அனைவருக்கும் கல்வி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan) இந்திய அரசால் 2000-ம் ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்தியா முழுவதுமாக எல்லா மாநிலங்களிலும் செயல்பட்டு கொண்டு வருகிறது. இந்த இயக்கம் 1-8 வகுப்பு பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்த தொடங்கப்பட்டதாகும். இந்தியாவில் தொடக்கக் கல்வியினை அனைத்து மாணவர்களும் பெறும் வண்ணம் செய்தல் இதன் நோக்கங்களில் ஒன்று. செயல்வழி கற்றல் (ABL) மற்றும் ALM முறைகள் இதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றளவில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் தாமாகவே பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இந்த முறையின் சிறப்பாகும். இத்திட்டத்தின் கல்வி முறைகளில் ஆசிரியரின் பங்களிப்பு சிறிதளவே உள்ளது. மாணவர்கள் மிகவும் ஆர்வமோடு தங்களுக்கு உரிய அட்டையை தாங்களே வரிசையாக பயின்று பயன்பெறுகின்றனர்.