நேற்று இன்று நாளை (இசை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேற்று, இன்று, நாளை ( Netru Indru Naalai) என்பது இந்திய இயக்குனர் மணிரத்னம் அவர்களால் இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற இசை நாடக நிகழ்ச்சிகளின் தொடராகும். இந்த நிகழ்ச்சிக்கான நடனத்தை கலா மற்றும் பிருந்தா ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியைப் பார்க்க 12,000 பேர் வந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன. [1]

கண்ணோட்டம்[தொகு]

2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் கருத்தியலாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி "பான்யான்" என்ற அமைப்பிற்கு அதன் கட்டட நிதிக்கு நிதி திரட்ட உதவுவதற்காக ஒரு நிகழ்வாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகை ரேவதி மற்றும் நடிகர் அமீர்கான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இது சென்னையில் உள்ள இந்திய விமான நிலைய மைதானத்தில் நடைபெற்றது.

அடுத்த நிகழ்ச்சி 2002 திசம்பர் 2002இல் சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்றது. இது சுமார் 10,000 பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. இதன் வடிவம் பாடல்கள் மற்றும் நடனங்கள் முதல் நிகழ்ச்சியைப் போலவே இருந்தது. தொலைக்காட்சி உரிமைகள் விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டன.

பிப்ரவரி 2006 இல், நேற்று, இன்று, நாளை நிகழ்ச்சியின் மூன்றாவது தவணை பிராடுவே இசை பாணியில் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள சேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. மணிரத்னம் இயக்கிய, மூன்று மணி நேர பாடல், நடனம் மற்றும் நாடகக் களியாட்டம் தமிழகத் திரைப்படத்துறையிலிருந்து, அதன் வெவ்வேறு காலங்களில் நேற்று, இன்று, மற்றும் நாளை வழியாக, உறுதியான செல்லுலாய்டு தருணங்களை மேடையில் உயிர்ப்பித்தது. இந்த நிகழ்ச்சியில் 100 நடனக் கலைஞர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் இடம்பெற்றனர். புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு சிறப்பு பாடலை இயற்றினார். மேலும் தயாரிப்பில் ஈடுபட்ட மற்ற குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வல்லுநர்களில் கலை இயக்குனர் சாபு சிரில் மற்றும் விருது பெற்ற இயக்குனர் / ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் ஆகியோர் அடங்குவர்.

ஆளுமைகள்[தொகு]

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திரைப்பட பிரபலங்கள், முக்கியமாக தமிழகத் திரைப்படத்துறை, பாலிவுட், மற்றும் மலையாளத் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் பின்வருமாறு:

குறிப்புகள்[தொகு]

  1. "A Night Of Fun (Netru Indru Naalai)". IndiaGlitz. 6 February 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேற்று_இன்று_நாளை_(இசை)&oldid=3297556" இலிருந்து மீள்விக்கப்பட்டது