பயனர் பேச்சு:தனீஷ்
வாருங்கள்!
வாருங்கள், தனீஷ், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
-- சண்முகம்ப7 (பேச்சு) 08:42, 11 சனவரி 2021 (UTC)
January 2021[தொகு]
வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், ஏனைய பயனர்களுடன் ஊடாடும்போது, நல்லெண்ண நம்பிக்கையுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்கின்றேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. Kanags \உரையாடுக 09:34, 12 சனவரி 2021 (UTC)
நான் ஆக்க நோக்கில் மட்டுமே இந்த பக்கத்தை உருவாக்கினேன். நீங்கள் அந்த பக்கத்தை ( தமிழ் சொர்கம் ) திருத்துவதிலிருந்து பாதுகாத்து வைத்தது தவறு என்னால் உருவாக்கப்பட்ட பக்கத்தில் நீங்கள் திருத்தம் செய்யலாமே தவிற அதனை அழிக்கவோ அல்லது பூட்டவோ உங்களுக்கு உரிமை இல்லை . உடனடியாக நீங்கள் பூட்டியதை விடுவிக்க வேண்டும்.நன்றி.. தனீஷ் (பேச்சு) 09:49, 12 சனவரி 2021 (UTC)
- விக்கிப்பீடியாவில் விளம்பர நோக்கில் எழுதப்படும் கட்டுரைகள் நீக்கப்படும். இதனையும் பாருங்கள்: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை.--Kanags \உரையாடுக 10:03, 12 சனவரி 2021 (UTC)
Please do not attack other editors. Comment on content, not on contributors. Personal attacks damage the community and deter users. Please stay cool and keep this in mind while editing. Thank you. AntanO (பேச்சு) 17:17, 30 சனவரி 2021 (UTC)
வணக்கம், தனீஷ்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 11:49, 31 சனவரி 2021 (UTC)
நன்றி தனீஷ் (பேச்சு) 09:24, 6 பெப்ரவரி 2021 (UTC)
வணக்கம், தனீஷ்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{விக்கியாக்கம்}}, விக்கிப்பீடியா:நடைக் கையேடு
- தகுந்த ஆதாரம் (மேற்கோள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
- மூன்று வரிக்கு அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்கு குறைவாக கட்டுரைகள் நீக்கப்படும்)
- சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: en:Wikipedia:Categorization, en:Wikipedia:Categorization dos and don'ts
- பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்காக வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--~AntanO4task (பேச்சு) 02:30, 2 மார்ச் 2021 (UTC)