உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய தேசிய பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 02°55′30″N 101°46′53″E / 2.92500°N 101.78139°E / 2.92500; 101.78139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய தேசிய பல்கலைக்கழகம்
National University of Malaysia
Universiti Kebangsaan Malaysia
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை
குறிக்கோளுரைஅறிவு, தரம், நல்லொழுக்கம்
(மலாய்: Ilmu, Mutu dan Budi)
(Knowledge, Quality and Virtue)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
(ஆய்வுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்18 மே 1970
வேந்தர்நெகிரி செம்பிலான் துவாங்கு முகிரிஸ்
மாணவர்கள்28,776 (2020)[1]
பட்ட மாணவர்கள்235,562 (2023) [1]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்256,982 (2022) [1]
அமைவிடம்
Lingkungan Ilmu, 43600 Bangi, Selangor, Malaysia
, , ,
02°55′30″N 101°46′53″E / 2.92500°N 101.78139°E / 2.92500; 101.78139
சேர்ப்புACU, ASAIHL, AUN, AUAP,[2] UAiTED
இணையதளம்www.ukm.my
Map
மலேசிய தேசிய பல்கலைக்கழகம் அமைவிடம்

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Kebangsaan Malaysia; ஆங்கிலம்:National University of Malaysia என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பண்டார் பாரு பாங்கி நகரில் உள்ள ஒரு முதன்மையான பொது ஆய்வு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். அதன் கல்வி மருத்துவமனையான மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவ மையம் (Universiti Kebangsaan Malaysia Medical Centre) (UKMMC) செராஸ் நகரிலும்; கிளை வளாகம் கோலாலம்பூர் மாநகரிலும் அமைந்துள்ளன.

இந்தப் பல்கலைக்கழகம், 1970-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதில் இருந்து, இதுவரையில் 170,500 இளங்கலை மாணவர்கள்; 90,105 முதுகலை மாணவர்களுக்கு உயர்க்கல்வி வழங்கியுள்ளது. இங்கு பயின்ற மாணவர்களில் 35 நாடுகளைச் சேர்ந்த .40,368 வெளிநாட்டு மாணவர்களும் அடங்குவர். பல்கலைக்கழகத்தின் பயிற்றுவிக்கும் மொழியாக ஆங்கில மொழிக்கு பதிலாக மலாய் மொழி பயன்படுத்தப்படுகிறது.[3]

பொது

[தொகு]

1970 மே 18-ஆம் தேதி, கோலாலம்பூரில் உள்ள பந்தாய் பாரு சாலையில், 192 இளங்கலை மாணவர்களுடன் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது. அப்போது அது அறிவியல், கலை மற்றும் இசுலாமிய ஆய்வுகள் ஆகிய மூன்று முக்கிய துறைகளைக் கொண்ட ஒரு தற்காலிக வளாகமாகும். அக்டோபர் 1977-ஆம் ஆண்டில், அதன் தற்போதைய பிரதான வளாகத்திற்கு மாற்றப்பட்டது. மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகம், 1096 எக்டேர் பரப்பளவில் பண்டார் பாரு பாங்கியில் உள்ளது.

மலேசிய தேசிய பல்கலைக்கழகம், உயிர் உடல்நலம் பேணும் இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. ஒரு வளாகம் ராஜா மூடா அப்துல் அசீஸ் சாலையில் உள்ள கோலாலம்பூர் வளாகம்; மற்றும் ஒரு வளாகம் செராஸ் நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ மையம் ஆகும். கோலாலம்பூர் வளாகத்தில் சுகாதார அறிவியல் துறைகள், மருந்தகம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவத் துறையின் பல மருத்துவப் பிரிவுகளும் உள்ளன. கோலாலம்பூர் வளாகம் 1974-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

ஆய்வு நிலையங்கள்

[தொகு]

செராஸ் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவத் துறை; மலேசிய தேசிய பல்கலைக்கழகக் கல்வி மருத்துவமனை; மற்றும் மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவ மூலக்கூறு உயிரியல் நிறுவனம் (Medical Molecular Biology Institute) ஆகியவை அடங்கும். செராஸ் வளாகம் 1997-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

இந்த வளாகங்களைத் தவிர, மலேசிய தேசிய பல்கலைக்கழகம் ஏழு ஆராய்ச்சி நிலையங்களையும் செயல்படுத்துகிறது. அவை:

  • தாசிக் சினி ஆராய்ச்சி நிலையம்
  • கடல் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிலையம்
  • லங்காவி கடல் ஆராய்ச்சி நிலையம்
  • பிரேசர் மலை ஆராய்ச்சி நிலையம்
  • தாவர உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்
  • மலேசிய தேசிய பல்கலைக்கழக உயிரியல் வளாகம்
  • உயிரியல் ஆய்வகம்
  • பல்கலைக்கழக நிரந்தர வனக் காப்பகம்

அக்டோபர் 2006-இல், 30 ஆண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையில், மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்திற்கு, மலேசிய ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்ற தகுதியை மலேசிய உயர்க் கல்வி அமைச்சு வழங்கியது. அத்துடன் இந்தப் பல்கலைக்கழகம் 2006-ஆம் ஆண்டில் மலேசியப் பிரதமரின் தர விருதையும் வென்றது.

ஆண்டு தரவரிசை மதிப்பீட்டாளர்
2005 185 உலக பல்கலைகழகங்களின் தரவரிசை
2006 185
2007 309
2008 250
2009 291
2010 263 உலக பல்கலைகழகங்களின் தரவரிசை
2011 279
2012 261
2012 N/A டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை
2014 =269 உலக பல்கலைகழகங்களின் தரவரிசை
2015 =259
2016 =312[4]
2017 =302[5]
2018 =230[5]
2019 =184[5]
2020 =160[5]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Universiti Kebangsaan Malaysia". www.ukm.my. 22 February 2022. பார்க்கப்பட்ட நாள் 1 March 2024.
  2. Association of Universities of Asia and the Pacific பரணிடப்பட்டது 9 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம் AUAP
  3. UKM, the National University of Malaysia, About Us பரணிடப்பட்டது 17 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம்
  4. "Universiti Kebangsaan Malaysia". Quacquarelli Symonds. Archived from the original on 30 November 2015. பார்க்கப்பட்ட நாள் 16 September 2015.
  5. 5.0 5.1 5.2 5.3 "Universiti Kebangsaan Malaysia". Quacquarelli Symonds. Archived from the original on 16 November 2017. பார்க்கப்பட்ட நாள் 16 October 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]