பயனர் பேச்சு:Rssairam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Rssairam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--சஞ்சீவி சிவகுமார் 05:53, 1 பெப்ரவரி 2012 (UTC)

கலைமாமணி விருது பட்டியல்[தொகு]

கலைமாமணி விருது பெற்றவர்கள் பட்டியலை 1959 ஆம் ஆண்டிலிருந்து தொகுக்கத் தாங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தாங்கள் கட்டுரையைத் தொகுக்கும் போது பிற தகவல்களை முற்றிலுமாக நீக்கி விடுகிறீர்கள். இது தங்களின் அறியாமையால் செய்யப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. எனவே நீங்கள் 1959 - 1960, 1960-1961, 1961-1962 ஆகிய மூன்று ஆண்டுகளுக்குச் செய்த தொகுப்பை விக்கியாக்கம் செய்து இணைத்துள்ளேன். தற்போது எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து பிற ஆண்டுகளுக்கான பட்டியலை உருவாக்குங்கள். ஏதாவது சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:44, 23 மார்ச் 2012 (UTC)

விவரங்கள்[தொகு]

வணக்கம்,

விருதுகள் பட்டியல் கட்டுரைகளில், (எ.கா சிறப்புப் பரிசாகக் கேடயம் பெறும் சிறந்த கலைநிறுவனங்களின் பட்டியல் 1973 முதல் 2000 முடிய , ஆளுநர் கே கே ஷா அ வர்களின் நினைவுப் பரிசுகள்) அவை என்ன விருதுகள் எந்தத் துறையில் யாரால் வழங்கப்படுகின்றன என்ற தகவல்களை இணைக்க வேண்டுகிறேன். இத்தகவல்கள் இன்றி அக்கட்டுரைகள் புதிராக உள்ளன (என்ன விருது, எதற்கு யார் வழங்கினார் என்ற விளக்கமின்றி). நன்றி--சோடாபாட்டில்உரையாடுக 04:48, 30 மார்ச் 2012 (UTC)

பதிலளித்தல்[தொகு]

தாங்கள் சோடாபாட்டிலுக்குப் பதிலளிப்பதாயிருந்தால் அவருடைய பயனர் பேச்சுப் பக்கத்தை உபயோகப்படுத்தலாம். --மதனாஹரன் (பேச்சு) 02:19, 1 ஏப்ரல் 2012 (UTC)

தஙகள் வினா வியப்பை அளிக்கின்றது. பரிசு பெறுபவரின் தகுதியிலேயே - எந்தக் கலைதனை மேற்கொண்டுள்ளாரோ அதில் சிறந்து விளங்குவதற்காகவே வழங்கப்படுகின்றது. தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம் சென்னை-28 வெளியிட்டுள்ள புத்தகத்திலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இயல்துறையில் சிறந்து விளங்குபவருக்கு இயற்றமிழ்க் கலைஞர் என்ற பட்டம் வழங்கப் படுகின்றது. பி.ஐ. நடேசபிள்ளை நாதசுரக் கலைஞராக இருப்பதால் அதில் சிறந்து விளங்கியதற்காகக் கொடுக்கப் பட்டிருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போன்றே ஒவ்வொரு துறையினருக்கும் என்பதே சரியான அணுகு முறை. அதற்குமேலும் சந்தேகம் எழுந்தால் அதனை வழங்கியதாக எழுத்துபூர்வமாக அறிவித்துள்ள அந்த நிர்வாகத்தை அணுகவும்.-சீராசை சேதுபாலா

வணக்கம் சீராசை, நீங்கள் சோடாப்பட்டிலின் கேள்வியை முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை போல் தெரிகிறது. "சிறப்புப் பரிசாகக் கேடயம் பெறும் சிறந்த கலைநிறுவனங்களின் பட்டியல் 1973 முதல் 2000 முடிய" என்ற பட்டியலில் எந்த நிறுவனம் இந்தப் பரிசுகளை அறிவித்தார்கள்? தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் நிறுவனம் இந்தப் பரிசுகளை அறிவித்ததா? இப்பரிசுகள் இப்போது வழங்கப்படுகின்றனவா? ஆளுநர் கே கே ஷா அ வர்களின் நினைவுப் பரிசுகள் - இதனை யார் வழங்குகின்றனர்? ஷாவின் குடும்பத்தினரா, அல்லது தமிழக அரசா அல்லது இந்திய அரசா, அல்லது வேறு நிறுவனங்களா அல்லது ஒரு தனியாரா? பட்டியலே மொட்டையாக இருக்கின்றன. தலைப்பிலிருந்தும் ஒன்றும் விளங்கவில்லை. //அதற்குமேலும் சந்தேகம் எழுந்தால் அதனை வழங்கியதாக எழுத்துபூர்வமாக அறிவித்துள்ள அந்த நிர்வாகத்தை அணுகவும்//. யார் எனத் தெரிந்தால் தானே அவர்களை அணுக முடியும்:). இப்போதாவது கேள்வி விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். மேலும் விளக்கம் தேவையென்றால் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 11:53, 1 ஏப்ரல் 2012 (UTC)
  • சோடாபாட்டில்,கனக்ஸ் நான் விக்கிபீடியாவிற்கு புதிதாகப் பங்களித்து வருவதால் சில தவறுகள் நடந்து விடுகின்றன. இனி அந்தத் தவறுகள் வராதவாறு பங்களிக்க முயல்கின்றேன். விளக்கங்களுக்கு நன்றி.--சீராசை சேதுபாலா./உரையாடுக. 14:40, 2 ஏப்ரல் 2012 (UTC)

பணி தொடரட்டும்[தொகு]

மேலும் பற்பல பக்கங்களைத் தொடங்க வேண்டுகிறேன்.--பரிதிமதி (பேச்சு) 03:58, 4 ஏப்ரல் 2012 (UTC)

தடுக்கப்படலாம்.[தொகு]

  • தாங்கள் தொடர்ந்து வீ. க. தனபாலன் எனும் கட்டுரையில் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்குப் பொருந்தாத வகையில் பத்திரிகைகளில் எழுதப்படுவது போன்று தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். தேவையற்ற தகவல்களைப் பலமுறை நீக்கம் செய்து விக்கியாக்கம் செய்து கொண்டிருக்கிறோம். தாங்கள் விக்கிப்பீடியாவிற்குப் புதிதாகப் பங்களித்து வருவதால் தாங்கள் தெரியாமல் செய்திருக்கலாம் என்று கருதினாலும், தொடர்ந்து தாங்கள் செய்து வருவது வருத்தமளிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் தங்களது பங்களிப்புகள் தடுக்கப்படலாம். கவனத்துடன் செயல்பட வேண்டுகிறேன். சந்தேகம் ஏதுமிருப்பின் கேளுங்கள்... தவறுகளைத் தொடராமல் இருங்கள்...!--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:00, 5 ஏப்ரல் 2012 (UTC)
  • பாரதி அசலும் நகலும் என்னும் தொகுப்பை தொடங்கியுள்ளீர்கள், இது விக்கிப்பீடியா நடைமுறைகளுக்குப் பொருந்தாத வகையில் உள்ளது, தாங்கள் தொகுக்க பழக விரும்பினால் உங்களுடைய மணற்தொட்டியில் முயற்சி செய்யவும். தாங்கள் தெரியாமல் இந்த செய்திருந்தால், உதவி பக்கத்தை நாடவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 06, ஏப்ரல், 2012.
பாரதி அசலும் நகலும் நீக்கப்பட்டது. பயனர் வலைப்பூவில் பதிவு செய்வது போல் விக்கிப்பீடியாவில் பதிவு செய்து விடுகிறார். விக்கிப்பீடியாவிற்குப் புதியவராக இருப்பதால் அவருடைய தவறுகள் தொடர்கின்றன. புரிந்து கொள்வார் என நம்புவோம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 11:54, 6 ஏப்ரல் 2012 (UTC)


தொகுப்புச் சுருக்கம்[தொகு]

அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் மற்றவர்களின் தொகுப்புகளைக் கவனிக்கும் போது அவர்கள் என்ன வகையான தொகுப்பு செய்தார்கள் என்று உடனடியாக அறிய தொகுப்புச் சுருக்கம் உதவுகிறது. தாங்கள் தொகுப்புச் சுருக்கம் இடும் போது சீராசை என்று எழுதாமல் என்ன வகையான தொகுப்பு செய்தீர்கள் என்று சுருக்கமாகச் சொன்னால், மற்றவர்களுக்கு உதவும். எடுத்துக்காட்டுக்கு, உரை திருத்தம், கட்டுரை விரிவாக்கம், எழுத்துப் பிழை திருத்தம், தகவல் திருத்தம் போன்ற சில குறிப்புகளைத் தரலாம்.--இரவி (பேச்சு) 14:19, 22 ஏப்ரல் 2012 (UTC)

இந்திய ஆறுகள்[தொகு]

தாங்கள் பதிவிட்ட இந்திய ஆறுகள் கட்டுரை ஒரு புத்தகத்திலிருந்து அப்படியே எடுத்துப் பதிவிடுவதாகக் கூறுகிறீர்கள். அதுபோன்ற பதிப்புரிமைக்குரிய கட்டுரைகளை அப்படியே பதிவிடுவது சரியல்ல. மேலும் இந்திய ஆறுகள் என்பது ஒன்றிரண்டு அல்ல. நிறைய இருக்கின்றன. இவற்றுக்காக தமிழ் விக்கிப்பீடியாவில் இந்திய ஆறுகளுக்காக எனும் தனிப் பகுப்பும் அதில் ஆந்திர ஆறுகள்‎, கர்நாடக ஆறுகள்‎, கேரள ஆறுகள்‎,தமிழக ஆறுகள்‎ மற்றும் மகாராட்டிர ஆறுகள்‎ எனும் உள் பகுப்புகளில் அந்தந்த மாநிலங்களின் ஆறுகள் குறித்த தகவல்கள் தனித்தனிக்கட்டுரைகளாகத் தரப்பட்டு வருகின்றன. இது தவிர முக்கிய ஆறுகளின் பெயரிலும் கட்டுரைகள் தனித்தனியாக உள்ளன. முதலில் விக்கிப்பீடியாவில் என்னென்ன பதிவிடலாம்? என்பதைத் தெரிந்து கொண்டு பதிவிடுங்கள். இல்லையென்றால் நீக்கம் செய்யப்படுவதுடன் தங்கள் பதிவுகள் தடுக்கப்படலாம் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் மணல் தொட்டிப் பக்கத்தில் பயிற்சி பெற்று பதிவிடத் தொடங்குங்கள். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:17, 22 ஏப்ரல் 2012 (UTC)

நீர்நிலைகளின் பெயர்கள் 47[தொகு]

வணக்கம். இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள விவரங்களுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழர் வரலாறு -மின் நூல், இதன் மின் முகவரியைக் கட்டுரையில் வெளி இணைப்பாக உடனே சேர்த்து விடுங்கள். இல்லையெனில் சான்று இல்லாத காரணத்தால் அல்லது பதிப்புரிமை மீறல் என கட்டுரை நீக்கப்படலாம்.--Booradleyp (பேச்சு) 04:02, 18 திசம்பர் 2012 (UTC)

இது தமிழர் வரலாறு முகநூலில் இருந்து படி எடுக்கப்பட்டுள்ளது. கட்டுரையை நீக்கியுள்ளேன். பதிலாக நீர்நிலைகள் கட்டுரையில் வெளி இணைப்பாகத் தரலாம். அல்லது நீர்நிலைகள் கட்டுரையில் பொருத்தமான இடத்தில் மெற்கோளுடன் சேர்த்து விடலாம். ஏற்கனவே நீர்நிலைகள் கட்டுரையில் பெரும்பாலான தகவல்கள் உண்டு.--Kanags \உரையாடுக 06:53, 18 திசம்பர் 2012 (UTC)

வலைத்தளங்களில் இருந்து[தொகு]

மீண்டும் வணக்கம், பிற வலைத்தளங்களில் இருந்து படியெடுத்து இங்கு அப்படியே பிரதியிடுவது விக்கிப்பீடியாவில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. திருவாலங்காடு குறித்த உங்கள் கட்டுரையும் அவ்வாறான ஒன்றே. இவை உடனடியாகவே நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 05:51, 28 திசம்பர் 2012 (UTC)

விக்கிபீடியாவில் பதிய இயலாத வலைப்பூ பதிவர்களின் உண்மையான கட்டுரைகளை எடுத்துப் பதிவு செய்ய வழி ஏதும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள விருப்பம்.

இதுவரை நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் விபரங்கள் மட்டுமே தளத்தில் உள்ளன. எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் எழுத்து மூலம் பெறப்பட்டதன் அடிப்படையில் அந்த விபரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. தாங்கள் கொடுத்துவரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.--சீராசை சேதுபாலா./உரையாடுக. 05:39, 30 திசம்பர் 2012 (UTC)

ஆற்காடு[தொகு]

தமிழ் விக்கியில் ஆற்காடு என்னும் சொல் அல்லது ஊர்ப்பெயர் பல இடங்களில் வருகின்றன. ஆற்காடு என்ற சொல் தவறானது. ஆர்க்காடு என்பதே சரியானது. விக்கியின் பொறுப்பாளர்கள் இதைக் கவனத்திற் கொண்டு, ஆற்காடு என்ற சொல் வருமிடங்களில் எல்லாம் ஆர்க்காடு என்று திருத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றது.--சீராசை சேதுபாலா./உரையாடுக. 04:08, 12 சனவரி 2013 (UTC)

விக்கியில் ஆர்க்காடு, ஆற்காடு என இரண்டு கட்டுரைகள் உள்ளன. இரண்டும் வெவ்வேறு எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் ஆய்ந்து இவற்றை ஒன்றிணைக்கலாமா எனப் பார்க்க வேண்டும். ஆற்காடு கட்டுரை பேச்சுப் பகுதியில் இது குறித்து கேளுங்கள்.--Kanags \உரையாடுக 04:22, 12 சனவரி 2013 (UTC)

பெயர் மாற்றம்[தொகு]

சீராசை சேதுபாலா என்ற பெயரினை மாற்றிக்கொள்ள விருப்பம். வழிவகை உண்டா என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை பக்கத்தில் முறைப்படி உங்கள் வேண்டுகோளை இடுங்கள். நன்றி--இரவி (பேச்சு) 11:39, 13 பெப்ரவரி 2013 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Rssairam!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 11:39, 13 பெப்ரவரி 2013 (UTC)

அன்பார்ந்த இரவி அவர்கட்கு வணக்கம். தாங்கள் கூறியபடி, சங்கர இராமசாமி என்று மாற்றிக் கொள்ளப்பட்டது. பயனர் பெயரில் ( Rssairam ) எவ்விதமான மாற்றமும் இல்லை.

இன்று ”தவல் பதியா” என்ற இந்திய கணித மேதை குறித்து விக்கியில் பதிவிடப்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள எளிய வேதவழி கணிதம் என்ற நூலில் “ தவல் பதியா ” என்றே தமிழில் குறிப்பிட்டுள்ளனர். எனவே இதே பெயரினையே தலைப்புப் பெயராகக் கொள்ளவும். இவர் குறித்த கட்டுரை ஆங்கில விக்கியிலும் உள்ளது. ஆங்கிலப் பெயரைத் தமிழுக்குக் கொண்டுவரும்போது வேறு மாதிரி -தாவல்- என்று எழுதிவிடக்கூடாதே என்பதற்காகவே இந்தக் குறிப்பு “ தவல் பதியா “ என்றே அவர்கள் தமிழில் குறிப்பிட்டுள்ளனர் என்பதை மீண்டும் கூறவேண்டியதுள்ளது..


தேவாரம்.--பன்னிரு திருமுறைகள். -பெயர்மாற்றம்

தேவாரம் என்ற தலைப்பில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. தேவாரப் பாடல்களுடன் சேர்க்கப்பட்ட சைவசமயப் பாடல்களையும் சேர்த்து கட்டுரையில் தகவல்கள் காணப்பபடுகின்றன. அவ்வாறெனின் 12 தொகுதிகள் அடங்குகின்றன. இதுவே சரியாகும். எனவே தேவாரம் என்னும் தலைப்பு பன்னிருதிருமுறைகள் என்று திருத்தபட வேண்டும்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை நீக்கம்[தொகு]

Stop hand nuvola.svg

வணக்கம், Rssairam!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Anton (பேச்சு) 02:57, 7 மார்ச் 2013 (UTC)

சங்கரநயினார் கோயில்[தொகு]

அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் என்ற உங்கள் கட்டுரை அழிக்கப்படவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். அருள்மிகு, திருக்கோயில் போன்ற சொற்கள் தலைப்புகளில் சேர்க்கப்படுவதில்லை. பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுங்கள். சங்கரன்கோயில், கோமதி அம்மன் கட்டுரைகளையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:29, 31 ஆகத்து 2013 (UTC)

திருத்தல வரலாறு என்பது திருத்த வரலாறு என்று உள்ளது. திருத்த என்பது திருத்தல என்று மாற்றப்படல் வேண்டும். -சங்கர இராமசாமி

ஊரின் பெயர் சங்கரநயினார்கோவில் என்றே அழைக்கப்பட்டு வங்ந்தது. பின்னர் சங்கரன்கோவில் என்று மாற்றப்பட்டது. மாற்றியதற்கான ஆதாரங்களைத் திரட்டும் முயற்சி நடக்கின்றது. அருள்மிகு சங்கரநாராயன சுவாமி திருக்கோயில் என்று இடையில் மாற்றப்பட்டுள்ளது. எனவே, கட்டுரையின் தலைப்பு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் என்று அமைத்திடல் வேண்டும். சங்கரன்கோயில் என்பது ஊரின் பெயர். ஊரைப்பற்றிய கட்டுரை என்றால் அது மிகவும் விரியும்.

மூர்த்தி :- ஸ்ரீசங்கரலிங்க சுவாமி இறைவி :- ஸ்ரீ கோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன்

இத்திருக்கோயிலின் சிறப்பு :- சித்திரைப் பிரமோற்சவம், ஆடித்தபசு விழா, ஸ்ரீ சங்க்கரநாராயண சுவாமி

உரிய மாற்ரங்க்களைச் செய்திடல் வேண்டும். - சங்கர இராமசாமி.

--சீராசை சேதுபாலா./உரையாடுக. 11:40, 30 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:15, 18 செப்டம்பர் 2013 (UTC)

கணபதி ஸ்தபதி[தொகு]

ஸ்தபதி என்னும் சொல்லுக்குப் பதிலாகப் பெருந்தச்சன் என்ற சொல்லே தமிழில் கையாளப்படல் வேண்டும். அன்பு-சங்கர இராமசாமி

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)

ஆந்திரப் பிரதேசம்

" 1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி தெலுங்கு பேசும் ஐதராபாத் மாநிலத்தையும்ம் சென்னை மாகாணத்தின் தெலுங்கு பேசும் பகுதியையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே. தெலுங்கானா ஐதராபாத் மாநிலத்தின் பகுதியாக இருந்தது, இராயலசீமை, கடற்கரை ஆந்திரா சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே இம்மாநிலம் தெலுங்கானா, இராயலசீமை, கடற்கரை ஆந்திரா என்ற மூன்று பகுதிகளை உடையது." என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.

ஆனால், 25-03-1953-இல் ஆந்திர மாநிலம் குறித்த அதிகாரபூர்வமான பிரகடம் நேருவால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது என்ற தகவலும் அதே தேதியின் உலக முக்கிய நிகழ்வுகளில் காணப்பெறுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தகவல்களும், அதனைத் தொடர்ந்த எதிர்விளைவுகளும், அதனால் ஏற்பட்ட மாற்றங்களும் , தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளும் இவ்விடத்தில் உரியமுறையில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் தமிழ் விக்கிப்பீடியா உண்மையான தமிழக வரலாற்றை உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஆவணமாகத் திகழும். தகுதியுடையோர் முயற்சியை மேற்கொள்வார்களா ? அல்லது வழிகாட்டுதல் தேவை. அன்பு- சங்கர இராமசாமி

பேச்சுப் பக்கம்[தொகு]

கட்டுரை ஒன்றைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதற்கு அந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். புதிதாக பக்கம் ஒன்றை உருவாக்க வேண்டாம். தேவாரம் பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். தேவாரம் பற்றிய உங்கள் கருத்து பேச்சு:தேவாரம் பக்கத்தில் காணலாம்.--Kanags \உரையாடுக 06:59, 21 சூலை 2016 (UTC)

7ம் திருமுறைகளுடன் கட்டுரையை சீர் செய்துள்ளேன். தற்போது காணுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 22:20, 25 சூலை 2016 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

Anti-copyright.svg

வணக்கம், Rssairam!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 12:50, 28 சூலை 2016 (UTC)

கையொப்பம்[தொகு]

பேச்சுப்பக்கங்களில் உங்கள் கையொப்பத்தை கட்டாயம் தாருங்கள். கையொப்பம் இடுவதற்கு --~~~~ என எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:08, 31 ஆகத்து 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rssairam&oldid=2112091" இருந்து மீள்விக்கப்பட்டது