பயனர் பேச்சு:Rajan s

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Rajan s, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:08, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கம் வேண்டல்[தொகு]

  • இது குறிப்பிட்டுக் காட்டி கேள்வி கேட்டல், விளக்கம் வேண்டல் தானே அன்றி அவதூறோ முன் முடிவோ அன்று.

நீங்கள் இங்கே கீழ்க்காணுமாறு கூறியுள்ளீர்கள்:

கருத்துக்களை இட்ட அதிகாரிகள், நிர்வாகிகள், பயனர்களுக்கு நன்றிகள். 
இங்கு இரு கருத்துக்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எல்லா IP பயனரும் நான் அல்ல. ஆகவே எல்லாவற்றுக்கும் நான் பதிலாளியல்ல.
வன் சொற் பிரயோகத்தில் நானும் ஈடுபட்டுள்ளேன். 
காரணம் - என் பேச்சை யாரும் கண்டுகொள்ளாது தடுப்பதிலும், 
தொகுப்பை மீளமைபப்திலும் ஈடுபட்டனர். 
மேலும் சுப்பிரமணியும் பதில் தாக்குதலில் ஈடுபட்டார். 
பின்னர் முறையாக கருத்திட்ட அதிகாரிகளுக்கு நன்றிகள். 
ஆயினும், வன் சொற் பிரயோகத்தில் ஈடுபட்டதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்.

எல்லா IP பயனரும் நான் அல்ல. ஆகவே எல்லாவற்றுக்கும் நான் பதிலாளியல்ல. என்கிறீர்கள்,

  1. சரி, நீங்கள் எவ்வெவ் ஐ.பி. முகவரிகளைப் பயன்படுத்தினீர்கள்?
  2. நீங்கள் இங்கே இட்ட முறையீடும், ஆலமரத்தில் இங்கே தேனி சுப்பிரமணி மீது மறைவழி பெயரியிலியாய் (உறுதி செய்யப்பட்ட புரோக்ஃசி செர்வர், Confirmed Proxy Server; நிறுவனம்:AnchorFree Ltd network) 46.16.33.233 என்னும் முகவரியில் இருந்து இட்ட முறையீடும் பல வழிகளிலும் ஒன்றுபோலவே உள்ளது. நீங்கள் 46.16.33.233 பயன்படுத்தினீர்களா?
  3. உங்கள் வாய்மொழியாகவே நீங்கள் வன்சொற்களைத் தேனி சுப்பிரமணி மீது கூறினீர்கள் (//வன் சொற் பிரயோகத்தில் நானும் ஈடுபட்டுள்ளேன்//) என்கிறீர்கள். தேனி சுப்பிரமணியின் பேச்சுப்பக்கத்தில் 74.115.3.62 என்னும் ஐ.பி முகவரியில் இருந்து (இதுவும் உறுதிசெய்யப்பட்ட மறைவழி வழங்கி (Confirmed Proxy Server). எழுதியது நீங்களா?
  4. தேனி சுப்பிரமணியின் பேச்சுப்பக்கத்தில் இங்கே 176.56.174.80 என்னும் உறுதிசெய்யப்பட்ட மறைவழி வழங்கி (Confirmed Proxy Server) வழி இட்டது நீங்களா?
  5. நீங்கள் தமிழ் விக்கியில் தேனி சுப்பிரமணியின் உரையாடல்கள் பங்களிப்புகள் பற்றி நன்கு அறிந்திருக்கின்றீர்கள் என்பது உங்கள் வாய்மொழியாகத் தெரிகின்றது; நீங்கள் விக்கியின் முறைகளை நன்கு அறிந்தவர் என்பதும் தெரிகின்றது; மேல்விக்கியில் 07:20, 18 அக்டோபர் 2013 நாள் நேரத்தில் பயனர் இரவி கைப்பாவை நிலை அறிய கோரிக்கை விடும் முன்னதாகவே, நீங்கள் மேல்விக்கியில் 16:49, 17 October 2013‎ என்னும் நாள் நேரத்தில் m:SRCU#Theni.M.Subramani.40ta.wikipedia என்னும் இடத்தில் கோரிக்கையை வைத்திருக்கின்றீர்கள். எனவே விக்கியை நன்கு அறிந்த நீங்கள், தேனி சுப்பிரமணி மீது கடும் புகார் இடும் நீங்கள், தேனி சுப்பிரமணி மீது //வன் சொற் பிரயோகத்தில் ஈடுபட்டதற்காக//க் கூறும் நீங்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் பயனர் வெளியில் வேறு கணக்குகள் ஏதும் வைத்து இருக்கின்றீர்களா? இது கருத்தறியும் நோக்கில்தானே அன்றி அவதூறு அன்று. நீங்கள் குறிப்பிட்ட பயனர்கள் கணக்குகள் (Vaarana18 , 786haja) பயனர் தேனி சுப்பிரமணியின் கைப்பாவை அல்ல என்பது உறுதியாகியுள்ளது. அதாவது 15:06, 17 அக்டோபர் 2013‎ நாள் நேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட உங்கள் பயனர் கணக்கு Rajan s என்பதற்கு முன் ஏதும் பயனர் கணக்கு தமிழ் விக்கியில் இருந்ததா அல்லது இருக்கின்றதா என்பது என் கேள்வி. இல்லை எனில் இல்லை என்று மறுமொழி இடுங்கள். கிடைத்துள்ள தரவுகளின் படி அக்டோபர் 17, 15:06 -உக்குப் புதுப்பயனராகப் பதிவு செய்த நீங்கள், அதே நாளில் அக்டோபர் 17, 2013 அன்று 16:49 என்னும் நேரத்தில் (ஒரு மணி நேரம் 43 மணித்துளிகளுக்குள்) கைப்பாவை அறிய மேல்விக்கியில் வேண்டுகோள் வைத்திருக்கின்றீர்கள். இவ்வளவு அழுத்தமாகவும் விரைவாகவும் இயங்கியுள்ளீர்கள். இவை எல்லாம் வியப்பாக இருப்பதால் உங்களிடம் இருந்து விளக்கம் அறிய கேள்விகள் கேட்டுள்ளேன். நன்றி.--செல்வா (பேச்சு) 17:59, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
செல்வாவின் கேள்விகளுக்கு rajan s விரைவாகப் பதில் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.--Kanags \உரையாடுக 21:13, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆம் அடையாளம் காட்டுபவராக இருந்தாலும் அடையாளம் காட்டாதவறாக இருந்தாலும் விடுப்பாட்டுணர்வைக் காக்க வேண்டும் என்று பல இடங்களில் விக்கிப்பீடியர்கள் வலியுறுத்தினோம். உங்கள் முறையீட்டின்பேரில் நடந்த பேச்சுப்பக்க உரையாடலிலும் நீங்கள் அதைக் காணலாம். அந்நிலையில் மேலே உங்களிடம் சரியான அடிப்படையில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. விரைவில் விளக்கம் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 04:01, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

என்னால் நீங்கள் கேட்ட கேள்விக் எல்லாவற்றிற்கும் தெளிவாக விடையளிக்க முடியும். ஆனால் எனக்குள்ள கேள்விகளுக்கான பதிலை எதிர் பார்க்கிறேன்.

  1. நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. அப்படியிருக்க எதிர்க் கேள்வி எழுப்புவதன் நோக்கம் என்ன? என் கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள் நான் தாராளமாக ஒளிவு மறைவின்றி உங்களுக்கு பதில் சொல்கிறேன்.
  2. என்னிடம் கேள்வி கேட்கும் நீங்கள் எப்போதாவது தேனி. மு. சுப்பிரமணியிடம் கேள்வி கேட்டுள்ளீர்களா? இந்தப் பிரச்சனையின் மூல காரணமே அவர் மூலமாக வந்தது என்பதை அறிய மாட்டீர்களா?
  3. //செல்வாவின் கேள்விகளுக்கு rajan s விரைவாகப் பதில் தர வேண்டும்// சுப்பிரமணியிடம் நீங்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என்னிடம் மட்டும் கேட்கிறீர்கள். அவர் நடந்து கொண்ட விதம் சரியா? பிழையா? அவருக்கு பதிலுக்காக ஒரு வார கால அவகாசம். எனக்கோ "விரைவாக!"
  4. விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு) & விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்#சிக்கலும் தீர்வும் - இந்த விடயம் இருக்கத்தக்க நீங்கள் ஏன் அவசரமாக என்னிடம் கேள்விகள் கேட்கிறீர்கள்?
  5. "சரியான தீர்மானம் எடுக்கும்வரை காத்திருக்கிறேன்" என்று கருத்திட்ட பின் எந்த உரையாடலில் ஈடுபடாமல் இருக்கும் என்னை ஏன் உரையாடலுக்கு அழைக்கிறீர்கள்? சிக்கலை முறையாக படிமுறையாக அணுகலாமா?

--Rajan s (பேச்சு) 12:11, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மறுமொழி[தொகு]

  • நீங்கள் கேட்டது வெறும் கேள்விகள் மட்டும் அல்ல Rajan s. தேனி சுப்பிரமணி மீது இன்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டியுள்ளீர்கள். அதற்கான நடைமுறை த.வி-யில் இருப்பில் இல்லாததால் அது பற்றிய நடைமுறைகளை வகுக்க முனைந்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால் பயனர் பக்கத்தில் விளக்கம் வேண்டி கேள்விகள் கேட்கலாம். சில நேரங்களில் விரைவாக விடைபகர்தல் தேவையாக இருக்கலாம்.
  • உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் மறுமொழிகள் தாருங்கள், அது முறை. தேனி மு சுப்பிரமணியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் மறுமொழி தருவார் (சில தந்திருக்கின்றார்). ஒருசிலர் கேட்ட கேள்விகளையே எல்லோரும் கேட்க வேண்டும் என்று இல்லை. தேனி மு சுப்பிரமணி 10-ஆவது ஆண்டு நிறைவு கூடல் நிகழ்ச்சி பற்றி எதிர்மறையாக வைத்தக் கருத்துகள் எனக்கு ஏற்பில்லை, கசப்பும் வருத்தமும் தந்தது உண்மை. இரவியும் அவருடன் பங்காற்றியவர்களின் அருமையான வழிநடத்தலாலும் மிகக்கடுமையான உழைப்பாலும் மிக இன்பமாக நிறைவெய்திய 10-ஆவது ஆண்டுநிறைவு விழாவின் இனிமையைக் குன்றச்செய்வதாக (எனக்கு) அமைந்ததனந்தன எதிர்மறையாகக் கருத்துகளிட்ட தேனி.மு சுப்பிரமணியின் கருத்துகளும் அவருக்கு முன் கருத்தளித்த சேகரனின் கருத்துகளும். ஆனால் அவற்றுக்கு புருனோவும் பிறரும் நல்ல மறுமொழிகள் தந்திருந்தனர். அக்டோபர் 2013 இல் என் த.வி பங்களிப்புகளைப் பாருங்கள் (உங்களுக்குப் பார்க்கத் தெரியும் என்னும் நம்பிக்கை உள்ளது). நான் அக்டோபர் 7 ஆம் நாள்தான் கனடாவுக்குத் திரும்பினேன். வானூர்தியில் எனக்குப் பின்னே இருந்த பெண்மணி மிகவும் மோசமாக இருமிக்கொண்டே வந்தார். அப்பொழுது தொற்றிய உடல்நலமின்மை இன்னும் இருந்தாலும், கடந்த 3-4 நாள்களாகக் குறைந்துள்ளது. கூடல் பற்றிய கருத்துகளைப் படித்தவுடன் ஏதேனும் எழுத வேண்டும் என்று நினைத்து என் கருத்துகளை அக்டோபர் 12 அன்றுதான் காலம் தாழ்ந்து அங்கே பதிவு செய்தேன். அதில் மூன்றாவது புள்ளிக் கருத்தைப் பாருங்கள். பிணக்குகளைப் பெரிதாக்க வேண்டாமே என்றுதான் அதிகம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மேலும் ஏற்கனவே அக்டோபர் 5 அன்று இரவி 1,40,109 பைட்டு அளவு நெடிய விளக்கவுரையை மிகவும் பொறுப்பாக இட்டிருந்தார். (எவ்வளவு நேரம் ஆயிற்றோ அதனை எழுத! இது அவருடைய பொறுப்புணர்வுக்கும் இன்னும் ஓர் எடுத்துக்காட்டு!) அவர் எழுதிய அந்நேரம் நான் வானூர்தியில் பறந்து கொண்டோ வானூர்தி நிலையத்திலோ இருந்திருக்க வேண்டும். பலவும் விரிவாகப் பேசப்பட்டுவிட்டதே, ஏன் இன்னும் போய் குட்டையைக் குழப்புவானேன் என்றுதான் என் கருத்துகளை மேலே கூறியவாறு இட்டேன். பிணக்குகளைப் பெரிது படுத்துவதால் என்ன பயன் சொல்லுங்கள்! எனவே பயனர் Rajan s, இப்பொழுது உங்களிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமும் விடையும் தருவீர்கள் என்று நம்பிகின்றேன், வேண்டுகின்றேன். இன்னும் சில கேள்விகளும் கேட்கவேண்டும் என்றாலும், இப்பொழுது இன்னொரு கேள்வி மட்டும்: 204.14.77.236 என்னும் மறைவழி பெயரிலி ஐ.பி முகவரையை (confiremd proxy server, organization AnchorFree) நீங்கள் பயன்படுத்தித் தமிழ் விக்கியில் தொகுப்புகள் செய்துள்ளீர்களா (எ.கா அக்டோபர் 15, 2013) ? --செல்வா (பேச்சு) 18:11, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கைப்பாவை நிலை அறிய வேண்டுகோள்[தொகு]

இராசன், நீங்கள் விக்கியைப் பற்றி மிக நன்கு அறிந்தவர் என்பது உங்கள் பங்களிப்புகளில் தெளிவாக இருக்கிறது. இந்நிலையில் பலருடைய மனதிலும் இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என்ற ஐயம் பிறந்துள்ளது. இது தொடர்ந்தால் விக்கி நல்லிணக்கத்துக்கு ஊறு விளையும் என்ற அச்சத்தின் அடிப்படையில் கைப்பாவை நிலையறிய இங்கு வேண்டுகொள் விடுத்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 14:40, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதில்[தொகு]

நான் யார் என்பதையும், நான் பிற பயனர்களின் கைப்பாவையா என்பதையும், என்னுடன் தொடர்புபட்ட ஐ.பி எவை என்பது பற்றிய உங்கள் ஐயப்பாட்டினை கைப்பாவை சோதனை செயற்பாட்டினூடாக அறிந்திருப்பீர்கள் என்று அறிகிறேன். "கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள் நான் தாராளமாக ஒளிவு மறைவின்றி உங்களுக்கு பதில் சொல்கிறேன்" என்று கூறியும் நீங்கள் கேட்கவில்லை. இன்னும் உங்களுக்கு குழப்பம் இருந்தால் முதலில் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். என் கேள்விகளையும் என் கேள்விகளின் நியாயப்பாட்டையும் முதலில் அறியுங்கள். மீண்டும் கூறுகின்றேன் எல்லா IP பயனரும் நான் அல்ல. ஆகவே எல்லாவற்றுக்கும் நான் பதிலாளியல்ல. சுப்பிரமணியின் மெத்தனப் போக்கு இன்று மொத்தமாக பல வடிவங்களில் வருகின்றது என்பது மட்டும் உறுதி. இன்னும் சில விடயங்களை உங்களுக்கு முன் வைக்கின்றேன்.

  • சுப்பிரமணி நடத்திய அல்லது விக்கி பற்றிய ஒன்று கூடல்கள் அல்லது கருத்தரங்குகளில் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி யார் அறிவீர்கள்? அங்கு அவர் விக்கிக்கு வெளியில் தன் நலன் மற்றும் பெருமை பேசிய விடயங்களை அறிவீர்களா?
  • சுப்பிரமணி பற்றி கனடாவிலோ, பெங்களூரிலோ, அவுஸ்திரேவியாவிலோ இருக்கும் உங்களுக்குத் தெரியாது. தேனியில் பிறந்து வளர்ந்த எனக்கு சுப்பிரமணி ஒன்றும் புதியவரல்ல. அவர் அங்கு நடத்திய சாதி பாகுபாடு பற்றி எனக்குத் தெரியும். அதை விக்கியிலும் மேற்கொள்கிறார். தன் சாதிக் கட்டுரைகளை நன்றாக மெருகூட்டி வைப்பார், பிற சாதிக் கட்டுரைகளைத் தொகுத்தால், மீளமைப்பார் அல்லது பயனரைத் தடை செய்வார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அவர் தொகுத்தால் விக்கிக்கு உட்பட்ட கட்டுரை. நாங்கள் தொகுத்தால் விக்கியாக்கம் தேவை!? ஆதார இணைப்பு வேண்டுமா?
  • எனக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலைப் பாருங்கள். ஒரு விக்கி நிர்வாகி இப்படியும் செய்யலாமா?

நான் இங்கு வீண் வம்புக்காக வரவில்லை. நியாயம் கேட்டே வந்துள்ளேன். பயணர் கணக்கு ஆரம்பித்து சில மணி நேரங்களில் மேல் விக்கியில் முறையிட்டதாக வியக்க வேண்டாம். ஐபி ஊடாக பல ஆண்டுகளுக்கு முன் விக்கியில் பங்களித்து, ஆங்கில விக்கியில் தானியங்கி இயக்கி அது இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கச் செய்துள்ளேன். இன்னும் பல கூறி பெருமை பேச விரும்பவில்லை. தமிழ் விக்கிப் பக்கம் ஐ.பியில் வந்தது இங்கு நிலையான இடம் வேண்டாம் என்ற நோக்கில்தான். அரசியல்போல் காணப்படும் இடத்தில் தன்னார்வ பங்களிப்பு ஆற்ற முடியாது. குறிப்பு: கைப்பாவை கணக்கை நானே சோதித்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்! --Rajan s (பேச்சு) 01:46, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#கேள்விகளும் பதில்களும்

மேலுள்ள இடத்தில் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள். மற்ற பயனர்கள் கேட்டும் பதிலளிக்காமல் இருக்கும் கேள்விகளும் அங்கு உள்ளன. வருங்காலத்தில் தேனியார் பதிலளிக்காத கேள்விகளுக்கு தனிப்பக்கம் உருவாக்கும் போது இக்கேள்விகளை தொகுப்பது எளிதாகும். ஒவ்வொரு இடத்திலும் கேள்விகள் இருந்தால் கவனக்குறைவில் ஏதும் விடுபட்டு போகலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:04, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி. --Rajan s (பேச்சு) 07:13, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
//எல்லா IP பயனரும் நான் அல்ல. ஆகவே எல்லாவற்றுக்கும் நான் பதிலாளியல்ல// அப்போ குறைந்தது ஒரு IP ஆவது உங்களதாக இருக்க வேண்டும். அது அல்லது அவை எவை?
//கைப்பாவை கணக்கை நானே சோதித்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்!// அப்போ எல்லாமே அங்கு நீங்கள் தானா? உங்களதை நீங்களே சோதிக்கும் உரிமையும் அங்கு உங்களுக்குத் தரப்பட்டிருக்கிறதா? அப்போ உங்கள் செயலில் தொழில்நுட்பம் புகுந்து விளையாடியுள்ளது.--Kanags \உரையாடுக 07:42, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
என் கருத்துக்களை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை. நான் தற்போது சேர்த்த 3 கேள்விகளில் நான் ஏன் நியாயம் கேட்கிறேன் என்பதற்கான கருத்துள்ளது. இது இன்னும் நீளும். சங்கடமாக விடயங்களை இதுவரை கொண்டு வரவில்லை! நான் யார் என்பதை ஆராயாது என் நியாயங்களை ஆராய்ந்தால் சிறப்பான கட்டத்திற்கு நுழையலாம். குறியீட்டு முறை விளக்கம்: a) All IP users <> Rajan. Therefore, Rajan <> IP user. b) Rajan = Steward OR Rajan can make Steward request.
Duck or Rabbit

--Rajan s (பேச்சு) 11:30, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இராசன், உங்களுக்கு Steward அணுக்கம் இருப்பதாகக் கூறுவது திசை திருப்புவதற்காகத்தான் என நம்ப விரும்புகிறேன். ;) -- சுந்தர் \பேச்சு 13:00, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மறுமொழி-2[தொகு]

இராசன், நான் என் முதல் மறுமொழியில் கூறியது போல நீங்கள் கேட்டவை வெறும் கேள்விகள் அல்ல. ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டை (நிருவாகப் பொறுப்பில் இருந்து ஒருவரை நீக்க) வலியுறுத்தி முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள். அவற்றை முறையாகத்தான் அணுக வேண்டும். அப்படி ஒருவரை குற்றச்சாட்டின் பேரில் நிருவாகப் பொறுப்பில் இருந்து நீக்க தமிழ் விக்கிப்பீடியாவில் ஏதும் இருப்பான நடைமுறைகள் இல்லை (இதை நீங்களும் அறிவீர்கள்). அவற்றை உருவாக்கி அதன்பின்தான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று கூறினேன். ஆனால் நான் உங்களிடம் கேட்டவை தெளிவான கேள்விகள். அவற்றுக்கு நீங்கள் இதுவரை சரியான மறுமொழிகள் ஏதும் தரவில்லை. போதாதற்கு விக்கிக்கு வெளியே தேனி சுப்பிரமணி நடந்துகொண்டதைப்பற்றியெல்லாம் இங்கு இழுக்கின்றீர்கள் (தேனியில் பிறந்து வளர்ந்த எனக்கு சுப்பிரமணி ஒன்றும் புதியவரல்ல. அவர் அங்கு நடத்திய சாதி பாகுபாடு பற்றி எனக்குத் தெரியும். ). தேனி சுப்பிரமணி கூடல் நிகழ்ச்சியின் போது பெருமை பேசியதாகக் குற்றம் சாட்டும் நீங்கள் இன்னும் பல கூறி பெருமை பேச விரும்பவில்லை. என்று நீங்களே உங்கள் பெருமை பேசுகின்றீர்கள். அதுமட்டும் அல்லாமல் குறிப்பு: கைப்பாவை கணக்கை நானே சோதித்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்! என்றும் b) Rajan = Steward OR Rajan can make Steward request. என்றும் கூறுகின்றீர்கள். தலைமைப்பொறுப்பாளராக (Steward) நீங்கள் இருந்தாலோ அப்படியான அணுக்கம் உடையவரின் அணுக்கம் இருந்தாலோ உங்கள் செயற்பாடுகள் இன்னும் கவலையையைத்தான் தருகின்றது. நீங்கள் செய்வது அறமானதா என்னும் கேள்வி எழுகின்றது. மேலும் a) All IP users <> Rajan. Therefore, Rajan <> IP user. என்னும் பொழுது உங்கள் ஏரணம் (logic) புரியவில்லை. எல்லாப் பெயரிலி ஐ.பி பயனாளர்களும் இராசன் இல்லை என்பது சரி, புரிந்துகொள்ளக்கூடியது, ஆனால் அது எப்படி Therefore, Rajan <> IP user என்று பொருள் தரும்? ஒரு ஐ.பி-யோ பல ஐ.பி-யோ நீங்களாக இருக்கலாம் என்பதுதானே பொருள். அதனால்தான் ஐ.பி. முகவரிகளைத் தந்து இவற்றில் எது அல்லது எவையெவை நீங்கள் பயன்படுத்தியவை என்று கேட்டேன். அதற்கு நீங்கள் இன்னும் மறுமொழி தரவில்லை. மிக எளிதாகத் தரக்கூடிய விடைகள். நீங்கள் ஒத்துழைப்பைத் தர இதுவரை மறுத்து வந்துள்ளீர்கள். நீங்கள் யார் என்பதை ஆராயவில்லை, நீங்கள் பெயரிலியாக ஐ.பி. முகவரிகளில் இருந்து செய்யப்பட்டவை நீங்கள்தான் எனில் அவற்றுக்கு விளக்கம் தேவைப்படுகின்றது. சிலவற்றில்வழி கடுமையான மிரட்டல்கள் கூட விடப்பட்டுள்ளன. இவை விக்கியின் நலத்துக்குப் பெருங்கேடு தரவல்லது. ஆகவே விரைவில் உங்களிடம் இருந்து விடைகள் எதிர்பார்க்கின்றேன்.--செல்வா (பேச்சு) 04:55, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  • //எனக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலைப் பாருங்கள். ஒரு விக்கி நிர்வாகி இப்படியும் செய்யலாமா?// பார்த்தேன். அது அவர் அனுப்பியதாக இருந்தால், விக்கிக்கு வெளியே என்றாலும், கட்டாயம் கண்டிக்கத்தக்கதே. பொறுப்பற்ற செயலே. ஆனால் அது அவர்தான் எழுதினாரா என்பது எங்களுக்குத் தெரியாது. பலவகையான பொய் மின்னஞ்சல்களும் பெயரிலியாக ஐ.பி. முகவரிவழியாகவும் நடக்கும் உரையாடல்களும் பெரும் குழப்பத்தையும் நம்பிக்கையின்மையையுமே வளர்த்திருக்கின்றன.--செல்வா (பேச்சு) 05:01, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாகப் பொறுப்பை மீளப்பெறுவது பற்றிய கேள்விகள்[தொகு]

இங்கே பல கேள்விகளை எழுப்பியுள்ளேன். த.வி-யில் உள்ள பயனர்களும் நிருவாகிகளும் அதிகாரிகளும், குற்றச்சாட்டை முன்வைத்த Rajan s அவர்களும், குற்றம் சாட்டப்பட்ட தேனி சுப்பிரமணி அவர்களும் பார்க்க வேண்டும். ஆலமரத்தடியிலும் இட்டுள்ளேன்--செல்வா (பேச்சு) 06:46, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதில் 2[தொகு]

நான் பங்களித்த ஐபிகளைக் கூறுவதால் என்ன பயன்? என்னை குற்றஞ்சாட்ட வகை தேடுகிறீர்களா? ஒரு நபரின் ஐபி என்ன என்று கேட்கலாமா? இதற்கு விக்கியில் விதி இருக்கிறதா? இது தனி மனித அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்கும் விடயம் இல்லையா? ஐபியைக் குறிப்பிடுவதால் எனக்கு நேரும் சிக்கல்களுக்கு யார் பொறுப்பெடுப்பது? எனக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அசிங்கமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பாலியல் அசிங்கமாக (ஆண் ஆணுடன் உடலுறவு கொள்ளும்) படங்கள் தாங்கிய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதைச் செய்தது யார்? தேனி சுப்பிரமணியின் மின்னஞ்சல் முகவரியில் இருந்தும் வந்துள்ளன.

தேனி சுப்பிரமணி அரசுக்கு மடல் எழுதிய விடயம் எத்தனை விக்கிப்பீடியர்களுக்குத் தெரியும். தெரிந்தும் மறைக்கிறீர்களா? இதை இங்கு வெளியிட வைப்பீர்கள் போல் உள்ளது.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் என்னிடம் தேனி சுப்பிரமணியின் விக்கி மீறல் குற்றச்சாட்டுக்கள் பல இருக்கின்றன. நான் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தால், இங்குதான் சிக்கல் மேலும் வளரும். பெண்களும் சிறுவர்களும் பயன்படுத்தும் விக்கிப்பீடியாவில் அசிங்கங்கள் செய்திகள் வெளி வரும். அது மட்டுமல்ல உங்கள் கேள்விகள் அரசையும் இங்கு இழுத்துவிட்டு சிக்கல்களைப் பெரிதாக்கப் போகின்றது.

எனக்கு மின்னஞ்சல் மிரட்டல் வந்தால் அது போலி, தேனி சுப்பிரமணிக்கு என்றால் அசலா? --Rajan s (பேச்சு) 03:20, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்கள் குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். கட்டாயம் தீர்வு கிடைக்கும். அதே வேளையில் அது முடியும்வரை நீங்கள் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஐ.பி. முகவரியைத் தெரிவிக்காவிட்டாலும் மற்ற கேள்விகளுக்கு நீங்கள் விடையளித்துதான் ஆகவேண்டும். -- சுந்தர் \பேச்சு 04:13, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி. என்ன கேள்விகள்? நான் பதிலளிக்கத் தயார். --Rajan s (பேச்சு) 04:15, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இதே பக்கத்தில் அக்டோபர் 20 அன்று 5 கேள்விகள் கேட்டேன், பாருங்கள். நீங்கள் விடை பகராமல் மேலும் கேள்விகள் கேட்டதை ஒட்டி என் மறுமொழியில் இன்னும் ஒரு கேள்வியாகக் கீழ்க்காணும் கேள்வியையும் கேட்டேன்:

இப்பொழுது இன்னொரு கேள்வி மட்டும்: 204.14.77.236 என்னும் மறைவழி பெயரிலி ஐ.பி முகவரையை (confiremd proxy server, organization AnchorFree) நீங்கள் பயன்படுத்தித் தமிழ் விக்கியில் தொகுப்புகள் செய்துள்ளீர்களா (எ.கா அக்டோபர் 15, 2013) ?


Rajan s என்னும் உங்கள் பயனர் கணக்கின் ஐ.பி. முகவரியைக் கேட்கவில்லை. பிற பல உறுதி செய்யப்பட்ட மறைவழி வழங்கிகளில் (confiremd proxy server) இருந்து பெயரிலியாகச் செய்யப்பட்ட பதிவுகளில் எவையெவை உங்களுடையது என்றுதான் கேட்கின்றோம், குறிப்பாக அக்டோபர் 2013 ஆம் மாதத்தில். அந்த ஐ.பி முகவரிகள்தான் தெரியுமே! இக்கேள்வியைக் கேட்பதற்கும் காரணமே உங்கள் வாய்மொழியாக நீங்களே ஐ.பி. முகவரியைப் பயன்படுத்தினீர்கள் என்று கூறியதாலேயே. உங்களிடம் கேள்விகள் கேட்டு 11 நாள்கள் ஆகிவிட்டன. விடைபகராமல் பல உரையாடல்கள் நிகழ்த்தியுள்ளீர்கள். தேனி சுப்பிரமணியிடம் பலரும் பல கேள்விகள் கேட்டிருக்கின்றார்கள். பல்வேறு திருத்த நடவடிக்கைகளும் பரிந்துரைத்தும் மேற்கொண்டும் வருகின்றார்கள். எனவே இங்கே உங்கள் பேச்சுப்பக்கத்தில் கேட்ட கேள்விகளுக்கு உங்கள் விடைகளை விரைவில் எதிர்பார்க்கின்றேன். --செல்வா (பேச்சு) 15:27, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மறைவழி பெயரிலி ஐ.பி முகவரையை பயன்படுத்தித் தமிழ் விக்கியில் தொகுப்புகள் செய்யவில்லை. ஆனால், என் அலுவலக, வீட்டு ஐ.பி முகவரிகளை வெளிப்படுத்த முடியாது. அதனால் எனக்கு பல பாதிப்புக்கள் ஏற்படும்.--Rajan s (பேச்சு) 00:50, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
உங்கள் வீட்டு, அலுவலக ஐ.பி. முகவரிகளைக் கேட்கவில்லை. நீங்கள் இங்கே இட்ட முறையீடும், ஆலமரத்தில் இங்கே தேனி சுப்பிரமணி மீது மறைவழி பெயரியிலியாய் (உறுதி செய்யப்பட்ட புரோக்ஃசி செர்வர், Confirmed Proxy Server; நிறுவனம்:AnchorFree Ltd network) 46.16.33.233 என்னும் முகவரியில் இருந்து இட்ட முறையீடும் பல வழிகளிலும் ஒன்றுபோலவே உள்ளது. நீங்கள் 46.16.33.233 பயன்படுத்தினீர்களா? --செல்வா (பேச்சு) 00:55, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இல்லை, நான் ஏற்கெனவே சிறு சிறு கேள்விகள்தான் கேட்டிருந்தேன் (மறைவழி பெயரிலி ஐ.பி அல்ல). ஆனால், நான் குற்றம் சுமத்தும்போது ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளை எடுத்து என் பயனர் முகவரியூடாகச் சீர்படுத்திக் கேட்டேன். அதனால்தான் எல்லா ஐபியும் நான் அல்ல என்றேன். பலர் (ஐபி முகவரிகள்) தயங்கிய அல்லது கடுமையாக நடந்து கொண்ட முறைகளை தவிர்த்து, முறையாக கேள்வி கேட்க ஆரம்பித்தேன். தேனி சுப்பிரமணியால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவரின் நிலையைப் பாருங்கள். பார்க்க: பயனர் பேச்சு:Theni.M.Subramani#பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு // காப்பிலியர் என்ற சொல்லை மறைத்து விடாதீர்.merge to vokkaligar என்ற வாசகத்தை அகற்றியதற்கு மன்னிக்கவும் எனக்கு அதை அகற்ற கூடாது என்பது தெரியாது நான் விக்கிபீடியாவிற்கு புதியவன். மேலும் sathyaprasanna என்ற பயனர் தடையை அகற்றுமாறு கேட்டுகொள்கிறேன். // இப்படித்தான், எந்தவித உதவியும் செய்யாது காவல்துறைபோன்று விக்கிக்குள் செயற்படுவார். ஆனால் விக்கிக்கு வெளியில் பிரச்சாரம் செய்ய முன் நிற்பார். சோலியன் குடுமி சும்மா ஆடுமா? என்பதற்கு அர்த்தம் உங்களுக்கு நன்கு தெரியும்! ஆகவே, விக்கியில் நடந்த அநியாயமான விடயங்களைப் பார்த்தேன். தேனி சுப்பிரமணியை குற்றம் சாட்டுபவர்கள் முறையான அதாரம் இன்றி இருப்பதையும் பார்த்தேன். அதனால் செயற்பட முடிவெடுத்தேன். ஆதாரங்கள் உள்ள நான் புதிதாகவும், குழப்பம் மிக்க வேளையிலும் செயற்பட்டதால் என்னையும் பலர் குழப்பவாதியாகப் பார்க்கின்றனர். "சத்யமேவ ஜெயதே". --Rajan s (பேச்சு) 01:20, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]


யார் முகவரியில் இருந்து வரும்மாதிரியும் மின்னஞ்சல்கள் வருமாறு செய்வது எளிது. ஆகவே குறிப்பிட்ட பயனர்களைப் பற்றிய குறிப்புக்களை உடனடியாக நீக்குங்கள். மின்னஞ்சல் என்ன ஐ.பி இருந்து வந்தது என்று குறிப்பிடுங்கள். இதே போன்று மேம்போக்காக இனிமேலும் குற்றச்சாடுக்களை முன்வைத்தால் நீங்கள் தடை செய்யப்படுவீர்கள். --Natkeeran (பேச்சு) 20:41, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் தடை செய்வதாய் இருந்தால் தடை செய்யுங்கள். என் கருத்துச் சுதந்திரம் விக்கிக்கு வெளியிலும் அதிகமாக செயற்படும். தேனி சுப்பிரமணி தனக்கு மின்னஞ்சல்கள் வந்ததாகக் குறிப்பிட்டாரே, நீங்கள் குறிப்பிட்டதுபோல் அவரோ, அவருக்கு வேண்டியவர்களோ அவ்வாறு செய்திருக்கலாம் அல்லவா? திரும்பவும் சொல்கிறேன் "தேனி சுப்பிரமணியின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து மின்னஞ்சல்கள் வந்துள்ளன". இது போலியா, அசலா என்று எனக்குத் தெரியாது. தேவையென்றால், உங்களுக்கு திரைக்காட்சியினை பதிவேற்றி காட்சிப்படுத்துகிறேன். --Rajan s (பேச்சு) 00:32, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நடவடிக்கை தேவை[தொகு]

இராசன் நீங்கள் //எனக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அசிங்கமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பாலியல் அசிங்கமாக (ஆண் ஆணுடன் உடலுறவு கொள்ளும்) படங்கள் தாங்கிய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதைச் செய்தது யார்? தேனி சுப்பிரமணியின் மின்னஞ்சல் முகவரியில் இருந்தும் வந்துள்ளன.// என்று எழுதியுள்ளீர்கள். இவை கடுமையான குற்றச்சாட்டுகள். கொலை மிரட்டல் அனுப்பியது யாராக இருந்தாலும் அவர்கள் மீது விக்கிப்பீடியா தக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். விக்கிப்பீடியாவையும் தாண்டி காவல் துறையினரிடம் முறையீட்டை வைக்கவேண்டும். நீங்கள் முன் வைத்திருப்பது மிகவும் கவலைதரும் குற்றச்சாட்டு. தக்க ஆதாரங்களை விக்கிப்பீடியாவின் அதிகாரிளின் ஒருவரிடம் (மயூரநாதன், சுந்தர், இரவி, நற்கீரன்) சமர்ப்பியுங்கள். --செல்வா (பேச்சு) 18:55, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிகவும் நன்றி ஐயா. நான் இங்கு குற்றச்சாட்டுக்கள் வைத்த பிறகுதான் எனக்கு மின்னஞ்சல்கள் வந்தன. விக்கிப்பீடியா விடயமாக நான் மின்னஞ்சல் அனுப்பிய ஒரே ஒருவர் தேனி சுப்பிரமணி மட்டும்தான். மற்ற விக்கிப்பீடியர்களுக்குத் தெரியாது. மற்றும்படி, என் மின்னஞ்சலை விக்கிப்பீடியாவின் தகவலில் இருந்தும் அறியலாம். அதற்கான நான் மற்றவர்களை குற்றம் சுமத்த வரவில்லை. எல்லோராலும் விக்கிப்பீடியாவின் தகவலில் இருந்தும் அறிய முடியாது. என்னை இதுவரை நேரடியாகக் கண்டவர்கள் யாரும் இல்லை என்பதால் அந்த மிரட்டல்கள் பற்றி நான் பெரிதுபடுத்தவில்லை. எப்படி என்னுடன் மற்றவர்கள் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்பதைக்காட்டவே இவற்றை வெளிப்படுத்தினேன். என் முழு விபரங்களையும் வெளியிட முடியும், ஆயினும் என் பாதுகாப்புக் கருதியே வெளியிடவில்லை. //தக்க ஆதாரங்களை விக்கிப்பீடியாவின் அதிகாரிளின் ஒருவரிடம் (மயூரநாதன், சுந்தர், இரவி, நற்கீரன்) சமர்ப்பியுங்கள்.// மன்னிக்கவும். எனக்கு இவர்களில் நம்பிக்கையில்லை. நான் இவர்களுடன் தொடர்பு கொண்டால் என் ஐபி அவர்களுக்குத் தெரிந்து விடும். இரகசியம் இரகசியமே. யாரையும் நம்ப முடியாது. என்னை குற்றவாளியாகவே முடிவு கட்டி அணுகுகின்றார்கள். இப்போது தடை மிரட்டலும்கூட! நன்றி உங்கள் சினேக பூர்வமான வார்த்தைகளுக்கு!! --Rajan s (பேச்சு) 00:48, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
எங்கள் யாருக்கும் அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், இது போன்ற மடல்களை நுணுகியறிந்து எங்கிருந்து வந்தது எனக் கண்டறியும் வல்லுனர்கள் உள்ளார்கள், அவர்களை அணுகலாம். அதுபோன்ற நபர் அல்லது நிறுவனத்தின் தொடர்பு முகவரி வேண்டுமானால் நான் சுட்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:39, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rajan_s&oldid=1538130" இலிருந்து மீள்விக்கப்பட்டது