கண்டமங்கலம் ஊராட்சி
கண்டமங்கலம் | |
— கண்டமங்கலம் ஊராட்சி — | |
அமைவிடம் | 11°55′04″N 79°41′04″E / 11.917660°N 79.684567°Eஆள்கூறுகள்: 11°55′04″N 79°41′04″E / 11.917660°N 79.684567°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப. [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | விழுப்புரம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | வானூர் |
சட்டமன்ற உறுப்பினர் |
எம். சக்கரபாணி (அதிமுக) |
மக்கள் தொகை | 4,586 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கண்டமங்கலம் ஊராட்சி (Kandamangalam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4586 ஆகும். இவர்களில் பெண்கள் 2221 பேரும் ஆண்கள் 2365 பேரும் உள்ளனர்.
வரலாறு[தொகு]
கண்டமங்கலம் எனும் இவ்வூர் சோழர் காலத்தில் ஸ்ரீ கண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் விளங்கியது. கண்டராதித்த மதுராந்தகன் என்ற செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தம சோழனின் தந்தையும், மேறகெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இவ்வூரில் சிவன் கோயில் ஒன்றும், விஷ்ணு கோயில்கள் இரண்டும் என மூன்று கோயில்கள் இருந்துள்ளன. சிவன் கோயில் திருநாரிஸ்வரம் என வழங்கப்பட்டது. திருநாரிஸ்வரத்து மஹாதேவர் என இறைவன் வழங்கப்பட்டார். இரண்டு விஷ்ணு கோயில்களில் ஒன்று செய்தாங்கி விண்ணகர் என்றும் செயந்தாங்கி விண்ணகரப் பெருமான் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. திருவாய்பாடி ஆழ்வார் என்ற மற்றொரு விஷ்ணு கோயிலின் பெயராகும்.
கோயிலை முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. ஸ்ரீ பாதக்கிரம வித்தன் மகன் சீராளன் என்பவன் கோயிலில் விளக்கொஜக்க சபையிடம் ஆடுகளை அளித்ததை இராஜராஜன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயில் மிகச் சிறியது கருவறை, அர்த்தமண்டபம் மட்டுமே கட்டப்பட்ட கோயிலாகும். கோயில் இடிந்த நிலையில் கூரையின்றி உள்ளது. சிறிய லிங்கமொன்றையும், முகலிங்கமாக காணப்படுகிறது. சதுரமான கருவறை, கருவறையின் தென்புற அதிஷ்ட்டானத்தில் கல்வெட்டுள்ளது. பராந்தகன் காலக் கோயிலாக இதனைக் கொள்ளலாம்.[7]
அடிப்படை வசதிகள்[தொகு]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 307 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 10 |
கைக்குழாய்கள் | 6 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 7 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 5 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 1 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | |
விளையாட்டு மையங்கள் | |
சந்தைகள் | |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 44 |
ஊராட்சிச் சாலைகள் | 2 |
பேருந்து நிலையங்கள் | |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 3 |
சிற்றூர்கள்[தொகு]
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:
- கண்டமங்கலம்
- கண்டமங்கலம் காலனி
அமைவிடம்[தொகு]
இது தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 22 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து பாண்டிச்சேரி 18 கி.மீ தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "கண்டமங்கலம் வட்டார வரைபடம்". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "கண்டமங்கலம் வரலாறு".
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.