புபொப 71

புபொப 71 (NGC 71) எனப் புதிய பொதுப் பட்டியலில் அந்திரொமேடா பேரடை யில் உள்ள ஒரு ஒடுக்க உருவ அண்டம் பட்டியலிடப்பட்டுள்ளது.
தோற்றம்[தொகு]
ஒடுக்க உருவ அண்டங்கள் ஒப்பீட்டளவில் இளம் விண்மீன் மண்டலங்களாகவும் அவை தாங்களே உருவானவை போலவும் உள்ளன[1] . வாயுவும் தூசும் கலந்த பெரிய மேகக்கூட்டம் போல புறப்பட்ட இவை பிரபஞ்சம் தோன்றிய ஆரம்பநாட்களில் குளிர்ந்த கரும் பொருளாகவே இவை கற்பனையில் காணப்பட்டன. அண்டப் பின்னணிக் கதிர்வீச்சு வேறுபாடுகள் இதை விளக்கின. வாயு மற்றும் தூசி கலந்த இந்த இருண்ட மேகங்கள் பின்னர் சுய அமுக்குதல் மூலம் இலட்சக்கணக்கான விண்மீன்களாக உருவாகின. இவ்வாறு தோன்றிய விண்மீன் மண்டலங்களில் பல பெரிய விண்மீன்களால் இடம்பெற்றிருந்தன. இதன் பின்னர் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு சிறிய விண்மீன்கள் உருவாக்கப்பட்டன. மாபெரும் பேருரு விண்மீன்களும் மிகைப் பேருரு விண்மீன்களும் மீயொளிர் விண்மீன் வெடிப்பு மற்றும் மிகையொளிர் விண்மீன் வெடிப்புகளில் காணாமல் போயின. புபொப 71 ஆதிகால விண்மீன் மண்டலம் மற்றும் சுருள் விண்மீன் மண்டலம் இவற்றிற்கு இடையில் உள்ள விண்மீன் ஆகும்.