புபொப 40
நெபுலா | |
---|---|
Observation data: J2000 epoch | |
Right ascension | 00h 13m 01.015s[1] |
Declination | +72° 31′ 19.085″[1] |
Distance | ~3,500 ஒஆ (~1.0 kpc)[2] ly |
தோற்ற ஒளிப்பொலிவெண் (V) | 11.4,[1] 12.3[2] |
Apparent dimensions (V) | 38 x 35 arcseconds[2] |
விண்மீன் குழாம் | சேபியசு |
Designations | Bow-Tie Nebula, கால்டுவெல் 2 |
புபொப 40 (NGC 40) அல்லது கால்டுவெல் 2 (Caldwell 2) என்பது ஒரு கோள்வடிவ நெபுலா ஆகும். இதனை வில்லியம் எர்செல் என்பவர் 1788 ஆம் ஆண்டு நவம்பர் 25 தேதியில் கண்டறிந்தார். இப்புதிய பொருள் இறக்கும் தருவாயில் உள்ள விண்மீனைச் சுற்றியுள்ள சூடான வாயுவால் உருவானது. ஒரு விண்மீன் தன்னுடைய வெளியடுக்கை வெளியேற்றிவிட்டு சிறிய சூடான விண்மீனாக ஒளிர்கிறது. இந்த சூடான விண்மீனின் மேற்பகுதியில் சுமார் 50000 பாகை செல்சியசு வெப்பநிலை இருக்கிறது[3]
நட்சத்திரத்தில் இருந்து வீசும் கதிர்வீச்சு வெளியடுக்கின் மேற்பகுதியை சுமார் 10000 பாகை செல்சியசு அளவுக்கு உயர்த்துகிறது.[3] மேலும் இது குறுக்காக ஒரு ஒளியாண்டு தூரத்தைக் கொண்டுள்ளது. சுமார் 30000 ஆண்டுகளுக்குப் பின்னர் அறிஞர்கள் தற்பொழுது ஒரு கோட்பாட்டை முன்மொழிகின்றனர். இக்கோட்பாட்டின்படி கிட்டத்தட்ட பூமியின் அளவுக்குச் சமமான வெள்ளை குறுங்கோளை வெளியேற்றிவிட்டு புபொப 40 விரைவில் வெளுத்துவிடும் என்கின்றனர்[3]
படக்காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "SIMBAD Astronomical Database". Results for NGC 40. பார்க்கப்பட்ட நாள் 2006-12-22.
- ↑ 2.0 2.1 2.2 O'Meara, Stephen James (2002). Deep Sky Companions: The Caldwell Objects. Sky Publishing Corporation. pp. 22–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-933346-97-2.
- ↑ 3.0 3.1 3.2 "Chandra X-Ray Observatory". பார்க்கப்பட்ட நாள் 2007-06-05.
வெளியிணைப்புகக்ள்
[தொகு]- புபொப 40 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images
.