பஞ்சாபில் கல்வி
பஞ்சாப் நீண்டநெடிய கல்வி வரலாறு உடையதாகும்.
முதனிலை, உயர்நிலைக் கல்வி
[தொகு]இந்திய அரசு பதினான்கு அகவை வரையிலான முதனிலைக் கல்விக்குச் சிறந்த அக்கறை செலுத்துகிறது. இது தொடக்கநிலைக் கல்வி எனப்படுகிறது.[1] பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்வதைத் தடுக்க இந்திய அரசு குழந்தைகள் வேலைக்குச் செல்வதையே தடை செய்துள்ளது.[1] என்றாலும் சமூகச் சூழலாலும் பொருளியல் வேறுபாட்டாலும், இலவசக் கல்வியை நடைமுறைப்படுத்துவதும் குழந்தைகள் வேலைக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்துவதும் கடைபிடிப்பதற்கு அரிதாக உள்ளது.[1] அனைத்து அங்கீகரிக்கப்பட்ட துவக்கநிலைப் பள்ளிகளில் 80% அரசால் அல்லது அரசு சார்ந்து இயங்குகின்றன; இதன்மூலம் நாட்டில்கல்வி வழங்கும் மிகப்பெரும் அமைப்பாக அரசு விளங்குகின்றது.
அரசியல் பற்றுறுதி இல்லாமையாலும் வளக்குறைவாலும்,அக்க்கட்டமைப்பு இல்லாமை, மட்டன ஆசிரியர் பயிற்சி, உயர் மாணவர்- ஆசிரியர் விகிதம் உட்பட்ட பல பேரளவு குந்தகங்களைக் இக்கல்விமுறை கொண்டுள்ளது. இந்திய அரசு வெளியிட்ட 2011 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, 5,816,673 ஆசிரியர்கள் இந்தியாவில் தொடக்கநிலைப் பள்ளிகளில் அடிப்படைக் கல்வி கற்பிக்கின்றனர்.[2] மார்ச் 2012 வரை இந்தியாவில் 2,127,000 மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.[3] சிறுவருக்கு 6 முதல் 14 அகவை வரை, அதாவது எட்டாம் வகுப்பு வரை, இந்தியக் கல்வி உரிமைச் சட்டம் 2009 கீழ்[4] அனைவருக்கும் கட்டாயக் கல்வி இலவசமாகத் தரப்படல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.[1]
கல்வித் தரத்தை உயர்த்த அரசுதரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, 994 இல் மாவட்டகல்விப் புத்துயிர்ப்பு திட்டம் முதனிலைக் கல்வியைப் பரவலாக்க உருவாக்கிச் செயல்படுத்தப்பட்ட்து. இத்திட்ட்த்தின் வாயிலாக நடப்பில் உள்ள முதனிலைக் கல்வி சீர்திருத்தி புதுமைப்படுத்தப்பட்ட்து.[5] இத்திட்டம் 160000 புதிய பள்ளிகளையும் 84000 மாற்றுவழிப் பள்ளிகளையும் உருவாக்கி, தோராயமாக 3.5 மில்லியன் குழந்தைகளுக்குக் கல்விதர ஏற்பாடு செய்யப்பட்ட்து. இது பன்னாட்டவையின் யூனிசெஃப் (UNICEF) உதவியுடன் பல பன்னாட்டுக் கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.[5] கடந்த மூன்றாண்டுகளில் இதன்வழி சில மாநிலங்களில் 93–95% அளவுக்கு மொத்த உயர்சேர்க்கை விகிதம் எட்டப்பட்டுள்ளது.[5] இத்திட்ட்த்தின் கீழ் கணிசமான ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டதோடு பெண்குழந்தைகளும் பேரளவில் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.[5] கல்வியை அனைவருக்கும் பொதுவாக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கம் எனும் நடப்புத் திட்டம் உலகிலேயே மேற்கொள்ளபட்ட சிறந்த முனைவு ஆகும். இதில் சேர்க்கை கூடியுள்ளபோதிலும் கல்வித் தரம் தாழ்வாகவே உள்ளது.
உயர்நிலைப் பள்ளிக் கல்வி
[தொகு]தேசியக் கல்விக் கொள்கை, 1986 சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, அறிவியல்தொழில்நுட்பக் கல்வி, ஓகம் (யோகா) போன்ற மரபுக் கல்வி ஆகியவற்றை பள்ளி உயர்நிலைக் கல்வியில் புகுத்தியது.[6] 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி, உயர்நிலைக் கல்வி 14 முதல் 18 வரையிலான அகவையுள்ள 88.5 மில்லியன் சிறுவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்திய உயர்கல்வியின் முதன்மை வாய்ந்த கூறுபாடு என்னவென்றால் சமூகத்தின் வாய்ப்பற்ற மக்களுக்கு கல்வி வாய்ப்பை நல்குவதே எனலாம். தலைசிறந்த நிறுவங்களின் பேராசிரியர்களைக் கொண்டு தொழில்பயிற்சி வழங்கப்படுகிறது. இந்திய உயர்கல்வியின் மற்றுமொரு கூறுபாடு வாழ்க்கைக்காகமாணவ்ர் தேரும் தொழிலைப் புகட்டும் தொழிற்கல்விமுறையாகும்.[7] மிகப் புதிய மற்றுமொரு முயற்சி அனைவருக்கும் கல்வித் திட்டத்தை இடைநிலைக் கல்விக்கும் விரிவுபடுத்தி அனைவருக்கும் அரசு உயர்நிலைக் கல்வித் திட்டம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப் படுத்தியதாகும்.[8] முதனிலைக் கல்வியில் கவனம் குவித்து மாற்றுத் திறனாளிச் சிறுவருக்கான சிறப்பு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் 1974 இல் தொடங்கியது.[9] but which was converted into Inclusive Education at Secondary Stage[10] மற்றொரு குறிப்பிட்த் தக்க சிறப்புக் கல்வித் திட்டம் கேந்திரிய வித்யாலயா கல்வித் திட்டமாகும். இது நடுவண் அரசுப் பணியாளர்களுக்காக அவர்கள் நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் ஒரே பாடத் திட்டம் அமையும்படி உருவாக்கப்பட்ட்து. இதை அரசு 1965 இல் தொடங்கியது. இதில் அடங்கிய அனைத்து நிறுவன்ங்களும் ஒரே பாடத் திட்டத்தின்கீழ் சீரான கல்வியை நட்ய்வண் அரசுப் பணியாளர்கள் எங்கு இடமாற்றம் பெற்றாலும் நாடெங்கிலும் தந்தது.[9]
உயர்கல்வி
[தொகு]பஞ்சாப் பல உயர்கல்வி நிறுவன்ங்கள் அமைந்த மாநிலம் ஆகும். கலை, வாழ்வியல், அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம், கால்நடை மருத்துவம், வணிகம் என பல அறிவுப் புலங்களில் பட்டமும் மேற்பட்டமும் பயிற்றுவித்து உரிய பட்டங்கள் தரப்படுகின்றன. அனைத்து அறிவுப்புலங்களிலும் உயர்நிலை ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் உலகப் பெகழ் வாய்ந்த தாகும். இது பசுமைப்புரட்சிக்குப் பஞ்சாபில் 1960கள்-70கள் கால இடைவெளியில் பெரும்பங்கு ஆற்றியது.
பல்கலைக்கழகங்கள்
[தொகு]நடுவண் அரச
[தொகு]- பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகம், பதிண்டா
மாநில அரசு
[தொகு]- பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் (பஞ்சாப் மாநில அரசின் பல்கலைக்கழகம்[11])
- பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், பரித்கோட்
- குரு நானக் தேவ் பல்கலைக்கழகம், அம்ரித்சர்
- பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம், லூதியானா
- ஐ. கே. குஜரால் பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகம்,[12] ஜலந்தர்
- மகாராஜா ரஞ்சித் சிங் பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,[13][14] பதிண்டா
- பஞ்சாபி பல்கலைக்கழகம், பட்டியாலா
- குரு ரவிதாசு ஆயுர்வேதப் பல்கலைக்கழகம், ஹோஷியார்பூர்
- குரு அங்கத் தேவ் கால்நடை மருத்துவம், விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், லூதியானா
- ராஜீவ் காந்தி, தேசிய சட்டப் பல்கலைக்கழகம், பட்டியாலா
நிகர்நிலை
[தொகு]- சாந்த் உலோங்கோவால் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், உலோகோவால்(நிகர்நிலை)
- தாப்பர் பல்கலைக்கழகம், பாட்டியாலா(நிகர்நிலை)
தனியார்
[தொகு]பஞ்சாபில் தன்னாட்சிக் கல்லூரிகள்
[தொகு]பஞ்சாபில் பல கல்லூரிகள் பல்கலைக்கழக நல்கை ஆணையத்தால் தன்னாட்சி உயர்கல்வி நிறுவன்ங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- கால்சா கல்லூரி, அமிருதசரசு
- மாதா குருஜி கல்லூரி, பதேகுகார் சாகிப்
- S.G.G.S. கால்சா கல்லூரி, மகில்பூர் (ஓழ்சியார்பூர் மாவட்டம்)
- அமிர்தசர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி
- பியாந்த் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, குர்தாஸ்பூர்
- குரு நானக் தேவ் பொறியியல் கல்லூரி, லூதியானா[16]
பெயர்பெற்ற கல்லூரிகள் (தொழில்நுட்பம் /தொழில்முறை)
[தொகு]- அபீஜாய் மேலாண்மைத் தொழிநுட்ப வளாக நிறுவனம், ஜலந்தர், (பஞ்சாப்)[15]
- நிறுவனங்களின் பொதுக் குழுமம், இலைரு
- தேழ்சு பகத் நிறுவனங்களின் குழுமம், கோபிந்த்கார், மொகா, முக்த்சார் ( தேழ்சு பகத் பல்கலைக்கழகத்தின் கீழ்)
- இந்தியத் தொழில்நுட்பக் கழகம், உரோபார்
- இந்திய மேலாண்மை நிறுவனம், அமிர்தசர்[17]
- இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனம், மொகாலி
- முனைவர் பி ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், ஜலந்தர்
- மேலாண்மை மற்றும் வெளிப்படும் தொழினுட்பங்களுக்கான உலகளாவிய கழகம், அம்ரித்சர்
- மீநுண் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (INST), மொகாலி
- கியானி ஜெயில்சிங் பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகம் (அரசு பொறியியல் கல்லூரி) , பதிண்டா
- மலௌத் மேலாண்மை மற்றும் தொழிநுட்ப நிருவனம், மலௌத் ( பஞ்சாப் அரசு)
- பட்டா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, உலூதியானா
- மாள்வா செவிலியர் கல்லூரி
- பாபா பந்தா சிங் பொறியியல் கல்லூரி, பதேகுகார் சாகிப்
பெயர்பெற்ற மற்ற நிறுவனங்கள் (பொது)
[தொகு]- ஆரியபாட்டா குழு நிறுவனங்கள்,பர்னாலா[18]
- பிபிகே டிஏவி மகளிர் கல்லூரி, அமிர்தசர்
- பிசிஎம் கல்வியியல் கல்லூரி, உலூதியானா]
- பொறியியல், மேலாண்மைக் கல்லூரி கபுர்த்தாலா
- தேழ்சு பகத் குழு நிறுவன்ங்கள், கோபிந்த்கார், மொகா, முக்த்சார் ( தேழ்சு பகத் பல்கலைக்கழகத்தின் கீழ்)
- தோரகா கல்வியியல் கல்லூரி, தோரகா
- GHG கால்சா கல்வியியல் கல்லூரி, குருசார் சுதார்
- அரசு பிக்ரம் வணிகவியல் கல்லூரி, பாட்டியாலா
- அரசு கல்வியியல் கல்லூரி, பகுதி-20, சண்டிகார்
- குல்சார் குழு நிறுவனங்கள், கான்னா (பொறியியல் கல்லூரி)
- மாள்வா குழு நிறுவனங்கள்.
- கால்சா கல்லூரி, பாட்டியாலா
- கிங்சு குழு நிறுவனங்கள், பர்னாலா,பஞ்சாப்
- மாள்வா செவிலியர் கல்லூரி, கொத்காபுரா
- மகிந்த்ரா கல்லூரி, பாட்டியாலா
- PCTE குழு நிறுவனங்கள் (பஞ்சாப் தொழில்நுட்பக் கல்விக் கல்லூரி உட்பட), உலூதியானா
- பஞ்சாப் பொறியியல் கல்லூரி, சண்டிகார்
- பஞ்சாப் பல்கலைக்கழக வட்டார மையம், பதிண்டா
- SGGSகால்சா கல்லூரி பகுதி-26, சண்டிகார்
- மாநிலக் கல்வியியல் கல்லூரி, பாட்டியாலா
- சுவாமி சர்வானந்த் கிரி பஞ்சாப் பல்கலைக்கழக வட்டார வளாகம், ஓழ்சியாபூர்
மருத்துவக் கல்லூரிகள்
[தொகு]பஞ்சாபில் 2015 ஆம் ஆண்டளவில், 920 இளநிலை மருத்துவ,அறுவைஇடங்களும் 1,070 பல்மருத்துவ இடங்களும் இருந்தன.[19]
அரசு மருத்துவக் கல்லூரிகள்
[தொகு]- அரசு மருத்துவக் கல்லூரி, அமிர்தசர்
- குரு கோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரி, பாரித்கோட்
- அரசு மருத்துவக் கல்லூரி, பாட்டியாலா
தனியார் மருத்துவக் கல்லூரிகள்
[தொகு]- கியான் சாகர் மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும், பாட்டியாலா
- சிறி குரு ராம் தாசு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் , அமிர்தசர்
- பஞ்சாப் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜலந்தர்[20]
- கிறித்தவ மருத்துவக் கல்லூரி, உலூதியானா
- தயானந்த் மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும், உலூதியானா
- ஆதேழ்சு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பதிண்டா
- சிந்த்பூர்னி மருத்துவக் கல்லூரி, குருதாசுபூர்
- தேழ்சு பகத் மருத்துவ அறிவியல் பள்ளி, மாண்டி கோபிந்த்கார் தேழ்சு பகத் பல்கலைக்கழகம்
குறிப்பிடத் தக்க ஆளுமைகள்
[தொகு]- இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
- முன்னாள் இந்திய முதன்மை அமைச்சர், முனைவர் மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் பெரும்பிரித்தானியாவில் ஆக்சுஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பயின்றார்.
- பேராசிரியர் அர்கோபிந்த் க்ரோனா, புகழ்மிகு நோபல் பரிசாளர், உயிர்தொழில்நுட்பவியலாளர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
- சுழ்சுமா சுவராஜ், பா ஜ க தலைவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Blackwell, 93–94
- ↑ flashstatistics2009-10.pdf
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on April 17, 2012. பார்க்கப்பட்ட நாள் February 8, 2016.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2016-07-14.
- ↑ 5.0 5.1 5.2 5.3 India 2009: A Reference Annual (53rd edition), 215
- ↑ India 2009: A Reference Annual (53rd edition), 231
- ↑ Blackwell, 94–95
- ↑ Microsoft Word – Framework_Final_RMSA.doc பரணிடப்பட்டது 2009-10-07 at the வந்தவழி இயந்திரம். (PDF). Retrieved on 21 March 2011.
- ↑ 9.0 9.1 India 2009: A Reference Annual (53rd edition), 233
- ↑ Secondary Education பரணிடப்பட்டது 2009-07-22 at the வந்தவழி இயந்திரம். Education.nic.in. Retrieved on 21 March 2011.
- ↑ "Panjab University (PU) cannot be considered a centrally-funded university". http://timesofindia.indiatimes.com/city/chandigarh/PU-not-central-university-HC/articleshow/7631126.cms.
- ↑ "ਪੰਜਾਬ ਤਕਨੀਕੀ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਜਲੰਧਰ ਦਾ ਨਾਂਅ ਇੰਦਰ ਕੁਮਾਰ ਗੁਜਰਾਲ ਦੇ ਨਾਂਅ 'ਤੇ ਰੱਖਿਆ". http://beta.ajitjalandhar.com/news/20140723/1/627869.cms#627869.
- ↑ "state technical university will have academic control over the colleges in Bathinda, Barnala, Faridkot, Fatehgarh Sahib, Fazilka, Ferozepur, Mansa, Muktsar, Patiala and Sangrur districts.". http://www.tribuneindia.com/2014/20140723/punjab.htm#8.
- ↑ "Maharaja Ranjit Singh State Technical University on the campus of Giani Zail Singh College of Engineering and Technology in Bathinda" இம் மூலத்தில் இருந்து 2016-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160617064429/http://www.yespunjab.com/punjab/education/item/49330-punjab-to-have-another-technical-university-cabinet-approves-maharaja-ranjit-singh-state-technical-university.
- ↑ 15.0 15.1 Apeejay Institute of Management Technical Campus
- ↑ "Autonomous Colleges - University Grants Commission" (PDF).
- ↑ "IIM to be set up in Amritsar" இம் மூலத்தில் இருந்து 2016-01-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160127021925/http://indiatoday.intoday.in/education/story/budget-2014-15-iim-to-be-set-up-in-amritsar/1/370962.html.
- ↑ "http://www.aryabhattagroup.com".
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "Admissions for PMET 2015 on hold, High court issues notices". http://www.hindustantimes.com/. 10 September 2015. Archived from the original on 13 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); External link in
(help)|website=
- ↑ "Official MCI website". Archived from the original on 2013-06-07. பார்க்கப்பட்ட நாள் 2016-07-15.