தீவனப் பயிர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீவனப் பயிர்கள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தபடுகின்றன[1]. கால்நடை வளர்ப்புக்கும், அதிக வருமானம் பெறவும் தீவனப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தீவனப் பயிர்களில் பலவகைகள் உள்ளன.

பயறு வகை தீவனப் பயிர்கள்[தொகு]

பயறு வகை தீவனத்தில் 3 சதம் முதல் 4 சதம் வரை புரதச் சத்தும், கால்சியமும் செறிந்துள்ளது. தானிய வகை பசுந்தீவனத்துடன், பயறு வகை தீவனத்தை 70:30 விகிதத்தில் கலந்து கொடுக்க வேண்டும். இவ்வகைப் பயறுகளின் வேர்கள் மூலம் மண்ணில் நைட்ரசன் நிலைப்படுத்தப்பட்டு தழைச்சத்து வளம் அதிகரிக்கிறது[2].

  1. தட்டைப் பயறு (காராமணி)
  2. குதிரை மசால்
  3. முயல் மசால்
  4. வேலிமசால்

தானிய வகை தீவனப் பயிர்கள்[தொகு]

பயறு வகை தீவனப் பயிர்களையும், தானிய வகைத் தீவனப் பயிர்களையும் கலப்புப் பயிராகக் கலந்து பயிரிடும்போது தனித்தனியே கிடைக்கும் மகசூலை விடவும் கூடுதலாக மகசூல் கிடைக்கும்[2].

  1. தீவன சோளம் (கோ-27, கோ.எப்.எஸ்.-29)
  2. தீவன மக்காச் சோளம்
  3. தீவனக் கம்பு

புல் வகை தீவனப் பயிர்கள்[தொகு]

புல் வகைத் தீவனத்தில் புரதச்சத்து 1.5 சதம் முதல் 2 சதம், நார்ச்சத்து 6.25 சதம் முதல் 9 சதம் வரை இருக்கும்[2].

  1. கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்
  2. கினியா புல்
  3. தீனாநாத் புல்
  4. நீர்ப்புல்
  5. நீலக் கொளுக்கட்டைப்புல்
  6. நேப்பியர் புல்

மரவகை தீவனப் பயிர்கள்[தொகு]

  1. அகத்தி
  2. கிளைரிசிடியா
  3. சூபா புல்

தீவனப் பயிர்கள் அபிவிருத்தித் திட்டம்[தொகு]

தமிழ்நாட்டில் கால்நடைகளைப் பெருக்கவும், பால் உற்பத்தியை அதிகப்படுத்தவும் தீவனப் பயிர்கள் அபிவிருத்தித் திட்டம் என்ற திட்டத்தை 2011-ம் ஆண்டிலிருந்து தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். அந்தந்த மாவட்டத்தில் உள்ள கால்நடைப் பெருக்கம் மற்றும் தீவனப்பயிர்கள் அபிவிருத்தி அலுவலகம், கால்நடைப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகம் ஆகிய அலுவலகங்களில் இத்திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது[3][4].

பயிற்சி[தொகு]

தமிழ்நாட்டில் தீவனப் பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து வேளாண் அறிவியல் நிலையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "தீவன உற்பத்தி". தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். http://agritech.tnau.ac.in/ta/expert_system/sheepgoat/Fodder%20production%20for%20Sheep%20and%20Goat.html. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. 
  2. 2.0 2.1 2.2 "பலன் தரும் பசுந்தீவனச் சாகுபடி!". தினமணி. 5 சூலை 2012. http://www.dinamani.com/tamilnadu/article863942.ece?service=print. பார்த்த நாள்: 5 மார்ச் 2016. 
  3. கு. ராமகிருஷ்ணன் (10 மே 2012). "தீவனப் பயிர்கள்... புல்வெட்டும் கருவி...அத்தனைக்கும் உண்டு, மானியம்!". பசுமை விகடன். http://www.vikatan.com/article.php?aid=18791. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. 
  4. "தீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்". விகாஸ்பீடியா. http://ta.vikaspedia.in/agriculture/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bc0bb5ba9baabcd-baabafbbfbb0bcd-baebc7baebcdbaabbeb9fbcdb9fbc1ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebcd. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. 
  5. "தீவனப் பயிர் சாகுபடி தொழில்நுட்பம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி". தினமலர். 20 நவம்பர் 2014. http://www.dinamalar.com/news_detail.asp?id=1119202. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவனப்_பயிர்கள்&oldid=2033455" இருந்து மீள்விக்கப்பட்டது