மலேசிய இருதய மையம்
மலேசிய இருதய மையம் | |
வகை | அரசு சார்ந்த நிபுணத்துவ மையம் |
---|---|
நிறுவுகை | 1 ஆகத்து 1984 |
தலைமையகம் | 145, துன் ரசாக் சாலை, 50400 கோலாலம்பூர், மலேசியா |
முதன்மை நபர்கள் | நூர் இசாம் அப்துல்லா, (தலைவர்) முகமது அசுகாரி யாக்கூப், (தலைமை நிர்வாக அதிகாரி) |
தொழில்துறை | சுகாதார அமைப்பு |
தாய் நிறுவனம் | மலேசிய நிதி அமைச்சு |
இணையத்தளம் | www |
மலேசிய இருதய மையம் (மலாய்:Institut Jantung Negara; ஆங்கிலம்:National Heart Institute) ('IJN) என்பது மலேசியா, கோலாலம்பூர், துன் ரசாக் சாலையில் உள்ள இதய அறுவை சிகிச்சை மையமாகும். இது கோலாலம்பூர் மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ளது. முன்பு இந்த மையம் கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்தது.[1]
இருதயம் தொடர்பான பல்வேறு நோய்களுக்கான தேசியப் பரிந்துரை மையமாக விளங்கும் இந்த நிபுணத்துவ மையம்; உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வரும் இருதய நோயாளிகளுக்கும்; நாளஞ்சார் அறுவை சிகிச்சைகள் செய்யும் நிபுணத்துவப் பணிகளில் ஈடுபட்டு உள்ளது.
இந்த மையம் நிறுவப்பட்டதில் இருந்து இதுவரையில், ஏறக்குறைய 5 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. அத்துடன் தென்கிழக்காசியப் பகுதியில் முன்னணி இருதய மையங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது.[2]
வரலாறு
[தொகு]மலேசிய இருதய மையம், முதன்முதலில் 1984-ஆம் ஆண்டில் இருதயநோய் நிபுணர்கள்; மற்றும் பொது மருத்துவர்கள் சிலரால் நிறுவப்பட்டது. கோலாலம்பூர் மருத்துவமனையின் பழைய இரத்த வங்கி அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. மேலும் தற்போதைய மலேசிய இருதய மையத்தின் சின்னம் அதே 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
பின்னர், மலேசிய இருதய மையம், தற்போதைய இடத்திற்கு 1992-இல் மாற்றப்பட்டது. இந்த மையம், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதயவியல் மற்றும் இதயக் குழலிய நோய்கள் தொடர்பான இருதய அறுவை சிகிச்சை சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது.[3]
2009-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த மலேசிய இருதய மையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இருதய அறுவை சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 432-ஆகவும் உயர்ந்தது. அந்த வகையில், இந்த வட்டாரத்தின் மிகப்பெரிய இருதய மையங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]* மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IJN was established on 1st August 1992 as a heart specialist institution committed to delivering advanced standards in cardiovascular and thoracic medicine for adult and pediatric heart patients". பார்க்கப்பட்ட நாள் 28 February 2024.
- ↑ "Since the foundation of the institute, IJN has treated over 5 million patients and gained recognition as one of the leading Cardiovascular and Thoracic Centre in the region". National Heart Institute. பார்க்கப்பட்ட நாள் 28 February 2024.
- ↑ "Cardiology Hospital Feature – Institut Jantung Negara (National Heart Institute)". Malaysia Healthcare Travel Council (MHTC). 7 November 2018. பார்க்கப்பட்ட நாள் 28 February 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் மலேசிய இருதய மையம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.