip-dating and homoplasy: reconciling the shallow molecular divergences of modern gharials with their long fossil". Proceedings of the Royal Society B 285 (1881). doi:10.1098/rspb.2018.1071. பப்மெட்:30051855.