பெரியபாபுசமுத்திரம்
பெரியபாபுசமுத்திரம்
Periyababusamudram | |
---|---|
ஊராட்சி | |
அடைபெயர்(கள்): PBS | |
ஆள்கூறுகள்: 11°56′30″N 79°41′01″E / 11.9415340°N 79.6835375°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பகுதி | தொண்டை நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
வட்டம் | விக்கிரவாண்டி |
அரசு | |
• வகை | ஊராட்சி |
• நிர்வாகம் | பெரியபாபுசமுத்திரம் ஊராட்சி |
• மக்களவை உறுப்பினர் | து. இரவிக்குமார் (விசிக) |
• சட்டமன்ற உறுப்பினர் | எம். சக்கரபாணி (அதிமுக) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 605102[1] |
தொலைபேசி குறியீடு | +91–0413(STD Code) |
வாகனப் பதிவு | TN–32 |
சென்னையிலிருந்து தொலைவு | 165 கி.மீ (103 மைல்) |
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 15 கி.மீ (9 மைல்) |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 24 கி.மீ (15 மைல்) |
திண்டிவனத்திலிருந்து தொலைவு | 38 கி.மீ (24 மைல்) |
காலநிலை | தட்பவெப்ப நிலை (கோப்பென்) |
பெரியபாபுசமுத்திரம் (Periyababusamudram அல்லது Periyababusamuthiram), தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[2][3][4] இக்கிராமம், வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[5] இந்த ஊராட்சி பாண்டிச்சேரி மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
[தொகு]இக்கிராமத்தில் வன்னிய குல சத்திரிய (வன்னிய கவுண்டர்) சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர், அதற்கு அடுத்தபடியாக ஆதி திராவிடர்கள், நாயுடுகள், குயவர்கள் மற்றும் வண்ணார்கள் ஆகிய சமூக மக்கள் வாழ்கின்றனர்.
போக்குவரத்து
[தொகு]இக்கிராமத்திலிருந்து புதுச்சேரி கிழக்கு திசையில் 18 கி.மீ தொலைவிலும், விழுப்புரம் மேற்கு திசையில் 23 கி.மீ தொலைவிலும், கடலூர் தென்கிழக்கு திசையில் 21 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கண்டமங்கலம் நகரம், விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, இங்கிருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் செல்கின்றன. இக்கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கலித்திராம்பட்டு கிராமத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு பேருந்துகள் செல்கின்றது.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, இக்கிராமத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சின்னபாபுசமுத்திரம் தொடருந்து நிலையம், இக்கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தொடருந்து நிலையம் வழியாக புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தொடருந்துகள் செல்கின்றன.[6]
இக்கிராமத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி விமான நிலையம் ஆகும். இது இங்கிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் அருகிலுள்ள பெரிய விமான நிலையம், 143 கி.மீ தொலைவில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் ஆகும் மற்றும் 192 கி.மீ தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் அடுத்த மிக அருகில் உள்ள பெரிய விமான நிலையம் ஆகும்.
பொருளாதாரம்
[தொகு]இக்கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு நெல், கரும்பு, உளுந்து, மலாட்டை, மரவள்ளி போன்றவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் சிலர் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள்.
கோயில்கள்
[தொகு]- புளியம்பட்டு மாரியம்மன் கோயில்
- பெரியாண்டவர் சன்னதி
- ஓங்காரேசுவரர் (சிவன்) திருவுடையார் கோயில்
- திரௌபதி அம்மன் கோயில்
- பிள்ளையார் கோயில்
- பெருமாள் கோயில்
- அய்யனார் கோயில்
இக்கிராமத்தில் சுமார் 80 அடி உயர தேர் உள்ளது மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறுகிறது.
தெருக்கள்
[தொகு]- ஆலஞ்சாலை
- தேரடிதெரு
- பிள்ளையார் கோயில் தெரு
- அண்ணா நகர்
- அய்யனார் கோயில் தெரு
- வானூர் ரோடு
- குயவர் தெரு
- பாரதி வீதி
- குறுக்கு தெரு
- ஏரிக்கரை தெரு
- பெரியாபாபுசமுத்திரம் காலனி
அருகிலுள்ள நகரங்கள்
[தொகு]- புதுச்சேரி (18 கி.மீ.)
- கண்டமங்கலம் (3 கி.மீ.)
- வில்லியனூர் (11 கி.மீ.)
- மதகடிப்பட்டு (8 கி.மீ.)
- திருக்கனூர் (12 கி.மீ.)
- வானூர் (17 கி.மீ.)
- சேதராப்பட்டு (16 கி.மீ.)
வசதிகள்
[தொகு]- அரசு உயர்நிலைப்பள்ளி
- அங்கன்வாடி மையம்
- துணை சுகாதார நிலையம்
- கிராம நிர்வாக அலுவலகம்
- ஊராட்சி மன்ற அலுவலகம்
- நியாயவிலை கடை
- நூலகம்
- அஞ்சலகம்
முக்கிய அரசியல் கட்சிகள்
[தொகு]இக்கிராமத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள்;
படக்காட்சிகள்
[தொகு]-
அர்த்தநாரீசுவரர் சிலை
-
அக்னியில் தோன்றிய பிடாரி (திரௌபதி)
-
திரௌபதி அம்மன் ஆலயம்
-
திரௌபதி அம்மன் கோயில்
-
பம்பை ஆறு
-
பிள்ளையார் கோயில்
-
அரசு சுகாதார நிலையம்
-
நூலகம்
-
பெரியாண்டவர் சன்னதி
-
ஓங்காரேசுவரர் ஆலயம்
-
அய்யனார் கோயில்
-
ஊராட்சிமன்ற அலுவலம்
-
கிராம நிர்வாக அலுவலம்
-
அஞ்சலகம்
-
காலைப்பொழுதில் பெரியபாபுசமுத்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pin Code: PERIYABABUSAMUDRAM, VILLUPURAM, TAMIL NADU, India, Pincode.net.in". pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 21 January 2024.
- ↑ "பெரியபாபுசமுத்திரம் - வனத்தாம்பாளையம் இடையே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை". localbodydata.com. பார்க்கப்பட்ட நாள் 21 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ periyababusamudram population https://www.censusindia.co.in/villages/periyababusamudram-population-viluppuram-tamil-nadu-632964 periyababusamudram population.
{{cite web}}
: Check|url=
value (help); Missing or empty|title=
(help) - ↑ "Gram Panchayat (ग्राम पंचायत): PERIYABABUSAMUDRAM (பெரியபாபுசமுத்திரம் )". localbodydata.com. பார்க்கப்பட்ட நாள் 21 January 2024.
- ↑ "Periyababusamudram BO Pin Code: Find Pin Code of Periyababusamudram BO locality of Tamil Nadu - NDTV.com". www.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 21 January 2024.
- ↑ சின்னபாபுசமுத்திரம் "chinna-babu-samudram".
{{cite web}}
: Check|url=
value (help)