தமிழ் குறும்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் குறும்படம் (Tamil Short film) என்பது ஒரு நிகழ்வை, கருத்தை, கதையை குறுகிய நேரத்தில் அழுத்தமாக தொழில்நுட்ப நேர்த்தியுடன் படக்காட்சியாக வெளிப்படுத்துவதை குறும்படம் எனலாம். தமிழ் மொழியில் வெளியிடப்படும் குறும்படம் தமிழ் குறும்படம் ஆகும்.

ஒரு குறும்படம் சில நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களுக்கு மேலாகவும் அமையலாம். படங்களை பதிவுசெய்வதும், பகிர்வதும் இலகுவாகப்படும் இக்காலப் பகுதியில் குறும்படங்கள் முக்கிய ஒரு வெளிப்படுத்தல் ஊடகமாக பரினாமித்து வருகின்றன. குறிப்பாக புலம்புகு தமிழர்கள் மத்தியில் இவை ஒரு முக்கிய கலை வெளிப்பாட்டு, பரிமாற்று ஊடகமாக இருக்கின்றன.

மிகக் குறைந்த பணச்செலவு,வசதிகள் கொண்டு உருவாக்கப்படும் பல படங்கள் படைப்பாளியின் திறனை வெளிப்படுத்துகின்றன. பெரும்பாலும் ஆர்வலர்களால் உருவாக்கப்படும் இவ்வகை திரைப்படங்கள் குறித்து பரவலான விழிப்புணர்ச்சி பொதுமக்களிடையே எழுப்பிட தமிழ் ஸ்டூடியோ போன்ற சில அமைப்புகள் குறும்பட வட்டங்களை நடத்துகின்றன[1]. அனைத்துலக அளவிலும் கனடா[2],சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் குறும்பட திரைவிழாக்கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

பட்டியல்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_குறும்படம்&oldid=3557132" இருந்து மீள்விக்கப்பட்டது