கோலா திராங்கானு மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°20′N 103°10′E / 5.333°N 103.167°E / 5.333; 103.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலா திராங்கானு மாவட்டம்
Kuala Terengganu District
 திராங்கானு
Map
கோலா திராங்கானு மாவட்டம் is located in மலேசியா
கோலா திராங்கானு மாவட்டம்
      கோலா திராங்கானு மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°20′N 103°10′E / 5.333°N 103.167°E / 5.333; 103.167
நாடு மலேசியா
மாநிலம் திராங்கானு
மாவட்டம் கோலா திராங்கானு
தொகுதிகோலா திராங்கானு
உள்ளூராட்சிகோலா திராங்கானு மாநகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்210.21 km2 (81.16 sq mi)
மக்கள்தொகை (2017)[2]
 • மொத்தம்2,37,000
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு21xxx
மலேசியத் தொலைபேசி+6-09-6
மலேசியப் போக்குவரத்து எண்T

கோலா திராங்கானு மாவட்டம் (ஆங்கிலம்: Kuala Terengganu District; மலாய்: Daerah Kuala Terengganu; சீனம்: 瓜拉登嘉楼县; ஜாவி: كوالا ترڠڬانو‎) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் கோலா நெருசு மாவட்டம் (Kuala Nerus District), தெற்கில் மாராங் மாவட்டம் (Marang District); மற்றும் கிழக்கில் தென்சீனக் கடல் (South China Sea), திராங்கானு ஆறு (Terengganu River) ஆகியவை எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா திராங்கானு (Kuala Terengganu) ஆகும்.

கோலா திராங்கானு மாவட்டம் பரப்பளவில் மிகச் சிறியது. ஆனால், நகரப் பகுதியை உள்ளடக்கிய கோலா நெருசு மாவட்டத்தையும் சேர்த்து அதிக மக்கள் தொகையைக் கொண்டது. 2010-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 406,317.[4]

பொது[தொகு]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

கோலா திராங்கானு மாவட்டம் 20 முக்கிம்கள் (Mukim) எனும் துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • அத்தாசு தோல் (Atas Tol)
  • பண்டார் (Bandar)
  • பத்து பூரோக் (Batu Buruk)
  • பெலேரா (Belara)
  • புக்கிட் பெசார் (Bukit Besar)
  • சாபாங் தீகா (Cabang Tiga)
  • செனெரிங் (Cenering)
  • குளுகோர் கெடாய் (Gelugur Kedai
  • குளுகோர் ராஜா (Gelugur Raja)
  • கெப்போங் (Kepung)
  • கோலா ஈபாய் (Kuala Ibai)
  • குபாங் பாரிட் (Kubang Parit)
  • லோசோங் (Losong)
  • மனீர் (Manir
  • பாலோ (Paluh)
  • பெங்காடாங் பூலோ (Pengadang Buluh)
  • புலாவ் புலாவ் (Pulau-pulau)
  • ரெங்காசு (Rengas)
  • செராடா (Serada)
  • தோக் சமால் (Tok Jamal)

கோலா திராங்கானு[தொகு]

திராங்கானு மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமாகவும்; அரசத் தலைநகரமாகவும் கோலா திராங்கானு விளங்குகிறது. இந்த நகரத்திற்கு 2008 சனவரி 1-ஆம் தேதி கரையோர மரபுரிமை நகரம் எனும் பெயருடன் மாநகரத் தகுதி வழங்கப்பட்டது.

இந்த நகரம், திராங்கானு மாநிலத்தின் முக்கியமான அரசியல், பொருளாதார மையமாக இருப்பதுடன், மாநிலத்தின் பல சுற்றுலா மையங்களுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள கம்போங் சீனா, பசார் பெசார் கெடாய் பாயாங் (Pasar Besar Kedai Payang), திராங்கானு மாநில அருங்காட்சியகம் (Terengganu State Museum), பத்து பூரோக் கடற்கரை (Batu Buruk Beach) போன்றவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாக உள்ளன.

பண்பாட்டுக் கலப்புகள்[தொகு]

நனீனத்துவமும், வளர்ச்சியும் இந்த நகரத்தையும் விட்டுவைக்கவில்லை. எனினும், கோலா திராங்கானு நகரம் ஒரு துறைமுகமாக ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. அதனால் ஏற்பட்ட பிற பண்பாட்டுக் கலப்புடன், வலுவான மலாய்ச் செல்வாக்கை இன்னும் தக்கவைத்து வருகிறது.[5]

திராங்கானு பற்றிய குறிப்புக்கள் காணப்படும் மிகப் பழைய மூலங்களுள் சீன வரலாற்று மூலங்களும் அடங்கும். சுயி அரச மரபு (Sui dynasty) காலத்தைச் சேர்ந்த சீன எழுத்தாளர் ஒருவரின் குறிப்பு; தான்-தான் (Tan-Tan) என்னும் அரசு; சீனாவுக்குத் திறை செலுத்தியதாகக் கூறுகிறது.[6][7] இந்தத் தான்-தான் அரசு திராங்கானு நிலப்பகுதிக்கு உட்பட்ட ஓர் இடத்தில் அமைந்து இருந்ததாகவும் கூறப் படுகிறது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Draf RSNT 2050 (Kajian Semula)" (PDF). Government of Terengganu. 2019. Archived from the original (PDF) on 2022-05-01. பார்க்கப்பட்ட நாள் 2022-05-01.
  2. "Kuala Terengganu, City in Terengganu, Malaysia, Asia". datacommons.org. பார்க்கப்பட்ட நாள் 4 July 2023.
  3. "Pengenalan Daerah Dungun". pdtdungun.terengganu.gov.my. பார்க்கப்பட்ட நாள் 31 January 2021.
  4. "Total Population by Ethnic Group, Sub-district and State, Malaysia, 2010". Kuala Terengganu City Council. Archived from the original on 8 April 2015. பார்க்கப்பட்ட நாள் 22 March 2015.
  5. David Bowden (9 April 2013). "The East Coast of Malaysia, an Enchanting Encounter". Expat Go Malaysia. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.
  6. Nazarudin Zainun; Nasha Rodziadi Khaw; Tarmiji Masron; Zulkifli Jaafar (2009). "Hubungan Ufti Tan-Tan dan P'an-P'an dengan China pada Zaman Dinasti Sui dan Tang: Satu Analisis Ekonomi" (PDF) (in Malay). Beijing Foreign Studies University, University of Malaya. பார்க்கப்பட்ட நாள் 7 April 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. Paul Wheatley (1980). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula Before A.D. 1500. University Malaya. https://books.google.com/books?id=2T0NngEACAAJ. 
  8. George Cœdès (1968). The Indianized States of South-East Asia. University of Hawaii Press. பக். 52–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. https://books.google.com/books?id=iDyJBFTdiwoC&pg=PA52. 

வெளி இணைப்புகள்[தொகு]