மலேசிய முன்னேற்றக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய முன்னேற்றக் கட்சி
Malaysian Advancement Party
Parti Kemajuan Malaysia
馬來西亞進步黨
சுருக்கக்குறிMAP
தலைவர்வேதமூர்த்தி பொன்னுசாமி
(Waytha Moorthy Ponnusamy)
நிறுவனர்வேதமூர்த்தி பொன்னுசாமி
தொடக்கம்28 மே 2019
முன்னர்இந்து உரிமைகள் போராட்டக் குழு (HINDRAF)
கொள்கைமலேசிய இந்தியர்களின் நலன்கள்
சமச்சீர் கொள்கை
மனிதநேயம்
தேசியக் கூட்டணிகூட்டணி:
பாக்காத்தான் (2019-2022)
பாரிசான் (2022-இல் இருந்து)
நிறங்கள்மஞ்சள், வெள்ளை, சிவப்பு, ஊதா
மேலவை (மலேசியா):
0 / 70
மக்களவை (மலேசியா):
0 / 222
மாநில சட்டமன்றங்கள்:
0 / 607
கட்சிக்கொடி
இணையதளம்
www.malaysianadvancementparty.org

மலேசிய முன்னேற்றக் கட்சி (ஆங்கிலம்: Malaysian Advancement Party (MAP); மலாய்: Parti Kemajuan Malaysia; சீனம்: 馬來西亞進步黨; சாவி: ڤرتي كماجوان مليسيا) என்பது மலேசியாவின் இந்தியர்களை மையமாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியாகும். 2019 மே 28-ஆம் தேதி இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது.[1]

மலேசிய இந்தியச் சமூகத்தின் அரசியல், பொருளியல், கல்வி, பண்பாடு, சமயம் மற்றும் சமூகம் சார்ந்த நலன்களைப் பேணிக் காப்பது இந்தக் கட்சியின் தலையாய நோக்கம் என அறியப்படுகிறது.[2]

பாக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் மலேசிய இந்தியர்களின் நம்பிக்கையும் வாய்ப்பும் புத்துயிர் பெற்றுள்ள நிலையில்; இந்தக் கட்சி அவர்களைச் சரியான முறையில் பிரதிநிதிக்கும் என்பதை உறுதி செய்யும் என்று அந்தக் கட்சியின் தலைவர் பொன்.வேதமூர்த்தி (Waytha Moorthy Ponnusamy) கூறியுள்ளார்.[3]

பொது[தொகு]

மலேசியப் பிரதமர் துறையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வுக்குப் பொறுப்பான முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி என்பவரால் மலேசிய முன்னேற்றக் கட்சி நிறுவப்பட்டது. இவர் இந்து உரிமைகள் போராட்டக் குழுவின் (Hindu Rights Action Force) (HINDRAF) தலைவர் ஆகும்.[4]

2018 செப்டம்பர் மாதம், இந்தக் கட்சி பதிவு செய்யப் படுவதற்காக, மலேசியச் சங்கங்களின் பதிவு அதிகாரியிடம் (Registrar of Societies) அதன் தற்காலிகக் குழுவால் (Pro-tem Committee) சமர்ப்பிக்கப்பட்டது. 2019 சூலை 16-ஆம் தேதி, மலேசியச் சங்கங்களின் பதிவு அதிகாரியால், அந்தக் கட்சி அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.[5]

துன் மகாதீருக்கு ஆதரவு[தொகு]

புதிய அரசியல் கட்சியை உருவாக்கியதன் காரணமாக இண்ட்ராப் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் பொன்.வேதமூர்த்தி அறிவித்தார். மலேசிய முன்னேற்றக் கட்சியில் தலைமைத்துவத்தை மையப்படுத்த விருபுவதாகவும் அவர் அறிவித்தார்.[6][7][8]

பொன்.வேதமூர்த்தி தலைமையிலான மலேசிய முன்னேற்றக் கட்சியும்; இண்ட்ராப் இயக்கமும்; 2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் துன் மகாதீர் பின் முகமது கூட்டணியில் இணைந்து பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டன.

வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவி[தொகு]

மலேசிய முன்னேற்றக் கட்சி அதிகாரப்பூர்வ உறுப்பியக் கட்சியாகத் தேர்தல் கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்படா விட்டாலும், 2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் துன் மகாதீருக்கு முழுமையான ஆதரவை வழங்கினர்.

அத்துடன் மலேசிய முன்னேற்றக் கட்சிக்குத் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்றாலும் பாக்காத்தான் அரப்பான் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரங்களையும் வேதமூர்த்தி குழுவினர் நாடு முழுக்க மேற்கொண்டனர்.

2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் முடிந்து பிரதமரான மகாதீர் பின் முகமது யாரும் எதிர்பாராத வகையில் பொன்.வேதமூர்த்திக்கு அமைச்சர் பதவியை வழங்கினார்.

இண்ட்ராப்[தொகு]

இந்து உரிமைகள் போராட்டக் குழு (Hindu Rights Action Force) அல்லது இண்ட்ராப் (HINDRAF) மலேசியாவில் இயங்கி வரும் ஓர் இந்து உரிமைகள் போராட்டக் குழு ஆகும். இதன் தலையாயச் சுலோகம் "மக்கள் சக்தி".

மலேசியாவின் முப்பது அரசு சார்பற்ற இந்து அமைப்புகளின் கூட்டணியாக இண்ட்ராப் விளங்குகிறது. மலேசிய இந்து மக்களின் உரிமைகள், கலாசார பாரம்பரியங்கள் காக்கப்பட வேண்டும் என்பது அதன் தலையாய கோட்பாடு ஆகும்[9].

மலேசியாவில் இந்து சமயம்[தொகு]

மலேசியாவில் வாழும் இந்து சமயத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான கொள்கையில் மலேசிய அரசு செயல்பட்டு வருகிறது என்பது இண்ட்ராப் குழுவின் குற்றச்சாட்டாக இருந்தது. மலேசிய இந்தியர்களும் இந்து சமயமும் மலேசியாவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இண்ட்ராப் வலியுறுத்தி வருகிறது. அதன் காரணமாக தேசிய ரீதியில் இண்ட்ராப் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.[10]

மலேசிய அரசால் இந்துக் கோயில் அழிப்புகளை நிறுத்தவேண்டும்; ஐக்கிய இராச்சியம் மற்றும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை கண்டனம் செய்யவேண்டும் என்பது இண்ட்ராப்பின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Waytha Moorthy launches new party to protect and promote interests of Indian community". The Star Online. 8 September 2018. https://www.thestar.com.my/news/nation/2018/09/08/waytha-moorthy-launches-indian-party/. பார்த்த நாள்: 27 May 2019. 
  2. "Hindraf tubuh Malaysia Advancement Party wakili kaum India". Bernama (Free Malaysia Today). 10 September 2018. https://www.freemalaysiatoday.com/category/bahasa/2018/09/10/hindraf-tubuh-malaysia-advancement-party-wakili-kaum-india/. பார்த்த நாள்: 27 May 2019. 
  3. "Waytha launches Malaysian Advancement Party for Indian interests". Malaysiakini. 16 July 2019. https://www.malaysiakini.com/news/483999. பார்த்த நாள்: 21 July 2019. 
  4. "Parti baharu untuk kaum India tunggu kelulusan RoS - Waytha Moorthy". Bernama (Utusan Malaysia). 8 September 2018. http://www.utusan.com.my/berita/politik/parti-baharu-untuk-kaum-india-tunggu-kelulusan-ros-waytha-moorthy-1.744174. பார்த்த நாள்: 27 May 2019. 
  5. Austin Camoens (16 July 2019). "New political party formed to address interests of Indian community". The Star Online. https://www.thestar.com.my/news/nation/2019/07/16/new-political-party-formed-to-address-interests-of-indian-community/. பார்த்த நாள்: 21 July 2019. 
  6. "Waytha Moorthy heads new Indian political party". The Star Online. 17 July 2019. https://www.thestar.com.my/news/nation/2019/07/17/waytha-moorthy-heads-new-indian-political-party/. பார்த்த நாள்: 21 July 2019. 
  7. Kasthuri Jeevendran (16 July 2019). "Waytha Moorthy tinggalkan Hindraf, tubuh parti baharu". Malaysia Gazette. https://malaysiagazette.com/blog/2019/07/16/waytha-moorthy-tinggalkan-hindraf-tubuh-parti-baharu/. பார்த்த நாள்: 21 July 2019. 
  8. "Waytha Moorthy letak jawatan Pengerusi Hindraf, tubuh parti untuk masyarakat India". Astro Awani. 16 July 2019. http://www.astroawani.com/berita-malaysia/waytha-moorthy-letak-jawatan-pengerusi-hindraf-tubuh-parti-untuk-masyarakat-india-212773. பார்த்த நாள்: 21 July 2019. 
  9. The Hindu Rights Action Force, a coalition of 30 Hindu-based NGOs, urged Prime Minister Abdullah Ahmad Badawi to halt what it called local councils’ ‘indiscriminate and unlawful’ demolition of Hindu temples.
  10. "Hindu rights group, complain that the government, a ruling coalition dominated by politicians from the ethnic Malay majority, has discriminated against ethnic Indians". பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]