பெரியபாபுசமுத்திரம் ஊராட்சி
பெரியபாபுசமுத்திரம் | |||
— ஊராட்சி — | |||
அமைவிடம் | 11°56′32″N 79°40′57″E / 11.942201°N 79.682620°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | விழுப்புரம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | டி. மோகன், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சித் தலைவர் | |||
மக்களவைத் தொகுதி | விழுப்புரம் | ||
மக்களவை உறுப்பினர் | |||
சட்டமன்றத் தொகுதி | வானூர் | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
மக்கள் தொகை | 4,592 | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
பெரியபாபுசமுத்திரம் ஊராட்சி (Periyababusamudram அல்லது Periyababusamuthiram), தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஆகும்.[4][5] இந்த ஊராட்சி, வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] இந்த ஊராட்சி பாண்டிச்சேரி மற்றும் தமிழக எல்லையில் அமைந்துள்ளது.
அடிப்படை வசதிகள்[தொகு]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 974 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 10 |
கைக்குழாய்கள் | 1 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 8 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 21 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 7 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 10 |
விளையாட்டு மையங்கள் | |
சந்தைகள் | |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 44 |
ஊராட்சிச் சாலைகள் | 9 |
பேருந்து நிலையங்கள் | |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 6 |
மக்கள் தொகை[தொகு]
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4592 ஆகும். இவர்களில் பெண்கள் 2277 பேரும், ஆண்கள் 2315 பேரும் உள்ளனர். இக்கிராமத்தில் வன்னிய குல சத்திரிய சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர், அதற்கு அடுத்தபடியாக பறையர்கள், நாயுடுகள், குயவர்கள் மற்றும் வண்ணார்கள் ஆகிய சமூக மக்கள் வாழ்கின்றனர்.
போக்குவரத்து[தொகு]
இக்கிராமத்திலிருந்து புதுச்சேரி கிழக்கு திசையில் 18 கி.மீ தொலைவிலும், விழுப்புரம் மேற்கு திசையில் 23 கி.மீ தொலைவிலும், கடலூர் தென்கிழக்கு திசையில் 21 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ தொலைவில், கண்டமங்கலம் நகரம், விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, இங்கிருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கலித்திராம்பட்டு கிராமத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு பேருந்துகள் செல்கின்றது. சின்னபாபுசமுத்திரம் தொடருந்து நிலையம், இக்கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தொடருந்து நிலையம் வழியாக புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு தொடருந்துகள் செல்கின்றன.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, இக்கிராமத்தின் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொருளாதாரம்[தொகு]
இக்கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு நெல், கரும்பு, உளுந்து, மரவள்ளி போன்றவை முக்கிய பயிராக பயிரிடப்படுகிறது. மேலும் சிலர் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள்.
கோயில்கள்[தொகு]
- புளியம்பட்டு மாரியம்மன் கோயில்
- பெரியாண்டவர் கோயில்
- ஓங்காரேசுவரர் (சிவன்) திருவுடையார் கோயில்
- திரௌபதி அம்மன் கோயில்
- பிள்ளையார் கோயில்
- பெருமாள் கோயில்
- அய்யனார் கோயில்
இந்த கிராமத்தில் சுமார் 80 அடி உயர தேர் உள்ளது மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடைபெறும்.
சிற்றூர்கள்[தொகு]
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- ரசபுத்திரபாளையம்
- வானத்தம்பாளையம்
- பெரியபாபுசமுத்திரம்
- குயிலாபாளையம்
- வினாயகம்பட்டு
- பெரியபாபுசமுத்திரம் காலனி
தெருக்கள்[தொகு]
- ஆலஞ்சாலை
- தேரடிதெரு
- பிள்ளையார் கோயில் தெரு
- அண்ணா நகர்
- வானூர் ரோடு
- குயவர் தெரு
- பாரதி வீதி
- குறுக்கு தெரு
- ஏரிக்கரை தெரு
- பெரியாபாபுசமுத்திரம் காலனி
அருகிலுள்ள நகரங்கள்[தொகு]
- புதுச்சேரி (18 கி.மீ.)
- கண்டமங்கலம் (3 கி.மீ.)
- வில்லியனூர் (11 கி.மீ.)
- மதகடிப்பட்டு (8 கி.மீ.)
- திருக்கனூர் (12 கி.மீ.)
- வானூர் (17 கி.மீ.)
- சேதராப்பட்டு (16 கி.மீ.)
வசதிகள்[தொகு]
- அரசு உயர்நிலைப்பள்ளி
- அங்கன்வாடி மையம்
- துணை சுகாதார நிலையம்
- கிராம நிர்வாக அலுவலகம்
- ஊராட்சி மன்ற அலுவலகம்
- நியாயவிலை கடை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கண்டமங்கலம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.