விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு93

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சென்னையில் பயிற்சிப் பட்டறை நடத்த ஆர்வலர் தேவை[தொகு]

இரவிக்கு வந்துள்ள மடலொன்றில் சென்னை பி.எசு.அப்துர் இரகுமான் பல்கலைக்கழகத்தில் (http://bsauniv.ac.in/info.aspx?id=29) தமிழ் மன்றத்துடன் இணைந்து எதிர்வரும் அக்டோபர் 26, சனிக்கிழமையன்று அரைநாள் விக்கிப் பட்டறை நடத்த முடியுமா எனக் கேட்டுள்ளனர். இயலும் என்பவர்கள் முன்வர வேண்டும். -- சுந்தர் \பேச்சு 11:42, 21 அக்டோபர் 2013 (UTC) பி.கு. தற்போது இயன்றவரை விக்கிவிடுப்பில் இருக்க விரும்புவதால் இரவி எனக்கு அம்மடலைப் படியனுப்பினார்.

நான் இந்தியாவில் இருந்தால் பங்குகொள்ள முன் வந்திருப்பேன். வேறு யாரேனும் சென்னை அருகே இருந்தால் முன்வாருங்கள் விக்கிப்பீடியர்களே! --பழ.இராஜ்குமார் (பேச்சு) 20:16, 21 அக்டோபர் 2013 (UTC)
குறுகிய கால அறிவிப்பு, போதிய பங்களிப்பாளர்கள் இல்லாததால் இதனை சில மாதங்களுக்கு ஒத்திப்போட்டுள்ளார்கள். தற்போது தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பட்டறைகள் நடத்த நிறைய பேர் ஆர்வம் கொண்டுள்ளார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நாம் இன்னும் பல பரப்புரைப் பங்களிப்பாளர்களை உருவாக்க வேண்டும். ஆர்வமுடையோருக்கான பரப்புரைப் பயிற்சிகள் வழுங்குவதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். --இரவி (பேச்சு) 17:22, 24 அக்டோபர் 2013 (UTC)

தமிழ் எழுத்துரு மாற்றி[தொகு]

தமிழில் பல்வேறு எழுத்துருக்கள் உள்ளது யாவரும் அறிந்ததே! அவற்றில் சிலவற்றிற்கு மாற்றிகள் உள்ளன. சுரதா யாழ்வாணனின் கருவி, இவற்றில் பலவற்றிற்கு ஒருங்குறி வடிவில் மாற்றித் தருகிறது. ஒருங்குறிக்கு மாற்றிகள் கிடைக்காத எழுத்துருக்கள் யாவை? அவற்றின் பட்டியல் தேவை! முடிந்தால், சிலவற்றையாவது நான் மாற்றிப் பார்க்கிறேனே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:26, 22 அக்டோபர் 2013 (UTC)

தற்போதுள்ள ஒருங்குகுறி எழுத்துருவுக்கு மாற்றிகள் பற்றிய உங்கள் எண்ணம் கண்டு, மகிழ்ச்சி. ஆனால், நம் தமிழ் விக்கிமீடியத்திட்டங்கள், பிற முன்நிலையிலுள்ள மொழிகளை போல வேகமாக முன்னேற வேண்டும் என்றால், இந்த எழுத்துரு வடிவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த எழுத்துருவின் மேன்மையை அறிந்த உலகின் பலதரப்பட்ட தமிழ்கணிமை ஆய்வறிஞர்கள் அறிந்தே பத்துவருட போராட்டத்திற்கு பிறகு அமைத்துள்ளனர். எனவே, தற்போதுள்ள ஒருங்குகுறி எழுத்துருவை, அனைத்து எழுத்தரு தரப்பாட்டிற்கு மாற்ற, உங்களது ஆற்றல் திரும்பட்டும். அதுவே, இணையத்தமிழின் எதிர்காலம், இந்த விண்ணப்பம். அமிர்தா பல்கலையிலும் இதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. அவர்கள் அளவு பணவசதி எனக்கும் என் நண்பர்களுக்கும் இல்லையெனும், இன்னும் ஓரிரு மாதங்களில் பலன் வரும். தமிழை இணையத்தில் பார்ப்பது, ஒரு மாயை. அது தமிழ் கணிமையன்று. சென்னைக் கூடலுக்கு நீங்கள் வருவீர்களென்று ஒரு திட்டத்துடன் வந்தேன். எனக்கு பிறர் உதவியது போல, நான் உங்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினேன். மின்னஞ்சல் செய்க. கூறுகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 08:00, 22 அக்டோபர் 2013 (UTC)

தேனி மு. சுப்பிரமணியின் ஒத்துழையாமை[தொகு]

என்ன நடவடிக்கையும் எடுங்கள் பதில் கூற முடியாது என்ற தேனி சுப்பிரமணியை வலியுறுத்த யாரும் முன்வராதது வியப்பையும் கவலையையும் சிறிது ஏமாற்றத்தையும் அளிக்கிறது. -- சுந்தர் \பேச்சு 15:32, 22 அக்டோபர் 2013 (UTC)

நீங்கள் பரிந்துரைத்த பிரச்சினைகளை தனித்தனியாக அணுகும் இங்கு ஏற்புடதையாக கருதப்படுவதால், அவ்வாறே அணுகலாம். அணுகுமுறை தொடர்பான பயனர் கருத்துக் கோரல் நாளை முடிகிறது. அதன் பின் மேற்கொண்டு செயற்படலாம். --Natkeeran (பேச்சு) 17:46, 22 அக்டோபர் 2013 (UTC)
குறிப்பாக எந்தக் கேள்விகள் பதில் தரப்பட வேண்டு என்று நீங்கள் அவற்றை இங்கு சுட்டினால் உதவியாக இருக்கும். எல்லாக் கேள்விகளையும் வடிகட்டி இங்கு பதித்தால் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 17:54, 22 அக்டோபர் 2013 (UTC)
சுந்தர், உண்மையில் எனக்கு என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, என்கிற நிலையில்தான் நான் பதிலளிக்காமல் இருந்து வந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காகவும், மயூரநாதன் என் பேச்சுப் பக்கத்தில் கருத்திட்டதாலும், தங்களைப் போன்றவர்களின் வேண்டுகோளுக்காகவும் எனது பதில்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. வேறு கேள்விகள் எதுவும் எப்பக்கத்திலாவது விடுபட்டிருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 20:20, 22 அக்டோபர் 2013 (UTC)
நற்கீரன், நான் முன்னர் சில இடங்களில் குறிப்பிட்டிருந்தபடி எனது பிணக்குத்தீர்வுமை முன்மொழிவின் முதல் கட்டம் வழமையாக நாம் செய்யும் உரையாடி இணங்குதலே. அதனால் தேனி சுப்பிரமணி விடையளிக்க வேண்டும் என அவரிடம் கேட்டிருந்தேன். வாக்கெடுப்புக்காக இடைநிறுத்தியது நிருவாக அணுக்கத்தை விலக்கக்கோரும் பரிந்துரையை மட்டுமே. இப்போது உரையாடல் தொடங்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றாலும் உங்கள் கேள்விக்கான விடையாக இதைக் குறிப்பிடுகிறேன்.
தேனி மு. சுப்பிரமணி, உங்கள் எண்ணம் தவறு. எவ்வித நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை எனப் பதிலளிக்காமல் விடுவதற்கு இது உங்கள் தொடர்பான விசயம் மட்டுமே இல்லையே? எதுவானாலும் விளக்கம் அளிப்பதே முறை. இப்போது நீங்கள் விடயளிக்கத் தொடங்கியமைக்கு நன்றி. அந்தந்த இழையில் உரையாடலைத் தொடரலாம். -- சுந்தர் \பேச்சு 08:36, 23 அக்டோபர் 2013 (UTC)
செய்முறையை நான் தவறாகப் புரிந்துகொண்டேன் போல் உள்ளது. தற்போது சரியாக நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி. --Natkeeran (பேச்சு) 14:52, 23 அக்டோபர் 2013 (UTC)

கேள்விகளும் பதில்களும்[தொகு]

 1. ??? - Yes check.svgY ஆயிற்று
 2. விக்கி முதற்பக்கக் கட்டுரைகள் குறித்து - இங்கு Yes check.svgY ஆயிற்று
 3. பத்தாண்டு கொண்டாட்டப் பொறுப்புகள் - விளக்கம் கோரல் Yes check.svgY ஆயிற்று
 4. விக்கிப்பீடியா தொடர்பான உங்கள் ஆக்கங்களை கட்டற்ற உரிமத்தில் தர வேண்டுகோள் - Yes check.svgY ஆயிற்று
 5. புன்னியாமின் பங்களிப்பு நிலை குறித்த அவதூறு - விளக்கம் கோரல்
 6. விக்கி சமூகம் பற்றிய அவதூறு - விளக்கம் கோரல் (இடைநிறுத்த வேண்டுதல்)
 7. நலமுரண் செயற்பாடுகள் - விளக்கம் கோரல்--Natkeeran (பேச்சு) 18:46, 22 அக்டோபர் 2013 (UTC)
 8. விக்கிப்பீடியாவின் முதற்பக்கக்கட்டுரைகளை ஒரு பயனர் பார்வதி ஸ்ரீக்கு பதிலாக தன்வசம் எடுத்துக்கொண்டார் என தேனியார் கவனக்குறைவாக உண்மையற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை திரும்ப பெறுமாறு கேட்டும் தேனியார் பதிலளைத்ததாகத் தெரியவில்லை. தவிர நக்கீரன் மேலே சுட்டிய விக்கி முதற்பக்கக் கட்டுரைகள் குறித்து என்பது விக்கி முதற்பக்கக் கட்டுரைகளுக்கு மட்டும் தான். அதை வேறொருவர் தன்வசம் எடுத்துக்கொண்டார் என கவனக்குறைவாக உண்மையற்ற குற்றச்சாட்டை முன்வைத்ததற்கானது அல்ல.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:10, 23 அக்டோபர் 2013 (UTC)
 9. இன்னும் 3 விளக்கங்கள் இங்கே உள்ளன. --Rajan s (பேச்சு) 07:03, 28 அக்டோபர் 2013 (UTC)

எனக்கு இருந்த பணிப்பழுக்களாலும் குடும்ப நல்நிகழ்வுகளாலும் என்னால் விக்கியை சில நாட்களாக தொடர்ந்து கண்கானிக்க முடியவில்லை. விக்கி முதற்பக்கக் கட்டுரைகள் குறித்து என்னும் கேள்வி அருகில் ஆச்சு வார்ப்புரு இடப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் எங்கே இருக்கிறது என்பதற்கு இணைப்பு தர வேண்டுகிறேன்.

அது ஏதோ நாளிதழில் வெளியானதாக நினைவு. அதன் இணைப்போ அல்லது உள்ளடக்கங்களோ தரப்பட வேண்டும்.

மேலும் புதுப்பயனர் கட்டுரைகளை தேனியார் விரைவாக "நீக்குகிறார்/நீக்கல் வார்ப்புரு இடுகிறார்" என்றும் எங்கோ கூறப்பட்டதாக நினைவு. அதற்கு அவர் பதிலளித்தாரா? இல்லை அது ஆதாரமற்றதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:55, 22 அக்டோபர் 2013 (UTC)

"கட்டுரையாளர் தமது சொந்தக் கருத்தையும் முன்வைத்து எழுதுவதற்கு உரிமை உண்டு.". முதற்பக்க கட்டுரைகள் குறிப்பானவிமர்சனத்தை நல்நோக்கிலேயே நாம் அணுகவேண்டும். --Natkeeran (பேச்சு) 19:34, 22 அக்டோபர் 2013 (UTC)

ஆம். அறிவேன். முதற்பக்க கட்டுரைகள் குறிப்பானவிமர்சனத்தை நல்நோக்கிலேயே நான் அணுகுகிறேன்.ஆனால் முதற்பக்க கட்டுரை குறித்த விமர்சனத்தில் அவர் கட்டுரையை மட்டும் விமர்சிக்கவில்லை. வேறு ஒரு பயனர் பார்வதி ஸ்ரீக்கு பதிலாக முதற்பக்க கட்டுரைகளை காட்சிப்படுத்தினார் என்ற தவறான தகவலை அளித்தார். அதை ஆதாரங்களுடன் நான் இல்லை என விளக்கியும் அவர் அந்த பயனர் மீது சுமத்திய குற்றத்தை திரும்பப் பெற்றதாக தெரியவில்லை. ஒருவேளை பெற்றிருந்தால் அதன் இணைப்பை தர வேண்டுகிறேன். மேலும் எனக்கு அதன் நாளிதழில் முதற்பக்க கட்டுரைகள் தொடர்பான விமர்சனத்தின் இணைப்போ அல்லது உள்ளடக்கங்களோ தேவை. அதை முதலில் தந்தாலே என்னால் மேற்பட்ட முடிவுகளை தர இயலும். முதலில் அதைத் தரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:59, 22 அக்டோபர் 2013 (UTC)

நற்கீரன், தாங்கள் கூறுவது உண்மை. பத்திரிகையாளர்கள், பத்திரிகையில் கட்டுரை மற்றும் பிற படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்கள் கட்டுரையின் (படைப்புகள்) வடிவமைப்புக்காகவும், அதன் தொடர்ச்சிகளுக்காகவும் சொந்தக் கருத்துகளையும் முன் வைத்து எழுதுவது நடைமுறையில் இருப்பதுதான் என்பதைத் தெளிவாக்கி இருக்கிறீர்கள். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 20:10, 22 அக்டோபர் 2013 (UTC)

தேனியாரே, பத்திரிக்கையில் உங்கள் கட்டுரையை/கட்டுரைகளை நான் படிக்கவில்லை. அதன் இணைப்புகளை தந்தாலே என்னால் மேலதிக கருத்துக்களை கூற முடியும். முதலில் அதைத்தர வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:24, 22 அக்டோபர் 2013 (UTC)

இணைப்பைத் தாருங்கள் என்று தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. தமிழ் கம்ப்யூட்டர் இதழ் அச்சில் மட்டும் வெளிவரும் இதழ் என்பதைத் தாங்கள் அறிந்து கொள்வது நல்லது.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:35, 23 அக்டோபர் 2013 (UTC)

நல்லது. அறிந்து கொண்டேன். நீங்கள் கம்யூட்டர் மலரில் வெளியிட்ட கட்டுரையை நான் நூலகம் சென்றே படித்துக்கொள்கிறேன். ஆனால் பார்வதிக்கு பதிலாக இன்னொருவர் முதற்பக்க கட்டுரையை தன் விருப்பப் படி தேர்ந்தெடுத்ததாக நீங்கள் கூறிய கவனக்குறைவான உண்மையில்லாத குற்றச்சாட்டை நீங்கள் திரும்ப்பப்பெருகிறீர்களா இல்லையா என்பதை அறிய விரும்புகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:42, 23 அக்டோபர் 2013 (UTC)

 • தேனி சுப்பிரமணி, நீங்கள் தவறான கருத்துகளை (திருத்தும் வசதி இருந்தும், அணுக்கம் இருந்தும்) பதிவு செய்திருக்கின்றீர்கள். அதற்கு வருத்தம் தெரிவித்து, திருத்தம் ஒன்றை கம்ப்யூட்டர் இதழுக்கு அனுப்புவது பொறுப்புடைமை. இது கடினம் இல்லை. நல்ல முற்காட்டாகவும் இருக்கும். பற்பல காரணங்களால் ஒஉர் பிழை நேரலாம், ஆனால் உடனே அதனைத்தடுகக்வோ, அதன் தாக்கத்தைத் தடுகக்வோ முயல வேண்டும். 1000 கட்டுரைகள் எழுதிய உங்களுக்குத் தெரியாதா? அருள்கூர்ந்து இதில் இயல்பாக நல்லுணர்வோடு சிந்தித்து உடனே மாற்ற ஆவன செய்யுங்கள். எல்லோர் நேரமும் இதற்குச் செலவாவது நல்லதா, எண்ணிப்பாருங்கள்!--செல்வா (பேச்சு) 15:09, 23 அக்டோபர் 2013 (UTC)

தானியங்கி தேவையெனில் தொடர்பு கொள்ளலாம்[தொகு]

NeechalBOT என்றொரு தானியங்கியை வடிவமைத்துள்ளேன். இது தானாகவும் இயங்கும், விவரமறிந்து விரும்புகிறவர்கள் அணுக்கம் வாங்கியும் இயக்கலாம், நானும் இயக்கலாம். சில தானியக்கத் தேவைகளை அனுமானித்துப் பட்டியலிட்டேன் இங்கு ஆனால் அவை அவசியமற்றவை என தற்போது நினைக்கிறேன். அதனால் வேறு தானியக்கத் தேவை தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தால் இதனைப் பயன்படுத்திக் கொள்க --நீச்சல்காரன் (பேச்சு) 06:56, 23 அக்டோபர் 2013 (UTC)

நீச்சல்காரன், தானியங்கிகள் தமிழ் விக்கியில் மிகக் குறைவு. உங்கள் சேவை அவசியம் தேவை. தேவை ஏற்படும் போது அவசியம் கேட்கிறேன். தானியங்கி அணுக்கத்திற்கு விண்ணப்பிக்கவிருக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 08:27, 23 அக்டோபர் 2013 (UTC)
 1. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:02, 23 அக்டோபர் 2013 (UTC)
 2. 👍 விருப்பம் இப்பகுப்பைக் கவனித்தீர்களா?--≈ உழவன் ( கூறுக ) 15:59, 23 அக்டோபர் 2013 (UTC)
நன்றி. இதைக் கொண்டு தானியக்கம் செய்ய பொதுவான தேவையிருந்தால் விண்ணப்பிக்கலாம் எனக் காத்திருந்தேன். இப்போது விண்ணப்பித்துள்ளேன். உழவனுக்கு, அந்தப் படிமங்களைப் பார்க்கவில்லை, தகவலுக்கு நன்றி. படிமங்களை காமென்ஸிக்கு நகலெடுக்கும் தானியக்க முறை பற்றி முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் அவற்றை நகர்த்தலாம் என நம்புகிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 02:36, 24 அக்டோபர் 2013 (UTC)
நீச்சலாரே! அதற்குமுன், பொதுவகத்தின்(Commons) பதிவேற்ற கருவிகளை ஒருமுறை அலசி விடுங்கள். இருப்பதை மேம்படுத்த வேண்டுகிறேன். இது அருமையான ஒரு பதிவேற்றக்கருவி. ஆனால், தமிழ் எழுத்துருக்கள் தெரியாது. சிறீகாந்தும், சோடாபாட்டிலும் தமிழ் தெரிய முயற்சித்தார்கள். மேலும், சிறீனி பைத்தானில் பலகருவிகள் செய்துள்ளார். இவற்றையும் காண்க இவர்களுடன் நீங்கள் இணைந்து கலந்துரையாடி, தங்கள் இலக்கையும், அவர்களின் படைப்பையும் சீராக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பிறகு இல்லாததை, நம் இல்லத்தில் கொண்டு வருக. சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:53, 24 அக்டோபர் 2013 (UTC)
உழவன், ஏற்கனவே உள்ள கருவிகளை மேம்படுத்த முன்பு முயன்றேன், ஆனால் அதற்கு பைதான் போன்ற மொழியறிவு தேவை. அடியேனுக்கு பைதான் என்றாலே பயம், அந்நுட்பம் அறியேன். தற்போது செய்துவரும் மொழியில் இதுவரை எந்தக் கருவியும் சிக்கவில்லை. அதனால் முதலிலிருந்து ஆரம்பித்து, அடிப்படையான பட மாற்றம் தானியக்கத்தில் முடிகிறது. உதாரணம் இங்கிருந்து இங்கு மாற்றியுள்ளேன். தமிழ் எழுத்துரு பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை. எளிய இடைமுகமும் வேறுபல சோதனைகளும் மட்டும் பாக்கி. உங்களுக்குத் தேவையான வசதிகளைச் சொன்னால் அவற்றை முயல்கிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 06:39, 24 அக்டோபர் 2013 (UTC)
மகிழ்ச்சி. உங்கள் வழி, எப்பொழுதும் தனி வழி தானே! ஊர்போய் சேர்ந்தால் சரி!. பைத்தானாக இருந்தாலும் சரி. சைத்தானாக இருந்தாலும் சரி!!. இங்குள்ள அதே உரிமத்தை அங்கும் அளித்திட வழிவகை செய்யுங்கள். {{குனூ க.ஆ.உ.}} | {{PD-self}} | {{பொ.உ.}} | {{Cc-by-sa}} | {{copyrightedFreeUse}} என்ற உரிமங்களை மட்டும் தான் அங்கு பதிவேற்றிட இயலுமென்று கருதுகிறேன். {{bookcover}} | {{movieposter}} | {{logo}} | {{copyrighted}}|{{Non-free fair use in|}} | {{Non-free web screenshot}} இவைகளை பதிவேற்றிட கூடாது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். மேலும், ஒரு சிறு சிந்தனை. பதிவேற்றம் இங்கிருந்து, அங்கு இனிது முடித்த உடனே, கோப்பினை இங்கு பதிவேற்றியவருக்கு, பொதுவகப்பதிவேற்றத்தினைப் பற்றி தானியக்கமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும். .--≈ உழவன் ( கூறுக ) 01:54, 27 அக்டோபர் 2013 (UTC)
நன்றி, நானும் உரிமம் வழங்கல் பற்றித்தான் தேடிக்கொண்டிருந்தேன். இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்வேன். தற்போது பொதுவகத்தில் தானியங்கி அணுக்கத்திற்காகக் காத்திருக்கிறேன். நிச்சயமாக பதிவேற்றிய பின் பயனரிடம் சொல்லிவிடுகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 02:10, 27 அக்டோபர் 2013 (UTC)
நீச்சல், எந்தவொரு புதிய தானியங்கித் திட்டமும் தொடங்கும் போது உங்கள் பயனர் பெயரில் மூன்று நான்கு முறை சோதித்துப் பார்த்து பின்னர் உங்கள் தானியங்கிக் கணக்கில் தொடருவது நல்லது.--Kanags \உரையாடுக 03:17, 24 அக்டோபர் 2013 (UTC)
தானியங்கி செயல்களைப் பயனரில் கணக்கில் செய்யக் கூடாது என்று எங்கோ படித்த ஞாபகம். அதனால் முழு சோதனையையும் தானியங்கிக் கணக்கில்தான் செய்தேன். இனி செய்யும் சோதனைகளில் உங்கள் ஆலோசனைகளைக் கணக்கில் கொள்வேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 06:39, 24 அக்டோபர் 2013 (UTC)
உங்கள் தானியங்கிக் கணக்கிலும் நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். ஆனால் தானியக்க அணுக்கம் பெற்ற பின்னர் நீங்கள் செய்யும் எந்தத் தொகுப்பும் அண்மைய மாற்றங்களில் இயல்பிருப்பாகத் தெரிய வராது என்பதே ஒரு குறை.--Kanags \உரையாடுக 06:47, 24 அக்டோபர் 2013 (UTC)
தானியங்கியைக் காட்டு என்று சொடுக்கினால் பிறகு தானியங்கித் திருத்தங்களும் வருமே. நான் பயன்படுத்துவது பங்களிப்புக்கள் பக்கம். நன்றி --நீச்சல்காரன் (பேச்சு) 06:54, 24 அக்டோபர் 2013 (UTC)

விக்கியன்புக் குறியீடு திட்டம்[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்புக் குறியீடு திட்டம் உருவாக்க விருப்பம், அனைவரும் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:16, 23 அக்டோபர் 2013 (UTC)

புதிய விக்கி நிர்வாகிகள்[தொகு]

அண்மையில் ஜெகதீஸ்வரன், நந்தகுமார், செந்தி, ஜெயரத்தினா, அஸ்வின், தமிழ்க்குரிசில், வத்சன், கிருஷ்ணபிரசாத், தகவலுழவன் ஆகியோர் தமிழ் விக்கிபீடியாவில் நிர்வாகிகளாகப் பொறுப்பேற்று உள்ளார்கள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பல துறைகளைச் சார்ந்த, ஈடுபாடுகளைக் கொண்ட, நாடுகளைச் சார்ந்த, இளைய/அனுபவம் உள்ள பயனர்கள் நிர்வாகிகளாகி உள்ளார்கள். முன்னர் எப்பொழுதையும் காட்டிலும் பெருந்தொகைப் பயனர்கள் இந்தத் தேர்தெடுப்பில் கலந்து கொண்டு தமது கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளனர். இது ஒரு நல்ல வளர்ச்சி அளவீடு. தமிழ்க்குரிசில் முன்னர் ஒருமுறை சுட்டியது போல, இந்தத் தலைமுறை பெரும் பாய்ச்சல் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. --Natkeeran (பேச்சு) 17:26, 23 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:41, 23 அக்டோபர் 2013 (UTC)

👍 விருப்பம் நன்றி நற்கீரன்! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:10, 25 அக்டோபர் 2013 (UTC)
வாழ்த்தியமைக்கு நன்றி நக்கீரரே. புதிய நிர்வாகிகளின் திறனறிந்து அவர்களுக்கான பணியை ஒழுங்கமைக்கவும், வழிகாட்டவும் வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:58, 23 அக்டோபர் 2013 (UTC)
வாழ்த்துக்களுக்கு நன்றி. ஜெகத்! இந்த அணியில் அணுக்கப்பொறுப்பை ஏற்றவர்கள் 'இன்னவற்றை' செய்து காட்டினர் என்ற பெயரைப் பெற திட்டமொன்று தீட்டுங்கள். அவசரமில்லை. உடன் இணைகிறேன். நான் தனிப்பட்ட முறையில் தாவரவியலையும், திறநிலைமென்பொருட்களைப் பற்றியும் எழுதுவதாக முடிவு எடுத்துள்ளேன். --≈ உழவன் ( கூறுக ) 23:43, 23 அக்டோபர் 2013 (UTC)

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்கள் விக்கிப்பணி சிறப்பாக அமையட்டும்.--கலை (பேச்சு) 07:29, 24 அக்டோபர் 2013 (UTC)

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:10, 25 அக்டோபர் 2013 (UTC)
@பயனர்:தகவலுழவன் முதற்பக்க இயற்றை முதல் பல்வேறு பணிகளை தற்போது நி்ர்வாக அணுக்கம் பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளோம். அதில் முதற்பக்க பரிந்துரைகளில் ஆர்வமுள்ளோர் பங்கேற்க வேண்டுகோள் வையுங்கள். தாங்கள் கோரியது போல தனித்த திட்டமொன்றை தீட்டிவிட்டு தங்களை விரைவில் அணுகுகிறேன் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:14, 24 அக்டோபர் 2013 (UTC)

திருமதி. நித்யாவின் உரை[தொகு]

பெண்களைப் பற்றியும், தமிழ் விக்கிப்பீடியா குறித்தும் அண்ணாபல்கலையில், நித்யாவின் ஆங்கில அலசல். அவரின் தமிழ் மின்நூல்களை இலவசமாகப் படியெடுங்கள். ஒரு படைப்பாளியின் படைப்பு படிக்கப்படும் போது, அப்படைப்பாளி தன்னுள் பூக்கிறான் என்பதை மறவாதீர்கள் நண்பர்களே! அவற்றை படியெடுங்கள் பலருக்கும் கொடுங்கள். ஒரு சில சொற்களையும் அங்கு உதிருங்கள்.

 1. எளிய தமிழில் MySQL
 2. லினக்சு-முதற்பாகம்
 3. லினக்சு-இரண்டாம் பாகம்
--≈ உழவன் ( கூறுக ) 00:02, 24 அக்டோபர் 2013 (UTC)

ஆலமரத்தில் உரையாடல் நெறிப்படுத்தல்[தொகு]

த.வி-யருக்கு ஒரு வேண்டுகோள்.

 1. 10-ஆவது ஆண்டு விழா ஒன்று கூடல் பற்றிய உரையாடல்களை இங்கே தொடருங்கள்.
 2. தேனி சுப்பிரமணியின் அல்லது இன்னொரு பயனரின் செயற்பாடுகள் பற்றி எனில் அவரவர்கள் பேச்சுப்பக்கங்களில் உரையாடுங்கள்.
 3. தேனி சுப்பிரமணியின் மீது சில நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி என்றால் இந்தப் பக்கத்திலோ அல்லது அதன் பேச்சுப்பக்கத்திலோ உரையாடுங்கள்.
 4. அண்மையில் முன்மொழியப்பட்ட கொள்கைகள் பற்றிவை (எ.கா பழி தூற்றல் பற்றிய கொள்கை வரைவு, விக்கியின் அடியாளத்தை தவறாகப் பயன்படுத்துவது பற்றிய வரைவு எனில் அந்தந்தப் பக்கங்களில் உரையாடுங்கள்.
 • இப்படிச் செய்தால் நம் பொதுக்குறிக்கோளான கலைக்களஞ்சியத்தை வளர்த்தெடுப்பது என்பதன் குவியம் கலையாமல் இருக்கும். மேலே கூறியதற்கு மாறாக நானும் ஆலமரத்தடியில் முன்னர் பேசியிருக்கின்றேன். ஆனால் இனியாவது மிகவும் சிக்கலான உரையாடல்களாக இருந்தால் அவ்வப் பக்கங்களில் தொடர்ந்தால் சற்று எளிமையாக இருக்கும். மற்றவர்கள் தொடர்ந்து தங்கள் பணிகளைத் தொடரலாம். மிக முக்கியம் என்றால் இங்கே ஒருவரி குறிப்பிடுங்கள். இது என் வேண்டுகோள்தான்.--செல்வா (பேச்சு) 07:56, 24 அக்டோபர் 2013 (UTC)

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 15:43, 24 அக்டோபர் 2013 (UTC)

நல்ல கருத்து. நன்றி செல்வா சார் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 08:45, 24 அக்டோபர் 2013 (UTC)
வழிமொழிகிறேன், செல்வா. அனைத்துப் பயனர்களும் உரையாடும் வகையில், தேனி சுப்பிரமணியின் உரையாடல் பக்கத்தைத் திறந்து விட வலியுறுத்த வேண்டுகிறேன். அனானிகளோ புதுப்பயனர்கோ யாருமோ அவரது பேச்சுப் பக்கத்தில் முறை தவறி உரையாடினால் நிச்சயம் மற்ற நிருவாகிகள் அதனைக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு அவரது பேச்சுப் பக்கத்தைத் திறக்காத வரை, வேறு சில பக்கங்களில் உரையாடுவதைத் தவிர்க்க இயலாது. நன்றி. --இரவி (பேச்சு) 17:17, 24 அக்டோபர் 2013 (UTC)

புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா - கருத்தரங்கம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் 10-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி கடந்த வாரம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை ரவி, சிபி, புரு மற்றும் நானும் சேர்ந்து நடத்திவிட்டு வந்தோம். அதற்கு முன்னாலேயே நண்பர் பிரகாஷ் மற்று அவரது நண்பர்கள் இணைந்து நடத்தும் நண்பா அறக்கட்டளையினரிடம் அந்தப் பகுதியில் கருத்தரங்கம் நடத்தக் கேட்டுக் கொண்டிருந்தேன். வரும் திங்கள் கிழமை 2013 அக்டோபர் 28 அன்று புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா - கருத்தரங்கம் நடத்த அவர்கள் ஆவன செய்துள்ளனர். தமிழ்க் கணினி, வலைப்பூக்கள், சமூக ஊடகங்கள் குறித்த அமர்வினை நான் கையாள்கிறேன். ஆங்காங்கு இருக்கும் விக்கிப்பீடியர்கள் இத்தகைய பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டால் நலம் பயக்கும் என்ற அடிப்படையில் இந்நிகழ்வில் பங்கேற்க வாய்ப்புள்ள நம் விக்கிப்பீடியர்கள் முன்வந்து உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

வாய்ப்பிருப்போர் உடன் தொடர்பு கொள்க: 9444210999

அருகில் உள்ளவர்கள் பங்கேற்று உதவினால் சிறப்பாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 13:27, 25 அக்டோபர் 2013 (UTC)

திட்டங்களைப் பட்டியல் இடுங்கள்[தொகு]

பல விக்கித் திட்டங்கள் ஆங்காங்கு இயங்குகிறது. அனைத்தையும் இங்கு விக்கிப்பீடியா:திட்டங்கள் ஒருங்கிணைப்புப் பக்கம் & பகுப்பு:தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் இவற்றுடன் இணைத்துக் கொள்ளுங்கள். செயலில் உள்ள திட்டம், முன்வரைவாக உள்ள திட்டம் என்று இருக்கலாம். ஒரேமாதிரியான திட்டங்களின் அனுசரணையைப் பெற்றுக் கொள்ளலாம், தெரியாத திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 16:57, 24 அக்டோபர் 2013 (UTC)

👍 விருப்பம் மேலும் இயன்றவரை விக்கித் திட்டம் என துவங்குமாறு திட்டங்களுக்கு பெயரிடவும். (எ.கா: விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல் அல்லது விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள்) இது எல்லா திட்டங்களு ஒருசீராக அமைய உதவும்.--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:27, 24 அக்டோபர் 2013 (UTC)

பகுப்பு:தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:34, 24 அக்டோபர் 2013 (UTC)

வெயில் ஒரு மழை நிழல்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்டம் - சென்னை நிகழ்வின் தொகுப்பு

வெயிலில் ஒரு மழை நிழல்... பார்த்து மகிழுங்கள். கூடிய விரைவில் கூடல் தொடர்பான அனைத்து ஒளிப்படங்கள், உயர் நுணுக்க நிகழ்படங்கள் பதிவேற்றப்படும். கூடலில் கண்ட குதூகலமும் தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட மனநிலையும் திரும்பட்டும். அனைவருக்கும் தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள். பட்டாசுகள் தொடர்ந்து வெடிக்கும் :)--இரவி (பேச்சு) 06:56, 25 அக்டோபர் 2013 (UTC)

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 10:45, 25 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:25, 25 அக்டோபர் 2013 (UTC), நன்றி! 👍 விருப்பம் --செல்வா (பேச்சு) 19:01, 25 அக்டோபர் 2013 (UTC)

👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:02, 27 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:22, 28 அக்டோபர் 2013 (UTC)

மாக் இயங்குதளத்தில் தமிழ் விக்கி தேடல்[தொகு]

மாக் இயங்குதளத்தில் தமிழ் விக்கி கட்டுரைகளை வலச் சொடுக்கி காண்கின்ற கணினிக் காட்சி

மாக் இயங்குதளத்தில் நான் தமிழ் விக்கியை அழகாகவும், எளிதாக பயன்படுத்தமுடிகிறது. தட்டச்சு செய்யவும், எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு தமிழ்ச் சொல்லை வலச்சொடுக்கி look up எனும் பொத்தானை அமுக்கினால் தமிழ் விக்கியில் அத்தலைப்பை தேடி முடிவுகளை காட்டுகிறது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ibooks மூலம் தமிழ் புத்தகங்களை படிக்கும் போது, தமிழில் ஆவணங்களை படிக்கும் பொழுதும், இது போன்று ஏதேனும் சொற்களை வலச் சொடுக்கு செய்து தமிழ் விக்கி கட்டுரைகளை படிக்க முடிகிறது.--பழ.இராஜ்குமார் (பேச்சு) 16:47, 25 அக்டோபர் 2013 (UTC)

👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:05, 25 அக்டோபர் 2013 (UTC)

விக்கிமீடியா நன்கொடைப்பணம்[தொகு]

விக்கிமீடியா நன்கொடைப் பணத்தில் திட்டங்கள் பற்றி தமிழ் விக்கிப்பீடியா இந்திய விக்கிமீடியா பொறுப்பாளர்க்களுடன் ஏதும் கலந்துரையாடி இருக்கின்றனரா? --செல்வா (பேச்சு) 18:54, 25 அக்டோபர் 2013 (UTC)

 1. விக்சனரியை பன்மொழி அகரமுதலியாக்க குறிப்பாக இந்திய மொழிகளில் ஒலிக்கோப்புகள் உருவாக்க நல்கை பெற இயலுமா?--≈ உழவன் ( கூறுக ) 01:38, 27 அக்டோபர் 2013 (UTC)
பார்க்க விக்கிப்பீடியா:இந்திய விக்கிமீடியப் பிரிவுக்கான முன்மொழிவுகள் 2013 --Natkeeran (பேச்சு) 04:17, 27 அக்டோபர் 2013 (UTC)

எண்முறை மின்னணுவியல் நூல் எழுத அழைப்பு[தொகு]

எண்முறை மின்னணுவியல் என்னும் நூலினை விக்கி நூலில் எழுத தொடங்கியுள்ளேன். விருப்பம் உள்ளோர் இணைந்து இந்நூலை மேலும் சிறப்பாக்க அழைக்கின்றேன். ஒரு நல்ல தரமான நூலையாவது உருவாக்க வேண்டும் என்பது என் எண்ணம். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 13:42, 26 அக்டோபர் 2013 (UTC)

 1. வாழ்த்துக்கள்--≈ உழவன் ( கூறுக ) 01:36, 27 அக்டோபர் 2013 (UTC)

முதற்பக்க விக்சனரி இணைப்பு[தொகு]

தற்போது தமிழ்விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உள்ள விக்சனரி இணைப்பு ஆங்கில விக்சனரிக்குப் போகிறது. யாராவது தயவுசெய்து சரிசெய்ய இயலுமா? நன்றி --உமாபதி \பேச்சு 17:36, 26 அக்டோபர் 2013 (UTC)

Yes check.svgY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 17:57, 26 அக்டோபர் 2013 (UTC)
 1. நன்றி --உமாபதி \பேச்சு 18:24, 26 அக்டோபர் 2013 (UTC)
 2. நன்றி--≈ உழவன் ( கூறுக ) 01:37, 27 அக்டோபர் 2013 (UTC)

ஆங்கில விக்கி குறித்த கட்டுரை[தொகு]

நேரமிருப்பின் ஆங்கில விக்கி குறித்த இந்த கட்டுரையை வாசிக்கவும். இக்கட்டுரையில் இருக்கும் சூழல் தமிழ் விக்கிக்கு வருமுன்னர் காக்க என்ன செய்ய வேண்டும் என்று கலந்துரையாடலாம் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 18:03, 26 அக்டோபர் 2013 (UTC)

நல்ல இணைப்பு. நன்றி. --Natkeeran (பேச்சு) 03:03, 27 அக்டோபர் 2013 (UTC)

புள்ளிவிபரம்: கடந்த வாரப் பங்களிப்புகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் பயனர்களின் பங்களிப்புகளை அடையாளப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான வளர்ச்சி சூழல் உருவாகும் என்று நம்புகிறேன். அதன் அடிப்படையில் இம்மொழி விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு வாரமும் பயனர்களால் பங்களிக்கப்பட்ட தொகுப்புக்களின் எண்ணிக்கையைப் பயனர் வாரியாக இனி இப்பக்கத்தில் பட்டியல் இடப்படும். சில தினங்கள் வரை இப்பட்டியல் தினமும் இற்றை செய்யப்படும், பின்னர் வாரவாரம் திங்கள் தோறும் இற்றை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தானியங்கி மூலம் இற்றை செய்வதால் இப்பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் வேண்டின் எனக்குத் தெரியப் படுத்தவும். --நீச்சல்காரன் (பேச்சு) 01:15, 27 அக்டோபர் 2013 (UTC)👍 விருப்பம் ஒரு பயனர் கட்டுரைப்பகுதியில் மட்டும் (உரையாடல்கள் நீங்கலாக) எத்தனை பைட்டுகள் உருவாக்கினார் என்பதை தெரிய வழிவகை செய்ய இயலுமா?--≈ உழவன் ( கூறுக ) 01:20, 27 அக்டோபர் 2013 (UTC)

ஆம் ஒரு தொகுப்பிற்கு உருவான பைட்டு வேறுபாட்டை அறியமுடியும், ஆனால் ஒரு பயனரின் உழைப்பிற்கு பைட்டி வேறுபாட்டு அளவிற்குத் தொடர்பு இல்லை எனநினைக்கிறேன். பல நேரங்களில் உரைதிருத்தும் போது பைட்டு குறையலாம், இதர மேற்கோள்,பகுப்பு, வடிவம் இணைக்கும் போது பைட்டு அதிகரிக்கலாம், மேலும் பங்களித்த பைட்டுகளில் எத்தனை பயன்பாட்டில் இருப்பவை எனப் பார்க்கவும் முடியாது. நுட்பரீதியில் முடிந்தாலும் நடைமுறைப் பயன் இருக்குமா என ஐயமுள்ளது. வேறு பயனர்களும் விரும்பினால் அவற்றையும் சேர்த்துக்கொள்கிறேன் --நீச்சல்காரன் (பேச்சு) 02:36, 27 அக்டோபர் 2013 (UTC)
பயன்மிகு தகவல்கள். --Natkeeran (பேச்சு) 03:04, 27 அக்டோபர் 2013 (UTC)
நீச்சல்காரன், பயனுடைய திரட்டு இது. நன்றி 👍 விருப்பம் ---செல்வா (பேச்சு) 03:52, 27 அக்டோபர் 2013 (UTC)
நீச்சல்காரன், உங்கள் பட்டியல்களுக்கு விக்கிப்பீடியா:புள்ளிவிவரம் பக்கத்தில் இணைப்புகள் தாருங்கள். இப்போது அங்குள்ள சிறீகாந்தின் பட்டியலுக்குக் கீழே சுருக்கமான ஒரு முன்னுரையுடன் இணைப்பைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 04:01, 27 அக்டோபர் 2013 (UTC)
அப்படியே செய்துவிட்டேன். தற்போதைக்கு ஒரே பக்கத்தில் வாரவாரம் பழையதை அழித்து, புதியவை இற்றை செய்வதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. அது அப்படியே இருக்கட்டுமா? அல்லது வாரவாரம் புதிய பக்கத்தில் இற்றை செய்யலாமா?--நீச்சல்காரன் (பேச்சு) 05:07, 27 அக்டோபர் 2013 (UTC)
ஒவ்வொரு கிழமைக்கும் (வாரத்துக்கும்) ஒரு புதிய பக்கம் இருப்பது நல்லது. ஓராண்டுக்கு 52 பக்கம்தான் வரும். --செல்வா (பேச்சு) 06:00, 27 அக்டோபர் 2013 (UTC)
ஆமாம், ஒவ்வொரு வாரத்துக்கும் தனிப் பக்கம் உருவாக்குங்கள். சிறீகாந்து உருவாக்குவது போல தானியங்கியாகப் பக்கங்கள் உருவாக்க முடியுமா?--Kanags \உரையாடுக 06:07, 27 அக்டோபர் 2013 (UTC)
இதில் விடுபட்ட தொகுப்புக்கள் உட்பட்ட மொத்த தொகுப்புக்கள் புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படுதல் சிறப்பாக இருக்கும். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:16, 27 அக்டோபர் 2013 (UTC)
@கனக்சு, அப்படித்தான் இப்பக்கமும் தானியக்கமாக உருவானது. விக்கிப்பீடியா:Statistics/weekly‎/27-oct-2013 என்ற தலைப்பமைப்பில் வாரத்தின் இறுதி நாளைத் தலைப்பாகப் போட்டு அமைத்துவிடுகிறேன். புதுப் பக்கங்கள் தொடங்கப்படும் போதே விக்கிப்பீடியா:Statistics/weekly‎ என்ற பக்கத்தில் அந்தப் புதுப் பக்கத்திற்கு இணைப்பைக் கொடுத்துவிடுகிறேன். @அண்டன், விக்கிப்பீடியாவெளி, பேச்சுவெளி, பயனர்வெளி போன்ற பிற தொகுப்புக்களைத் திட்டமிட்டே சேர்க்கவில்லை. அவற்றையும் சேர்க்கச் சொல்கிறீர்களா? நீங்கள் விடுபட்ட தொகுப்பு என்று எதைக் கூறுகிறீர்கள் என்று விளக்கமாகச் சொன்னால் முயல்கிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 06:31, 27 அக்டோபர் 2013 (UTC)
அண்டன் கூறியுள்ளபடி மொத்த தொகுப்புக்கள் புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படுதல் நன்று என எண்ணுகிறேன்--நந்தகுமார் (பேச்சு) 06:52, 27 அக்டோபர் 2013 (UTC)
@நீச்சல், ஆம் நீங்கள் குறிப்பிட்ட பிற தொகுப்புக்களைத்தான் குறிப்பிட்டேன். கட்டுரை, பயனர், விக்கிப்பீடியா, படிமம், மீடியா, வார்ப்புரு, உதவி, பகுப்பு, வலைவாசல், மெடூல் (module) மற்றும் அவை ஒவ்வொன்றுக்காக பேச்சுப்பக்கங்களும் தனியாக வராமல் ஏனைய/பிற தொகுப்புக்கள் உட்பட மொத்த தொகுப்புக்கள் இடம் பெறலாம். பின்வருமாறு:
பயனர்/ஐ.பி. புதிது
(கட்டுரை)
திருத்தம்
(கட்டுரை)
வழிமாற்று
(கட்டுரை)
படிமம் வார்ப்புரு பகுப்பு ஏனைய/பிற மொத்த தொகுப்புக்கள்
xx x x x x x x x x

அகலம் அதிகம் எனின் ஏதாவது முக்கியத்துவம் குறைந்தவற்றை (எ.கா: பகுப்பு) நீக்கிவிடலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 07:12, 27 அக்டோபர் 2013 (UTC)

இதுவும் நல்லாயிருக்கு. புள்ளிவிவரம்தானே அகலம் பிரச்சனை இல்லை என நினைக்கிறேன். சேர்த்துவிடுகிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 07:42, 27 அக்டோபர் 2013 (UTC)

விக்கித் திட்டம் தனிமங்கள்[தொகு]

இதுவரையில் 113 தனிமங்களைப் பற்றிய கட்டுரைகள் (மொத்தம் 118) தமிழ் விக்கியில் உள்ளது. இவற்றில் பல குறுங்கட்டுரைகளே. இவற்றை மேம்படுத்த விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தனிமங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வேண்டும். இவற்றை எவ்வாறு மேம்படுத்துவது, தனிமம் தொடர்பான வேதியியல் நுட்ப கட்டுரைகளை உருவாக்குவது ஆகியவற்றிற்கு அனைவரும் ஆலோசனைகள் தர வேண்டுகின்றேன். கருத்துக்களை பேச்சுப் பக்கத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி அஸ்வின் (பேச்சு) 16:39, 27 அக்டோபர் 2013 (UTC)

கேள்விகள்[தொகு]

 • நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் - நடப்பு வேண்டுகோள்கள் நடைமுறை தொடர்பாகத் தெளிவு தேவைப்படுவதால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. எப்போது தெளிவு பெறும்?
 • சிக்கலை நான்காப் பிரித்து அவற்றுக்கான இடத்தில் அணுகுதல் (அக்டோபர் 23, 2013 வரை) - அக்டோபர் 23, 2013 கடந்து விட்டதே. எப்போது அணுகப்படும்?
 • முரண்பாடுகள்:
  • Kanags கூறியது: தேனியாரின் பிரச்சினையை சுந்தர் கவனித்து வருகிறார். அவர் விரைவில் ஒரு சிறந்த முடிவை எடுப்பார்.
  • இரவி கூறியது: சுந்தர் தற்போது விக்கி விடுப்பில் உள்ளார்.
   • கேள்வி 1: இதில் எது சரி?
   • கேள்வி 2: சுந்தர் முடிவு எடுப்பாரா? எப்போது?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பயனர்கள் பரிந்துரைத்த அணுகுமுறையின் மூன்றாம் பகுதியின் செயலாக்கம் தொடங்கி உள்ளது: நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு --Natkeeran (பேச்சு) 02:39, 28 அக்டோபர் 2013 (UTC)

கண்டனங்கள்[தொகு]

 • என் பேச்சுப் பக்கத்தைக் கவனியுங்கள். அங்கு என் பதிலை அளித்துள்ளேன். ஆனால், என் கேள்விகளுக்கு இது வரையும் பதில் இல்லை. எப்போது கிடைக்கும்?
 • பயனர்:Kanags: இவர் சில தொகுப்புக்களை மீளமைத்துள்ளார். ஆனால் காரணம் இல்லை. இவரின் பேச்சுப்பக்கத்தில் Revert என்ற பகுதியில் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. செல்வா, மயூரநாதன், சுந்தர் போன்றோரிடம் காணப்பட்ட நிதானம் இல்லாது, குறைவான ஆனால் குழப்பமான கருத்துக்களையே இடுகிறார். உதாரணம்: எப்போதாவது தேனியை கேள்வி கேட்டுள்ளாரா அல்லது இது நியாயமானது அல்லது பலனுள்ள தீர்வு முயற்சிகளை எடுத்துள்ளாரா?
 • பயனர்:செல்வா: //எந்த நல்ல பங்களிப்பும் செய்யாத புதுப்பயனராகிய நீங்கள் இப்படியா சொற்களை முன்வைப்பீர்கள்?! // மற்றவர் பங்களிப்பு பற்றி விமர்சிக்கக் கூடாது என்பது விக்கியின் நற்பழக்கவழக்கங்களை ஒன்று என்பதை அறிய மாட்டீர்களா? பங்களிப்பு அடிப்படையில் விமர்சிக்கலாம் என்ற உதாரணத்தை ஏற்படுத்தாதீர்கள்? //சிறீதரன் கனகு ரோட்டில் நின்றவர் போனவர் எவரும் என்றது பொதுவாகக் கூறியது (உங்களைப் பற்றியன்று). இக்கேள்வி பொதுவான வழிமுறை வகுப்பதைப் பற்றியது (தனியொருவரைப் பற்றியதன்று).// நானும் குற்றவாளிகளை உருவாக்குவதே உங்களைப்போன்றவர்களின் பொறுப்பற்ற நடத்தைதான் என்று பொதுவான நடைமுறை பற்றித்தான் கூறினேன். அது எப்படி உங்களுக்கு தாக்குவேட்கை நிறைந்த சொற்களாகத் தெரிந்தன? ஆயினும், பின்னர் நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் நட்புடன் உரையாடியதற்கு நன்றி!
 • தேனி.மு.சுப்பிரமணி: //நான் வெளியேறத்தான் விரும்பினேன். என்ன செய்வது? தங்களைப் போன்ற விசமிகள் வரவு என்னை மீண்டும் இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டது.// நீங்கள் முன்னர் மயூரநாதன், செல்வா போன்றவர்களின் வேண்டுகோளினால்தான் மீண்டும் வந்ததாக குறிப்பிட்டீர்கள். உண்மையில் யாருக்காக வந்தீர்கள்? மயூரநாதன், செல்வா போன்றவர்கள் உங்களுக்கு விசமிகளாகத் தெரிகிறார்களா?

--Rajan s (பேச்சு) 01:47, 28 அக்டோபர் 2013 (UTC)

Short-term Assignment at CIS-A2K[தொகு]

Apologies for not posting in your language. At CIS-A2K we are looking to engage an experience Wikimedian on a short-term assignment. Please see this notice for more details. All queries may please be sent over e-mail given in the notice.--Visdaviva (பேச்சு) 08:37, 28 அக்டோபர் 2013 (UTC)

Please note that CIS-A2K is extending the last date of submitting the application to 5th November 2013. Nitika.t (பேச்சு) 08:00, 31 அக்டோபர் 2013 (UTC)

தொழில்நுட்ப கலைச்சொல் அகராதி[தொகு]

http://www.glossary.com.lk/ இவற்றில் இருந்து சில சொற்களை விக்சனரியில் சேர்க்க வேண்டும்--குறும்பன் (பேச்சு) 15:28, 28 அக்டோபர் 2013 (UTC)

இதில் உள்ள அனைத்து சொற்களையும் சேர்க்கலாமா? --Tshrinivasan (பேச்சு) 11:23, 29 அக்டோபர் 2013 (UTC)

சில சொற்கள் ஏற்கனவே விக்சனரியில் இருக்கும் என்று நம்புகிறேன். இவற்றில் இருந்து சொற்களை விக்சனரியில் சொற்களை பதிவேற்றினால் அது பதிப்புரிமை மீறல் ஆகுமா--குறும்பன் (பேச்சு) 14:38, 30 அக்டோபர் 2013 (UTC)
கீழே காப்புரிமை என்று போடப்பட்டுள்ளதே. வேண்டாமென்பது என் எண்ணம். பிறரின் கருத்தறிய ஆவல்.--≈ உழவன் ( கூறுக ) 17:09, 31 அக்டோபர் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுக் கொண்டாட்டப் படங்கள்[தொகு]

படங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவேற்றிவருகிறேன். தற்போதைக்கு நிகழ்வுப் படங்களும் சான்றிதழ் வழங்கும் படங்களும் தனிப் படங்களும் பதிவேற்றப்படும். வரும் நாட்களில் மீதமிருப்பவற்றையும் காணொளிகளையும் பதிவேற்றஞ்செய்கிறேன். படங்களைப் பார்க்க இங்கு வரவும். தமிழ் விக்கிப்பீடியா 10 ஆண்டுக் கொண்டாட்டங்கள் -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 19:09, 28 அக்டோபர் 2013 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 00:37, 30 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம்இதுபோல மேலும் உட்பகுப்புகளை இடலாமா?--≈ உழவன் ( கூறுக ) 02:35, 30 அக்டோபர் 2013 (UTC)
👍 விருப்பம்காணொளிகளை இணைத்ததும் இங்கும் முகநூல்குழுமத்திலும் ஒரு குறிப்பினை இட்டுவிடுங்கள் நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:43, 1 நவம்பர் 2013 (UTC)

அதிகாரிகளை அதிகப்படுத்தலாமா?[தொகு]

தற்போது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை முன்னிட்டு 9 நிர்வாகிகளை ஒரே வாக்கெடுப்பில் தேர்ந்தெடுத்தது போல் கூடுதலாக இரண்டு அதிகாரிகளை தமிழ் விக்கிப்பீடியாவில் தேர்ந்தெடுக்கலாமே. மற்றவர் கருத்துகள் என்ன? தற்போது மயூரநாதன், நற்கீறன், சுந்தர், இரவி போன்ற நால்வர் மட்டுமே அதிகாரிகள் என்பதையும் நினைவுக் கூறுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:30, 29 அக்டோபர் 2013 (UTC)

அதிகரிக்கலாம் என்பதே என்னுடைய கருத்தும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் நியாயமான தெரிவு செய்வது சாத்தியமாகுமா தெரியவில்லை. எனவே, உடனடியாக இது பற்றி எதுவும் செய்யாமல் விடுவதுதான் நல்லது. ---மயூரநாதன் (பேச்சு) 09:53, 30 அக்டோபர் 2013 (UTC)
ஏன் சார். தற்பொழுதைய சூழல் நலமாகத்தானே உள்ளது. புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:26, 30 அக்டோபர் 2013 (UTC)
நல்ல யோசனை. நான் 👍 விருப்பம் தெரிவிக்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:26, 30 அக்டோபர் 2013 (UTC)

பரிந்துரைக்கலாம். நிருவாகியாக இருப்பவரே இதற்கு போட்டியிட வேண்டும், நிருவாகியாக ஐந்து (மூன்று?) ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும், கேள்விகளை எல்லோரும் கேட்க வேண்டும் ஏனெனில் தேர்ந்தெடுக்கப்படுபவர் அதிகாரி (இனிமேல் நிருவாகி ஆகும் பயனர்களையும் எல்லோரும் கேள்வி கேட்டு பதில் வாங்க வேண்டும்) என்பது என் கருத்து. --குறும்பன் (பேச்சு) 14:49, 30 அக்டோபர் 2013 (UTC)

இம்முறை நடைபெற்ற நிர்வாகி தேர்தலிருந்து கிடைத்த அனுபவத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆதரவு, நடுநிலை, எதிர்ப்பு வாக்குகளை இடுவதற்கான நடைமுறை என்ன என்பதைப் பற்றி சிறு குறிப்பனையும் அதனுடன் இணைத்தல் நன்று. தென்காசியாரின் இந்த முன்மொழிவினை வரவேற்கிறேன். இருப்பினும் மயூரநாதன் சுட்டிக்காட்டியது போல சில காலம் இந்த முயற்சியை ஒத்திவைக்க வேண்டுகிறேன். தற்போதைய சூழலில் தொடர்பங்களிப்பு செய்யும் பயனர்கள் விக்கிவிடுப்பில் உள்ளனர் என்பதையும் சுட்டிகாட்ட விரும்புகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:07, 30 அக்டோபர் 2013 (UTC)

குற்றமும் தண்டனையும்[தொகு]

உலகில் எங்கெல்லாம் சட்டமும், தர்மமும், நீதியும், நியாயமும் முக்கியமாக கருதப்படுகிறதோ அங்கெல்லாம் கடை பிடிக்கப்படும் நடைமுறை என்னவென்றால்

 1. ஒருவர் குற்றம் சாட்டுவார்
 2. குற்றம் சாட்டுபவர் அதற்கான காரணங்களையும் ஆதாரங்களையும் தருவார்
 3. குற்றம் சாட்டப்பட்டவர் தன் தரப்பை விளக்குவார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தன் தரப்பு வாதம் மற்றும் ஆதாரங்களை தருவார்
 4. குற்றம் (அல்லது தவறு அல்லது தப்பு) நடந்ததா என்பது முதலில் உறுதி செய்யப்படும். அல்லது நடக்கவில்லை என்று உறுதி செய்யப்படும்
 5. அதன் பிறகே குற்றம் நடந்தது என்று உறுதி செய்யப்பட்ட பிறகே தண்டனை குறித்து விவாதிக்கப்படும்

குற்றம் நடந்ததா என்று முடிவு செய்யப்பட்டபின்னரே தண்டனை என்ன என்று முடிவு செய்யப்படும்

குற்றம் உறுதி செய்யப்படாமல் தண்டனை குறித்து பேசுவதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளன

 1. நிரபராதி தண்டிக்கப்படலாம்
 2. குற்றவாளி தப்பலாம்

குற்றம் நடந்ததா என்றே விசாரனை செய்யாமல், அல்லது அந்த விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் இருக்கும் போது, தண்டனை குறித்து முடிவு செய்ய குழு அமைப்பதற்கு ஒரே நோக்கம் தான் இருக்க முடியும். அது என்னவென்றால், குற்றம் முடிவு செய்யப்படவில்லை, எனவே குற்றவாளியை தப்பவைக்கலாம் என்ற தீய நோக்கமே அது

நீதி, நியாயம், தர்மம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் எந்த சமூகமும் இப்படி குற்றவாளிகளை தப்புவிக்க புதுபுது வழிமுறைகளை (உதாரணமாக குற்றம் குறித்து விசாரணை முடியும் முன்னர் தண்டனை குறித்த பரிந்துரையை செய்து அதன் மூலம் குற்றவாளிய தப்புவிக்கும் வழிமுறை) கடைபிடிக்க மாட்டார்கள்

மலிவு விளம்பரம், பக்க சாய்வு, அநீதி, கடுஞ்சாய்வு, அதர்மம் ஆகியவற்றிற்கு முன்னிலை அளிக்கும் சமூகமே இப்படி குற்றவாளிகள் தப்ப வேண்டும் என்ற காரணத்திற்காக குற்றம் குறித்த விசாரணை நடந்தால் குற்றம் நிருபணம் ஆகி குற்றவாளிக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்ற கவலையில் விசாரனை நடக்கும் முன்னர் தண்டனை முடிவு செய்ய குழு அமைத்து குற்றவாளிகளை காக்க கடும் முயற்சி எடுக்கும்

எனவே

 • நீங்கள் நீதியின் பக்கமா, அல்லது அநீதியின் பக்கமா
 • நீங்கள் தர்மத்தின் பக்கமா, அல்லது அதர்மத்தின் பக்கமா
 • நீங்கள் நியாத்தின் பக்கமா, அல்லது அநியாயத்தின் பக்கமா
 • நீங்கள் நடுநிலையா அல்லது கடுஞ்சாய்வா

என்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது

இங்கே முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகள் எந்த ஒரு தனிப்பட்ட பயனருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ வைக்கப்படவில்லை. இவற்றின் நோக்கம் தமிழ் விக்கி சரியான பாதையிலிருந்து வழுவிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கே. எனவே பிற பயனர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இக்கேள்விகள் மீது கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 01:12, 30 அக்டோபர் 2013 (UTC)

நிருவாகப் பொறுப்பை மீளப்பெறுவது பற்றி[தொகு]

இங்கே பல கேள்விகளை எழுப்பியுள்ளேன். த.வி-யில் உள்ள பயனர்களும் நிருவாகிகளும் அதிகாரிகளும், குற்றச்சாட்டை முன்வைத்த Rajan s அவர்களும், குற்றம் சாட்டப்பட்ட தேனி சுப்பிரமணி அவர்களும் பார்க்க வேண்டும்.--செல்வா (பேச்சு) 06:44, 30 அக்டோபர் 2013 (UTC)

பக்கசார்பு, நேர்மையற்றதன்மை, அநீதி ஆகியவற்றிற்கு உதாரணம்[தொகு]

இருவருக்கு இடையில் பிரச்சனை இந்நிலையில்

 • முதலாம் நபர் ஒரு மின்னஞ்சலை அனுப்பினால் அதை அப்படியே நம்புவதும், அதனடிப்படையில் விக்கிக்கு வெளியே முறையற்ற உரையாடல்களை மேற்கொள்வதும், வெளிப்படை தன்மையோ நேர்மையோ இல்லாது குழு சேர்ப்பதும்
 • இரண்டாவது நபர் அவர் சார்ப்பாக ஒரு மின்னஞ்சலை காட்டினால் அதை முதலாம் நபர் தான் எழுதினார் என்று எங்களுக்குத் தெரியாது என்று குட்டி கரணம் அடித்து முதலாம் நபருக்கு சாதகமாக பேசுவதும்

கடும் பக்க சார்பு நிலையை காட்டுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்

முதலாம் நபர் காட்டிய மின்னஞ்சலை இரண்டாவது நபர் எழுதினார் என்று எப்படி முடிவு செய்தீர்கள் அநியாயவாதிகளே

உங்களுக்கு வந்தாத்தான் இரத்தமா. அடுத்தவர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 10:03, 30 அக்டோபர் 2013 (UTC)

வணக்கம் புருனோ! உணர்ச்சிவயப்படாது பொறுமையாக உரையாடுங்கள். மாற்றுக் கருத்து இருப்பின் அந்தந்த இழைகளில் அமைதியாக உரையாடுங்கள். சமூகத்தில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருக்கும் நீங்கள், நல்ல சொற்களை உபயோகித்தலே உகந்தது. நல்லது நடக்கவேண்டும் என்றே அனைத்துப் பயனர்களும் விரும்புகிறார்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:01, 30 அக்டோபர் 2013 (UTC)
சார், நான் உணர்ச்சி வசப்படவில்லை
நான் பொறுமையாகவே உரையாடுகிறேன்
நான் நல்ல சொற்களையே பயன்படுத்தியுள்ளேன். ஆனால் அநீதியை, அதர்மத்தை பக்கசார்பை சுட்டிக்காட்டாது எப்படி இருக்க முடியும். நான் நல்ல சொற்களை பயன்படுத்தி பல வாரங்களாக உரையாடி வருகிறேன். ஆனால் சிலருக்கு தாங்கள் செய்யும் மாபாதங்களும், பெரும்பிழைகளும் புரிவதில்லை. அல்லது புரிந்தும் தங்களின் தவறுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாரில்லை. இப்படியே விட்டு விட முடியுமா ? யாராவது சுட்டிக்காட்ட வேண்டாமா ?
நல்லது நடக்கவேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள். ஆனால் சிலரோ, கடும் பக்க சார்புடன் உள்ளார்களே. அவர்கள் தவற்றை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
எந்த ஒரு தவற்றையும் அது சிறிதாக இருக்கும் போதே அதை கிள்ளி எறிய வேண்டும்.
அதை விடுத்து, தவறு செய்பவர் நமக்கு வேண்டியவர் என்பதால் அதை வளர விட்டு விட்டு, நீங்கள் ஏன் இதை கண்டு கொள்ள வில்லை என்று தட்டிக்கேட்டால் 1. இது நீதிமன்றம் இல்லை 2. நான் பிரயாணத்தில் இருந்தேன் என்றெல்லாம் சப்பை கட்டு கட்டி விட்டு, நிலைமை கை மீறி போன பிறகு அதை சீர் செய்ய முயல்வது தவறான முன்னுதாரணம்
இதை நான் சுட்டிக்காட்டுவது யாரையும் குறை கூற வேண்டும் என்ற நோக்கில் அல்ல.
கடந்த ஒரு மாதமாக, அதிகாரிகளில் சிலர் + நிர்வாகிகளில் சிலர் + பிற மூத்த பயனர்களில் சிலர் வெளிப்படைதன்மையில்லாமல், கடும் பக்க சாய்வுடன், நியாயத்திற்கு அப்பாற்பட்டு, சில தனிமனித விருப்பு வெறுப்பு அடிப்படையில் இயங்குகிறார்கள் என்று வெளிப்படையாக தெரிகிறது. உங்களைப்போன்றவர்கள் அதை சுட்டிக்காட்டாமல் மவுனமாக இருப்பது நல்லதா ?
இதை உணர்ந்து கொண்டு, வருங்காலத்தில் இது போன்ற தவறுகளும், பக்க சார்பு நிலைகள், வெளிப்படைதன்மையற்ற நிலை, அநீதி ஆகியவை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதே என் நல்நோக்கு
நான் மேலே கூறிய குற்றச்சாட்டிற்கு ஆதாரம் தேவையென்றால் அதை அளிக்க தயாராகவே உள்ளேன். புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:13, 30 அக்டோபர் 2013 (UTC)
புருனோ எங்கிருந்து திடீரென முளைத்தார் (இராசனைப் போல) என்று தெரியவில்லை. இவரை நான் விக்கி 10 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் இங்கு காண்கிறேன். நீங்களும் கட்டாய விக்கி விடுப்பில் இருந்தீர்களா?--Kanags \உரையாடுக 11:30, 30 அக்டோபர் 2013 (UTC)
நான் கேட்ட நியாயமான கேள்விக்கு பதில் கூறாமல் விக்கிநடை, பொறுமை என்றெல்லாம் என் கேள்விகளை கட்டுப்படுத்த முயலும் நண்பர்களுக்கு இந்த கேள்வி புலப்படாதற்கு காரணம் தற்செயல் தானா
நான் விடுப்பில் எல்லாம் இல்லை. புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 11:34, 30 அக்டோபர் 2013 (UTC)
 • புருனோ, நீங்கள் த-வி மீதும், பல ஆண்டுகளாகப் பங்களிப்பவர்கள் மீதும் இல்லாத பழிகளைச் சுமத்தி அவதூறு செய்கின்றீர்கள். இதுவரையிலும் பெரிய பங்களிப்புகள் ஏதும் செய்யாத புதிதாகச் சேர்ந்த பயனர் இராசன் (பயனர் Raja s) அவர்களும் நீங்களும் திடீர் என்று தோன்றி, 10-ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி பற்றிப் பேசப்பட்ட நிறைகுறைகள் வழியாக ஏற்பட்ட சிறு பிணக்கைப் பெரிதாகப் பேசி இங்கே நீங்கள் எங்கள் நேரத்தைப் பெரிதும் வீணாக்கி அலைக்கழிக்கின்றீர்கள். பக்கச் சார்பு இங்கு ஏதும் இல்லை புருனோ! உறுதிசெய்யப்பட்ட மறைவழி வழங்கிகளின் (confirmed proxy servers) ஐ.பி. முகவரியில் இருந்து பல தகாத செயற்பாடுகளும், பயனர் தேனி சுப்பிரமணியைக் குறிவைத்து செயற்பட்ட விதமும் (பயனர் இராசன், அவருக்குச் சார்பாக நீங்கள், பெயரிலி கணக்குகள்வழி செயற்பட்டவர்கள் -எ.கா: சிறப்பு:Contributions/176.56.174.80, பிறவற்றை இராசனின் பேச்சுப்பக்கத்தில் நான் இட்ட விளக்கம் வேண்டுதல் பகுதியில் பார்க்கவும்), //Why do you revert my comment without give the reason? Can you give me the reason please? By the way, you can block me right now, but I will come back in split of a second. Wanna play?// என்ற அச்சுறுத்தல்களும் (சிவப்பு நிறம் இட்டு எடுத்துக்காட்டுவது நான்) செய்வது எல்லாம் த.வி-யில் புதிது. கணினி நுட்பங்களையும் இணைய வசதிகளையும் நுணுகி அறிந்து பயன்படுத்துவதும் மறைவாகப் பல செய்வதும் யார்? எதிலிலும் தொடர்பில்லாத நீங்கள் ஏன் திடீர் என்று வந்து த.வி-யின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி இங்குள்ள நல்லுணர்வையும், நல்லெண்ணங்களையும் குலைக்கின்றீர்கள்? இது வழக்காடும் மன்றம் அன்று. கலைக்களஞ்சியம் ஆக்கும் இடம்!! தொடர்ந்து இடையூறுகள் தந்து பணியைக் கெடுக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கின்றேன். பயனர் இராசனிடமும், தேனி சுப்பிரமணியிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. அவர்கள் விடை பகரட்டும். --செல்வா (பேச்சு) 16:19, 30 அக்டோபர் 2013 (UTC)
புருனோ, பயனர் Rajan s பேச்சுப்பக்கத்தில் நான் இட்ட கீழ்க்கண்ட கூற்று பக்கச் சார்பானதா?!
//எனக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலைப் பாருங்கள். ஒரு விக்கி நிர்வாகி இப்படியும் செய்யலாமா?// பார்த்தேன். அது அவர் அனுப்பியதாக இருந்தால், விக்கிக்கு வெளியே என்றாலும், கட்டாயம் கண்டிக்கத்தக்கதே. பொறுப்பற்ற செயலே. ஆனால் அது அவர்தான் எழுதினாரா என்பது எங்களுக்குத் தெரியாது. பலவகையான பொய் மின்னஞ்சல்களும் பெயரிலியாக ஐ.பி. முகவரிவழியாகவும் நடக்கும் உரையாடல்களும் பெரும் குழப்பத்தையும் நம்பிக்கையின்மையையுமே வளர்த்திருக்கின்றன.

--செல்வா (பேச்சு) 16:30, 30 அக்டோபர் 2013 (UTC)

//நீங்கள் த-வி மீதும், பல ஆண்டுகளாகப் பங்களிப்பவர்கள் மீதும் இல்லாத பழிகளைச் சுமத்தி அவதூறு செய்கின்றீர்கள்.// சார் நான் பழி சுமத்துவது உண்மைதான். செய்த பிழைகளை சுட்டி காட்டுகிறேன். இதில் அவதூறு எதுவும் இல்லை. நான் கூறியது உண்மையே.
//இதுவரையிலும் பெரிய பங்களிப்புகள் ஏதும் செய்யாத புதிதாகச் சேர்ந்த பயனர் இராசன் (பயனர் Raja s) அவர்களும் நீங்களும் திடீர் என்று தோன்றி, 10-ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி பற்றிப் பேசப்பட்ட நிறைகுறைகள் வழியாக ஏற்பட்ட சிறு பிணக்கைப் பெரிதாகப் பேசி இங்கே நீங்கள் எங்கள் நேரத்தைப் பெரிதும் வீணாக்கி அலைக்கழிக்கின்றீர்கள்.// சார். இங்கு பிணக்கை பெரியாக ஆக்கியது நான் இல்லை. நீங்கள் தான். முடிந்திருக்க வேண்டிய விஷயத்தை பெரியதாக ஆக்கியது நீங்கள் தான் . எந்த பிரச்சனையிலும் தலையிடாத என் மீது என் பெயரை குறிப்பிட்டு செய்யப்பட்ட தனி மனித தாக்குதலை கண்டிக்காத நீங்கள் தான் பிரச்சனையை பெரிதாக்கியவர்
//பக்கச் சார்பு இங்கு ஏதும் இல்லை புருனோ!// இருவர் மின்னஞ்சல்களை காட்டும்போது ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் குறித்து வினா எழுப்பாமல் மற்றொருவர் அனுப்பிய மின்னஞ்சல் குறித்து ஐயம் எழுப்புவது கடுமையான பக்க சார்பு செயல் சார். அதை நீங்கள் இதுவரை உணராமல் இருப்பது வருத்தமான விஷயம்
// உறுதிசெய்யப்பட்ட மறைவழி வழங்கிகளின் (confirmed proxy servers) ஐ.பி. முகவரியில் இருந்து பல தகாத செயற்பாடுகளும், பயனர் தேனி சுப்பிரமணியைக் குறிவைத்து செயற்பட்ட விதமும் (பயனர் இராசன், அவருக்குச் சார்பாக நீங்கள், பெயரிலி கணக்குகள்வழி செயற்பட்டவர்கள் -எ.கா: சிறப்பு:Contributions/176.56.174.80, பிறவற்றை இராசனின் பேச்சுப்பக்கத்தில் நான் இட்ட விளக்கம் வேண்டுதல் பகுதியில் பார்க்கவும்), //Why do you revert my comment without give the reason? Can you give me the reason please? By the way, you can block me right now, but I will come back in split of a second. Wanna play?// என்ற அச்சுறுத்தல்களும் (சிவப்பு நிறம் இட்டு எடுத்துக்காட்டுவது நான்) செய்வது எல்லாம் த.வி-யில் புதிது. கணினி நுட்பங்களையும் இணைய வசதிகளையும் நுணுகி அறிந்து பயன்படுத்துவதும் மறைவாகப் பல செய்வதும் யார்? // அது யார் என்று எனக்கு தேவையில்லை. ஆனால் என் மீது தனி மனித தாக்குதல் நடத்தப்பட்டது. அது தான் என் பிரச்சனை. என் மீது ஒரு கைப்பாவை கணக்கு அவதூறு செய்த போது எந்த பிரச்சனையிலும் தலையிடாத என் மீது என் பெயரை குறிப்பிட்டு செய்யப்பட்ட தனி மனித தாக்குதலை கண்டிக்காத நீங்கள் தான் பிரச்சனையை பெரிதாக்கியவர் . முடிந்தால் அதற்கு பதில் கூறுங்கள்
// எதிலிலும் தொடர்பில்லாத நீங்கள் ஏன் திடீர் என்று வந்து த.வி-யின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி இங்குள்ள நல்லுணர்வையும், நல்லெண்ணங்களையும் குலைக்கின்றீர்கள்?// எதிலும் தொடர்பில்லாத என் மீது என் பெயரை குறிப்பிட்டு செய்யப்பட்ட தனி மனித தாக்குதலும் அதை நீங்கள் யாரும் கண்டிக்காததும் தான் நான் இங்கு எழுத வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியது என்பதை உணர முடியவில்லையா
// இது வழக்காடும் மன்றம் அன்று. கலைக்களஞ்சியம் ஆக்கும் இடம்!! //ஆமாம் சார். நாங்கள் எங்கள் தரப்பில் நியாயம் கேட்டால் நீங்கள் உடனே இதை சொல்வீர்கள். ஆனால் உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் மட்டும் பக்கம் பக்கமாக நியாயம் கேட்பீர்கள். உங்களுக்கு வந்தால் இரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா
// தொடர்ந்து இடையூறுகள் தந்து பணியைக் கெடுக்க வேண்டாம் என்று வேண்டிக்கொள்கின்றேன். // முதலில் இடையூறு தந்தவர்களை நோக்கி அக்டோபர் முதல் தேதி இந்த கேள்வியை கேட்காமல் கள்ள மவுனம் சாதித்து விட்டு, முதலில் பிரச்சனை செய்தவர்களை நோக்கி இதை கூறும் நேர்மை இல்லாமல், என் மீது நடத்தப்பட்ட தனி மனித தாக்குதலுக்கு பதில் கூறும், என் மீது நடத்தப்பட்ட தனி மனித தாக்குதலுக்கு நியாயம் கேட்கும் என்னை பார்த்து இதை கூறுவது கடுமையான பக்க சார்பு மற்றும் துளியும் நேர்மை யற்ற செயல்
// பயனர் இராசனிடமும், தேனி சுப்பிரமணியிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. அவர்கள் விடை பகரட்டும். // அதானே. பிறகு ஏன் என்னை இந்த பிரச்சனையில் இழுத்தீர்கள் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 00:18, 31 அக்டோபர் 2013 (UTC)
 • புருனோவின் செயல் ஒருசிறிதும் சரியில்லை. வேறு யாரேனும்தான் விடை பகரவேண்டும் அல்லது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் நேரத்தை இனியும் செல்வழிக்க விரும்பவில்லை. --செல்வா (பேச்சு) 00:54, 31 அக்டோபர் 2013 (UTC)
சார். விக்கிபீடியா என்பது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நான் நியாயம் கேட்ட போது விக்கீபிடியா என்பது தண்டனைகளம் அல்ல என்று குற்றவாளிகளுக்கு ஆதரவு காட்டிய நீங்கள், இப்பொழுது என் மீது, நான் எந்த தவறும் செய்யாத போது கூட, உங்களின் தவறுகளை சுட்டிகாட்டிய ஒரே காரணத்திற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவது உங்கள் நேர்மை குறைவை காட்டுகிறது. நீங்கள் கடுஞ்சாய்வு நிலையில் உள்ளீர்கள். இது தண்டனை வழங்கும் களம் அன்று என்பதையும், வழக்காடு மன்றம் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். மேலே குறிப்பிட்டபடிப் பார்த்தால் எது "அவதூறு" (பழி, பழி சுமத்தல், பழிதூற்றல்??) என்பதைப்பற்றி நாளும் ஆயிரம் கேள்விகள் எழக்கூடும். அடுத்தவரைப் பற்றி எழுதியது தவறு எனில் அவர் பேச்சுப் பக்கத்தில் போய் கேள்வி கேட்கலாம், பல்வேறு வழிகளில் திருத்திக்கொள்ளலாம். நான் பார்த்த விக்கிப்பீடியர் திருநெல்வேலிக்காரர் என்று எங்காவது கூறியிருந்தால், அது தவறான செய்தியாக இருந்தால் (அவர் கோவையைச் சேர்ந்தவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்), மேலே உள்ள வரையறையின் படி அவதூறு. நான் கோவையில் மருத்துவராக இருக்கின்றேன் என்று தவறுதலாக ஒருவர் கூறினால் (நான் சென்னையில் மருத்துவராக இருக்கின்றேன்), இது அவதூறா? பிறகு கணக்கற்ற நேரம் எது அவதூறு எது இல்லை என்று பேசிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே இருக்கும் கொள்கைகளின் படி நற்பழக்கவழக்கங்களைக் கடைபிடித்தல் போன்றவற்றால் இவை எளிதாக எதிர்கொள்ள முடியும்; ஒரு செய்தி தவறு என்றால் எளிதாகத் திருத்திக்கொள்ளலாம். தீய நோக்குடன் அணுகி ஒன்றைக் கூறுவது (malicious intent) என்பது ஏற்கனவே விக்கியின் நன்னோக்குக் கொள்கைக்குள் அடங்கும். இப்படியான நடவடிக்கை எடுக்க சொன்னால் சீரழியும் நம் விக்கி. குலைந்தே போகும். இப்பொழுது நான் குலைந்தே போகும் என்று கூறியது அவதூறு, நன்னோக்கம் இல்லாதது என்று கணக்கற்ற நேரம் வழக்காடிக்கொண்டிருக்கலாம். நம் நோக்கம் கலைக்களஞ்சியத்தை வளர்த்தெடுப்பது என்பது. இவற்றால் நேரக்கூடிய கட்டற்ற சீர்குலைவுகளைப் பயனர்கள் தெளிவாக எண்ணிப்பார்க்கவேண்டும் புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 01:20, 31 அக்டோபர் 2013 (UTC)
புருனோ, வேறொருவரின் வாக்கியத்தை மேற்கோள் காட்டாமல் அவருக்கே நீங்கள் சொல்வதுபோலத் திருப்பிப் போடுவது வேண்டுமென்றே "நீங்கள் அப்படிச் சொன்னீர்கள் அதைத் தவறு என நிறுவ இப்படிச் செய்தால் என்ன?" என்று கேட்பது போலவுள்ளது. (en:Wikipedia:Do not disrupt Wikipedia to illustrate a point) சிக்கல் தீர்வு நடந்து கொணடிருக்கும்போது தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருந்தால் உங்களைத் தடைசெய்ய வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிப்பீடியா தண்டனைக் களமல்ல என்ற இணைப்பை நீங்கள் ஒருசிறிதாவது படித்து உணர வேண்டும். குற்றத்துக்கு தண்டனை வழங்கும் நோக்கில் நடைகள் வழங்கப்படுவதில்லை வேண்டுகோள்களை ஏற்காமல் தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருக்கும்போது வேறு வழியில்லாமல் அதை நிறுத்தும் பொருட்டு செய்வதுதான் தடை. -- சுந்தர் \பேச்சு 02:24, 31 அக்டோபர் 2013 (UTC)
மேலும் அநியாயவாதிகளே என்பது போன்ற தொடர்ந்த வசைபாடல்கள், உங்களுக்கு வேண்டியவர் என்று எந்தவித ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு போன்றவையும் கொள்கைமீறல்களாகும். -- சுந்தர் \பேச்சு 02:33, 31 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம் புருனோ! பலரின் வேண்டுகோளுக்குப் பிறகும் தேவையற்ற சினங்கொண்டு, புதிதுபுதிதாக தலைப்புகளை உருவாக்கி எழுதிவருகிறீர்கள். பக்குவமான முறையில் நிர்வாகிகளும், அதிகாரிகளும், பிற பயனர்களும் செய்துவரும் முன்னெடுப்புகளை தேவையில்லாமல் பழிக்கிறீர்கள். உங்களின் செயல்பாடுகள் குறித்து எனது வருத்தத்தையும், கடும் கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனது திறனை ஒவ்வொருவரும் குமுகாயத்திற்காக ஆக்கத்திற்கு பயன்படுத்துதலே, அவரவர் பெற்ற கல்விக்கு பெருமை சேர்க்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:07, 31 அக்டோபர் 2013 (UTC)
கல்வி, மொழி, கலை, இலக்கியம் என பலதுறைகளிலும் சிறந்து விளங்கும் செல்வா அவர்கள்., உலக அனுபவத்திலும், அகவையிலும் மூத்தவர். அவர் பலமுறை தனது சூழ்நிலைகளை ஆரம்பத்திலிருந்து பலமுறை எடுத்துரைத்துள்ளார். இப்பிரச்சினையில் தனது நிலைப்பாட்டினையும் வெளிப்படையாகச் சொல்லியிருப்பதாகவே பயனர்கள் பலரும் நினைக்கிறோம். நிலைமை இப்படியிருக்க, தேவையில்லாமல் பொருத்தமற்ற சொற்களை உபயோகப்படுத்தி, பிரச்சினைகளை மேலும்மேலும் சிக்கல்படுத்த வேண்டாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:17, 31 அக்டோபர் 2013 (UTC)

//வேண்டுகோள்களை ஏற்காமல் தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருக்கும்போது வேறு வழியில்லாமல் அதை நிறுத்தும் பொருட்டு செய்வதுதான் தடை// சிக்கல்களுக்கு எல்லாம் முதற் காரணமாகிய தேனி சுப்பிரமணியை, ஒத்துழைப்புத்தர மறுக்கும் தேனி சுப்பிரமணியை, அரசுக்கு மடல் அனுப்பிய தேனி சுப்பிரமணியைத் தடை செய்யுங்கள். --Rajan s (பேச்சு) 03:31, 31 அக்டோபர் 2013 (UTC)

தொடர்ந்து இடையூறு செய்பவரைத் தடுக்கும் பொருட்டுச் செய்வதுதான் தடை என்பதை இப்போது மேலே சாய்வெழுத்தில் குறித்திருக்கிறேன். மற்றபடி கொள்கைமீறல்களுக்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்முடிவில் என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அவை எடுக்கப்படும். -- சுந்தர் \பேச்சு 05:00, 31 அக்டோபர் 2013 (UTC)
புரூனோ, நீங்கள் எந்தவிதமான நியாயமான வழிமுறைகளுக்கும் இடங்கொடுக்காமல், தங்களது பொன்னான நேரத்தைச் செலவு செய்து தமிழ் விக்கியில் சுமுக நிலை உருவாக முயற்சி செய்பவர்கள் மீதெல்லாம் பழிதூற்றி வருகிறீர்கள். தமிழ் விக்கியில் ஒழுங்கான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு பெரும் இடையூறு செய்து வருகிறீர்கள். தயவு செய்து இவற்றை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 07:02, 1 நவம்பர் 2013 (UTC)

தீபஒளித்திருநாள் + ஆலோயீன் முன்னிட்டு இலச்சினை மாற்ற வேண்டுகோள்[தொகு]

திட்ட எண்ணம் கைவிடப்படுகிறது - மேலும் யாரும் கருத்தளிக்க வேண்டாம்

குறிப்பிட்ட சில (மதம் சாரா - பெரும்பாலும் பல சாராரும் கொண்டாடும்) விழாக்களுக்கு விக்கிப்பீடியா இலச்சினையை குறுகிய நாட்களுக்கு மாற்றினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். எடுத்துக்காட்டாக கூகுள் டூடுள்களைப் போல (டூடுள்கள்). அது கண்ணைக் கவரும்படி இருப்பதோடு ஒரு human touch கிடைக்கும் என்று எண்ணுகிறேன். பல விக்கிகளிலும் (குறிப்பாக ஒரு நாடு, ஒரு மொழி, ஓர் இனம் சார்ந்த விக்கிகள்) இதுபோன்று விழாக்களுக்கு இலச்சினைகளை மாற்றுகின்றனர். நம்மை நான் அந்தப் பிரிவுக்குள் கொண்டுவரவில்லை. ஆயினும், அதனை ஓரெடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு முனையலாம் என்று எண்ணுகிறேன். அதனை வைத்துத்தான் தற்போது பத்தாண்டு இலச்சினையை மாற்றினேன். அது பலராலும் பாராட்டப்பட்டது. (என் பேச்சுப்பக்கம் பார்க்கவும்)

எனக்கு விழாக்களின் பட்டியலும் தேவைப்படுகிறது. எனவே, அதனையும் இங்கு கூறினால் முறையாக ஒரு திட்டப்பக்கம் தொடங்கலாம் என்று இருக்கிறேன். இதற்கு சமூக ஒப்புதல் கட்டாயமான ஒன்று. எனவே, தனித்துச் செயல்பட விரும்பவில்லை. அருள்கூர்ந்து உங்கள் (வளர்முகமான) கருத்துகளை முன்வைக்கவும். (ஒரு வார காலம் - நவம்பர் 7 வரை வரும் நிலையைப் பொறுத்து)

நான் விரும்பிய விழாக்கள் (தை / சனவரி மாதத்திலிருந்து)[தொகு]

 1. ஆங்கிலப் புத்தாண்டு
 2. பொங்கல் விழா
 3. மகளிர் நாள்
 4. சித்திரை முதல் நாள்
 5. உழைப்பாளர் நாள்
 6. பன்னாட்டுச் சுற்றுச்சூழல் நாள்
 7. இரம்சான்
 8. தீபஒளித்திருநாள்
 9. கிறித்துமஸ்

இவை, என் மனதில் பட்டவை. தற்போது நீங்கள் பட்டியல் எதுவும் தர வேண்டாம். இத்திட்டத்திற்கு ஆதரவோ எதிர்ப்போ கருத்தோ தந்தால் போதுமானது. திட்டம் இறுதியானால், திட்டப்பக்கம் தொடங்கி பட்டியலிடலாம். நன்றி.

ஆதரவு[தொகு]

திட்ட எண்ணம் கைவிடப்படுகிறது - மேலும் யாரும் கருத்தளிக்க வேண்டாம்

 1. Symbol support vote.svg ஆதரவு -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 03:19, 1 நவம்பர் 2013 (UTC)
 2. Symbol support vote.svg ஆதரவு --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:20, 1 நவம்பர் 2013 (UTC)

எதிர்ப்பு[தொகு]

திட்ட எண்ணம் கைவிடப்படுகிறது - மேலும் யாரும் கருத்தளிக்க வேண்டாம் --Symbol oppose vote.svg எதிர்ப்பு--Kanags \உரையாடுக 08:20, 1 நவம்பர் 2013 (UTC)

--Natkeeran (பேச்சு) 13:17, 1 நவம்பர் 2013 (UTC)
Symbol oppose vote.svg எதிர்ப்பு--மணியன் (பேச்சு) 15:49, 1 நவம்பர் 2013 (UTC)

நடுநிலை[தொகு]

திட்ட எண்ணம் கைவிடப்படுகிறது - மேலும் யாரும் கருத்தளிக்க வேண்டாம்

 1. Symbol neutral vote.svg நடுநிலை --பழ.இராஜ்குமார் (பேச்சு) 07:02, 1 நவம்பர் 2013 (UTC)

கருத்து[தொகு]

 1. இதுபோன்ற விழாக்களுக்குச் சின்னத்தையே மாற்ற வேண்டுமா என்பதில் எனக்கு முழு உடன்பாடில்லை. முதற்பக்கத்தில் வேறு பகுதியை ஒதுக்கலாமெனக் கருதுகிறேன். கூகுள் நிறுவனத்தாரே மாற்றுகிறார்கள் என்றாலும் அவர்களுடைய முகப்பில் சின்னம் மட்டுமே இருப்பதால் இருக்கலாம். நமக்கு அது உவப்பாகுமா எனத் தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 06:32, 1 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் --செல்வா (பேச்சு) 06:40, 1 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் --Anton·٠•●♥Talk♥●•٠· 06:44, 1 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் --மயூரநாதன் (பேச்சு) 06:45, 1 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:55, 1 நவம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:36, 1 நவம்பர் 2013 (UTC)
//எனக்கு முழு உடன்பாடில்லை// நல்ல கருத்து சுந்தர். உங்களுக்கு இருக்கும் பகுதி உடன்பாடு குறித்த நிலையை விளக்கினால் நன்றாக இருக்கும். அது என் கருத்துக்கு ஆதரவாக இருப்பதால் அதனை அறிய விருப்பம் ;) மேலும், ஒரு நாள் (அதிகபட்சம் பொங்கலுக்கு 3 நாள்) மாற்றுவதில் ஏதேனும் உங்களுக்குக் கருத்து இருப்பின் அதனையும் அறிய விருப்பம்.
விருப்பர்கள்: தங்களின் விருப்பங்களைக் கருத்துகளாகத் தந்தால் முடிவெடுக்க எளிதாக இருக்கும். கருத்துப் புரிதலில் எனக்கும் தெளிவு இருக்கும். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:10, 1 நவம்பர் 2013 (UTC)
சுந்தர் குறிப்பிட்டபடி முதற்பக்கத்தில் வேறு பகுதியை ஒதுக்கினால் நன்றென நினைக்கிறேன். மற்றப்படி, வடிவமைப்பதில் சிக்கல் ஏதும் இல்லை. :) --Anton·٠•●♥Talk♥●•٠· 07:18, 1 நவம்பர் 2013 (UTC)
தற்போதுள்ள சின்னத்தையும் பழைய நிலைக்கு கொண்டு வரலாம் அல்லவா? --Anton·٠•●♥Talk♥●•٠· 06:54, 1 நவம்பர் 2013 (UTC)
ஆம். அண்டன். இயல்பு சின்னத்தை கொண்டு வருவோம். எனக்கென்னவோ அது தான் பிடித்திருக்கிறது. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 07:06, 1 நவம்பர் 2013 (UTC)
தற்போதைய சின்னம் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கும் வண்ணம் இடப்பட்டுள்ளது. இலங்கையில், சேலத்தில், புதுக்கோட்டையில் மேலும் இன்னும் பல இடங்களிலும் முனைப்புடன் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன - நடக்கவும் உள்ளன. எனவே, அங்கு இது தாக்கத்துடன் இருக்கும் என்று நம்பியே விட்டுள்ளேன். வேறெந்த காரணமும் இல்லை ஆன்டன். டிசம்பரிறுதியில் மாற்றலாம் என்றுள்ளேன். நன்றி :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:10, 1 நவம்பர் 2013 (UTC)
எந்தச் சமயத்து, எந்த நாட்டு, எந்த அரசியல் கொண்டாட்டத்துக்காக விக்கி சின்னத்தை மாற்றுவது. மிகவும் ஆபத்தான முன்மாதிரி. முற்றிலும் எதிர்க்கிறேன். --Natkeeran (பேச்சு) 13:18, 1 நவம்பர் 2013 (UTC)👍 விருப்பம் --பயனர் பக்கங்களில் நிறுத்திக் கொள்வதே நன்று. --மணியன் (பேச்சு) 15:49, 1 நவம்பர் 2013 (UTC)
அனைவரது கருத்துக்கும் நன்றிகள். இத்தகைய கண்ணோட்டங்களை நான் ஆய்ந்து பார்க்கவில்லை. பொருத்தருளவும். திட்ட முன்னெடுப்பு கைவிடப்படுகிறது. இனி கருத்திட வேண்டாம் :) நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:52, 1 நவம்பர் 2013 (UTC)

திட்டத்தைக் கைவிட்டது முதிர்ச்சியான முடிவு. பாராட்டுகள். சிறப்பு நாட்களுக்குச் சின்னத்தை மாற்றுவதற்குப் பதில், இவ்வாறான நாட்களுக்கு முதற்பக்கக் கட்டுரைகளை உருவாக்கவும் குறிப்பிட்ட நாட்களில் காட்சிப்படுத்தவும் முனையலாம். இதற்கென தனித்திட்டம் தொடங்கலாம்.--இரவி (பேச்சு) 13:12, 2 நவம்பர் 2013 (UTC)