கால்சா கல்லூரி, அமிருதசரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கால்சா கல்லூரி, அமிருதசரசு கல்லூரி, அமிருதசரசு
Khalsa College, Amritsar
KhalsaCollegeAmritsar-2.jpg
குறிக்கோளுரைஅகல் சகாய் (பஞ்சாபி) கடவுளின் அருள் (தமிழ்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
With God's Grace
வகைகல்லூரி
உருவாக்கம்1892
அமைவிடம்அமிருதசரசு, இந்திய பஞ்சாப்,  இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
இணையத்தளம்http://khalsacollegeamritsar.org

கால்சா கல்லூரி, அமிருதசரசு (Khalsa College, Amritsar) (பஞ்சாபி: ਖਾਲਸਾ ਕਾਲਜ khālsā kālaj) வரலாற்றுத்தன்மை நிறைந்த கல்வி நிறுவனமாக உள்ள இது, இந்திய பஞ்சாப் மாகாணத்தின் அமிருதசரசு நகரிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[1]

துவக்கம்[தொகு]

1892ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த கால்சா கல்லூரி, அமிருதசரசு-லாகூர் நெடுஞ்சாலையில் (கிராண்ட் டிரங்க் ரோடு) சுமார் 300 ஏக்கர் (1.2 கிமீ 2) பரப்பளவு கொண்ட வளாகமாக தாபிக்கப்பட்டுள்ளது. இந்திய பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்கள், சீக்கிய அறிஞர்கள் மற்றும் பஞ்சாபிகளுக்கு உயர்கல்வி வழங்குவது குறித்து நினைத்த "கல்சா கல்லூரி" கல்வி நிறுவனம், இந்தியாவில் பிரித்தானியாவின் ( 1858-1947) ஆட்சியின் போது கட்டப்பட்டது. அதன் பின்னர், சிறந்த சீக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மாறிய இக்கல்லூரி, அடுத்துள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழக வளாகம், கால்சா கல்லூரிக் கல்வியில் இணைந்துள்ளன.[2]

பிண்ணனி[தொகு]

அமிருதசரசுவில் ஒரு உயர் கல்வி தாபனத்தை ஏற்படுத்தும் நோக்கில், 'கால்சா திவான்' (Khalsa Diwan) தலைமையில் "சிங் சபா இயக்கத்திடம்" (Singh Sabha Movement) நிதிதிரட்ட ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சீக்கிய மகாராசாக்கள் மற்றும் சீக்கிய மக்களால் நிதி திரட்டியும் நிலக்கொடை பெற்றும் இந்த தனித்தன்மை வாய்ந்த பல்கலைக்கழகம் கட்டப்பட்டது.[3] இந்நிறுவனத்தை நிர்மாணிக்க, அமிருதசரசு மக்கள், லாகூர் மற்றும் பஞ்சாப்பின் பிற நகரங்களின் மக்கள், பணக்கார சீக்கியர்கள், மற்றும் மகாராசாக்களால் நிலங்களும், நிதிகளும் நன்கொடையாக அளிக்கப்பட்டு அமிருதசரசுவில் இந்த "கால்சா கல்லூரி" நிறுவப்பட்டது.[4] மேலும், பஞ்சாப்பின் அப்போதைய பிரபல கட்டிட வடிவமைப்பாளர் "ராம் சிங்" (சிற்பி) (Ram Singh (architect) என்பவரால், இங்கிலாந்தில் காணப்படும் பிரபல கட்டிடங்களின் சாயலில் "கால்சா கல்லூரி" உருவாக்கப்பட்டது. அதன் கட்டிடக்கலை அம்சங்கள், பிரிட்டிசார் கலவைவும், மற்றும் முகலாய சீக்கிய கட்டிட கலையும் கொண்டு உருவாக்கிய அதன் கட்டுமானப்பணி, 1911-12-ல் கட்டி முடிக்கப்பட்டது.[5]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Welcome to Khalsa College". www.khalsacollegeamritsar.org (ஆங்கிலம்) (© 2016-17). பார்த்த நாள் 2016-07-30.
  2. "Khalsa College Charitable Society - Governing Council". kcatbs.org (ஆங்கிலம்) (© 2016-2017). பார்த்த நாள் 2016-08-02.
  3. "Khalsa College, Amritsar and James Dworak". http://asseria.com (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-08-03.
  4. "KHALSA COLLEGE, AMRITSAR". heyschools.in (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 2016-08-04.
  5. "Khalsa College". makhanfish.com (ஆங்கிலம்) (1972). பார்த்த நாள் 2016-08-04.