முகம்மது ஷாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகம்மது ஷாமி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முகம்மது ஷாமி
பிறப்பு9 மார்ச்சு 1990 (1990-03-09) (அகவை 30)
சகாசுப்பூர், அம்ரோகா அருகிலுள்ள சிற்றூர், இந்தியா [1]
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப் பந்துவீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 279)நவம்பர் 6 2013 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுபெப்ரவரி 6 2014 எ நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 195)சனவரி 6 2013 எ பாக்கித்தான்
கடைசி ஒநாபசனவரி 31 2014 எ நியூசிலாந்து
ஒநாப சட்டை எண்11
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010/11–நடப்புவங்காளம்
2012–2013கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2014-நடப்புடெல்லி டேர்டெவில்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ தர
ஆட்டங்கள் 4 25 22 44
ஓட்டங்கள் 18 39 248 135
மட்டையாட்ட சராசரி 3.60 7.80 11.00 7.94
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 11 14 33* 26
வீசிய பந்துகள் 985 1267 4,434 2174
வீழ்த்தல்கள் 21 41 88 73
பந்துவீச்சு சராசரி 27.47 29.07 26.63 25.89
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 4 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 2 0
சிறந்த பந்துவீச்சு 5/47 3/42 11/151 4/62
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 3/– 7/– 14/–
மூலம்: Cricinfo, திசம்பர் 12 2013

முகம்மது ஷாமி (Mohammed Shami, பிறப்பு மார்ச் 9, 1990, ஜோனகர், வங்காளம்) தேர்வுத் துடுப்பாட்டங்களிலும் ஒருநாள் துடுப்பாட்டங்களிலும், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடும் வேகப் பந்து வீச்சாளர் ஆவார். உள்நாட்டுப் போட்டிகளில் மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணிக்காக ஆடுகிறார்.[2] மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுகிறார்.[3][4][5] ஜனவரி, 2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களை மெய்டனாக வீசி சாதனை படைத்தார். மேலும் நவம்பர் , 2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

முகமது ஷாமி மார்ச் 9, 1990 இல் ஷஹாஸ்பூர் கிராமத்தில் , அம்ரோகா மாவட்டம், உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார்.[6] இவரின் தந்தை உழவர் ஆவார். இவரின் தந்தையும் இளவயதில் விரைவு வீச்சாளராக இருந்துள்ளார். இவருக்கு ஒரு சகோதரியும் , மூன்று சகோதரர்களும் உள்ளனர்.இவர்கள் மூன்று பேருமே விரைவு வீச்சாளர்களாக வேண்டுமென விரும்பினார்கள்.[7] ஷாமியின் பந்துவீச்சும் திறனைக் கண்டறிந்த இவரின் தந்தை இவரை தனது கிராமத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொராதாபாத் மாவட்டத்தில் பயிற்சி பெறச் செய்தார். அங்குள்ள பத்ருதீன் சித்திக்கிடம் என்பவரிடம் இவர் பயிற்சி செய்தார்.

இவரைப் பற்றி இவரின் பயிற்சியாளர் பின்வருமாறு கூறுகிறார்.

நான் ஷாமியை முதன் முதலில் அவன் வலைப் பயிற்சியில் பந்து வீசியதைப் பார்த்தபோது அவருக்கு வயது 15 இருக்கும்.நான் பார்த்த உடனே அவர் சராசரியான நபர் இல்லை என்றும் அவருக்கு அபரிமிதமான திறமைகள் இருந்ததையும் நான் அறிந்தேன். எனவே அவனுக்கு நான் பயிற்சியளிக்க முடிவு செய்தேன். அவனை நான் உத்தரப் பிரதேச மாநில தொடருக்குக்காக தயார் செய்தேன். ஏனெனில் அந்தக் காலத்தில் சங்க துடுப்பாட்டங்கள் இல்லை. தொடர்ச்சியாகவும், கடினமாகவும் அவர் பயிற்சியினை மேற்கொண்டார். பயிற்சியில் இருந்து ஒருநாளும் அவர் விடுப்பு எடுத்தது இல்லை. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டித் தொடரில் சிறப்பாகப் பந்துவீசினார். ஆனால் சில அரசியல் காரணங்களினால் அவர் மாநில அணியில் தேர்வாகவில்லை. எனவே அவர்களின் பெற்றோர்களிடம் அவனை கொல்கத்தாவிற்கு அனுப்ப பரிந்துரைத்தேன் எனக் கூறினார்.

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.இந்த அணியின் பந்துவீச்சு தலைமைப் பயிற்சியாளராக பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வசீம் அக்ரம் இருந்தார். அவரிடம் இருந்து சில பந்துவீச்சு நுனுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இந்தத் தொடரின் சில போட்டிகளில் மட்டுமே இவர் பந்து வீசினார். 2012 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இந்த அணி கோப்பை வெல்ல உதவியாக இருந்தார்.

2013 ஆம் ஆண்டில் இவர் சிறப்பாக செயல்பட்டதனால் 2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் இவரை 4.25 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. இந்தத் தொடரிலும் 3 போட்டிகள் மட்டுமே விளையாடி 78ஓட்டங்களை வீட்டுக் கொடுத்து 1 இலக்குகளை மட்டுமே கைப்பற்றினார்.[8]

ஆட்டநாயகன் விருது[தொகு]

வ எ எதிரணி இடம் ஆண்டு செயல்பாடு முடிவு
1 மேற்கிந்தியத் தீவுகள் பெரோசா கோட்லா விளையாட்டரங்கம் 2014 மட்டையாடவில்லை; 9.3-0-36-4  இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[9]
2 மேற்கிந்தியத் தீவுகள் மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம் 2015 8-0-35-3 ; மட்டையாடவில்லை  இந்தியா 4 இலக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.[10]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Small-town boy Mohammed Shami wins hearts
  2. "Mohammed Shami", Cricinfo, 2018-05-20 அன்று பார்க்கப்பட்டது
  3. "'Deceptive' Shami earns praise", Cricinfo (in ஆங்கிலம்), 2018-05-20 அன்று பார்க்கப்பட்டது
  4. "Mohammed Shami Profile - ICC Ranking, Age, Career Info & Stats", Cricbuzz (in ஆங்கிலம்), 2018-05-20 அன்று பார்க்கப்பட்டது
  5. "Profile, Photos, Records and Videos", timesofindia.indiatimes.com, 2018-05-20 அன்று பார்க்கப்பட்டது
  6. http://timesofindia.indiatimes.com/sports/india-in-zimbabwe/top-stories/Power-play-Even-cuts-cant-deny-Shamis-Sahaspur-village/articleshow/46618117.cms
  7. "Farmer's son Mohammad Shami swings it for team India". Hindustan Times. பார்த்த நாள் 15 February 2015.
  8. "IPLT20.com - Indian Premier League Official Website", www.iplt20.com (in ஆங்கிலம்), 2018-05-20 அன்று பார்க்கப்பட்டது
  9. "India v West Indies at Delhi, Oct 11, 2014".
  10. "India vs West Indies, CWC, 2015". India Today (March 6, 2015). பார்த்த நாள் March 6, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_ஷாமி&oldid=2711763" இருந்து மீள்விக்கப்பட்டது